Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும் சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் காணிப் போராட்டம் யுத்தம் முடிந்த பின்னரான ஒடுக்கு முறைக் காலத்தில் சிறு நெருப்பாக இருந்த காணிப் போராட்டம் இப்போது வடக்கு அரசியலில் பெருநெருப்பாக எரிகின்றது. இந்தப் போராட்டங்களுக்கு ஆட்சி மாற்றத்துடன் வந்த ஜனநாயக காற்று, ஒட்சிசன் வழங்க, யுத்தத்தில் சீரழிந்துபோன மக்களை வாட்டும் கிராமிய பொருளாதார நெருக்கடி, விவசாயத்துக்கான காணியையும் மீன்பிடிப்புக்கான இறங்கு துறைகளையும் மீட்டெடுப்பதற்கான அவசர முயற்சிகளைத் தூண்டிவிட்டுள்ளது. இந்த மக்களைப் பொறுத்தவரையில் காணி என்பது வீடு கட்டுவதற்கான …

  2. வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - அதிரதன் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிகள் எப்போது வைக்கப்படும்? இதனை யார்தான் வைப்பார்கள் என்பது இப்போதைக்கு கேள்விதான். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம், முதுகெலும்பென்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்ற நேரத்தில் இப்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கின்ற இளம் பட்டதாரிகளின் முயற்சிகளுக்குப் பதில் என்ன? இதுதான் இந்தப் பத்தியின் கரு. வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் என்று பல வடிவங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு 2015 இல் தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் வழி விட்டுக் கொடுத்திருக்க…

  3. இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு முடிச்சுப்போடல் - மொஹமட் பாதுஷா கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதக் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தச்சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதமாகக் காட்டுவதற்கான முயற்சிகளும் சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான கைங்கரியங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால், எப்போது இப்படியான ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த நாசகார சக்திகளுக்கு, முஸ்லிம்களே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு…

  4. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-19#page-11

  5. எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்? - கே.சஞ்சயன் ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்று இழுபறிப்பட்டு, கடைசி நேரத்திலேயே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை வரலாறு. உறுப்பு நாடுகளின் போதிய ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தீர்மான வரைவு தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், இழுபறி நிலை நீடிக்கும். ஆனால், இம்முறை நிலைமை அ…

  6. முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்:- கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள். சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போதிலும் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஓர் உயிர்தானும் இழக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்…

  7. இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா? கடந்த காலத்தில் இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர்­களில் ஆரா­யப்­பட்ட வேளை­களில் அர­சியல் உணர்­வுகள் கிள­றி­வி­டப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் கூட்டத் தொட­ரின்­போது அத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை இல்லை. மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. முன்­னைய அர­சாங்­கத்தைப் போலன்றி தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் நல்­லு­றவைக் கொண்­டி­ருக்­கி­றது. பெரும்­பா­லான மக்கள் நம்­பு­கி­றார்கள். அதனால் ஜெனீ­வாவில் இருந்து உண்­மை­யான அச்­சு­றுத்தல் ஒன்று வரு­வ­தாக இவர்கள் நோக்­க­வில்லை. இத்­த­கை­ய­தொரு சூழ…

  8. அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளிலும், இரா­ணுவ முகாம்­களின் எதி­ரிலும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்தப் போராட்­டங்கள் அர­சியல் ரீதி­யாக, அர­சியல் தலை­மை­க­ளினால் வழி­ந­டத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் போராட்­டங்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் இரா­ணு­வத்­தினரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­த­லையில் காலக்­கெ­டு விதித்து மீறி­யதைத் தவிர அந்தப் பிரச்­சி­னைக்கு முற்­று­மு­ழு­தாகத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அக்­க­றையை அ…

  9.  வடகொரியா: ஒரு கொலையின் கதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கதைகள் பலவிதம். சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது. சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன. அது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. இதனால் கதைகளால் …

    • 3 replies
    • 911 views
  10.  ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை அடுத்தே இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “நான் எதிர்காலத்தில், எனது கட்சியான ஹெல உருமயவிலிருந்தும் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகக் கடமையாற்றப் போகிறேன்” என்று அண்மையில் சில இடங்களில் கருத்து வெளியிட்டதனால் ரத்தன தேரர், சில வாரங்களாகச் சர…

  11. 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் - நிலாந்தன் கடந்த மாதம் 19ஆம் திகதி. ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். ‘இன்று நாங்கள் 23 பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்’ என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது படித்துப்பட்டம் பெற்று வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஓர் ஆவிக்குரிய சபை பாஸ்ரரும், ஒரு முஸ்லிம் மாணவரும் அடங்குவர். அவர்கள் கேப்பாபிலவுக்குப்…

  12.  ‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட ‘கால அவகாசம்’ வழங்குவது தொடர்பில் ஒரு வகையிலான இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘காலஅவகாசம்’ வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. வவுனியாச் சந்திப்பிலும் அந்தக் கட்ச…

  13. அர்த்தம் பொதிந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான அழைப்பு - காரை துர்க்கா இலங்கைத் தமிழர் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் மண்னை விட்டுப் பிறதேசம் செல்லத் தாமாக விரும்பவில்லை; எத்தனிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒரு சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கும் கப்பல்களிலும் அரபு நாடுகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுவந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அல்லது தமது குலத்துடன் இடம்பெயர்ந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கனடாவில் வெறும் 150 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. 1958, 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாரிய இனவன்முறைகள் நன்கு திட்டமிட்டு ஏவிவிடப்ப…

  14.  இடைத் தேர்தல் நடக்குமா? இரட்டை இலை தப்புமா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலச் சட்டமன்ற ஆயுளுக்குள் மூன்றாவது சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்யும் தொகுதியாக இந்தச் சட்டமன்றத் தொகுதி மாறியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் “Anti- Sentiment” ஆக உருவாகியிருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமான தொகுதி என்றாலும், இப்போது அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள மூன்று அணிகள் அக்கட்சியை வலுவிழக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இத்தொகுதியில் தி.மு.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால்…

  15.  பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம் - கே.சஞ்சயன் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஏ…

  16. மீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா? ஆர். அபிலாஷ் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இன்று மாறி உள்ளது. வடிவேலுவின் சவடால் நாயகனான ”கைப்புள்ள” தொன்மம், பிற நகைச்சுவை காட்சிகள், மக்களுக்கு அரசியல் அரட்டைகளில் பங்கெடுக்கையில் கிடைக்கும் ஒரு திருவிழா மனநிலையின் குதூகலம், அரசியல் மாற்றங்களை வெறும் அபத்தமாய், வேடிக்கை விநோதமாய் காணும் ஆசை, அரசியல் நாயகர்களை தம்மை விட மட்டமானவர்களாய் சித்தரிக்கையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் சில-நிமிட அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புது அலையை தோற்றுவித்துள்ளது. இந்த இணைய மீம் (meme) அலை வேறொரு வடிவில் பகடி கோட்டோவியங்களாய் முன்பு நம் பத்திரிகைகளில் இருந்தது. ஆனால் அவை எப்போதும…

  17. இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம் அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு னீ­வாவில் தற்­போது நடந்து கொண்­டி­ருக்கும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான தீர்­மா­னங்­களை சமர்ப்­பிப்­ப­தற்­கான காலக்­கெடு எதிர்­வரும் மார்ச் 16ஆம் திக­தி­யுடன் முடி­யப்­போ­கி­றது. இந்தக் காலக்­கெ­டு­வுக்குள் இலங்கை தொடர்­பான மற்­றொரு தீர்­மான வரைவை பேர­வையில் சமர்ப்­பிப்­ப­தற்­கான தீவிர முயற்­சிகள் ஜெனீ­வாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2012ஆம் ஆண்டு, முதல்­மு­றை­யாக இலங்கை தொடர்­பான தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டு, விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போதும் சரி, அதற்குப் பின்னர், 2013, 20…

  18. பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள் ரொபட் அன்­டனி அர­சாங்கம் நல்­லி­ணக்க விட­யத்தில் அவ­ச­ர­மாக முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­ட­வேண்டும். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்கம் இருந்து அர­சாங்கம் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்தி அடை­யாத நல்­லி­ணக்க பொறி­மு­றையில் அர்த்­த­மில்லை என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அந்­த­வ­கையில் செய்ட் அல் ஹுசைன் அறிக்கை குறித்து அர­சாங்கம் ஆழ­மான முறையில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான எழுத்­து­மூல அறிக்கை கடந்­த­வாரம் வெளிவந்­…

  19. கூட்டமைப்பின் குழப்பம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்­டுமா இல்­லையா என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் விவா­த­மாகத் தொடங்கி இப்­போது விவ­கா­ர­மாக விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது. யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் எவ்­வாறு பொறுப்புக்கூற வேண்டும் என்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இந்தத் தீர்­மானம் மிகத் தெளி­வாக வரை­ய­றுத்து விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. இந்தப் பிரே­ர­ணையை உள்­ளது உள்­ள­வா­றாக ஏற்று, அதன்­…

  20.  என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா வேலையற்ற பட்டதாரிகளால், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், அண்மைக்கால ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் பின்தொடர்ந்த நிலையில், அதே போராட்ட மனநிலையுடன் காணப்படும் நிலையில், இந்தப் போராட்டங்களும், முக்கியத்துவம் பெற்றுள்ளன. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையென்பது, நாடு முழுவதும் காணப்படுகின்ற போதிலும், தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும், இந்நிலைமை மோசமாகக் காணப்படுகிறது. ஏராளமானோர், இவ்வாறு வேலைவாய்ப்புகளின்றிக் …

  21. முற்போக்கின் தோல்வி ஏன்? -1 ஜெ, காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது. சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்? ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய இயல்கிறது, பிரிட்டனின் ஐரோப்பிய துண்டிப்பு, டிரம்ப் வெற்றி, இங்கே சமூகம் மோதியை தேர்தெடுத்தது எல்லாமே உலகம் வலதுசாரி கருத்தியலையும் தேசியவாதத்தையும் …

  22. கால அட்டவணை: இழுத்தடிப்பைத் தடுக்கும் ஜெனீவாவின் உத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், மூன்றாவது வருடமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையைச் சமாளித்துவிட்டது. இந்த வருடமும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையிலான இணக்கப்பாட்டுடன் பேரவையின் இவ்வருட மார்ச் மாத அமர்வு முடிவடையப் போவதாகவே தெரிகிறது இந்த அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்தவுடன் அந்த வருடம் மார்ச் மாதம் பேரவை அமர்வு கூடிய போது, ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் இலங்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்…

  23. கேப்பாபுலவு உணர்த்திய பாடம்:போராட்டக்களத்தில் மாணவர்களின் தேவை பாரம்பரிய உரிமைகளுக்காகவும் இறைமைக்காகவும் போராடும் இனக்கூட்டமொன்றுக்கு நிலமும் அதுசார் ஆட்சியுரிமையும் அடிப்படையானது. அந்த வகையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில், ‘நில மீட்புக்கான போராட்டம்’ என்பது ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பெரும் குறியீடு. அதன் வெற்றியும் தோல்வியும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வடிவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தவல்லது. அதனைக் கடந்த எழுபது ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, 2009 மே மாதத்துக்குப் பின்னரான நாட்கள் அதன் பெரும் படிப்பினை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்கள…

  24. போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன? - காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்த வகையி…

    • 1 reply
    • 468 views
  25. வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை - கருணாகரன் வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.