Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அவுஸ்திரேலியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்? அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததிலிருந்து அடுத்த பயிற்சியாளருக்கான தேடல்கள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன. குறித்த போட்டியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள தொடர் இவ்வாண்டு ஜூன் மாதமே இடம்பெறவிருக்கின்ற நிலையில் உடனடியாக பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லாததால், இதற்கான காலத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்துக் கொண்டு, அணியின் பெறுபேறு, அணியின் கலாசாரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அடுத்த பயிற்சியாளரை …

  2. CWG 2018: மாநிலவாரி பகிர்வில் இந்திய அளவில் தமிழகத்துக்கு இரண்டாமிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைRYAN PIERSE 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊக்க தொகை அறிவித்துள்ள நிலையில், இந்தியளவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. …

  3. மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில் Image Courtesy - Getty Images புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி ஆகியவற்றுக்கு இடையில் மே மாதம் 31 ஆம் திகதி விஷேட T20 போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அத்தோடு இப்போட்டியை உலகம் பூராகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கம் ஒன்றுக்காக விளையாடப்படவுள்ள இப்போட்ட…

  4. 2022 கத்தார் உலகக் கோப்பையில் கூடுதல் அணிகள்- ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஷியாவில் வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2022-ல் கத்தாரில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக கத்தார் பிரமாண்ட ஸ்டேடியங்களை கட்டி வருகிறது. 2018 உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 2022-ல் 32 அணியை 48 அணியாக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடு…

  5. சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை! சாய்னாவின் அந்தப் புகைப்படம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு, வாய்திறந்து கத்துகிறார். மூடியிருந்த அந்தக் கண்களிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. அத்தனை செய்தித்தாள்களிலும் அந்தப் புகைப்படம்தான். அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தால், அது காமன்வெல்த் சாம்பியனின் மகிழ்ச்சித் தருணமாக மட்டும்தான் தெரியும். ஆனால், நிச்சயம் அது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அந்த அலறலில் வெளியேறியது சாய்னாவின் இரண்டாண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில், அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்…

  6. மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை …

  7. இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி அ-அ+ இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #EPL #ManCity கோல் அடித்த மகிழ்ச்சியில் வெஸ்ட் புரும்விக் அணியின் ஜாய் ரோட்ரிக்ஸ் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், வெஸ்ட் புரும்விக் அல்பியான் அணியும் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணிகளு…

  8. காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழம…

  9. லா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா வரலாற்று சாதனை லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா 39 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போட்டு வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. #laliga #Barcelona ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட் வாலன்சியோ போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் ஒ…

  10. இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் @ AFP இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான காரணங்களினால் இந்தியாவில் இடம்பெறவிருந்த இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சந்தேகம் நிலவியிருந்தது. இதுவே, தற்போது தொடர் நடைபெறும் இடம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட காரணமாக இருக்கின்றது. அதோடு இந்த தொடரினை நடாத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த போதிலும், குறித்த காலப்பகுதியில் இலங்கையில் லங்கன் பிரீமியர…

  11. ஸ்மித், வார்னர் இல்லாததால் நல்ல வாய்ப்பு; ஆஸி.யை அதன் மண்ணில் இந்தியா வீழ்த்தும்: இயன் சாப்பல் உறுதி மும்பை நிகழ்ச்சியில் இயன் சாப்பல். - படம். | பிடிஐ மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. …

  12. பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம் வஹாப் ரியாஸ். - படம். | ராய்ட்டர்ஸ். முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார். கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் க…

  13. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை இழந்த சேனல் 9 சேனல் 9 பிதாமக வர்ணணையாளர் ரிச்சி பெனோ. கடந்த 40 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக ஒளிபரப்பு செய்து வந்த சேனல் 9 இம்முறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்தது. 1 பில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இழந்தது சேனல் 9. சேனல் 7 மற்றும் அதன் பே டிவி பார்ட்னர் ஃபாக்ஸ்டெல் இந்த ஒப்பந்தத்தைத் தட்டிச் சென்றது. இந்த ஒப்பந்தம் 6 ஆண்டு காலத்துக்கானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே சேனல் 9-தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதன் முதலில் கிரிக்கெட…

  14. விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, ராஷித் கான், மிதாலி தேர்வு கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படும் விஸ்டன் சஞ்சிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோஹ்லியும், சிறந்த வீராங்கனையாக மிதாலி ராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள T20 வீரருக்கான விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ராஷித் கான் பெற்றுக்கொள்ளவுள்ளார். 1889ஆம் ஆண்டு முதல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில், இந்தாண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் க…

  15. அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 98ஆவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம், நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, செவில்லா அணியுடனான போட்டியை கோலின்றி சமநிலையாக்கியதன் மூலம் பயேர்ன் முனிச் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்டத்தின் கடைசி இரண்டு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (11) நடைபெற்றன. இதில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக ஜுவன்டஸ் மூன்று கோல்களை புகுத்தி அதிர்ச்சி வெற்றியை பெற்றபோதும், துரதிஷ்டவசமாக மேலதிக நேரத்தில் எதிரணிக்கு பெனால்டி க…

  16. காமன்வெல்த்: காணாமல் போன விளையாட்டு வீரர்கள், இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களில் பளு தூக்கும் வீராங்கனை ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும் ஒருவர். கேமரூன் நாட்டைச் சேர்ந்த எட்டு விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டிலிருந்து காணாமல் …

  17. பாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மெக்கானிக்குக்கு ஏற்பட்ட விபத்தால் ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிவேக கார் பந்தயமாக இருப்பது ஃபார்முலா ஒன்தான். இங்கு வேகத்தை மட்டுமே மனதில்வைத்து அனைத்து கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு நொடியும் மிகமுக்கியம். 300 கி.மீ-க்கு மேல் பறக்கும் கார்களுக்கு டயர்கள் வேகமாக தேய்ந்துவிடும். அதனால், ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் டயர்களை மாற்றுவதற்காக டிரைவர்கள் காரை பிட் ஸ்டாப்பில் நிறுவத்துவது சகஜம். இப்படி …

  18. ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive மே 10 2015 - சுண்டி விடப்பட்ட டாஸ் காயின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் வெடிப்புகள் விரிந்த பிட்ச்சில் சத்தமே இல்லாமல் விழுகிறது. வெற்றி தோனிக்கு! அதற்கே ஆர்ப்பரிக்கிறது, மஞ்சளை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட அந்த பெருங்கூட்டம்! பேட்டிங்கை தேர்ந்தெடுக்கிறார் தோனி. 'Live It Abhi' என்ற கவுன்ட் டவுனோடு தொடங்குகிறது அந்தப் போட்டி. 'இந்தப் பொழுதை கொண்டாடித் தீருங்கள்' என்ற அந்த வார்த்தைகளின் மதிப்பை அந்தப் பொழுதில் மஞ்சள் ஜெர்ஸியை நேசிக்கும் எந்த ரசிகனும் உணர்ந்திருக்கமாட்டான். ஏனெனில் அதுதான் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையில் ஆடிய மேட்ச். இர…

  19. கனவில் மிதக்கும் கால்பந்து உலகம்... பார்சிலோனாவைப் பந்தாடிய ரோமா! #UCL ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானம் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. களத்துக்குள் இருக்கும் வீரர்கள் அழுகிறார்கள். கேலரியில் இருக்கும் ரசிகர்களும் அழுகிறார்கள். `அவே டீம்' ரசிகர்களும் அழுகிறார்கள். கேமராக்கள் திரும்பிய இடமெல்லாம் அழுகை மட்டுமே. ரோமா அணியின் ரசிகன் அந்தக் கொடியை மார்பில் ஒத்திக்கொண்டு அழுகிறான். பார்சிலோனா ரசிகனோ கண்ணில் கொடியைப் பொத்திக்கொண்டு அழுகிறான். 11 மாதங்களுக்கு முன்னால் அந்த மைதானம் இப்படித்தான் அழுதுகொண்டிருந்தது. 25 ஆண்டுகள் அந்த அணிக்கு விளையாடிய ஃப்ரான்செஸ்கோ டோட்டி ஓய்வு பெற்றபோது மொத்த ரோம் நகரமும் கண்ணீர் சிந்தியது. இந்த மைதானத்தில் கண்ணீர் மட்டுமே மிஞ்சிய…

  20. இங்கு பவுண்டரிகள் சிக்சர்களைத்தான் விரும்புகிறார்கள்; அங்கு அப்படியல்ல: இங்கிலாந்து ரசிகர்களுடன் ஒப்பிட்டு இந்திய ரசிகர்களை குறைத்து மதிப்பிடுகிறரா புஜாரா? புஜாரா. - படம். | கேவிஎஸ். கிரி ஐபிஎல் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா, இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அனுபவம் குறித்து பேசும் போது நல்ல பந்துகளை ஆடாமல் விடும் கலையைப் பற்றி குறிப்பிடுகிறார். யார்க்‌ஷயர் அணிக்கு புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: யார்க்‌ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்க…

  21. எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடை என் வாழ்க்கையை மாற்றியது- ஆன்ட்ரூ ரஸல் உருக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல்: கோப்புப் படம் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்ட விவகாரத்தில் எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடைதான் என்வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 11-வது ஐபிஎல் சீசனுக்கான 5-வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா…

  22. FICA அமைப்பின் ஆலோசகராக சங்கக்கார நியமனம் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FICA) ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு FICA நிறுவப்பட்டது. தேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகிவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது. கிரிக்கெட் …

  23. சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! யாழ்ப்­பாண கல்வி வலய பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. …

  24. இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், இனிவரும் காலங்களில் பந்துவீச மாட்டார் எனவும், சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கிரஹம் லெப்ரோய் வழங்கிய விசேட செவ்வியில், அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேநேரம், மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிலும் க…

  25. சிற்றியை வென்றது யுனைட்டெட் Editorial / 2018 ஏப்ரல் 08 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 11:38 Comments - 0 Views - 13 இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றுள்ளது. தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்றால் நடப்பு பருவகாலத்தின் இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியிருக்க முடியுமென்ற நிலையில், தற்போது பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ஆகக் குறைந்தது இவ்வாரயிறுதிவரை காத்திருக்க வேண்டியுள்ளது. இப்போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.