Everything posted by Rasikai
-
காதல்
காதல் ------------ காதல் சிரிப்பில் தொடங்கும் அழுகையில் முடியும்! காதல் சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால் பலருக்கு???? தன்னம் தனியனாய்....... ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து ஓவென்று அழுது உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி!
-
மாவீரர் நாள்
மாவீரர் நாள் இரு கண்கள் சிலையாய் நிற்க... இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய.. இதயத்தை மட்டும் அழவிட்டு.. எம் உயிர் காத்தவர் எண்ணி.. உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்! நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்... இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என பறந்து திரிந்தவளும்... சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே.. அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி... எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்! இங்கொரு விடுதலைக்காக... எங்கெல்லாமோ மறைந்து போனவர்களை.. நரம்பெங்கும் தீ மூட்டி... நாமெல்லாம் தேடும் நாள்! எத்தனை தரம் முரட்டு சிங்களங்கள் முகத்தில் மோதி.. அவன் முகம் பெயர்த்து... நீரும் சாய்ந்தீர் .. நீங்கள் மூச்சடங்கிப் போன இடம் எங்கும்... முல்லை பூக்கள் உயிர் கொள்ளும் என்னால் முடிந்ததை என் தாய்க்கு செய்து முடித்தேன் என்று சிரித்து கொண்டே உறக்கமா? எங்கள் கண்ணீரால் உங்கள் கல்லறை கழுவுவோம்! கோடி புண்ணியம் அதில் கொண்டோம்! உங்களின் சுவாசத்தை எங்கள் தேசத்து மலர்கள் கடன் கேட்கும்! உங்களின் துடி துடிப்பை எங்களின் தேச பறவைகள் யாசகம் வேண்டும்.. உங்களின் மன ஆழத்தை எம் தேச கடல் தன் இரு கை ஏந்தி இரந்து நிக்கும்! உங்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு.. இறப்பு என்பது இல்லவே இல்லை! நெடுந்தூர விடுதலைப் பயணம் கொண்டீர்.... களைத்து விழுந்த போதெல்லாம்.. எங்கள் தேச காதலை தானே உணவாய் கொண்டீர்! வாழ்வுக்குள் சாவு கொள்பவர் பலர்.. சாவுக்குள் வாழ்வு கொண்டவர் உம்மை போல சிலர்... தியாகம் என்ற சொல்லை பூமி இனி உங்களின் பெயர் கொண்டு உச்சரித்தால்தான் என்ன????? மீண்டும் வாருங்கள்.. அந்த மெய் சிலிர்க்கும் நாட்களுக்காய்... கண்ணீரை கரம் கொண்டு துடைக்காமல் காத்துக்கொண்டிருக்கிறோம்!!!!
-
நெஞ்சினுள் முள்ளாய்.....
நெஞ்சினுள் முள்ளாய்..... கண்ணே மணியே என்றான்.. கண்டவுடன் எனக்கு காதல் வரவில்லை.. உன்னை காணாமல் நான் ஏங்கினேனே... அப்போதே காதல் என்னுள் கருத்தரித்தது என்றும் சொன்னான்... நீ அழுதால் உன் இரு விழி துடைக்க மாட்டேன்.. நானும் சேர்ந்து அழுவேன் என்றான்! நட்ட நடு மழையில் தன்னிடம் இருந்த ஒற்றை குடையை நீட்டி... நீ பிடி... நான் நனைவேன்.. என் வாழ்வு முடியும் வரை.. உனக்காய் என்றான்! கால நதி வாழ்வு விருட்சத்தின் ஆணி வேர்வரை அலசி செல்ல.. என் காதலனும் எங்கோ தொலைந்தான்..! பிறர்க்கு சலனமற்று இருந்த இரவுகள் பல எனக்கு மட்டும்... சஞ்சலத்தை மணம் முடித்து வைக்க.. கண்ணீருக்குள் தற்கொலை செய்து என் கால நிமிடங்கள் தொலைந்தன! ஒரு மாலை... மஞ்சள் சேலை கொண்டு வானம் மௌனமாய் .. உடை மாற்றும் வேளை.. கண்டேன் அவனை.... தன் காதலி(???) கரம் இறுக்கிப் பிடித்து கொண்டே அவன் எங்கோ சென்று கொண்டிருந்தான்.. அவள் கண்ணை மூடி சிரிக்க.. இவன் அவள் காதில் ஏதோ சொன்னபடி நகர்ந்து கொண்டிருந்தான்... அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்... பொட்டு வைத்த விதவை என்றானேன்.. என்ன சொல்லி இருப்பானோ? என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ? அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சேர்ந்திருந்த நாட்கள்.. நாம் சிரித்திருந்த நாட்கள்.. சிந்திய மழைத்துளி எனக் காலம் சிதறியே மறைந்தாலும்.. நெஞ்சினுள் முள்ளாய் அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!
-
வணக்கம்
வணக்கம் எல்லோருக்கும் நலமா? ம்ம் ஜஸ்ட் ரெஷ்ரிங். சீக்கிரம் வாறன் ஆக்கத்தோடை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பி ரமாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜனனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞன் , சபி , வினித் எல்லோருக்கும் எனது பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாளும் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகிக்குட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் சந்தோசமாக இருக்கவும். என்றும் அன்புடன் அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகத்தாருக்கும் மன்னர் கரிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதனுக்கு இரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளுக்கு அப்புறமாவது களத்துக்கு அடிக்கடி வர அம்மாளாச்சி அருள் புரிவாராக. :wink:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன இப்பவும் கனடாவிலயா நிக்கிறியள்??? நிண்டால் ஒரு பார்ட்டி வையுங்களன் ;)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பிளை மாதிரி இருக்கிறார் :wink:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இனிதே வாழ வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும் சரியான நேரத்தில் வாழ்த்த முடியாமைக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மோகன் அண்ணாவின் புதல்வி செல்வி வைதேகிக்கு 5 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அத்துடன் சோழி அண்ணாவிற்கு அவர் மனைவிக்கும் எனது மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.