விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமநிலை செய்ததோடு 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட்டை வென்றது மே.இ.தீவுகள். முல்டானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ஓட்டங்களுக்கு சுருண்டு போக பாகிஸ்தான் அணி வெறும் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 244 ஓட்டங்கள் எடுக்க வெற்றி இலக்கான 254 ஓட்டங்களை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி கண்டது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்து போனது. இந்திய அணி பாணியில் குழிப்பிட்ச்தான் ஒரே கதி என்று நம்பிய பாகிஸ்தான் குழிப்பிட்ச்களைப் போ…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா சாப்பல்-ஹேட்லி ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி. | படம்: ஏஎப்பி. மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. …
-
- 0 replies
- 238 views
-
-
03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்த…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி 2009-ல் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது கேப்டன் தோனியும் தினேஷ் கார்த்திக்கும். - படம். | ஏ.எஃப்.பி. முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்த…
-
- 1 reply
- 238 views
-
-
Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 02:33 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 400வது விக்கெட்டைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகிக்க, நியூஸிலாந்தின் வேகப்பந்து முன்னாள் மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தற்போது டேல் ஸ்டெய்ன் 80-வது டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹேட்லியுடன் 2-…
-
- 0 replies
- 238 views
-
-
பவர்பிளேவில் அசத்துவது அதிர்ஷ்டம்: மனம் திறக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர் - THE HINDU பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், ம…
-
- 0 replies
- 238 views
-
-
தேசிய மட்ட கராட்டி போட்டிகளில் தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் -வி.சுகிர்தகுமார் தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 238 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 238 views
-
-
பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெற இலங்கைக்கு இறுதி வாய்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது இரண்டில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரடி தகுதியை…
-
- 0 replies
- 238 views
-
-
ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…
-
- 0 replies
- 238 views
-
-
கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10566
-
- 0 replies
- 238 views
-
-
ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் ! அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி மற்றும் புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுல் ஒருவரான ராஜ் குந்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த இரு சீசன்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு விளையாட வாய்ப…
-
- 0 replies
- 237 views
-
-
தோல்விக்கு ஆடுகளம் மீது பழிபோடுவதா? - கவாஸ்கர் கேள்வி மும்பை ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததற்கு ஆடுகளம் மீது பழி போடுதல் கூடாது என்று ரவிசாஸ்திரி மீது கவாஸ்கர் சூசக விமர்சனம் வைத்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் மும்பை கிரிக்கெட் சங்க…
-
- 1 reply
- 237 views
-
-
ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கிற்கு விராட் கோலி வாழ்த்து விராட் கோலி. | கோப்புப் படம். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------------- கொலம்பியாவின் பொகோட்டா நகரில் நடைபெற்ற பிஎஸ்ஏ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் அவர் 9-11, 11-8, 4-11, 8-11 என்ற செட் கணக்கில் 54-வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோவின் அல்பிரெட்டோ அவில்லாவிடம் தோல்வி கண்டார். ---------------------…
-
- 0 replies
- 237 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்." ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…
-
- 0 replies
- 237 views
-
-
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார். லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட்…
-
- 0 replies
- 237 views
-
-
சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடாத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது. எனினும், இப்போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ள பிரபல இந்திய அணி, இலங்கை அணியை அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலமாக வீழ்த்தி ஆதிக்கம் …
-
- 0 replies
- 237 views
-
-
தொடங்குமுன் சாதனை படைக்கப்போகும் உலக சம்பியன்ஷிப் தொடர் லண்டனில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக சம்பியன்ஷிப் தொடர், அதிக டிக்கெட்டுக்களை விற்பனை செய்ததில் சாதனை படைக்கவுள்ளது. லண்டன் நகரில் உலக சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீர,- வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.…
-
- 0 replies
- 237 views
-
-
இனிமேல் ஓடப்போவதில்லை – உசைன் போல்ட் அதிரடி அறிவிப்பு உலகிலேயே நான்தான் அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை மீண்டும் சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று நிரூபித்தார் உசைன் போல்ட். அத்துடன் 200 மீ்ட்டர் மற்றும் 4 x 100 தொடர் ஓட்டத்திலும் தங்க பதக்கம் வென்றார். இந்த போட்டிக்கு முன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் உசைன் போல்ட். இதனால் அவர் மீண்டும் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால், திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இந்த ஆண்டு இதற்குமேல் ஓடமாட்டேன் என்று உசைன் போல்ட் கூறியுள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘சமீபத்தில் மகிழ்ச்சியளித்த சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்ப…
-
- 0 replies
- 236 views
-
-
ஒரு கையில் ஐஸ்கிரீம், இன்னொரு கையில் கேட்ச்: கிளென் மேக்ஸ்வெல் அசத்தல் கிளென் மேக்ஸ்வெல். | ட்விட்டர் படம். இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்…
-
- 1 reply
- 236 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…
-
- 0 replies
- 236 views
-