விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
தென்னாபிரிக்காவுக்குச் சிறப்பான வெற்றி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. செஞ்சூரியனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 125 (113), அலெக்ஸ் ஹேல்ஸ் 65 (73), பென் ஸ்டோக்ஸ் 53 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 275 views
-
-
மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா. பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீய…
-
- 0 replies
- 275 views
-
-
'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…
-
- 0 replies
- 275 views
-
-
வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு ! 29 DEC, 2022 | 09:43 PM இடம்பெற்று முடிந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஜெப்னா கிங்ஸ் (Jaffna Kings ) அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெப்னா கிங்ஸ் அணியில் இளம் வீரரான வியாஸ்காந்த் சுழல்பந்து வீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை அசத்தினார். அத்துடன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPL க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…
-
- 0 replies
- 275 views
-
-
கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்! (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்ட…
-
- 0 replies
- 275 views
-
-
யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு லோரியஸ் விருது விழாவில் உயரிய விருதுகள் மோனாக்கோவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற லோரியஸ் உலக விளையாட்டுத்துறை விருது விழாவில் 2016ஆம் ஆண்டுக்கான அதி உயர் விருதுகளை யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகிய இருவரும் தமதாக்கிக்கொண்டனர். யூசெய்ன் போல்ட் - சிமோன் பைல்ஸ் எட்டுத் தடவைகள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சம்பியனான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தனர். …
-
- 0 replies
- 275 views
-
-
உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும் சிக்கலில் அர்ஜென்டினா வெனிசூலா அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது. பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகு…
-
- 1 reply
- 275 views
-
-
லீக் கிண்ண இறுதியில் லிவர்பூல் - சிற்றி லீக் கிண்ண (கப்பிற்றல் வண் கிண்ணம்) இறுதிப் போட்டிக்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது. எவேர்ட்டன் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், எவேர்ட்டனின் றொஸ் பார்க்லேயும், சிற்றியின் 24ஆவது நிமிடத்தில் பெர்ணான்டின்ஹோவும் கோல்களைப் பெற்றனர். அதன் பின்னர், 70ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், பந்தைக் களத்துக்கு வெளியே கொண்டுசென்றதை, போட்டி மத்தியஸ்தர் கவனிக்க மறக்க, அந்தப் பரிமாற்றம் மூலமாக, கெவின் டி புரையுன், கோலைப் பெற்றார். பின்னர், 77ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 275 views
-
-
டி 20 உலக கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா?- பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அனுராக் தாக்குர் டி 20 உலககோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா என்பதற்கு பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தார். சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். 6 வது டி 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால் போட்டி நடைபெறும் இடங்களை 5 ஆக குறைக்குமாறு ஐசிசி வலியுறு…
-
- 0 replies
- 274 views
-
-
'' எனக்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருப்பதால் தனி தைரியம் பிறந்தது!'' -தோனி வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா 6வது நிலையில் களமிறங்கினார். இதனால் இந்திய அணிக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு அனுபவ வீரர் கிடைத்துள்ளதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' என்னை பொறுத்த வரை 4-வது விக்கெட்டுக்கு அதிகமாக களமிறங்கியதில்லை. 5 வீரர்களுக்கு அப்புறமும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் தேவைப்பட்டார்.. இதனால்தான் சுரேஷ் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம். இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் அணிக்கு கிடைக்கிறார். இவரைப் போலவே 7-வது விக்கெட்டாக களமிறங்க நல்ல வீ…
-
- 0 replies
- 274 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு: முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார். ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கத…
-
- 0 replies
- 274 views
-
-
மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா லா லிகா கால்பந்து லீக் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் பார்சிலோனா சாதனையை தக்கவைத்தது. #LaLiga #Messi ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செவியா - பார்சிலோனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரான்கோ வாஸ்குயிஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செவியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் லூயிஸ…
-
- 0 replies
- 274 views
-
-
கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…
-
- 0 replies
- 274 views
-
-
வங்கதேசத்தைத் தொடர்ந்து ஜிம்பாவேவுக்கு அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி சுற்று பயணம் டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது. இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்…
-
- 0 replies
- 274 views
-
-
உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காகத் தகுதிபெற்ற முதலாவது ஐரோப்பிய அணியாக, பெல்ஜியம் அணி மாறியுள்ளது. கிரேக்க அணிக்கெதிராகப் பெற்ற 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியே, அவ்வணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. முதற்பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில், 2ஆவது பாதியில் பெல்ஜியம் அணி தனது முதலாவது கோலைப் பெற, கிரேக்க அணி பதிலடி வழங்கியது. ஆனால் 74ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தில் றொமேலு லூக்காகு, தனது அணிக்காகக் கோலொன்றைப் பெற்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன் மூலம், உலகக்கிண்ண தகுதியும் உறுதியானது. அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குப…
-
- 0 replies
- 274 views
-
-
வாய்ப்புக்காக காத்திருப்பது கடினமாக உள்ளது: மனம் திறக்கும் மணீஷ் பாண்டே மணீஷ் பாண்டே - THE HINDU அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்ததுடன் தோனியுடன் இணைந்து அருமையான கூட்டணி அமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தினாலேயே இந்திய அணி 188 ரன்கள் வரை குவிக்க முடிந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மணீஷ் பாண்டே கூ…
-
- 0 replies
- 274 views
-
-
சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியர் இடையிலான மோதல் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். …
-
- 0 replies
- 274 views
-
-
பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…
-
- 0 replies
- 274 views
-
-
05 Mar, 2025 | 01:16 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இத…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…
-
- 0 replies
- 274 views
-
-
முதலிடம் கிடைக்குமென நினைக்கவே இல்லை-இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். இவர் சமீபத்தில் தென்னா பிரிக்காவில் இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரி சையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையிலும் அவர்தான் முதல் இடத்தில் உள்ளார். தற்போது தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு நியூசிலாந…
-
- 0 replies
- 273 views
-
-
இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் ரூ.30 லட்சம் செலவு செய்தார்: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் தகவல் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன். கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்ததாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் போது அமிதாப் தேசிய கீதம் பாட ரூ.4 கோடி வாங்கியதாக எழுந்த புகாரையும் கங்குலி திட்டவட்டமாக மறுத்தார். டி 20 உலகக் கோப்பையில் கடந்த 19ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க…
-
- 0 replies
- 273 views
-
-
நியூஸிலாந்து வேகத்தில் மடிந்து விழுந்த ஆஸி.- 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி ஸ்மித் ஆட்டமிழந்ததை கொண்டாடும் நியூஸி. வீரர்கள் - படம்: ஏ.எஃப்.பி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. நியூஸிலாந்தின் வேகப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறி வீழ்ந்தனர். 308 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி. 10 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மார்ஷ், ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, நியூஸிலாந்தின் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூஸி. பந்துவீச்சாளர்கள் போல்ட், ஹென்றி இருவரும் தங்கள் வேகத்தாலும்…
-
- 0 replies
- 273 views
-