விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
112 ஆவது வடக்கின் போர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்! மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகள் மோதும் வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான 112 ஆவது மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. அது விடயந்தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், வீரர்கள் ஒன்று கூடலும் இன்று பிற்பகலில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்.மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளா…
-
- 60 replies
- 4k views
-
-
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி..! அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது. Photo Credit: Twitter/cricketworldcup அந்த அணி சார்பில் பவுல் ஸ்டிர்லிங் 55 ரன்களும் கெவின் ஓ பிரெயின் 41 ரன்களும் எடுத்தனர். ஆஃ…
-
- 1 reply
- 375 views
-
-
உலக கோப்பை தகுதிச்சுற்று - ஜிம்பாப்வேயை வீழ்த்தியது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியிடம் ஜிம்பாப்வே அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ICCWCQ #Zimbabwe #Unitedarabemirates உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஜிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செ…
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா Image Courtesy - Mohamed Nilam's Facebook page சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்டிருந்த ரோஹித் சர்மா, தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான மொஹமட் நிலாமின் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி தந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. யார் இந்த மொஹமட் நிலாம்? இலங்கை கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்கு சென்று எப்படியான தொடர்களில் விளையாடினாலும் குறித்த தொடருக்காக அந்நாட்டுக்கே பயணம் செய்து போட்டி நடக்கும் மைதானத்தில் இலங்கை அணிக்கு ஆதரவு தரும் ரசிகர்கள் சிலர் உள்ளனர். அந்த …
-
- 0 replies
- 492 views
-
-
மீண்டும் ஏறுமுகத்தில் றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இப்பருவகாலத்தில் மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தமையைத் தொடர்ந்து தற்போதே தமது உண்மையான திறமையான வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. இறுதியாக இடம்பெற்ற தமது 11 லா லிகா போட்டிகளிலிருந்து பெறக்கூடிய 33 புள்ளிகளில் 28 புள்ளிகளை றியல் மட்ரிட் பெற்றுள்ளது. லா லிகாவின் தத்தமது 11 இறுதிப் போட்டிகளில் ஓரணி பெற்ற அதிக புள்ளிகள் இதுவேயாகும். றியல் மட்ரிட்டுக்கு அடுத்ததாக பார்சிலோனா தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரி…
-
- 0 replies
- 302 views
-
-
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். #NZvENG #StuartBroad நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் பகல்- இரவு ஆட்டமான நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 58 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத…
-
- 0 replies
- 523 views
-
-
காலிறுதிக்குள் நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி அணி சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அணிகளைத் தெரிவு செய்யும் ஆட்டமொன்றில் (Pre-Quarter Finals) ஜா-எல கிறிஸ்துவரசர் கல்லூரியினை யாழ். மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றது. தீர்மானமிக்க 50 ஓவர்களினைக் கொண்ட இந்தப் போட்டியானது இன்று (21) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கிறிஸ்துவரசர் கல்லூரியின் தலைவர் தனன்ஞய பெர்னாந்து முதலில் …
-
- 0 replies
- 318 views
-
-
`மழையால் ஆட்டம் பாதிப்பு!’ - ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் #WIvSCO உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. Photo Credit: Twitter/cricketworldcup உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. ஹராரே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் ஆ…
-
- 0 replies
- 261 views
-
-
விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி மொகமது ஷமி மற்றும் மனைவி ஜஹான். - கோப்புப் படம். | பிடிஐ. பல பெண்களுடன் தொடர்பு உள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீர்ர் மொகமது ஷமி மீது அவரது மனைவி தொடுக்க, இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது கு…
-
- 7 replies
- 1.8k views
-
-
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி: மியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பரபரப்பான கிரிக்கெட் ஆட்டம். ஒரு பந்து மீதமுள்ளது. வெற்றிபெறுவதற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதுதான் அந்த ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாக அமையும். இத்தகைய பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் …
-
- 0 replies
- 767 views
-
-
பேட்ஸ்மென்களின் எதிர்பார்ப்பை முறியடிக்க வேண்டும்: வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர். - படம்.| ஏ.பி. இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர் நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவுஜ் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார். ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் இனி எடுபடாது என…
-
- 0 replies
- 477 views
-
-
-
ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா ? : பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரமாம் ! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரிய…
-
- 1 reply
- 363 views
-
-
‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி 2009-ல் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது கேப்டன் தோனியும் தினேஷ் கார்த்திக்கும். - படம். | ஏ.எஃப்.பி. முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்த…
-
- 1 reply
- 234 views
-
-
தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி! மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ…
-
- 0 replies
- 283 views
-
-
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாட வேண்டும் எனவும், அவர்களது பங்குபற்றலானது இளம் இலங்கை அணிக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் இலங்கையின் முன்னாள் அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக குறித்த வீரர்கள் இருவரும் அணிக்குத் தேவையான தருணங்களில் திறமையை வெளிப்படுத்த தவறி வருவதாகவும், அதிலும் மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். AFP செய்திச் சேவைக்கு அ…
-
- 0 replies
- 421 views
-
-
விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது? விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது. அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார். அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம். கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன? உலகில் பல்லாயிரக்கணக்கான மக்…
-
- 0 replies
- 640 views
-
-
தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டம் (காணொளி)
-
- 8 replies
- 1.6k views
-
-
டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். அவரைப்பற்றிய சில தகவல்கள் சென்னையை பூர்வீகம…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்! இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கையின் தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்த காட்சி அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது. இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். …
-
- 1 reply
- 559 views
-
-
50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை அ-அ+ ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7 கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். லா லிகாவில…
-
- 0 replies
- 508 views
-
-
சாதித்த இளம்படை: 'சாம்பியன்' இந்தியா - 5 முக்கிய அம்சங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு…
-
- 0 replies
- 389 views
-
-
டெஸ்ட் அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்ற நட்சத்திரங்கள் 18ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டு கிரிக்கெட். ஏறத்தாழ மூன்றாவது நூற்றாண்டை கடந்து விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டை உலகெங்கிலும் இருந்து ஆயிரம், ஆயிரம் வீரர்கள் விளையாடியிருந்தாலும், ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தங்களது அபார விளையாட்டு திறனால் நீங்கா இடம் பிடித்தனர். அதிலும் டொனால்ட் பிரட்மேன், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்ற ஒருசில வீரர்கள் எந்த நாடு என்ற வரையறையின்றி, உலக ரசிகர்களையும் ஈர்த்தனர். இது இவ்வாறிருக்க, ஓவ்வொரு வீரருக்கும் தமது தாய் நாட்டுக்கு விளையாடுவது எந்தளவு பெருமையைப் பெற்றுக் கொ…
-
- 0 replies
- 355 views
-
-
அரையிறுதியில் யுனைட்டெட், டொட்டென்ஹாம் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தகுதிபெற்றுள்ளன. இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில், தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், சுவான்சீ சிற்றி ஆகியவற்றை வென்றே மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதிபெற்றுள்ளன. தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நெமஞா மட்டிக்கின் உதையை றொமேலு லுக்காக்கு கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெ…
-
- 0 replies
- 365 views
-
-
சுதந்திரக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை - இந்தியா இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரானது தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை -– இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு போட்டித் தொடரானது இருபதுக்கு 20 …
-
- 39 replies
- 2.3k views
-