Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்! போட்டியின்போது காயமடைந்த அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி சிகிச்சை பலனின்றி தனது 28 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 1-ம் திகதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜான் கூனி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குத்துச்சண்டை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athav…

  2. இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்…

  3. படக்குறிப்பு, ஃபீரி கிக், பெனால்டி என கோல் அடிக்க கிடைக்கும் வாய்ப்பின் முன்பு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு மிகுந்த கவனத்துடன் கோல் கம்பத்தை நோக்கி ரொனால்டோ பந்தை செலுத்துவார் கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டத்தின் 88வது நிமிடம் அது. 2-3 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த அணிக்கு, பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. துளியும் தவறின்றிச் செயல்பட்டு தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் அந்த வீரனிடம் இருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பு அதிகரித்த அந்தத் தருணத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுகிறான் அந…

  4. ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்: மலேசியாவில் ஆரம்பம்: இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு Published By: VISHNU (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளைமறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள 6 போட்டிகளுடன் ஆரம்பமாவுள்ளது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மலேசியா முன்னின்று நடத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய மலேசியாவில் 17 வருடங்கள் கழித்து மற்றொரு பிரதான ஐசிசி கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப…

  5. 24 JAN, 2025 | 03:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியில் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். ஐசிசி விருதுகள் சிலவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சமரி அத்தபத்து கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 6 விக்கட்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது. பந்துவீச…

  6. பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமநிலை செய்ததோடு 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட்டை வென்றது மே.இ.தீவுகள். முல்டானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ஓட்டங்களுக்கு சுருண்டு போக பாகிஸ்தான் அணி வெறும் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 244 ஓட்டங்கள் எடுக்க வெற்றி இலக்கான 254 ஓட்டங்களை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி கண்டது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்து போனது. இந்திய அணி பாணியில் குழிப்பிட்ச்தான் ஒரே கதி என்று நம்பிய பாகிஸ்தான் குழிப்பிட்ச்களைப் போ…

  7. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த…

  8. 'Tournament-ல ஜெயிச்சிதான் நல்ல ஷூ வாங்குனேன்' - Arjuna Award பெற்ற Thulasimathi Murugesan தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'அர்ஜுனா விருது' துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  9. 16 DEC, 2024 | 06:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார். அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார். புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல்…

  10. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம் (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன. ஐக்கிய …

  11. அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன் செய்த பும்ரா இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளராக அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்படி இதுவரை ஒரு இந்திய பவுலர் வைத்திருந்த அதிகபட்ச புள்ளிமதிப்பீடான அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அஸ்வினின் ஆல்டைம் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் செய்யப்பட்ட அப்டேட்டின் படி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் …

  12. 14 JAN, 2025 | 02:11 PM (நெவில் அன்தனி) வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது. சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது. …

  13. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங…

  14. 30 DEC, 2024 | 11:34 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 234 ஓட்டங்களைக் குவித்த ரஹ்மத் ஷா, ஆப்கானிஸ்தான் சார்பாக அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதற்கு முன்னர் அபு தாபி விளையாட்டரங்கில் இதே அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு ஹஷ்மத்துல்லா ஷஹிதி குவித்த ஆட்டம் இழக்காத 200 ஓட்டங்களே ஆப்கானிஸ்தான் சார்பாக தனிநபருக்கான அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது. எவ்வாறாயினும், இப் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆட்டம் இழக்காமல் 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளதால் ரஹ்மத் ஷாவின் ப…

  15. 04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தா…

  16. மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2024-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் புதிய சாம்பியன், அணிகளின் மறக்க முடியாத வெற்றிகள், அதிர்ச்சி தரும் தோல்விகள், புதிய எழுச்சி அணிகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு என பல சுவாரஸ்யமான சம்பவங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தேறின. அந்த வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்தேறிய பல முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி பும்ரா சாதனை: கடிவாளத்தை நழ…

  18. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்…

  19. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை குழாத்தில் ஓஷத, நிஷான் - நெவில் அன்தனி தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். …

  20. பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…

  21. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 1…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நட…

  23. 19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெ…

  24. நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வட…

  25. பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.