விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்? Getty image கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது. 1993 ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொ…
-
- 4 replies
- 586 views
-
-
சம்பியனானது சென்றலைட்ஸ் கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ…
-
- 0 replies
- 641 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசங்கீதா ''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்த…
-
- 0 replies
- 687 views
-
-
100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தை சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது. செளதாம்டன் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், கப்ரியல் ஜெஸுஸின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அணியொன்று அடைந்த அதிகூடிய புள்ளிகளான 100 புள்ளிகளை அடைந்ததோடு, பருவகாலமொன்றின் அதிகூடிய வெற்றிகளான 32 வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது. இதேவேளை, தமது மைதானத்த…
-
- 0 replies
- 665 views
-
-
வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger ஓர் அணியின் வரலாறு... அடையாளம்... தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத 'invincibles' கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்..? அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாள…
-
- 0 replies
- 581 views
-
-
ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர். இதில், ஆண்களுக்கான கோல…
-
- 0 replies
- 599 views
-
-
‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம் பிரேக்பாஸ்ட் வித் சச்சசின் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் - படம்: சிறப்பு ஏற்பாடு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த போது பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்…
-
- 2 replies
- 511 views
-
-
உலகிலேயே கூலான கேப்டன் யார்? ஷாகித் அஃப்ரீடி பதில் படம்.| அகிலேஷ்குமார் கேப்டன்சியில் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் செயல்படுபவர் தோனி என்பது உலகறிந்த விஷயம், என்ன பதற்றமான சூழலிலும் அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம் அறிவின்பாற்பட்டதால் எளிதில் உணர்ச்சிவயப்பட மாட்டார். அவர் சிந்திக்கும் கேப்டன் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் கனடாவில் உள்ள டொராண்டோவில் தன் சொந்த கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கிய ‘பூம் பூம்’ அப்ரீடி ஒன் லைனர் பதில் அளிக்கும் கேள்விகளை எதிர்கொண்டார். அதில் அவரிடம் உலகிலேயே கூலஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது, உடனே பட்டென்று அதற்கு எம்.எஸ்.தோனி என்று பதில் அளி…
-
- 0 replies
- 511 views
-
-
கோலி தலைமை டி20 அணியில் தினேஷ் கார்த்திக்; ஒருநாள் அணியில் ராயுடு, ஷ்ரேயஸ், ராகுல் ராகுல். | ஏ.எஃப்.பி. இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி வலுவாக அமைந்துள்ளது, இதில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபில் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரரான அதிக ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அம்பாத்தி ராயுடுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் பார்மைக் கொண்டு ஷ்ரேயஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தினேஷ்…
-
- 1 reply
- 438 views
-
-
ஓய்வுபெற்றார் ஆர்சன் இங்கிலாந்தின் கால்பந்து கழக அணியான ஆர்சனல் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து ஆர்சன் வெங்கர் தன் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனல் அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய ஆர்சன் வெங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் ஆர்சனல் அணிக்கும், பர்ன்லி அணிக்கும் இடையே கால்பந்து போட்டி இடம்பெற்றது. இதில் ஆர்சனல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தியது. இப்போட்டியைக் காண 60 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்தனர். இப் போட்டியினை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் அண…
-
- 0 replies
- 440 views
-
-
எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான எல் கிளாசிகோ போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. #ELcalsico #barcelona #RealMadrid லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு எல் கிளாசிகோ என்று பெயர். இரண்டு முன்னணி அணிகள் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பார்சிலோனா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும…
-
- 1 reply
- 734 views
-
-
கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள் ஐந்தாவது தடவையாக நேற்று (05) நடைபெற்று முடிந்திருக்கும் கீர்த்திகன் நினைவுக்கிண்ண கூடைப்பந்துத் தொடரில், ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும், பெண்கள் பிரிவு சம்பியன்களாக கொக்குவில் இந்துக் கல்லூரியும் நாமம் சூடியிருக்கின்றன. வருடந்தோறும் கொக்குவில் இந்துக் கல்லூரியினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தன. 20 வயதின் கீழ்ப்பட்ட ஆண…
-
- 0 replies
- 441 views
-
-
விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் குழாமில் பகார் சமான், சாத் அலி மற்றும் உஸ்மான் சலாஹுத்தின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் அயர்லாந்து அணியுடனான கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 443 views
-
-
'நீ கண்டிப்பாக சதம் அடிக்க வேண்டும்' விராட் கோலியை நிர்பந்தித்த சென்னை ரசிகர் இந்திய அணியினரின் விமானப் பயணத்தின் போது ரசிகர் ஒருவரால் நேர்ந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, சக வீரர்கள் டி வில்லியர்ஸ், சாஹல் ஆகியோருடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சந்தித்த ரசிகரைப் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "நாங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது ரசிகர் ஒருவர் வந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். தோனியின் பெரி…
-
- 0 replies
- 458 views
-
-
போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று(23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடி…
-
- 12 replies
- 2k views
-
-
முகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாக…
-
- 0 replies
- 613 views
-
-
உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …
-
- 0 replies
- 496 views
-
-
நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியெல் மெட்ரிட் @Reuters பயென் முனிச் அணியுடனான பரபரப்பான இரண்டாம் கட்ட அரையிறுதியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையில் முடித்த நடப்பச் சம்பியன் ரியெல் மெட்ரிட் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜெர்மனியின் பயென் முனிச் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது. மற்றும் எதிரணிக்கு வாய்ப்புகளை வழங்கியமை அந்த அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதியுடன் வெளியேற காரணமாகியுள்ளது. இதில் இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்திலே…
-
- 1 reply
- 589 views
-
-
அப்பவே அந்த மாதிரி சீட்டிங் செய்த ஆஸி அணியின் புதிய கோச் ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லங்கர், இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் சீட்டிங் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. #JustinLanger தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண…
-
- 0 replies
- 372 views
-
-
கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார் விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இள…
-
- 0 replies
- 425 views
-
-
"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம் ''அணியில் மீண்டும் எடுத்துக்கொள்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பெங்களூரு அணி ஏமாற்றியது'' - அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி, கிரிக்கெட் உலகையே சற்று அதிரவைத்துள்ளது. மேற்கு இந்தியதீவுகள் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு ஆண்டுகள் ஆடினார். பிறகு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்தார். 2010-ம் ஆண்டிலிருந்து ஏழு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அதிரடி சிக்ஸர்களை விளாசினார். ஐ.பி.…
-
- 0 replies
- 437 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதேவேளையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலிடம் வகித்திருந்தது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று தென் ஆப்பிரிக்க அணி 117 புள்ளிகளில் இருந்து 113 புள்ளிகளுக்கு க…
-
- 1 reply
- 408 views
-
-
முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன். அரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இலங்கையை பொறுத்தவரை புதிய வி…
-
- 0 replies
- 601 views
-
-
மலிங்கவிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் எச்சரிக்கை இலங்கை அணியில் மீண்டும் விளையாட விரும்பினால் உடனடியாக உள்ளுர் போட்டிகளிற்கு திரும்புங்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லசித் மலிங்க உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் அவர் குறித்து தெளிவான முடிவையெடுக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மலிங்கவை உள்ளுர் போட்டிகக்கா தெரிவு செய்துள்ளோம் என்பதை அவரிற்கு அறிவித்துள்ளோம் அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடாவிட்டால் தெரிவுக்குழுவினர் தெளிவான முடிவை எடுக்கவேண்டியிர…
-
- 0 replies
- 500 views
-
-
ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டம் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலிடத்தையும், சந்திரசேகரன் ஹெரினா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்…
-
- 3 replies
- 891 views
-