அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
பல்லின தேசியம் இல்லாமையே தீர்வுக்குத்தடை எந்த காரியத்தைச் செய்வதாயினும் எப்படிச் செய்வது? அதற்கு அவசியமானவை என்னென்ன? இடையில் குழம்பினால் எப்படி சரி செய்வது? முழுமையாக நிறைவேற்ற என்ன உபாயங்களைக் கையாள்வது? என்பன பற்றியெல்லாம் முடிவு செய்தே காரியமாற்ற வேண்டும். இதைத்தான் ‘எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார். 1949 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க கிழக்கில் கல்லோயாத் திட்டத்தை ஆரம்பித்து சிங்கள மக்களைக் குடியேற்றியபோது பின் விளைவைச்சிந்திக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு ஆர்.டி. பண்டாரநாயக்க ‘சிங்களம் மட்டும்’ எனும் மொழிச்சட்டத்தைக…
-
- 0 replies
- 335 views
-
-
மெய்யான கொள்கைக் கூட்டு எது? நிலாந்தன் அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில தடவைகள் நடந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடைசியாக அரசியற் கைதிகளின் போராட்டத்தை கையில் எடுத்தது சில அரசியல்வாதிகளும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுமாகும். ஆனால் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது சில பொது அமைப்புக்களாகும். சுமார் ஐந்து பொது அமைப்புக்கள் அப்போராட்டத்தை முதலில் தொடங்கின. பின்னர் படிப்படியாக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் பல பொது அமைப்புக்கள் போராட்டத்துள் இணைந்தன. கைதிகளுக்கு மீட்சி கிடைத்ததோ இல்லைய…
-
- 0 replies
- 547 views
-
-
வாக்காளர்களர்கள் என்ன செய்ய வேண்டும்? உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்பது ஆட்சிமாற்றத்தை உடனடியாக ஏற்படுத்தக்கூடிய தேர்தல் அல்ல. ஆனால் ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளுக்கு தாம் எந்த இடத்தில் இருக்கின்றோம். கடந்த மூன்று வருடங்களாக தாம் முன்னெடுத்துவந்த திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பான மதிப்பீட்டை கட்சிகள் செய்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி எதிர்த்தரப்பில் இருக்கின்ற அரசியல் கட்சிகளும் தாம் முன்னெடுத்து வருகின்ற அரசியல் செயற்பாடுகள், ஆர்ப்பாட் டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என்பவற்றை பொதுமக்கள் ஏற்றுக்கொள்கின்றனரா? இல்லையா என்பது தொடர் பான ஒரு மதிப்பீட்டை …
-
- 0 replies
- 561 views
-
-
ஏகபோக உரிமை! தமிழரசுக்கட்சியின் இத்தகைய செயற்பாடானது, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாட்டு உரிமையையும் அரசியலில் பங்களிப்பு உரிமையையும் அப்பட்டமாக மீறுகின்ற ஓர் உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகின்றது ஒரு புறம் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது. மறுபுறத்தில் மிகவும் பரபரப்பாக உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் மனித உரிமை எவ்வாறு பேணப்படுகின்றது என்பது பற்றியும், நாட்டின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது. இத்தகைய சிந்தனையைத் தூண்டுவதற்குக் காரணம் இல்லா…
-
- 0 replies
- 784 views
-
-
ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா. கடந்தவாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை இஸ்ரேலின்…
-
- 0 replies
- 573 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையும் எதிரணியின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் உள்ள சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண்பதே எமது குறிக்கோளாகும். அதனை அடையும் இலக்குடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அதனை அடைந்துகொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு உறுதியாக இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய சூழலில் மக்களுடைய தீர்மானம் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் வெளிவரவேண்டியது அத்தியாவசியமானதாகும். அதனடிப்படையில் மக்கள் மிகவும் நிதானமாக சி…
-
- 0 replies
- 432 views
-
-
ஏன் அரசியல்வாதி ஆகிறார் மைத்திரி? “அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான். நாட்டின் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றி நினைக்கிறான்” என்ற, ஐக்கிய அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின், மிகப்பிரபலமான மேற்கோள் வசனத்தை, பல தடவைகள் வாசித்திருக்கிறோம். அதன் பொருளும், எவ்வளவுக்கு ஆழமானது என்பதையும் நான் பார்த்திருக்கிறோம். வெறுமனே சில்லறைத்தனமான அரசியல் நன்மைகளுக்காக, இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாக, நாடே பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, அந்தப் பிளவுகளை இன்னமும் இணைக்க முடியாமலிருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போருக்குப் பின்னரான இலங்…
-
- 0 replies
- 562 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு: புதுவழியில் பயணிக்கும் முஸ்லிம் அரசியல் தமிழர்களுக்கான அரசியலில், ஒன்றிணைந்து செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகளும் கீறல்களும் விழுந்துகொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பொன்று, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உதயமாகி இருக்கின்றது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அஹிம்சை ரீதியாகப் போராடிய தமிழரசுக் கட்சியுடன், ஆயுதத் தொடர்புள்ள இயக்கங்களாக ஒரு காலத்தில் அறியப்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல, முஸ்லிம் சமூகத்துக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை மக்கள…
-
- 0 replies
- 301 views
-
-
இஸ்ரேலிய – பாலஸ்தீன சமாதான நடவடிக்கையின் இதயத்தில் ஒரு குத்து அமெரிக்க ஜனாதிபதியொருவர் இ்ஸ்ரேலிய – பாலஸ்தீன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரமொன்றில் இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தை எடுப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. பாலஸ்தீனப் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு ஜெரூசலேத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நெடுகவும் அமெரிக்கா பெரும்பாலும் ஆதரித்தே வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை பாதுகாத்துவந்திருக்கும் அமெரிக்கா நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அதன் உதவிக்கு வந்திருக்கிறது; நவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் அணுவாயுதங்களைக் குவித்துக்கொண்டிருந்தபோது கூட அமெரிக்கா பாராமுகமாக இருந்திருக்கிறது. இவற்றுக்கெல…
-
- 0 replies
- 841 views
-
-
தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டு’ச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், டெலோவும் வெளியேறினால், அது ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளத்தின் மீதான பெரும் அடியாக அமைந்திருக்கும். ஆனாலும், இரா.சம்பந்தனின் தலையீடுகளை அடுத்து, கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே முன்னெடுக்கப்பட்ட …
-
- 0 replies
- 416 views
-
-
சோதனைக் களம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-13#page-22
-
- 0 replies
- 624 views
-
-
இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு - அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்? நளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) பல ஐரோப்பிய நாடுகளில் பெண்க…
-
- 0 replies
- 456 views
-
-
ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள் நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர். தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது…
-
- 0 replies
- 308 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் நரேன்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமைகிறது. கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் மட்டங்களில் மக்களை வழி நடத்துவதற்கான ஆளுமைகளை தெரிவு செய்வதற்காகவும் இந்த தேர்தல்கள் நடத்தப்படுவதாக கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதன் ஊடாக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி ஜனாதிபதியினுடைய அ…
-
- 0 replies
- 728 views
-
-
நவீன அடிமைகள் அடிமைமுறை என்பது முதலாளித்துவ மேலாதிக்கத்தால் ஒரு பகுதி சமூகத்தினரை கொடூரமான முறையில் அடக்கியாள் வதாகும். ஆண்டாண்டு காலமாக பல இனங்கள் அடிமைப்பட்டுக்கிடந்தாலும், தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட அடிமைக்கு எதிரான புரட்சிகளால் அந்த இனம் தலைநிமிர்ந்து நடப்பதை நாம் காணமுடிகிறது. மலையகத்திலும் அடிமைத்தனத்தை இல்லாதொழிக்க போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டாலும், இறுதியில் அது தொழிற்சங்கங்களில் சங்கமமாகிய வரலாறே பெரிதும் உள்ளது. தொடர்ந்து மலையகத்தில் நிலவிவரும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான அற்பத்தனமான போட்டி அரசியலால் உரிமைகளை வென்றெடுப்பதில் பின்தங்கியவர்களாயுள்ளனர். போட…
-
- 0 replies
- 560 views
-
-
குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம் அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது. …
-
- 0 replies
- 444 views
-
-
விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? யதீந்திரா தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக்குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது. தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு? இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, அதன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆரம்பித்து தற்போது தமிழ்த் தேசிய பேரவையாக வெளிப்பட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பின் பங்கா…
-
- 0 replies
- 713 views
-
-
பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல் – இதயச்சந்திரன் மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம். பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம். அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு. பண்டா காலத்தி…
-
- 0 replies
- 551 views
-
-
இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு எஸ். டப்ளியூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் 1924 ஆம் ஆண்டு சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டதாக அண்மையில் சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அது கரையோர சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்தும் கண்டி மற்றும் சப்ரகமுவ சிங்களவரின் தனித்துவங்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்த சமஷ்டியாகும். எனினும் அது அமுலாகியிருந்தால் சிங்கள மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும். வடமாகாண தமிழர்க்கும் தனித்துவப் பிரதேச வலிமை கிடைத்துவிடும் என நினைத்தே சிங்கள மகாசபையின் தலைவராக அவர் ஆனதும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார். 1957 ஆம் ஆண்டு திருமலையில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் தந்தை செல்வா கிழக்க…
-
- 1 reply
- 445 views
-
-
கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவெடுத்ததை அடுத்து, கூட்டமைப்பு பலவீனமடைவது போன்ற தோற்றப்பாடு காணப்பட்டது. எனினும், அடுத்த சில நாட்களிலேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்கிரஸ் கூட்டணி முயற்சி முளையிலேயே கருகிப் போனதும், ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரதர் அணி போன்றவற்றுடன் இணைந்து செயற்படுவதற்கான முன்னாயத்தங்களில் இறங்கியதும், கூட்டமைப்பு மீண்டும் பலமடைவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கச் செய்தது. எனினும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீட்டுப் பேச்…
-
- 0 replies
- 409 views
-
-
புதிய கூட்டுக்களும் – தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்? – நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழு…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…
-
- 0 replies
- 293 views
-
-
மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி? தீரன் நடைபெறவுள்ள தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி மிக மோசமான சரிவைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தமிழரசுக் கட்சி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அப்பால் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இம்முறை பாரிய சரிவைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்கள் மற்று பொது மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உட்கட்சி பூசல்! மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும்…
-
- 1 reply
- 855 views
-
-
திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் 10 க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாது ஆக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் கூட, தமிழ் மக்களுடைய கைகளிலிருந்து பறிபோகும் அபாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. புதிய உள்ளூராட்சி சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் வட்டாரப் பிரிப்புகள், எல்லை நிர்ணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என, பொது மக்கள் தமது விசனத்தை தெரிவித்துவருவதுடன், புத்திஜீவிகள் விமர்சித்தும் வருகின்றனர். 11 பிரதேச செயலாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் மக்களின் அரசியல் பலவீனம் தமிழர் தரப்பு அரசியலானது, தமிழரசுக்கட்சி தலைமையிலான அணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்த அணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உள்ளடக்கி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் மற்றுமோர் அணி என பல கூறுகளாக சிதறியிருக்கின்றன. தமிழ் மக்களின் பலம் வாய்ந்த அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதனால் பலமிழக்க நேரிட்டிருக்கின்றது. இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவாக மட்டுமல்லாமல் முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் பலவீனமாகவும் பலராலும் கவலையுடன் நோக்கப்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் மேலும் பலமுள்ள…
-
- 0 replies
- 448 views
-