அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல் – இதயச்சந்திரன் மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம். பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம். அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு. பண்டா காலத்தி…
-
- 0 replies
- 550 views
-
-
இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு எஸ். டப்ளியூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் 1924 ஆம் ஆண்டு சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டதாக அண்மையில் சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அது கரையோர சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்தும் கண்டி மற்றும் சப்ரகமுவ சிங்களவரின் தனித்துவங்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்த சமஷ்டியாகும். எனினும் அது அமுலாகியிருந்தால் சிங்கள மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும். வடமாகாண தமிழர்க்கும் தனித்துவப் பிரதேச வலிமை கிடைத்துவிடும் என நினைத்தே சிங்கள மகாசபையின் தலைவராக அவர் ஆனதும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார். 1957 ஆம் ஆண்டு திருமலையில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் தந்தை செல்வா கிழக்க…
-
- 1 reply
- 445 views
-
-
கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவெடுத்ததை அடுத்து, கூட்டமைப்பு பலவீனமடைவது போன்ற தோற்றப்பாடு காணப்பட்டது. எனினும், அடுத்த சில நாட்களிலேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்கிரஸ் கூட்டணி முயற்சி முளையிலேயே கருகிப் போனதும், ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரதர் அணி போன்றவற்றுடன் இணைந்து செயற்படுவதற்கான முன்னாயத்தங்களில் இறங்கியதும், கூட்டமைப்பு மீண்டும் பலமடைவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கச் செய்தது. எனினும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீட்டுப் பேச்…
-
- 0 replies
- 409 views
-
-
புதிய கூட்டுக்களும் – தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்? – நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழு…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் பலவீனம் தமிழர் தரப்பு அரசியலானது, தமிழரசுக்கட்சி தலைமையிலான அணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்த அணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உள்ளடக்கி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் மற்றுமோர் அணி என பல கூறுகளாக சிதறியிருக்கின்றன. தமிழ் மக்களின் பலம் வாய்ந்த அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதனால் பலமிழக்க நேரிட்டிருக்கின்றது. இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவாக மட்டுமல்லாமல் முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் பலவீனமாகவும் பலராலும் கவலையுடன் நோக்கப்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் மேலும் பலமுள்ள…
-
- 0 replies
- 447 views
-
-
சஞ்சலமான சகவாழ்வின் எதிர்காலம்? வீரகத்தி தனபாலசிங்கம் ( எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் ) ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்து இரு வருடங்கள் இரு மாதங்களுக்கும் சற்று கூடுதலான காலம் கடந்திருக்கும் நிலையில், அவற்றுக்கிடையிலான ‘சகவாழ்வு’ தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் வரை நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தந்திரோபாயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி…
-
- 0 replies
- 452 views
-
-
நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன. …
-
- 0 replies
- 426 views
-
-
வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த…
-
- 0 replies
- 393 views
-
-
சமஷ்டியின் மூலம் சவால்களை வெற்றி கொள்ள முடியும் இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இப்போது மேலெழுந்திருக்கின்றது. இவ்விடயத்தில் இழுத்தடிப்புகளை மேற்கொள்ளுமிடத்து நாடு அபாயகரமான சூழ்நிலையை சந்திக்க வேண்டிவரும் என்று தொடர்ச்சியாகவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேசமும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கையின் பசப்பு வார்த்தைகளை இனியும் சர்வதேசம் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதனையே சர்வதேசத்தின் அண்மைக்கால போக்குகள் வெளி…
-
- 0 replies
- 614 views
-
-
வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’? மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது. எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் க…
-
- 0 replies
- 496 views
-
-
யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம் நீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. நீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை. நீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்க…
-
- 0 replies
- 444 views
-
-
புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும் தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான். தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும். இந்தியா…
-
- 1 reply
- 551 views
-
-
மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி... தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைகளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்திய தர வகுப்பினர்களின் கைகளிலும், 1970 களுக்கு பின்னர் மத்திய தர இளைஞர்களின் கைகளிலும் குடிகொண்டது. முன்னையவர்கள் தங்களது கல்வி அறிவையும், செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி தமது உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இருப்பினும், அவர்களது எண்ணங்கள் முழுவதும் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதிலேயே குவிந்திருந்தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின…
-
- 2 replies
- 884 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் அரசின் மீதான அதிருப்தியும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-06#page-18
-
- 0 replies
- 250 views
-
-
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்…
-
- 0 replies
- 486 views
-
-
யானைச் சவாரி உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும். கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகள…
-
- 0 replies
- 690 views
-
-
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், இது சூனிய நிலைதானே. நிச்சயமாக! எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே. இந்த நிலைக்குத் தனியே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டும் கா…
-
- 0 replies
- 811 views
-
-
எங்கள் காலத்தில் தேசியவாதம் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் நவீன உலகத்திலிருந்து, பெருங்குழப்பமான தேசங்களின் இயல்பிலிருந்து பெறக்கூடிய பாடங்கள், அநேகமாக மறக்கப்படுகின்றன. ஆபத்தான தேசிவாத இயக்கங்களின் பிடியில் நாம் மீண்டும் சிக்கியுள்ளோம். அவ்வாறான கொள்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும், பொருளாதார நெருக்கடிகள் பங்களித்திருக்கலாம் என்ற போதிலும், தேசியவாதத்தின் எழுச்சிக்கு, அதை மாத்திரம் குறிப்பிட முடியாது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கிறுக்குத்தனமான வசவுரைகளாக இருக்கலாம்; ஐரோப்பாவிலுள்ள இனவாத அலையாக இருக்கலாம்; சீனாவிலும் இந்தியாவிலும், அபிவிருத்தியிலும் இராணுவமயமாக்கலிலும் அதி…
-
- 0 replies
- 423 views
-
-
சிறுபான்மைகளுக்குள் பகைமை பெரும்பான்மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்றிய சோல்பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்வாறு இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். அதாவது சிறுபான்மைகளின் பூரண சம்மதமும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் உள்ளடக்கமும் பல்லின நீதியரசர்களின் அங்கீகாரமுமின்றி யாப்பை மாற்ற முடியாது. என்று அமைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்திருக்கும். எனினும், பாராளுமன்றத்தால் யாப்பை இரத்தாக்க முடியாது என்று மட்டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வெளியே …
-
- 0 replies
- 546 views
-
-
பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா? இராணுவ சதிகளுக்கும், இராணுவ ஆட்சிக்கும் நீண்டகாலம் உட்பட்ட பாகிஸ்தான் மீண்டும் உலக மக்களின் கவனத்தை ஈர்த் துள்ளது. பாகிஸ்தான் சட்ட அமைச்சர் சாஹிட் ஹமீட் இஸ்லாமிய தீவிரவாத கட்சிகளின் தொடர்ச்சியான வழிமறிப்பு போராட்டத்தின் மூலம் பதவியிலிருந்து இறங்கியுள்ளார். அரசாங்கமும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு அடிபணிந்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் அரசாங்கம் தேர்தல் சட்டத்தில் திருத்தமொன்றை மேற்கொண்டது. அத்திருத்த சட்டத்தில் அல்லாஹ்வுக்கு மரியாதை செலுத்தும் வாசகம் இடம்பெறவில்லை என ஆட்சேபித்து இஸ்லாமிய தீவி…
-
- 0 replies
- 665 views
-
-
துரோகம் இழைத்தது யார்? : ஆயுதக் குழுக்களுக்கு அருகதை இல்லையா? மாவீரர் நாளன்று கிளிநொச்சியில் நடந்த மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளியிட்டிருந்த கருத்து தற்போதைய அரசியல் சூழலில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம் ஒன்றைத் தொட்டுச் சென்றிருந்தது. “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதக் குழுக்களாக இருந்தவர்கள் இப்போது மாவீரர் நாள் பற்றிப் பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மாவீரர் நாள் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் அரசுடன் இணைந்து எப்படிச் செயற்பட்டார…
-
- 1 reply
- 498 views
-
-
‘ஒருமித்த’ நாட்டில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா? இதயச்சந்திரன் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது. காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்பு…
-
- 0 replies
- 380 views
-
-
மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும் சீனா ஏனைய நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் நேரடியாக தலையீடு செய்யாமல் இருந்து வந்த இது கால வரையான போக்கை இப்போது கைவிட ஆரம்பித்திருக்கின்றதோ என்ற கேள்வியை மியன்மார் ரோஹிங்யா நெருக்கடிக்கு அது முன்வைத்திருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடியாமல் எழுப்புகிறது. ரோஹிங்யா நெருக்கடியைத் தணிப்பதற்கு சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவது முதலாவது கட்டம். இது அங்கு இடம் பெறுகின்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. அகதிகள் பிரச்சினை தொடர்பில் …
-
- 0 replies
- 379 views
-
-
போருக்கு தயாராகும் அரசியல் கட்சிகள் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 93, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு கடந்த 27 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாத சட்ட சிக்கல்கள், ஒரேமுறையில் நடத்த முடியாவிட்டால் பழைய முறையிலாவது தேர்தலை நடத்துங்கள் என்று கோரிக்கைவிடப்பட்டிருக்கும் நெருக்கடி, எல்லை நிர்ணயம் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் தவறு உள்ளது. அதை இரத்து செய்ய வேண்டுமென ரிட் மனுத்தாக்கல், தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடவேண்டுமென சட்டமா அதிபரினால் மேன்முற…
-
- 0 replies
- 364 views
-