அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் கோப்புப் படம் முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது. ‘போர் உச்சக்கட்டத்தை அடைந்த தருணத்தில், எனது கணவரும் எனது மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். நான் தற்போது எஞ்சிய எனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நாம் எமது அன்றாட வாழ்வைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்’ என செல்வராஜி தெரிவித்தார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் வாழ்ந்து வரும் 47 வயதான செ…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா அரசை நிலை குலையவைத்த புலனாய்வு அறிக்கை – உபுல் ஜோசப் பெர்னான்டோ அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது. பொதுவாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மட்டுமல்லாது, அரசாங்க அரசியல்வாதிகளைச் சந்திப்பதற்குக் கூட இராணுவத் தளபதியின் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் இவ்வாறானதொரு அனுமதியுமின்றியே பசில் ராஜபக்சவை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்கள் சந்தித்துள்ளனர். மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே யாழ்ப்ப…
-
- 0 replies
- 628 views
-
-
முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்றால் வழமைபோல சோர்வு ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது. முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட வேண்டுமென்று வாதிடுவோர் இருக்கின்றனர். அவ்வாறானதொரு நினைவுச் சின்னத்தை கட்டினால், அது தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும் என்றும் அவ்வாறானவர்கள் கூறுகி…
-
- 0 replies
- 522 views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானமும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும்! 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும். தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.02.அதில்…
-
- 0 replies
- 542 views
-
-
முதலமைச்சர் சீ.வி. வின்னேஸ்வரனால் தலைமை தாங்கப்படும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தை அரசியலமைப்பு சீர்திருத்தச் செய்முறையில் கவனம் செலுத்தி ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தில் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீள ஒன்றிணைத்து ஒரே சமஷ்டி அலகாக்குமாறு விடுத்துள்ள அம்சம் முக்கியமானதாகும். ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு "சிங்களம் மட்டுமே', என்னும் சட்டம் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிங்களமே முழு நாட்டிற்குமான, உத்தியோகபூர்வமான மொழி என பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதலாக தமிழரசியலின் பிரதான நிலைப்பாடு சமஷ்டியாட்சியாக இருந்து வந்துள்ளது. அக்காலகட்டத்தில் நாட்டின் குடித்தொகையில் ஏறத…
-
- 0 replies
- 325 views
-
-
ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர். முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறி…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழகத் தலைவர்களுக்கு சி.வி அன்று கூறியதை சி.விக்கு திகா இன்று கூறுகிறார் புதிய அரசியலமைப்புக்கான வட மாகாண சபையின் ஆலோசனையாக, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அம்மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மலையகத் தமிழ் மக்களுக்காக நிறுவப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட பிராந்திய சபையை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் நிராகரித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலுக்காக, மலையகத்துக்குத் தனி அலகு தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். ஏனைய மலையகத் தமிழ்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மலையக அலகு தொடர்பான ஆலோசனையை நிராகரிப்பதாகக் கூறாவிட்டாலும், அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, சகலரும்…
-
- 0 replies
- 364 views
-
-
மீண்டும் கிளம்பும் புகைச்சல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து மீண்டும் புகைச்சல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வழக்கம்போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, அதாவது இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவும், குரலை எழுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மே தினப் பேரணி, இணுவிலில் ஆரம்பித்து, மருதனார்மடத்தில் முடிவடைந்ததையடுத்து, மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே பங்கேற்றிருந்தது. ஏனைய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தான், இலங்கைத…
-
- 0 replies
- 493 views
-
-
தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான 'குறைநிரப்பு' தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. தீர்க்கமான அரசியல் முடிவுகளின் அடிப்படையில், கட்டமைக்கப…
-
- 0 replies
- 559 views
-
-
சம்பந்தரின் வழி? - நிலாந்தன்: 01 மே 2016 அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ்குணவர்த்தன வழமைபோல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோலதன் கையில் இருந்த சிறியடப்பாவுக்குள் இருந்துபாதாம் பருப்புக்களை வாயில் போட்டு மென்று கொண்டிருந்திருக்கிறார். தேர்தல்காலங்களிலும் அவர் இவ்வாறு பாதாம் பருப்பை மெல்வதைபலரும் கண்டிருக்கிறார்கள். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் இப்படிபாதாம் பருப்பைச் சாப்பிடுவதுண்டு என்றும் அவரதுகையில் பாதாம் பருப்புடப்பாவை இடைக்கிடை காணமுடியும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 1k views
-
-
சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி APR 30, 2016 | 3:22 கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இரா.சம்பந்தன் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கேள்வி: தாங்கள் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த சில ந…
-
- 0 replies
- 518 views
-
-
-
- 0 replies
- 701 views
-
-
இலங்கை அரசின் புதிய கைதுகளின் பின்புலம் – ஒரு பார்வை நகுலன் , ராம் வட மாகாணத்தில் பல்வேறு கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றறன. இக்கைதுகளின் பின்புலம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றாலும் அக் கைதுகளின் உள் நோக்கம் வெவ்வேறானதாக அமைந்திருக்கலாம். வன்னிப் படுகொலைகளின் பின்னர் சில போராளிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் தொடர்பான விமர்சனத்தை முன்வைப்பதற்கான போதிய தகவல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. புலம்பெயர் நாடுகளில் அரசியல் வியாபாரம் நடத்தும் குழுக்களும் தனி நபர்களும் முன்வைக்கும் துரோகி முத்திரைக்கு பலியான போராளிகள் இன்று மீண்டும் கைதாகியுள்ளனர். குறிப்பாக நக…
-
- 0 replies
- 712 views
-
-
அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே இடமில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் எம்மால் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி இந்தியாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்திய பெருங்கடலில் இந்திய – சீன மோதல் ஏற்படாதென்று ஆருடமும் கூறியிருக்கின்றார். சீன அரச நிறுவனமான, தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தினால் (Communication Construction Company Limited – CCCC) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறு…
-
- 0 replies
- 409 views
-
-
தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் …
-
- 0 replies
- 546 views
-
-
அறிக்கை: அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் | காலச்சுவடு | தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மதச் சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன்மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக…
-
- 0 replies
- 338 views
-
-
தந்தை செல்வாவின் சரித்திரம் உணர்த்தும் உண்மை! தந்தை செல்வா நினைவுதினம்!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள் ஆகப் போகின்றன. ஆனால் இப்போதுள்ள காலம் தந்தை செல்வாவின் காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களும் சூழல்களும் கொண்டதுபோன்ற காலம். ஒரு வகையில் தந்தை செல்வாவின் காலம் என்றே இதனைச் சொல்லலாம். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் ப…
-
- 0 replies
- 4.9k views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அவதானிக்கப்படுகின்றது. அந்த வகையில் அரியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டத்தின் போது உபதலைவர்கள் மற்றும் விசேட வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. பதவி வழிவந்தவர் என்ற வகையில் சபாநாயகர் கருஜெயசூரிய இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், எம்.பி.க்களான திலங்க சுமதிபால, செல்வம் அடைக்கலநாதன், கபீர் ஹாசீம், சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, திலக் மாரப்பன, மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிலக்க…
-
- 0 replies
- 590 views
-
-
இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1987இல் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ராஜீவ் காந்தி சிறிலங்காவிற்குப் பயணம் செய்த நிகழ்வுக்கும், சீனாவின் கடன்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அண்மையில…
-
- 0 replies
- 389 views
-
-
அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் - [Monday 2016-03-21 07:00] உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் இரு உலகப்போர்கள் புவி அரசியல் பற்றிய கருத்தாக்கத்தை முதன் மு…
-
- 0 replies
- 658 views
-
-
Panama Papers: உலகளாவிய பொருளாதார மோசடிகள் அம்பலம்! - ரூபன் சிவராஜா கடந்த வாரத்திலிருந்து ‘Panama Papers ' எனும் அடையாளப் பெயருடன் உலகளாவிய ரீதியில் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகள் தொடர்பான பாரிய இரகசிய ஆவணங்கள் கசிந்து வருகின்றன. சர்வதேச ஊடகங்களில் நாளாந்தம் இந்த விவகாரம் சார்ந்த ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன. சமகால அரசியல் பொருளாதார விவகாரங்களில் பெரும் விவாதப் பொருளாக இது ஆகியிருக்கின்றது. புலனாய்வு ஊடகவியலாளர்களினால் மோசடிகள் சார்ந்த 11,5 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவின் Panama -பனாமாவைத் தளமாகக் கொண்டுள்ள Mossack Fonseca எனும் சட்ட நிறுவனத்திடமிருந்து (Law firm) இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ந…
-
- 0 replies
- 614 views
-
-
புலிகள் பற்றிய மீளெழுச்சிக் கதைகள்: பூனைக்கு விளையாட்டு - எலிக்கு? - கருணாகரன் புலிகளைப் பற்றிய கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகிறது. அந்த அளவுக்கு புலிகள் ஓர் உபயோகப் பொருளாக தமிழ், சிங்களப் பரப்பில் உள்ளனர். இதில் கவனத்திற்குரிய விசேசமான ஒரு விசயம் உண்டு. தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரும் புலிகளின் பெயர் பல தரப்புகளால் பயன்படுத்தப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பல தரப்புகளுடைய நலன்களுக்காகப் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. தோற்கடிக்கப்படுவதற்கு முந்திய புலிகளைத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், ஊடகங்கள், தென்னிலங்கை, புலம்பெயர்ந்தோர், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்தின. அவரவர் தமக்கு ஏற்றவாறு எதிர் என்றும் ஆதரவு எ…
-
- 0 replies
- 498 views
-
-
-
- 0 replies
- 718 views
-
-
பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்…
-
- 2 replies
- 553 views
-
-
தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை, இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கையாளவும் முடியாது (இது கூ…
-
- 0 replies
- 480 views
-