விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
50 ஆண்டுகளின் மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியல்: லஷ்மணின் 281 ரன்களுக்கு முதலிடம் 50 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் லஷ்மணின் 281-க்கு முதலிடம்.| கோப்புப் படம். கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லஷ்மண் எடுத்த 281 ரன்கள் முதலிடம் வகித்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் ஆடிய இந்திய அணிக்காக 281 ரன்கள் எடுத்த லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவின் கிரிக்கெட் மன்த்லி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. கிரிக்கெட் மன்த்லி இதழுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்க…
-
- 0 replies
- 356 views
-
-
செய்தித்துளிகள்.. மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பாதிக்கு மேலானோர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி 20 லீக் போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்கள் ஒரே அணியாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் டி 20 உலகக்கோப்பையை வெல்வோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு ஆலோசகர் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். -------------------------------------- கோலாலம்பூரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் நைஜிரியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய 4வது சுற்றுக்கு முன்னேறியது. --…
-
- 0 replies
- 349 views
-
-
செய்தித்துளிகள்: ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ல் தொடக்கம் ஐபிஎல் டி 20 தொடரின் 9வது சீசன் ஏப்ரல் 9-ம்தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. 51 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி ஆட்டமும் மும்பையிலேயே நடக்கிறது. இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 60 ஆட்டங்கள் மொகாலி, டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், ராய்ப்பூர் ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகிறது. ------------------------------------------ க…
-
- 0 replies
- 451 views
-
-
மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. " மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்…
-
- 0 replies
- 462 views
-
-
'தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்' உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில், 4 போட்டிகளில் பங்குபற்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே அவ்வணி வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடருக்கான குழாமைத் தெரிவுசெய்வதற்கான பொறுப்பு, இத்தொடருக்காக இலங…
-
- 0 replies
- 478 views
-
-
நமீபியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தானுக்கு இனிங்ஸ் வெற்றி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நான்கு நாட்களைக் கொண்ட இப்போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பித்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றார்.…
-
- 0 replies
- 361 views
-
-
கனேடியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன் பெராரி அணியின் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டலுடனான பதற்றமான உத்திசார் மோதலையடுத்து, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸை வென்றார். மூன்றாவது இடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த வெட்டல், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற வெட்டல், பந்தயத்தின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், பந்தயத்தின் முக்கியமான நேரத்தின் போது, அவரினது காரை நிறுத்த பெராரி தீர்மானித்த நேரத்தில், ஒரு தடவை மாத்திரமே நிறுத்தியிருந்த ஹமில்டன் முன்னிலைக்கு வந்திருந்தார். இதேவேளை, இப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனக்கும் சக மெர்சிடி…
-
- 0 replies
- 291 views
-
-
கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10566
-
- 0 replies
- 231 views
-
-
111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான் 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி கள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டிகளில் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று T20 தொடர் போன்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் கோல்டர் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட பணித்தார். அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 260 ஓட்டங்கள் பெற்ற …
-
- 0 replies
- 340 views
-
-
கால்பந்து வீரர்களின் டிரெஸ்சிங் அறையும் கண்ணீர் கதையும்! கால்பந்து வீரர்களுக்கு டிரெஸ்சிங் அறைதான் எல்லாமே. அடிதடியும் இங்கேதான் அழுவதும் இங்கேதான். வெற்றி, அழுகை, சோகம், கொண்டாட்டம் அரங்கேறுவதும் இங்கேதான். உலகக் கோப்பையில் பெனால்டியை கோட்டை விட்டவர்களுக்கு கூட கதறி அழுவது இங்கேதான். அதிமுக்கியமான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு மெட்ராசி போன்றவர்களை தலையால் முட்டிய ஜிடேனுக்கு கூட ஆறுதல் கிடைப்பதும் இங்கேதான். கால்பந்து வீரர்களின் ஒவ்வொரு அசைவும் டிரெஸ்சிங் அறைக்குத்தான் தெரியும். கால்பந்து வீரர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தகயை டிரெஸ்சிங் அறை ஒன்று, நேற்று காணவே விரும்பாத நிகழ்வையும் கண்டது. அர்ஜென்டினாவின் சான் லாரன்ஸோ அணியை அரையிறுதியில…
-
- 0 replies
- 396 views
-
-
அணியின் நன்மையே முக்கியம்: டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார் டிவில்லியர்ஸ் கோப்புப் படம்.| பிடிஐ. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய வீரர்களின்றியே தொடரை வென்றதால் டுபிளெஸிஸ் கேப்டன் பொறுப்புக்கு மிகத் தகுதியானவர் என்று கூறி ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார். “நான் உட்பட எந்த ஒரு தனிநபரின் நலனைக் காட்டிலும் அணியின் நன்மையே முக்கியம். அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு என்னைப் பணித்தது மிகப்பெரிய கவரவமாகக் கருதுகிறேன். ஆனால் நான் இரண்டு தொடர்களில் ஆட முடியாமல் போனது, வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரிலும் நான் ஆடுவது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க …
-
- 0 replies
- 202 views
-
-
இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந…
-
- 0 replies
- 265 views
-
-
ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெறவிருந்த 142 வது கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் குறித்த போட்டி இடம்பெறவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு (adaderana.lk)
-
- 0 replies
- 501 views
-
-
11 கோடி நிதி திரட்டிய விராட் கோலி! இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 11.39 கோடி நிதி திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஒரேநாளில் 4,120 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய அணி தலைவர் விராட் கோலியும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்தார்கள். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோ…
-
- 0 replies
- 617 views
-
-
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம். ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்பதுடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்ப…
-
- 0 replies
- 624 views
-
-
கெய்ல் அதிரடியை பின்னுக்குத் தள்ளிய மெக்கல்லம்-பிராவோ காட்டடி: கரிபியன் கிரிக்கெட்டில் ருசிகரம் ஷாட் ஆடும் மெக்கல்லம். - படம். | கெட்டி இமேஜஸ். பாசட்டெரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் செயிண்ட் கிட்ஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அதிரடியை எதிரணியான டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் மெக்கல்லம், டேரன் பிராவோ ஆகியோர் முறியடிக்கும் விதத்தில் காட்டடி தர்பாரில் ஈடுபட்டனர். முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர…
-
- 0 replies
- 334 views
-
-
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்! Ads by Kiosked ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த…
-
- 0 replies
- 350 views
-
-
பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97500
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால உதவி பயிற்சியாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 412 views
-
-
`ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனை நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. Photo Credit: Black Caps நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது…
-
- 0 replies
- 370 views
-
-
வினை விதைத்தவன் வினையறுப்பான் வாசகத்துக்கு உதாரணமான ஆஸி. வீரர்கள், டேரன் லீ மேன் ஆஸி.வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா தொடர் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆகச் சிறந்த ‘அசிங்கமான’ தொடர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரணம் ஆஸ்திரேலியாவின் அராஜகமான ஸ்லெட்ஜிங் மனநிலைதான், அதற்கு பல்வேறு விதங்களில் பதிலடி கிடைக்கும் போது அவர்கள் ஆவேசமடைவதை நாம் இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம். இரு அணிகளுக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு புகார் கடிதம்…
-
- 0 replies
- 296 views
-
-
கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... "ஆர்டர்" போடுகிறார் ஸ்ரீகாந்த்! மொஹாலி: விராத் கோஹ்லி தற்போது ஒரு நாள் போட்டிகளில் 4வது இடத்தில் இறங்குகிறார். ஆனால் அவர் 3வது இடத்தில் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இங்கிலா்து தொடரில் சொதப்பிய விராத் கோஹ்லி தற்போது இலங்கை தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் கூட அவர் நன்றாகவே ஆடினார். கோஹ்லிக்கு 4 வேணாம்.. 3 ஓ.கே... இந்த நிலையில் கோஹ்லியின் ஆர்டரை மாற்ற வேண்டும். மாற்றினால் அவருக்கும், அணிக்கும் நல்லது என்று ஸ்ரீகாந்த் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக கோஹ்லி உள்ளார். 2009 ம் ஆண்டு ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில் ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். 11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன். 1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிக…
-
- 0 replies
- 674 views
-
-
ஆட்ட நிர்ணய சதி ; இலங்கை அணியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆட்ட நிர்ணய சதி முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் கையடக்கத்தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் இதேவேளை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரு இந்தியர்களை கைதுசெய்துள்ளனர். காலி, தம்புள்ள அணிகளிற்கு இடையில் கண்டியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இருபதிற்கு 20 போட்டியின் போது சந்தேகத்த…
-
- 0 replies
- 692 views
-
-
உலகக் கோப்பை தகுதி சுற்று :இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் தனபால் கணேஷ்! ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டைன்டைன் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேசுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள், 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில், ஓமன் அணியுடன் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து குவாம் அணியை எதிர்த்து 16ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அ…
-
- 0 replies
- 442 views
-