விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
152 ஆண்டுகளில் முதல் முறை: 18 ரன்களில் ‘ஆல்அவுட்’; 12 நிமிடங்களில் ‘சேஸிங்’: இங்கிலாந்து கவுண்டியில் சுவாரஸ்யம் பெகன்ஹம் சிசிஅணி வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறிய காட்சி இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 18 ரன்களை 12 நிமிடங்களில் எதிரணி சேஸிங் செய்ய ஆட்டம் ஒரு மணிநேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து கவுண்டி அணி வரலாற்றில் குறைவாக எடுக்கப்பட்ட ஸ்கோர் இதுவாகும், குறைவான நேரத்தில் சேஸிங் செய்யப்பட்டதும் இதுவாகும். இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில் ஷெப்பார்ட் நீம் கென் கிரிக்கெட் கிளப் சார்பில் கவுண்…
-
- 0 replies
- 232 views
-
-
அம்பத்தி ராயுடுவின் கிரிக்கெட் எதிர்காலம் வேண்டுமென்றே இருளுக்குள் தள்ளப்படுகிறதா?- இந்தியா ஏ, துலீப்டிராபி அணிகளில் இல்லை அம்பத்தி ராயுடு : கோப்புப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்த திறமையான, அதிரடி பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணி, துலீப் டிராபியில் விளையாடும் 3 அணிகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். திறமையான பேட்டிங் இருந்தும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாகவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து அம்பத்தி ராயுடுவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது. …
-
- 0 replies
- 231 views
-
-
ஐசிசியின் துடுப்பாட்ட தரவரிசையில் வாழ்நாள் சிறந்த நிலையில் திமுத் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற, இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நிறைவில் வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எ…
-
- 0 replies
- 291 views
-
-
மீண்டும் மெத்தியுஸ் ; ஒருநாள் தொடருக்கான குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்க அணியுடனா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியை தெரிவுக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இதன்படி இந்த அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி…
-
- 0 replies
- 310 views
-
-
‘உன் வழியில் செய், அவர்கள் வழியில் செய்யாதே’- ஸ்லெட்ஜிங் குறித்து தோனியின் அணுகுமுறை படம். | ஏ.பி. கேப்டன் கூல் தோனி அவ்வளவு கூல் அல்ல என்பதற்கு மேலும் ஓரு உதாரணமாகவும், எதையும் தனித்துவமாகச் செய்வதில் தோனியின் பாணி கவனத்துக்குரியதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதுமானது என்பதை பரத் சுந்தரேசன் என்பவர் தனது புதிய புத்தகமான The Dhoni Touch என்பதில் விவரித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள சுவையான தகவல்கள் சில: 2008-ல் காமன்வெல்த் பேங்க் ஒருநாள் தொடரில் பாண்டிங் தலைமை ஆஸ்திரேலியா 159 ரன்களுக்கு மடிந்தது, இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு எனும்போது வெற்றி பெற இன்னும் 10 ரன்கள் உள்ள …
-
- 0 replies
- 296 views
-
-
கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போகின்றேன்- ஹேரத் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை வெல்வதும் அந்த அணியுடனான தொடரை வெல்வதும் சிறப்பான விடயம் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ள ஹே…
-
- 0 replies
- 244 views
-
-
ஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்! நான் ஒரு கால்பந்து வீரன். அரசியல்வாதி கிடையாது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்தது. `நடப்புச் சாம்பியன்' முதல்சுற்றுடன் நடையைக்கட்ட அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தோல்வி தந்த வலியிலிருந்து விடுபடுவற்குள் அணிக்குள் கலகம் வெடித்துள்ளது. இனவெறி புகார் காரணமாக அந்த அணியின் மிட்ஃபீல்டர் மெசூட் ஒசில் `ஜெர்மனி அணிக்காக இனிமேல் விளையாடப் போவதில்லை' என்று அறிவித்துள்ளார் உலகக் கால்பந்து ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெசூட் ஒசில் துருக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்: இங்கிலாந்தின் ஜோர்டான் கிளார்க் சாதனை ஜோர்டான் கிளார்க். | கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 14,639 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வரிசையாக வீழ்த்தினார் ஜோர்டான் கிளார்க். யார்க்ஷயர் அணிக்கு எதிராக ஜோர்டான் கிளார்க் நிகழ்த்தும் இந்த ஹாட்ரிக் சாதனையின் போது ஹாட்ரிக் ஓவரின் 2வது மற்றும் …
-
- 0 replies
- 217 views
-
-
மலிங்கவுக்கு பிரியாவிடை இல்லை? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்கவுக்கு பிரியாவிடைப் போட்டியொன்று வழங்கப்படாது எனத் தெரிகின்றது. ஏனெனில், தங்களது கட்டமைப்புகளில் தற்போது இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய் கூறியுள்ளார். இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, லசித் மலிங்கவின் பிரியாவிடைப் போட்டியாக பயன்படுத்தப்படுமான என வினவப்பட்டபோது, “இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்புகளில் பிரியாவிடைகள் தற்போது இல்லை. இதை எங்களது கொள்கையாக இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது. ஆகவே, மலிங்கவுக்கான பிரியாவிடை…
-
- 0 replies
- 288 views
-
-
தனுஷ்க குணதிலகவுக்குத் தடை இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (22) அறிவித்தது. வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் இன்றைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது. …
-
- 5 replies
- 1.3k views
-
-
‘தோனியின் ஓய்வு குறித்து நாம் முடிவெடுக்க கூடாது, அவர் தான் தீர்மானிக்க வேண்டும் : சச்சின் டெண்டுல்கர் ஆதரவு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி : கோப்புப்படம் இந்திய அணியின் மூத்த வீரர் எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாம் நெருக்கடி அளிக்கக்கூடாது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 தொடர், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணியின் வீரர் எம்எஸ் தோனி மிக மோசமாக பேட்டிங் செய்தார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் அதிகமான பந்துகளைச் சந்தித்து க…
-
- 1 reply
- 760 views
-
-
இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்: கோப்புப்படம் இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி …
-
- 0 replies
- 316 views
-
-
என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர் என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார். சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் அதீத செயல்பாடு காரணமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். நெய்மர் வேண்டுமென்றே காயம் அடைந்து விட்டதாக நடித்து நேரத்தைக் கடத்துவதால், தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் பிற அணியினர் குற்றம் சுமத்தினர். நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் ட்விட்டரில் வீடியோக்களைப் பதிவிட்டனர். இந்த நிலையில் தன்னைப் பற்றிய விம…
-
- 0 replies
- 426 views
-
-
புதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு இரட்டை சதம் அடித்தமகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமன் - படம் உதவி: ட்விட்டர் புலவாயோ நகரில் நடந்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் 210 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமன், இமான் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தத…
-
- 0 replies
- 401 views
-
-
பார்முலா 1 கார் பந்தய வீரர் ஹேமில்டனுக்கு ரூ.358 கோடி ஒப்பந்தம் பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டனை ஆண்டுக்கு ரூ.358 கோடிக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து தக்க வைத்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Hamilton #Mercedes பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டன். 4 முறை சாம்பியனான அவர் மெர்சிடிஸ் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த அணியுடனான ஹேமில்டனின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த நிலையில் ஹேமில்டனின் ஒப்பந்தத்தை இன்னும் 2 …
-
- 0 replies
- 314 views
-
-
2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்! ``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி. ஆனால், கடந்த ஓராண்டாகவே தோனியின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது. ``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால்…
-
- 0 replies
- 439 views
-
-
''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு" உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பிரச்ச…
-
- 1 reply
- 443 views
-
-
இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica கொழும்பு: பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய…
-
- 14 replies
- 1.5k views
-
-
உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள் ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோஒரு மாத காலம் உற்சாகத்தைத் தந்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், அனுமானங்களையும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நொறுக்கித் தள்ளியது. முன் எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் அரங்கேறின. உலக கால்பந்து நட்சத்திரங்களைக் கொண்ட பெரிதும் எதிர்பார்த்த போர்த்துக்கல், ஆர்ஜென்டீனா, பிரேசில், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற அணிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து சீக்கரமே தொடரிலிருந்து வெளியேறின. யாருமே எதிர்ப…
-
- 0 replies
- 560 views
-
-
புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள்: பிசிசிஐ அதிகாரி கொதிப்பு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் : கோப்புப்படம் முழு உடற்தகுதியில்லாத புவனேஷ்வர் குமாரை ஏன் களமிறக்கினார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பெயர் சேர்க்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. புவனே…
-
- 0 replies
- 360 views
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup ரொனால்டோ..? மெஸ்ஸி..? நெய்மர்..? யாருமே இல்ல இவர்தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் ஸ்டார். 19 வயதுதான். ஆனால், தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் கிலியன் எம்பாப்பே 'ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்' என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, 'கோல்டன் பூட் ஜெயிச்ச ஹேரி கேன் எங்க' எனக் கதறுகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். கோல்டன் பூட் வாங்கிய அவரும் இல்லை, கோல்டன் க்ளவ் வாங்கிய கோர்ட்வாவும் இல்லை. ஆனால், 'இந்த லெவன் ஃபிஃபாவின் வலைதளத்தில் பதிவிடப்படவே…
-
- 0 replies
- 610 views
-
-
ஒற்றை கையால் கேட்ச் செய்து வியக்க வைத்த கிறிஸ் கெயில் கனடாவில் நடந்த டி 20 தொடரில் கிறிஸ் கெயில் ஒரு கையில் அட்டகாசமாக கேட்ச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் - மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.4 ஓவர்களில் 145 ரன்களுக்…
-
- 1 reply
- 490 views
-
-
ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு! இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வ…
-
- 3 replies
- 660 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: புவனேஷ்வர் குமார் நீக்கம் இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் விளையாடுவார்கள். மீதமுள்ள 2 போட்டிகளுக்குப் பின்னர் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் ம…
-
- 195 replies
- 22.7k views
-
-
‘குரோஷியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்’: மக்களுக்கு உருக்கமாக அறிவுரை கூறிய ஹர்பஜன் சிங் ஹர்பஜன் சிங் : கோப்புப்படம் நாட்டில் இந்து, முஸ்லிம்கள் இடையே நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டு, குட்டி நாடான குரோஷியா உலகக்கோப்பை இறுதிச்சுற்றுவரை முன்னேறியதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 21-வது பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்த்து குரோஷிய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பிரான்ஸ் அணி. உலகிலேயே சிறிய நாடுகளில் ஒன…
-
- 0 replies
- 313 views
-