Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Published By: Vishnu 29 Sep, 2025 | 09:43 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும். இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்…

  2. Published By: Vishnu 25 Aug, 2025 | 06:28 AM அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம் என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை ஆகும். திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8 மையி…

  3. கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும் January 15, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 — 2020) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025 ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தானாகவே கேட்டார். அந்தப் பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் நாடுகளை ஆக்கிரமிப…

  4. அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்…

  5. மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல் லக்ஸ்மன் பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர். ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது. இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட …

  6. 17 Oct, 2025 | 05:09 PM ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வறுமையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வையும், சமூக ஒற்றுமையையும், மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வறுமை பொருளாதார குறைவு மட்டுமல்ல; அது கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மனநலம், சமூக பங்களிப்பு போன்ற அனைத்து பரிமாணங்களையும் பாதிக்கும் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் பிரச்சினையாகும். வறுமை சூழலில் வாழும் நபர்கள் அடிக்கடி சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக மாறி, அவர்களது மனநலமும், சமூக பங்குபற்றலும் பாதிக்கப்படும்என உலகளாவிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, வறுமை காரணமாக மனஅழுத்தம், தனிமை, மனச…

  7. சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன். இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் …

  8. 02 Nov, 2025 | 12:20 PM (லியோ நிரோஷ தர்ஷன் ) ஒரு நாட்டின் கட்டமைப்பிலும், பாதுகாப்பிலும், அதன் இலக்குகளை அடைவதிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அரச நிர்வாகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பலவீனமான அரச நிர்வாகமே இலங்கை, பங்களாதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) நிகழ்வை முன்னிட்டு நேற்று உரையாற்றிய அஜித் தோவல், நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவாலாக, பொதுமக்களைத் திருப்திப்படுத்த வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் அதிக விழிப்…

  9. நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் 29 Sep 2025, 7:47 AM ராஜன் குறை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது. அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக…

  10. அ. டீனுஜான்சி 64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோத…

  11. "இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன? பட மூலாதாரம்,UNHR கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பா…

  12. செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு லக்ஸ்மன் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல். அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவ…

  13. காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதா…

  14. அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (…

  15. NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் October 18, 2025 — கருணாகரன் — ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்…

  16. நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்ட…

  17. கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன் கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கினார். அங்கிருந்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் அவரைத் தடுக்க முயற்சித்தாலும் அவர் மேடையில் ஏறி விட்டார். உணர்ச்சிக் குழம்பாக காணப்பட்ட அந்த நபர் மேடையில் நின்று அரங்கில் இருந்தவர்களை நோக்கி அழுதழுது கதைக்கத் தொடங்கினார். இல்லை,நடிக்கத் தொடங்கினார் என்றுதான் சொல்லலாம். ஏனென்றால்,அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம். கண்ணுக்குப் புலனாகாத அரங்கு “இன்விசிபிள் தியட்டர்” என்று அதை அழைப்பார்கள். போதைக…

  18. ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் …

  19. மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன் டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்…

  20. டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்கவால் “எல்போர்ட்” அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்திருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன.அந்தப் பேரணி திறந்துவிட்ட வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.முதலாவது குற்றச்சாட்டு, அரசா…

  21. உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு October 31, 2025 — ராஜ் சிவநாதன் — சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தனது ஜனாதிபதி தேர்தல் பிரசார…

  22. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை July 16, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கங்களுக்கு அக்கறை இருப்பதாக நம்புவதற்கு காரணம் இல்லை. இது விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு…

  23. கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம். ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம். கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வர…

  24. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவின…

  25. உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல் 25 Nov, 2025 | 11:23 AM உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.