-
kumarasanthosh started following Rasikai
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வேலைல நிண்டதால உடனே ஓடிட்டன். மன்னிக்கவும். நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக வந்து எழுதுவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் எல்லோருடைய அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். மேலும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு, சினேகிதி, சுபித்திரன், சிவகாசி பாபு, எரிமலை, டண், வெண்ணிலா , முத்துகிருஷ்ணன், சங்கர் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளைக் கொண்டாடிய தூயவன் மற்றும் அனைவருக்கும் இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இராவணனுக்கு (அட நம்ம றோயல்பமிலிக்கு மிகவும் வேண்டப் பட்ட ஆள் :P ) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகா இங்க யாரோ நம்ம சாத்திரிக்கு ஆப்பு வைக்குற மாதிரி கிடக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கறுப்பி மூக்கிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்பாடி ஈழவன் யமுனா அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி!
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான்... ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... அடடா.... அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும் எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே.. இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி! அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா.. திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்! எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை?? வாழ தெரியவில்லை?? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்.. செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்.. விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்! இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள் இரண்டரை கோடி சந்தோசங்களா? ம்ம்ம்ம்ம்.......... காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!
-
ஜோசப் பரராஜசிங்கம்!
ஜோசப் பரராஜசிங்கம்! -------------------- சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்.... அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்! எங்களுக்கு மட்டுமே அது புரியும்!! எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு... விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் .. எப்படி விடை பெற்று போயிற்று தன் மானத்துடன் வாழ்பவனுக்கு... சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு? யுத்தம் அழித்தது... மேகம் அழித்தது... கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது! இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்! அழிவென்றால் தமிழன் - என்று அகராதி ஒன்று ஆகிடுமோ? உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே இப்போ நாமழிகிறோம்... வந்து எப்போது ............. எமை காப்பீர்????
-
வா..வா!!
வா..வா!! --------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்.. ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்! தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்? போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்! சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்.. செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்.. வா வா 2006 ஆண்டே!!