அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா? யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மன்னாரிலும், மாந்தையிலும் ஏனைய கட்சிகளும் அதே உத்தியைக் கையாண்டுதான் பிரதேச சபைகளைக் கைப்பற்றின. தாம் அப்படி எந்தவோர் உத்தியையும் கையாளவில்லையென்று கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் அது தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தங்களோடு உரையாடியதாக ஈ.பி.டி.பி கூறுகிறது. கிளிநொச…
-
- 0 replies
- 473 views
-
-
சம்பந்தனின் தோல்வி யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு…
-
- 1 reply
- 525 views
-
-
கடப்பாடுகளை மறந்த அரசு உள்ளூராட்சித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலையிலும், கொழும்பு அரசியல் அரங்கில் தோன்றிய கொந்தளிப்பு இன்னமும் அடங்குவதாகத் தெரியவில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்ட பின்னடைவு, கூட்டு அரசாங்கத்தின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இரண்டு கட்சிகளுக்குள்ளேயும், உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இது கட்சிகள் சார்ந்து உருவாகிய பிரச்சினை. அதேவேளை, கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரண…
-
- 0 replies
- 375 views
-
-
தக்கவைப்பாரா ஜனாதிபதி? லண்டனில் நடந்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்று விட்டுத் திரும்பியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, புத்தாண்டுக்கு அடுத்த நாளே- அதாவது ஏப்ரல் 15ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி, 23 ஆம் திகதி தான் நாடு திரும்பியிருந்தார். முன்னர் அரசியல்வாதிகள் புத்தாண்டை இலங்கையில் கொண்டாடுவதற்கே விரும்புவார்கள். குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடும் வழக்கம் சிங்களவர்களிடம் உள்ளது. மத மற்றும் பாரம்பரிய சடங்குகள், விளையாட்டு விழாக்கள் என்று புத்தாண்டு களைகட்டுவது வழக்கம். ஆனால் இ…
-
- 0 replies
- 402 views
-
-
விக்னேஸ்வரனின் முதல் சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அல்லது கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு, இந்தியாவுக்குச் சென்றிருந்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இந்த அறிவிப்புக்காக, பல மாதங்களாக காத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமக்குள் சண்டையை ஆரம்பித்து விட்டன. முதலமைச்சரின் அறிக்கை வெளியானதும், கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “முதலமைச்சர்…
-
- 0 replies
- 613 views
-
-
தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்ப டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள்மீது சிறிதும் அக்கறையில்லை, அரசுடன் ஒட்டியிருந்து கொண்டு சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறி…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம்!! 2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆதரவுடன் தெற்கில் மலர்ந்த அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க முனைந்தது. இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பங்காளராக இணைந்து கொண்டது. அரசியல் கட்சிகள் தமது அரசியல் பேரங்களையும் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளையும் ஒன்றாகக் கலக்க முற்பட்டன. புதிய அரசமைப்பில் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அம்சங்களை முதன்மைப்படுத்துதல் கைவிடப்பட்டது. புதிய அரசமைப்பில் தமி…
-
- 0 replies
- 383 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண தேர்தலும் சவால்களும் மாகாண சபைத் தேர்தலுக்கான வாடை வீசத்தொடங்கியுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமையில் மீண்டும் மாகாண சபைக்கான தேர்தல் சங்கை ஊதத்தொடங்கியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவரது இந்த அறிவித்தலானது வடகிழக்கில் ஒரு பரபரப்பையும் தேசிய அரசியலில் சலனத்துக்கான எச்சரிக்கையையும் வழங்கியிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பாராத தோல்வியைக்கண்ட சுதந்திரக்கட்சியும் ஐ.தே.க.வும் மாகாண சபைகளுக்கான ேதர்தலை இப்ேபாதைக்கு நடத்தப்போவதில்லை. அதாவது "பொல்லைக்கொடுத்து அடிவாங்க" அவர்கள் தயாராகவில்லையென்ற வதந்திகளுக்கு மத்தியில் …
-
- 0 replies
- 364 views
-
-
#தமிழ்தேசியம்: தீர்வுக்குத் தடை பிராந்திய அரசியலா, இந்திய தேசியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது
-
- 0 replies
- 608 views
-
-
எப்போது அவிழும் இந்த அரசியல் புதிர்? ரொபட் அன்டனி பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்னும் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட இந்த அரசியல் நெருக்கடி காரணமாக தேசிய அரசியலில் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியதுடன் நாட்டின் அன்றாட செயற்பாட்டு கட்டமைப்பிலும் பல சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் அடுத்த ஒன்றரை வருடகாலத்திற்கும் தொடரும் என்ற நம்பிக்கை மேலெழுந்தவாரியாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை உறுதியான முடிவு எட்டப்படாத நிலைமையே காணப…
-
- 0 replies
- 461 views
-
-
நிலைமாற்றத்தின் அவசியம் 30வருடங்களாகத் தொடர்ந்த யுத் தம் பல்வேறு பாதிப்புக்களையும் பல்வேறு மாற்றங்களையும் நாட்டில் ஏற்படுத்தியிருந்தன. மக்கள் வலிந்து வேரோடு இடம்பெயரச் செய்யப்பட்டமையும், இடம்பெயர நேர்ந்தமையும், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திட்டிருந்தன. பல்வேறு நெருக்கடிகள், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், உயிரிழப்புக்கள், உடைமை இழப்புக்கள் என்று இழப்புக்களின் பட்டியல் நீண்டிருந்தது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து, அல்லது யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இந்த நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இயல்பாகவே எழுந்திருந்தது. ஆயு…
-
- 0 replies
- 501 views
-
-
கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம்தான் கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம்தான் நல்லாட்சி அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. தெற்கின் அரசியல் சூழ்நிலை இதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் தமிழர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக…
-
- 0 replies
- 446 views
-
-
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது ? இந்தக் கேள்வி பல மட்டங்களிலும் தலைதூக்கியிருந்தது. தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை அவசர அவசரமாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பம்மாத்து அபிவிருத்தி அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை எல்லாம் காண நேரிட்டபோது, நம்மிடம் எவையிருந்தும் அந்தக் கணத்தில் பிரயோசனமில்லைப் போல் தோன்றியது. நீரைத் தடங்கலின்றிப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, சிந்திக்க வேண்டிய தேவை எழுந்தது. ஒரு காலத்தில், வாளிகளால் அள்ளிக் குளித்த நமது கி…
-
- 0 replies
- 647 views
-
-
அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள் தஞ்சம் மறுக்கப்பட்டும் பயண வழியில் சிக்கியும் அவதியுறும் தமிழ் அகதிகளின் அவலம் ‘வீரகேசரி’ வாசகர்களுக்காக விசேடமாக எழுதப்பட்ட இந்த ஆய்வில், தஞ்சம் கோரும் நோக்குடன் புறப்பட்டு, வேண்டிய நாட்டிற்குப் போய்ச்சேர முடியாமல் இடை வழிகளில் சிக்குண்டு அவலத்தில் வாழும் பல ஆயிரம் தமிழ் அகதிகள் பற்றியும் பல நாடுகளில் அகதி தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட நிலையிலும் வாழும் தமிழர்கள் நிலை பற்றியும் சர்வதேச சட்டங்களின்படி எவ்வாறு தஞ்சம் கோருவது என்பது பற்றியும் இலங்கைத் தமிழ் அகதிகள் தற்போது தஞ்சம் கோரிச்செல்லும் முக்கிய நாடான அவுஸ்திரேலியா பற்றியும் மற்றைய நாடுகளில் தஞ்சம் பற்றியும், …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஏற்றத்தாழ்வும் அரசியல் நெருக்கடியும் சிவப்புக் குறிப்புகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள், அரசியல் நெருக்கடியாகத் தொடர்ந்த வண்ணமுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, அதன் தோல்வி, ஆகியன, ஆட்சியமைப்பதற்குக் கடினமாக உணரும் அரசாங்கமொன்றின், சமீபத்திய வெளிப்பாடுகளாகும். அரசியல் சக்திகளின் மாற்றங்களுக்கும் அரசாங்கத்துக்குள் மாறி மாறிக் குறை சொல்லலுக்கும் நடுவில், இவ்வாண்டு பெப்ரவரியில், அரசாங்கத்துக்கு எதிரான வாக்குகள் அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அடையாளங்காணப்படுகின்றன. வடக்கில், தமிழ்த் த…
-
- 0 replies
- 360 views
-
-
சிரியா: பேரரங்கின் சிறுதுளி போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி, சிரிய இராணுவத்தினர், தமது மக்கள் மீது, ‘இரசாயன வாயு’ பயன்படுத்தித் தாக்குதல் நடாத்தினார்கள் என்று அமெரிக்காவும் அதன் ‘நேட்டோ’க் கூட்டாளிகளும் குற்றஞ்சாட்டினார்கள். இதன் அடிப்படையில், சிரியாவின் மீது, தாக்குதல் நடாத்துவதன் ஊடு, அம்மக்களைக் காப்பது தமது கடமை என அறிவித்து, ஏப்ரல் 14ஆம் தி…
-
- 0 replies
- 614 views
-
-
இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பேரணியின் போது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றில் கருத்துரைத்த போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தின் தலைவராக அல்லாமல் பல்கலைக…
-
- 0 replies
- 1k views
-
-
தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிப்பதற்காக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக பொறுப்பேற்றுள்ளார். குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப் பட்டதும் தற்போதைய நாடாளுமன்றத்தை உ…
-
- 0 replies
- 474 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இம்முறை, அவர்களின் கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரதமர் ரணில…
-
- 1 reply
- 547 views
-
-
விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்? தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது. அந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியில் அதிர…
-
- 0 replies
- 382 views
-
-
மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசப்பட்ட நாடுகளின் வரிசையில், மாலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாதக் குழுக்களையும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளையும் களைதல், சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளைப் பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை, உள்நாட்டு பயங்கரவாதச் செயற்பாடுகள், தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன. 2012ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து, பயங்கரவாதத்து…
-
- 0 replies
- 364 views
-
-
அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!! கரலியத்தை கிராமத்தைச் சேர்ந்த சாலிஸ் முதலாளி அந்தக் கிராமத்துக்கே தலைவர் போன்றவர். பாதிக் கிராமத்துக் குச் சொந்தக்காரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்னந்தோட்டங்களுக்கும், பல ஏக்கர் வயல்நிலத்துக்கும் சொந்தக்காரர். இவைகள் அனைத்தையும் தனித்து பாதுகாப்பது சிரமமென உணர்ந்த சாலிஸ் முதலாளி, அண்டைக் கிராமங்கள் சிலவற்றிலிருந்து தொழிலாளர்களைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கமர்த்தி தமது தோட்டங்களைப் பராமரிப்பித்து வந்தார். தமது தோட்டங்களிலேய…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன? யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியிருந்தனர். இவ்வாறு கோரியவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினர் வவுனியா நகரசபை தலைவர் பதவியில் வெற்றியீட்டியதை மையப்படுத்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கை ஒ…
-
- 0 replies
- 297 views
-