Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பீட்டர்சன் என்ற தலைவலியை குக்கினால் சமாளிக்க முடியாது: பாய்காட் இங்கிலாந்து அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். ஸ்போர்ட் 24 பேட்டியில் அவர் கூறும் போது, “கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு மேட்ச்-வின்னிங் ஆட்டங்களை ஆடக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் சில தலைவலிகளைக் கொடுப்பார். அதனைச் சமாளிக்க தற்போதைய கேப்டன் அலிஸ்டர் குக் லாயக்கற்றவர். முன்னாள் கேப்டன்களில் மைக்கேல் வான் போன்றவர்கள் பீட்டர்சன் போன்ற ஆளுமைகளைத் திறமையாகக் கையாள்வார். ஆனால் குக்கினால் முடியாது. ஆகவே பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்துக்காக ஆடுவது கடினமே” என்றார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் இ…

  2. கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது. 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்…

  3. சிக்சர் மழையில் பொலார்டிற்கு அடுத்த இடத்தில் ரெய்னா டால்பின்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் 43 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 183 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா மொத்தம் 5023 ரன்களை 34.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 5000 கடந்த முதல் இந்திய வீரர் என்பதோடு உலக அளவில் 7வது வீரராகவும் திகழ்கிறார். டால்பின்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்சர்களை விளாசிய ரெய்னா, சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 31 சிக்சர்களை அடித்து 2ஆம் இடத்தில் உள்ளார். 21 இன்னிங்ஸ்களில் இவர் 31 சிக்சர்களை அடிக்க கெய்ரன் பொலார்ட் 27 இன்னிங்ஸ்களில் 49 சிக்சர்களுடன் முதல…

  4. தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் "சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது. தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் ம…

  5. மாலிங்கவுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை சனிக்கிழமை, 20 செப்டெம்பர் 2014 இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தனது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக அவர், அவுஸ்திரேலியாவுக்கு இன்று பயணமாகிறார். இந்தநிலையில் அவரால் 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன. எனவே உலக கிண்ணப்போட்டிகளில் மாலிங்கவின் பங்களிப்பு குறித்து சந்தேகம் வெளி…

  6. இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை! நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை. இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான். விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வ…

  7. 17ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் 2014-09-19 11:21:08 ஆசிய விளையாட்டு விழாவின் 17ஆவது அத்தியாயம் தென் கொரியாவின் இன்சொன் நகரில் அமைந்துள்ள பிரதான விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறும் கோலாகல தொடக்க விழா வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடக்க விழாவில் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன. நாடுகளின் அணிவகுப்பு, ஆசிய விளையாட்டு விழா கொடியேற்றம், ஆசிய விiளாயட்டுத் தீபம் ஏற்றல், வீர, வீராங்கனைகள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் சார்பிலான சத்தியப் பிரமாணங்கள் என்பன ஆரம்ப விழா வைபவத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகளாகும். இப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13000 வீர, வீராங்கனைகள் பங்…

  8. தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதி…

  9. அதிக பந்துகள்... ஆனால் ரன் எடுக்காமல் அவுட்: விசித்திர சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆனால் 1 ரன் கூட எடுக்காமல் 0-வில் ஆட்டமிழந்த சில வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் அத்தகைய விசித்திர சாதனைகள் செய்த வீரர்கள்: 1 ரன் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் டக் அவுட் ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர். நியூசி. வீரர் ஜெஃப் ஆலட். இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபமாக இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். அட! இந்தியாவுக்கு எதிராகவும்…

  10. இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார். இந்­தி­யாவில் 2016 இல் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­வரை பாகிஸ்­தானின் இரு­ப­துக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பத­வியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்­டுப்­பாட்டுச் சபை தெரி­வித்­துள்­ளது. பங்­க­ள­தேஷில் இவ் வருடம் நடை­பெற்ற உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­களின் முதல் சுற்­றுடன் பாகிஸ்தான் வெளி­யே­றி­யதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பத­வியைத் துறந்­தி­ருந்தார். அ…

  11. 21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை 21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் பெற்றுள்ளார். 13 ஆண்டுகள் 166 நாட்களே நிரம்பிய கேபி லூயிஸ் சீனியர் கிரிக்கெட் அணிக்கு ஆடிய, 21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் சர்வதேச போட்டியில் இவர் அயர்லாந்துக்காக தன் முதல் போட்டியில் ஆடினார். இவரது முதல் போட்டி அபாரமாக அமையவில்லை. இவர் 5 ரன்கள்தான் அடித்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அயர்லாந்து மகளிர் அணி படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அந்தப் போட்டியிலும் அய…

  12. 500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு ஒரு வரலாற்று கணமாகும். ஆனால் இந்த வரலாற்றுக் கணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் விளையாட முடியாமல் போயுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இங்கிலாந்துக்கு எதிரான 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்ல் நூனெஸ். இந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் வெற்றி: …

  13. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தகுதிச் சுற்று இன்று தொடக்கம்

  14. தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ட…

  15. விராத் கோஹ்லி நம்பர்–1 , ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய விராத் கோஹ்லி, ‘டுவென்டி–20’ தரவரிசைப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டில் மொத்தம் 134 ரன்கள்(சராசரி 13.40) தான் எடுத்தார். நான்கு ஒருநாள் போட்டிகளில் வெறும் 54 ரன்கள்(சராசரி 26.00) எடுத்தார். இந்நிலையில், நேற்று ஐ.சி.சி., வெளியிட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசை பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பெற்று வியப்பு அளித்துள்ளார் கோஹ்லி. சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், இவர், 41 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற கோ…

  16. பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கான உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு பற்றி இந்திய முன்னாள் ஸ்பின் பவுலர் ஈராப்பள்ளி பிரசன்னா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் தொடர் ஒன்றில் அவர் முரளிதரன் பந்து வீச்சு பற்றி கூறியதாவது: மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல. முரளிதரன் ஒரு வினோதமான பவுலர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பவுலர் அவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கர…

  17. அமைதியாக இருந்து தோற்பது எனக்குப் பிடிக்காது: கவுதம் கம்பீர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் குறித்தும் தனது அணுகுமுறை குறித்தும் பேசிய கவுதம் கம்பீர் கூறும்போது, “அமைதியாக இருந்து தோற்பதை விட, ஆக்ரோஷமாக இருந்து வெற்றி பெறுவதுதான் எனக்குப் பிடித்தமானது” என்று கூறியுள்ளார். "எப்போதுமே களத்தில் இறங்கும் முன்னர் நாம் வெற்றி பெறுவோம் என்றுதான் இறங்குவேன், இம்முறையும் அதுதான் எனது அணுகுமுறையாக இருக்கும். எடுத்த எடுப்பில் சாம்பியன் பட்டம் பற்றி யோசிக்கக் கூடாது, ஆனாலும் ஆழ்மனதில் அதுதான் இருக்குமென்றாலும் படிப்படியாகவே அதனைப் பற்ற…

  18. சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. (Photo: Netball Singapore) சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இப்…

  19. நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்ட இலங்கை வீரர் திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது: "ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நி…

  20. மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ…

  21. தோனியை விமர்சித்த பிரிட்டன் ஊடகங்கள்: இந்திய ரசிகர்கள் கூச்சல் எதிரொலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கில…

  22. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல் சர்வதேச போட்டிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இன்று அறிவித்துள்ளது. சயீட் அஜ்மலின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டதையடுத்து அவர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6772#sthash.SXUY3STC.dpuf

  23. தொடர்ந்து 3வது முறையாக யு.எஸ்.ஓபன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார். இதன் மூலம் மார்டினா நவ்ரதிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாய்ட் என்ற டென்னிஸ் பெருந்தகைகள் பட்டியலில் செரினா இணைந்துள்ளார். மேலும் செரினா வில்லியம்ஸ் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டமாகும் இது. முதல் செட்டில் இருவருமே தொடக்கத்தில் சற்று திணற கடைசியில் செரினாவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க 5-2 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 8வது சர்வ் கேமில் வோஸ்னியாக்கி செட் ப…

  24. நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார். விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்ல…

  25. ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினால் இந்தியாவை நிறுத்த முடியாது: ஷோயப் அக்தர் இந்தியா உலக சாம்பியன்கள் என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஷமி, ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக வீசுவது முக்கியம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார். "ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை 2015 உலகக் கோப்பைப் போட்டிகளை மனதில் கொண்டு பயிற்சியில் ஈடுபடச்செய்ய வேண்டும். இந்த மூவரும் உடற்தகுதி அளவில் கட்டுக்கோப்புடன் முழுதும் ஃபிட் என்றால், இவர்கள் சிறப்பாக விசினால் இந்திய அணியை யாராலும் நிறுத்த முடியாது. உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு ஒருமாதம் முன்பாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு அளிப்பது அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.