அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது? யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே தீபம் ஏற்றுவதுடன் நினை கூர்தல் முடங்கிப் போனது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை புதிய அரசாங்கம் தடுக்கவில்லை. இதனை வேண்டுமானால் ஆட்சி மாற்றத்தின் பெறுபேறு என்று சிலர் வர்ணிக்கக் கூடும். ஒன்றை தடுப்பது அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். அந்த ஈர்ப்பே எப்போதும் விடயத்தை சூடாக வைத்திருக்கப் பயன்படும். ராஜபக்ச நிர்வாகம் அதனைத்தான் செய்தது. முக்கியமாக கோத்த…
-
- 2 replies
- 641 views
-
-
நேற்று -இன்று -நாளை!! நேற்று -இன்று -நாளை!! 1 – நேற்று முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களை அடக்கி ஆண்டவர்கள், சித்திரவதை செய்தவர்கள், தமிழ்த் தலைவர்களைக் கொன்று புதைத்தவர்கள், பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்பவற்றை மறுத்தவர்கள், பாசிச ஆட்சி நடத்தியவர்கள் தொலைந்து அழிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் கொக்கரித்து ஆனந்தக்கூத்தாடுகிறார்கள் சிலர். அந்த அழிவை நடத்திய மகிந்த …
-
- 0 replies
- 948 views
-
-
மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழி என்பது மக்களை ஒன்றிணைக்கும் முக்கிய ஊடகம் எனக் கொள்ளப்படும். இந்த உண்மை சகல இனத்தவர்களுக்கும் பொதுவானதொன்று. மனிதர்கள் எந்தவொரு மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும், அதன் மூலம் அவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே யதார்த்தம். மொழி தொடர்பான சமூகத்தின் பொது நோக்கும் அதுவேயாகும். ஆனால் நாகரீகமடைந்த சமூ…
-
- 0 replies
- 502 views
-
-
ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம் உலகில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை என்பவற்றின் அடிப்படையிலேயே, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்புகள், பின்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் பேணப்படுகின்றது. இது, பின்லாந்தின் முன் மாதிரி. அந்தப் பட்டியலில், மொத்தமாக 156 நாடுகள் இடம்பெற்ற…
-
- 0 replies
- 562 views
-
-
மேலோங்கும் இனவாதமும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இனவாத அமைப்புக்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது.இதனால்தான் முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்திற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வாக்களித்தார்கள். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் முன்னைய ஆட்சியை விடவும் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதில் அ…
-
- 0 replies
- 368 views
-
-
தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக மாநில அரசு இரட்டைவேடம் போடும் அதேவேளை, மத்திய அரசாங்கம் தமிழக மக்களை வஞ்சிப்பதாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. காவிரி நதியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டிய நீரை திறந்துவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனம்செய்து அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையாவின் அரசாங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதனூடாக காவிரி நீரை தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநில…
-
- 0 replies
- 409 views
-
-
வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா? இந்தியா, சீனா என்னும் இரண்டு பழம்பெருமை வாய்ந்த இரு நாகரிகங்களும் இன்று உலகில் அதிவேகமாக பொருளாதார விருத்தியில் முன்னேறும் நாடுகளாகும். உலக சனத்தொகையில் நாற்பது வீதத்துக்கு மேற்பட்டோர் இவ்விரு தேசங்களிலும் வாழ்கின்றனர். இந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துக்கு பெயர் போன இந்தியா பல மொழிகளுக்கு, மதங்களுக்கு, பல வேறுபட்ட கலாசாரங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜனநாயக நாடு என வர்ணிக்கப்படுகிறது. சனத்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. தரையாலும் கடலாலும் சூழப்பட்ட நாடாகும். இந்தியாவின் தெற்கு இந்து சமுத்திரத்தால் சூழப…
-
- 0 replies
- 675 views
-
-
யார் அடுத்த முதலமைச்சர்? அக்கரையூரான் யாழ்ப்பாண வீதிகளெல்லாம் ‘மாவை’ யாருக்கே நன்கு தெரியும்! அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். இன்றும் அம்மண்ணிலேயே வாழ்கின்றவரென்பதால் அவரையே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதமுடியுமே தவிர முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் ஒப்பீட்டளவில் அப்பதவிக்கும், பொறுப்பிற்கும் எந்தவகையிலும் அதற்குத் தகுதியானவரென்றோ மாவையாருக்கு நிகரானவரென்றோ கருதிவிடமுடியாதென அன்று …. வடபுலத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் ‘வேட்பாளராக யாரைக் களமிறக்குவதென்ற சர்ச்சைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மேலெழுந்து நின்ற வேளையில் மிகவும் அநாகரீகமான முறையில் தனது கருத்தை வாதத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்த தமிழரசுக…
-
- 1 reply
- 3.6k views
-
-
மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன் சுப்த்ரா “பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக…
-
- 0 replies
- 492 views
-
-
நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்… புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. ‘நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது’ என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்ச…
-
- 1 reply
- 950 views
-
-
திசைமாறி பயணிக்கும் தேசிய அரசாங்கம் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையும் மேதின அறை கூவலும் தேசிய அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள சவால்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எதிர்காலத்தில் எதை நோக்கி நகரப்போகிறார்கள் என்ற விவகாரத்தை விளக்குவதாகவே காணப்படுகிறது. ஜனாதிபதியவர்கள் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் நிகழ்த்திய கொள்கை விளக்கவுரையானது இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டு போக்கையும் அது செய்யத்தவறிய முக்கிய விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக காணப்படுகிறது. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்க…
-
- 0 replies
- 522 views
-
-
பொம்மைக் கடையைக் காட்டி நடையைக் கட்டும் நிலை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஜே.வி.பி.யின் மே தின ஊர்வலத்தில் சுமந்திரன் எம்.பி.யும் கலந்து கொண்டிருந்தார். இந்த ஜே.வி.பி. தான் சட்ட நடவடிக்கை மூலம் வடக்கையும் ,கிழக்கையும் பிரித்து வைத்தது. அண்மையில் சுமந்திரன் எம்.பி. வடக்கோடு கிழக்கை இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் சம்மதிக்கவில்லை எனவும் இன்னும் சிறிது காலத்தில் கிழக்கு தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள் எனவும் கூட கூறியிருந்தார். இதன் மூலம் அவர் ஜே.வி.பி.யின் முன்னோடி செய்கையை சரி காணவே செய்கிறார் என நினைக்கிறேன். கிழக்கில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் பேரின குடியேற்றங்களையும் பேரின அகழ்வாராய்ச்சிகளையும் நில அபகரிப்புகளையும் சிலை வைப்பு…
-
- 0 replies
- 414 views
-
-
எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும் என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது? என்னுடைய கணவர் எங்கே? என் சகோதரனுக்கு நடந்தது என்ன? இவ்வாறான கேள்விகளை எழுப்பிய வண்ணம் காணாமல் போனோரின் உறவினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது அரசாங்கத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இந்த காணாமல் போனோரின் உறவினர்கள் இவ்வாறு தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக்கோரி போராடி வருகின்றனர். ஆனால் இதுவரையும் எந்தவொரு சம்ப…
-
- 0 replies
- 601 views
-
-
கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்! ஓர் ஆட்சி மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம். உறுதியான அரசியல் நிலைமை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது கடினமான காரியம். நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரண்டு அரசியல் கட்சிகளும் பலப்பரீட்சைக்கான மோதல்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்து ஆட்சியை நடத்துவதா? அல்லது இணைந்து செயற்படுவதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முடிவு காண முடியவில்லை. அதிகாரத்தைத் தொடர்வத…
-
- 0 replies
- 736 views
-
-
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! இன்றைய அரசியலரங்கில் நாட்டு மக்களால் பெருமளவில் பேசப்படுமொரு விஷயம்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிப்பதென்பதாகும். இந்த முறைமை ஒரு சர்வாதிகாரத் தன்மை கொண்டதெனக் கருதப்படுமானால், மேற்குலக வல்லரசான அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலிருப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம் நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறி…
-
- 0 replies
- 359 views
-
-
நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் ஆட்சி எவ்வாறானது?
-
- 0 replies
- 460 views
-
-
பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! தமிழ் மக்களை வளைத்துப் போடுகின்ற முயற்சிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமிழர்களிடையே ஊடுருவியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. …
-
- 0 replies
- 425 views
-
-
2019: இந்தியத் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்குமா? இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல், இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. மே 12 ஆம் திகதி வாக்குப் பதிவைச் சந்திக்கும் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றன. இங்கு, மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வரும் இரு கட்சிகளுக்கும் போட்டியாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி முட்டி மோதியது. ஆனால் அந்தக் கட்சிக்கும் - பா.ஜ.கவுக்கும் ஒருமுறை கூட்டணி அமைந்து, ஆட்சி அமைத்த பிறகு, இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்- அங்கம் 01 ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மேமாதத்தில் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என மக்களால் அடையாளம் காணப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். இன்றும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் இலட்சியத்திலிருந்து வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டுபவர்கள் பலர். எதிர்க்கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்கள…
-
- 22 replies
- 5.4k views
-
-
கொரிய நாடுகளின் இணக்கமும் பிணக்கமும்!! கொரிய நாடுகளின் இணக்கமும் பிணக்கமும்!! 1953 ஆம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரியாவின் முதலாவது அதிபர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது? இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை எப்போது ஆரம்பித்தது? 1948ஆம் ஆண்டுவரை ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிய நேரிட்டது? நீண்ட மற்ற…
-
- 0 replies
- 407 views
-
-
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? 2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து விட்ட நிலையிலும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தும் யோசனை பாராளுமன்றத்தில் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை முன்னெடுப்பதா, இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிந்த பின்னர் உடனடியாக அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான…
-
- 0 replies
- 454 views
-
-
இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும் - இரணைதீவிலிருந்து கமந்தி விக்கிரமசிங்க பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து …
-
- 0 replies
- 387 views
-
-
மாவீரர் துயிலுமில்லமும் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் … குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு. தமிழ்ச்செல்வன்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யார் நடத்துவது என்ற வாதப் பிரதிவாதங்களின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அதனை வடக்கு மாகாண சபையே நடத்தும் என நேற்று (07.05.18) அறிவித்துள்ளார் அறிவித்து அவர் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது என்னவெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பிரதேச சபைக்குட்பட்ட காணியாகும். எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் அந்த இடத்தில் நிகழ்வை நடத்தும் சட்ட ரீதியான உரிமை வடக்கு மாகாண சபைக்கே உரியது என்ற கருத்தே. ஆதாவது சட்டரீதியா…
-
- 1 reply
- 846 views
-
-
இராணுவத்தினர் மீதான முதலமைச்சரின் குற்றச்சாட்டும் யதார்த்த நிலையும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். படையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் வியாபார செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான பெருமளவான நிலங்களில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன் ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் இத்த…
-
- 0 replies
- 454 views
-