அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9218 topics in this forum
-
தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி மாறி மாறிப் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் விதமாகவும் அவர்கள் மீது சவாரி செய்யும் வகையிலுமே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நல்லாட்சி அரசின் போக்கும், முன்னைய அரசின் போக்கை ஒத்ததாகவே இருந்து வருவதாகவும் அதனால் நம்பிக்கையீனங்களே மேலோங்குவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையினை அரசாங்கம் தற்பொழுது நிராகரித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மனோரி மு…
-
- 0 replies
- 422 views
-
-
மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையில், கலப்பு விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதனை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருக்கிறது. இந்த அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு முன்னதாகவே, அரசாங்கத்திடம் இருந்து அவசரகதியில் நிராகரிப்பு வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தையே இது நினைவுபடுத்துவதாக உள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணி- சுதந்திரமான, சிவில் சமூகப் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயலணியே வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் …
-
- 0 replies
- 625 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-9
-
- 0 replies
- 278 views
-
-
'அதிகாரம் போலியானது 'என்பதை உணர்ந்து செயல்படும் ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஒரு பின்னோக்கிய பார்வை – ப.பன்னீர்செல்வம் – ஒரு நாட்டின் அரசன் அந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலனே தவிர அந்நாட்டுக்கு சொந்தக்காரர் அல்ல என்ற பௌத்த தர்மத்தின் போதனைக்கு இலங்கையின் ஜனாதிபதி பதவியை ஏற்று அப் பதவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டையும் மக்களையும் தர்மத்தில் ஆள்பவர் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையை உயர்த்தி சர்வதேசத்தில் புகழ்பெறச் செய்த பெருமை ஜனாதிபதியையே சேரும். க…
-
- 0 replies
- 564 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-3
-
- 1 reply
- 399 views
-
-
வெறும் கண்துடைப்பு 'கிழிந்துபோன கடதாசித்துண்டில் நடுங்கிய கையெழுத்துடன், கலந்தாலோசனை செயலணிக்கு எழுதிஅனுப்பிய ஒரு பிச்சைக்காரப் பெண்மணி,'போரின் காரணமாக நான் இழந்த எனது மகன் உயிரோடு இருந்திருந்தால்,இன்று நான் பிச்சை எடுக்கமாட்டேன்'என குறிப்பிட்டிருந்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை' நல்லாட்சிக்கான அரசாங்கம், பிறந்துள்ள புதிய வருடத்தில் தோல்வியுற்ற நிலையிலேயே பிரவேசித்திருக்கின்றது. நல்லாட்சியை இந்த அரசாங்கத்தினால் வெற்றிகரமாகத் தொடர்ந்து முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியுமா என்ற கேள்வி இன்று பல தரப்பிலும், பல மட்டங்களிலும் எழுந்திருக்கின்றது. அரசாங…
-
- 0 replies
- 484 views
-
-
நல்லாட்சி அரசின் எதிர்காலம் " ஒருபுறம் இப்போக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கிகள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தமது சீற்றத்தையும் அடிக்கடி இந்த அரசாங்கத்தின் மீது காட்டி வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஒற்றையாட்சி முறையிலான தீர்வை நாம் ஏற்கத் தயாராகயில்லை. இணைப்பற்ற ஒரு அரசியல் தீர்வு அர்த்தமற்றது என்ற தமது தீர்க்கமான முடிவுகளையும் சொல்லி வருகின்றார்கள். ஆனால் ஜனாதிபதியவர்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் மூலம் தீர்வுகாண வேண்டியது எனது தலையாய பொறுப்பு. அதிலிருந்து நான் விலகிப் போகமாட்டேன் என சத்…
-
- 0 replies
- 574 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-21 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-20
-
- 0 replies
- 317 views
-
-
அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழு…
-
- 0 replies
- 468 views
-
-
2017: காத்திருக்கும் கதைகள் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்.... உலக அரசியல் சட்டென்று ஓரிரவில் மாறாது. எனவே, கடந்த 201…
-
- 0 replies
- 413 views
-
-
புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனக் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளை, மேலும் நான்கு நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற சில சம்பவங்களே, அந்த உத்தேச அரசியலமைப்பைப் பற்றிப் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. அரசியலமைப்…
-
- 0 replies
- 342 views
-
-
சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்ச…
-
- 0 replies
- 3.3k views
-
-
நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’ - முகம்மது தம்பி மரைக்கார் எமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதையடுத்து, ஆட்சியாளர்கள் பிடிமானமின்றித் தள்ளாடத் தொடங்கினார்கள்…
-
- 0 replies
- 460 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு எதிர்வரும் 06ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைகள் மீதான விவாதம் எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியலமைப்புப் பேரவை நியமித்த ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பு வழிநடத்தல் குழு…
-
- 0 replies
- 497 views
-
-
‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…
-
- 0 replies
- 588 views
-
-
புதிய அரசியலமைப்பு நாட்டை பிரித்து விடுமென வேதனைப்படும் மஹிந்த புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலாகவோ அதற்கு சமாந்தரமாகவோ எந்தவொரு மையமும் இருக்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்படும் என்பதே அடிப்படை நிலைப்பாடு. இதற்கு முன்னரான மூன்று அரசியல் யாப்புகளையும் நோக்கினால், அவை அரசியல் ரீதியாகவோ பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவோ நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லவில்லை. முதலாவதான சோல்பரி யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 27(C) சரத்தையும் திட்டமிட்டு புறந்…
-
- 0 replies
- 400 views
-
-
2016 ன் சிறப்பு அம்சங்கள் (சாமி அப்பாத்துரை)
-
- 0 replies
- 385 views
-
-
தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? தமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும் திராவிட இயக்கங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து 1949 இல் பிரிந்தது. பேரறிஞர் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அதேபோல் 1972 இல் தி.மு.கவிலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் மறைந்த எம்.ஜி.ஆர். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கு…
-
- 0 replies
- 323 views
-
-
2016 இல் வரவில்லை 2017 இல் வருமா தீர்வு
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-01#page-7
-
- 0 replies
- 287 views
-
-
ஸ்ரீலங்கா பயங்கரவாத தடை சட்டம் நீங்குகிறதா? மாறுகிறதா?
-
- 0 replies
- 458 views
-
-
அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…
-
- 0 replies
- 505 views
-
-
தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா? வடக்கு கிழக்கில் உள்ள தொல்பொருள் வலயங்களைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் அரசாங்கம் இனவாத சக்திகளின் துணையுடன் பாரிய ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறதா எனும் சந்தேகம் கடந்த சில வாரங்களாக வலுப்பெற ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்திய கூட்டங்களும் வெளியிட்ட கருத்துக…
-
- 0 replies
- 427 views
-
-
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை ஒருமுறை சர்வதேச பொலிஸார் அல்லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்கப்படும் பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்க இலங்கை வந்தனர். வரும்போது கூடவே 3 குதிரைகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். அக்குதிரைகளை அவர்கள் ஒரு காட்டில் விட்டனர். பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்த அவர்கள் முதலில் சாதாரண பொலிஸ் நிலைய பொலிஸாரை அழைத்து தாம் கொண்டுவந்த குதிரைகள் காட்டில் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை கண்டு பிடிக்குமாறும் கூறியுள்ளனர். உடனே காட்டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதிரைகளின் கால்தடம் காட்டில் உள்ளதாகவும் அதன…
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கையில் புாிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள் கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும். 2015 ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்…
-
- 0 replies
- 537 views
-