விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட் By Akeel Shihab - AFP சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன…
-
- 0 replies
- 379 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் …
-
- 0 replies
- 393 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம் By Akeel Shihab - தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகை…
-
- 0 replies
- 446 views
-
-
உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி தான் இது... கோப் பிரயண்ட் என்ற அந்த இளம் வீரர் விளையாடும் போட்டிகளைக் கண்ட ரசிகர்களும் இதேபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும் என்றால் அது மிகையல்ல... அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ பிரய…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி By A.Pradhap இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. செட்டிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்ட…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வ…
-
- 0 replies
- 340 views
-
-
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. …
-
- 0 replies
- 828 views
-
-
புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி? By A.Pradhap - ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியிருந்த இலங்கை இளையோர் அணி நியூசிலாந்து இளையோர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இலங்கை இளையோர் அணி, தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்காக அசான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களான சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. இப்போது, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை இளையோர் அணி Plate கிண்ணத்திற்காக போட்டிகளில் விளைாயடவுள்ளதுட…
-
- 0 replies
- 593 views
-
-
லிவர்பூல் அணிக்கு வெற்றி மேல் வெற்றி By Mohamed Shibly ப்ரீமியர் லீக் கிண்ணத்தை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறி வரும் லிவர்பூல் அணி வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகள் முன்னிலையுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனது சொந்த மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வொன்டரர்ஸ் எதிரணிக்கு கடைசி வரை சவால் கொடுத்தபோதும் லிவர்பூல் இறுதி நேரத்தில் பெற்ற கோல் மூலமே போட்டியில் வெற்றியீட்டியது. …
-
- 0 replies
- 396 views
-
-
மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்ட…
-
- 0 replies
- 453 views
-
-
ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ந…
-
- 0 replies
- 412 views
-
-
ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய…
-
- 1 reply
- 459 views
- 1 follower
-
-
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு By Mohamed Azarudeen - © BCCI தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்…
-
- 0 replies
- 357 views
-
-
உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad - தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியி…
-
- 0 replies
- 422 views
-
-
ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர் By Mohammed Rishad - ©Getty image அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்ச…
-
- 0 replies
- 380 views
-
-
10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ் இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனத…
-
- 0 replies
- 368 views
-
-
இன்னிங்ஸ் அடிப்படையில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து ©ICC தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதல் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, தொடரை சமப்படுத்தியிருந்தன. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில்…
-
- 0 replies
- 626 views
-
-
சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - ©AFPPhoto by Vipin Pawar / Sportzpics for BCCI பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில் சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 எனக் கைப்பற்றியது. …
-
- 0 replies
- 457 views
-
-
லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி: மெஸ்ஸி கோலால் வென்றது பார்சிலோனா இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் யுனைடட் அன்பீல்டில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி 30 ஆண்டுகளின் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 16 புள்ளிகள் இடைவெளியுடன் முன்னணியில் உள்ளது. தனது சொந்த மைதானத்தில்…
-
- 0 replies
- 388 views
-
-
தோனியின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறதா -ஆப்பு வைத்த BCCI, காரணம் என்ன ?
-
- 2 replies
- 943 views
-
-
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம் By Mohamed Azarudeen - மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்ததது. எனினும், குறித்த காலப்பகுதியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சில திருத்த வேலைகள் இருப்பதால் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கொழு…
-
- 0 replies
- 369 views
-
-
பாகிஸ்தான் சென்று விளையாட பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு By Mohammed Rishad - பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் எனவும், டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என …
-
- 0 replies
- 468 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது. ராஜ்கோட்: …
-
- 0 replies
- 397 views
-
-
இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…
-
- 0 replies
- 400 views
-
-
பரபரப்பான முதல் டி20யை வென்றது அயர்லாந்து By Mohammed Rishad ©AFP ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3க்கு …
-
- 0 replies
- 618 views
-