அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
1970's - THE BEGINNING OF THE END OF DEVOTIONAL PATH AND TAMIL MUSLIM CO-EXISTENCE IN THE EASTERN PROVINCE OF SRI LANKA.- V.I.S.JAYAPALAN . 1970கள். கிழக்கில் பக்தி மார்க்கம் மற்றும் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் முடிவின் ஆரம்பம்.- வ.ஐ.ச.ஜெயபாலன் . Jaya Palan என்னுடைய பல்கலைக்கழக நாட்க்களில்தான் எனக்கு கிழக்கு மாகாணத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டது. 1970பதுகளின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்கள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது காசிநாதர் வணசிங்க எஃப் எக் சி நடராசா பிதா சந்திராபெர்ணாண்டோ போன்ற தமிழ் ஆழுமைகளை சந்தித்து முஸ்லிம் மக்கள் பற்றிய அவகளது அவிப்பிராயங்களைக் கேட்டுப் பதிவு செய்தேன். . கிழக்கில் நான் சந்தித்த காசிநாதரின் தலைமுறை தமிழ் முஸ…
-
- 1 reply
- 438 views
-
-
ரொஹிங்யா எதிர்ப்பின் பின்னணி புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற விடாப்பிடித்தனம், சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகின்ற சூழலில், பௌத்த அடிப்படைவாதம் மீண்டும் தனது முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பௌத்த அடிப்படைவாத வன்முறைகள் தீவிரம் பெற்றிருந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அவ்வப்போது அது தீவிரமடைவதும், குறைவதுமாகவே இருந்து வந்தது. தற்போதைய அரசாங்கம் கூட, பௌத்த அடிப்படைவாதக் கருத்துக்களை வலியுறுத்து…
-
- 0 replies
- 267 views
-
-
வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன் வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டள…
-
- 1 reply
- 391 views
-
-
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பாரா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அண்மைக்காலங்களில் மியன்மார் ரோஹிங்யா முஸ் லிம் இன சிறுபான்மை மக்கள், ராக்கன் மாநிலம், இனப்படுகொலை, அகதிகள் பங்களாதேச எல்லையை கடந்து தஞ்சமடைதல் போன்ற செய்திகள் அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரதான இடங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றன. முன்னர் இராணுவ தர்பார் ஆட்சி இடம் பெற்ற காலங்களில் அதாவது கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஜனநாயக மீட்புக் கோரி ஆங்சாங் சூகி என்கின்ற தலைவியின் போராட்டத்தால் ஜனநாய…
-
- 0 replies
- 720 views
-
-
ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? முடியுமானவரை இராஜ தந்திர ரீதியில் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள அனைவரும் பங்களிப்பை செய்யவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் நேர்மை யுடன் செயற்படுவது அவசியமாகும். அதேநேரம் அனைத்து தரப்பினரும் இந்த விடயங்களை குழப்பாமல் தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கவேண்டும் யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டுவருட கால அவகாசத்தை வழ…
-
- 0 replies
- 447 views
-
-
விலகிவரும் புறச்சூழல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப்பெறும் நேரமும் காலமும் நெருங்கியுள்ளதாக கனவு காணப்படுகிறது. ஆனால் அதற்கான அகச்சூழ்நிலையும் புறச்சூழ்நிலையும் நாளுக்கு நாள் விலத்திக்கொண்டு போவதைப்போன்ற ஒரு பிரமையே இப்பொழுது முன்நிற்கின்றது. ஒற்றையாட்சியென்ற நிலையிலிருந்து அரசாங்கம் மாறக்கூடாது, என்று கூறும் கடும் போக்காளர்களின் பிடி இறுகிக்கொண்டிருக்கிறது. இன்னுமொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறும் இன்னுமொரு தரப்பினர். இதற்கு நடுவில் இடைக்கால அறிக்கை அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ் இடைக்கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக…
-
- 0 replies
- 590 views
-
-
பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும் கடும்போக்காளர்களான பொதுபலசேனா உள் ளிட்ட பௌத்த மத தீவி ரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகளும், அந்த கொள்கை சார்ந்த அரசியல் தீவிரவாதிகளும் ஏனைய மதங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள். சிறுபான்மை மதங்கள் மீது குறிப்பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ் லிம்கள் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் இந்து மதத்தை அச்சுறுத்தி ஒடுக்குவதற்காக மென்முறையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்…
-
- 0 replies
- 350 views
-
-
2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு? Share அரச தலைவர் தேர்தலில் மகிந்தவின் அரசு கவிழ்க்கப்பட்டு மைத்திரி-– ரணில் தலைமையிலான கூட்டு அரசு உருவானபோது, இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒரு புதுவித உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்தன. இத்தோடு ஊழல்,மோசடிகள் ஒழிந்து விடும்; வாழ்க்கைச் செலவினம் குறைந்துவிடும்; பொருளாதார ரீதியில் நாடு அபிவிருத்தி அடையப் போகிறது என்றெல்லாம் மக்கள் கனவு காணத் தொடங்கினர்.போர் முடி வுக்கு வந்த வேளையில் கண்ட கனவு போன்றதே அதுவும். வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள ஐ.தே.கட்சியின் மதிப்பு ஐக்கிய தேசி…
-
- 0 replies
- 956 views
-
-
மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை வழங்கியிருப்பதாக, மன்று குறிப்பிட்டிருக்கிறது. தீர்ப்பின் சாதக, பாதகங்களை ஆராய்வது, இந்தப் பத்தியின் நோக்கம் கிடையாது. உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு, ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வகையில், ஒரு வித நிம்மதி உணர்வைத் தருவதை மறுத்துவிட முடியாது. ஆனால்,…
-
- 0 replies
- 305 views
-
-
வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் தமது நிலைப்பாட்டில் மக்கள் உறுதி Share முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங் களில் மீள்குடியேறுவதில் மிக நீண்ட இழுபறி நிலை காணப்படுகின்றது. தமக்குச் சொந்தமான நிலங்களைக் கொண்ட 138 குடும்பங்க ளுக்கு மாற்று நிலம், வீடு போன்ற வசதி வாய்ப்புக்கள் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதி லும், அவர்கள் தங்கள் சொந்த நிலங்கள்தான் தமது வாழ்வாதாரத்துக்குத் தேவை எனக் கோரி தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது போராட்டம் த…
-
- 0 replies
- 504 views
-
-
‘மூலதனம்’ - 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண…
-
- 1 reply
- 458 views
-
-
மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின், அரசாங்கம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அநாவசியமான சில வாசகங்களைப் புகுத்தி,…
-
- 0 replies
- 301 views
-
-
புதிய அரசியலமைப்பு எப்படி அமையும்? பி.மாணிக்கவாசகம் Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 592 views
-
-
தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும் சி. அருள்நேசன், கல்வியியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி? திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது. உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய…
-
- 0 replies
- 503 views
-
-
ஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும். இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர். ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு …
-
- 1 reply
- 696 views
-
-
சர்ச்சைக்குரிய தமிழ் பதம் மாறியது..... ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்று முன்மொழிவு http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-20 தொடரும்
-
- 3 replies
- 543 views
-
-
மூன்று தசாப்தங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் பசி எரியும் அனலில் தேகத்தை உருக்கி உயிரால் பெருங்கனவை எழுதிய ஒரு பறவை அலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது சுருள மறுத்தது குரல் அலைகளின் நடுவில் உருகியது ஒளி உறங்கமற்ற விழியில் பெருந்தீ …
-
- 0 replies
- 581 views
-
-
ஓர் எறியில் இரு கனிகள்: தமிழ் பேசும் மக்களின் அரசியலில் சாத்தியமா? அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பொதுவாகவே, அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எப்போதும் இவ்வாறான விவாதங்களும் விமர்சனங்களும் உருவாகுவதுண்டு. அதிலும், இனமுரண்களும் இனப்பகையும் ஜனநாயகப் பற்றாக்குறையும் அதிகாரக் குவிப்பும் பாரபட்சங்களும் மலிந்திருக்கும் நாட்டின் அரசமைப்புத் திருத்தத்தில் விவாதங்கள் நடக்காமலிருக்க முடியுமா? ஆகவேதான், இந்த விவாதங்களும் விமர்சனங்களும் நடக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கை முழுமையான…
-
- 0 replies
- 511 views
-
-
ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும் கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன. …
-
- 2 replies
- 707 views
-
-
சிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.! இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்க ஒரு சமூகமாக விளங்குகின்றனர். இம்மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சிறப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. இது தொடர்பில் வெளிநாட்டவர்களே பல சமயங்களில் வியந்து பாராட்டி இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இந்திய வம்சாவளி மக்களில் சிலர் தமது தனித்துவத்தையும், சிறப்புக்களையும் உணராது மெதுமெதுவாக பௌத்த கலாசாரத்தை பின்பற்றி சிங்கள மயமாகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் இவர்கள…
-
- 2 replies
- 860 views
-
-
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…
-
- 0 replies
- 320 views
-
-
பொது வாக்கெடுப்பு சாத்தியமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-8
-
- 1 reply
- 957 views
-
-
புவிசார் கேந்திரோபயங்களுக்காக மியன்மாரில் பலியிடப்படும் ரோஹிஞ்சாக்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-9
-
- 1 reply
- 401 views
-
-
தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம் Share தமது நீடித்த அரசியல் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்பதே வடக்கு,-கிழக்கு தமிழர்களின் அரசியல் பயணத்தின் ஒரே நோக்கம்.போர் சாத்தியப்படவில்லை.போரால் அதன் இலக்கை அடைய முடியவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் போர் என்பது தீர்வைப் பெறுவதற்கான போராட்டத்தின் ஒரு வடிவம்தான்.சாத்தியப்படாமல் போனது அந்த வடிவமே அன்றி, போராட்டம் அல்ல.அந்த வடிவம் இப்போது மாறி, போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இப்போதைய ப…
-
- 0 replies
- 363 views
-