பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
கருத்துக்கள பார்வையாளர்கள்
-
Joined
-
Last visited
Everything posted by பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்"அறிவின் வடிவாகவே இருக்கும் வாலறிவன் இறைவனைக் குறித்து அறிய முனையும் குறைவுற்ற இறையமைப்பு குறித்த நெடிய அற்புதமான பதிவு பேராசிரியர் சோமசுந்தரனார் இட்ட பதிவு. "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்பார் அறிவர் தந்தை பெரியார். இறைவனைஇ வாலறிவன்இ முற்றறிவன் என்று அறிவின் வடிவமாக வணங்கிய மரபு தமிழர் பக்தி மரபு. மூன்றாம் நூற்றாண்டின் இறைப்பெருமாட்டி காரைக்கால் அம்மையார் இறைவனை இவ்வாறு காண்கிறார். அறிபவனும்இ அறிவிப்பவனும்இ அறிவாய் இருந்து அறிகின்றவனும்இ அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார். அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவன் (அற்புதத் திருவந்தாதி 20) சிவபெருமான்இ யார் எந்தக் கோலத்தில்இ எந்த உருவில் வணங்கினாலும்இ எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும்இ அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார். எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் (33) மனிதம் போற்றும் அன்பு வடிவே இறைவன் வடிவும் வழிபாடும் என்பதுவும் நம் மரபுதான். பக்தி இயக்க இலக்கிய காலங்கள்இ "காதலால் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமேஇ தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன்"இ என்ற காரைக்கால் அம்மையார்இ 'அன்பே சிவம்' என்ற திருமூலர்இ 'யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்ற மாணிக்கவாசகர்இ "(பூங்)காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி(ந்த) மனத்தால்" மக்கள் தொண்டு செய்து இறைவனை உணர்க என்று பாடிய திருஞானசம்பந்தர்இ "(உயிரினங்களைஇ இறைவன் வாழும்)பாத்திரம் சிவம் என்று பணிதீராகில் மாத்திரைக்குள்(நொடிப் பொழுதில்) அருள்வார் (திரு)மாற் பேரரே" என்று அருளிய திருநாவுக்கரசர் என்று கிபி ஏழாம் நூற்றாண்டுவரைஇ குறைவற்ற இறையமைப்புடனேயே பெரும்பாலும் திகழ்ந்தது எனலாம். எட்டாம் நூற்றாண்டில்இ வன்தொண்டர் ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில்தான் சிறுத்தொண்டர் மற்றும் இயற்பகை போன்ற இயற்கைக்கு முரணான அடாத செய்கைகளைப் பக்தியின் பெயரால் போற்றுவதும்இ துதிப்பதுமான போக்குகளுக்கு துவக்கம் எனலாம்.
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சோமசுந்தரனார் அவர்கள் இன்பத்துப்பாலின் சிறந்த கவிநயங்களை கூர்நோக்கால் சிறப்புறக் காட்டி, நம்மையெல்லாம் மகிழ்விக்கும்போது, பேரின்பத்துப்பாலில் அதற்கிணையான கவித்துவப் படைப்பு ஒன்று அரைகுறையாக நினைவில் விக்க, அது எதுவென நினைவுகூர, ஓரிரு நாட்கள் ஆயின. சோமசுந்தரனார் போன்ற இலக்கியச் சுவைஞரின் கட்டுரைக்கு, பொருத்தமான பின்னூட்டம் எழுத, மீளவாசிப்பும், மறுவாசிப்பும் தேவைப்படுகிறது. அன்னார் சிறப்புறக் காட்டிய "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" - குறள் 1091 "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" - குறள் 1099 ஆகிய இரு குறள்களிலிருந்து பிறந்த கவிதையே "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" என்னும் சீவக சிந்தாமணி பாடல். (இச் சுவைக்கு இணையான கவித்துவம் கொண்டதோர் படைப்பு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை விடுதிகண்டாய்" என்று தொடங்கும் 46வது பாடல். இப்பாடலின் பேரின்பத்துக் கவித்துவத்தை விளக்கப் புகுந்தேன். அதுவே ஒரு பெரிய கட்டுரையாக விரிந்ததால், ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, தனியாகப் பதிவிடுகின்றேன். அக்கட்டுரை, சோமசுந்தரனாருக்கு சமர்ப்பணம். நிற்க. ) சோம சுந்தரனாரின் இலக்கியக் கட்டுரை, எனது கட்டுரைக்கு ஊக்கியாக அமைந்ததுபோல், திருத்தக்கத்தேவரின் சீவகசிந்தாமணி காப்பியம், சேக்கிழாரின் பெரியபுராணம் காப்பியத்துக்கு ஊக்கியாக அமைந்த வரலாறை இங்கு பதிவு செய்து, எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவரின் கவியின்பத்தில் மயங்கி, எந்நேரமும், சீவசிந்தாமணி இலக்கியச்சுவையின்பத்தில் மூழ்கிக் கிடந்தான் குலோத்துங்கச் சோழன் மாமன்னன் அநபாயன். எங்கே சோழநாட்டை மீண்டும் சமணம் ஆட்கொண்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் மூழ்கியிருந்த சோழநாட்டு முதலமைச்சர் அருண்மொழித்தேவர், அநபாயன் மன்னனுக்கு சைவ அருளாளர்கள் 63 நாயன்மார்கள் குறித்து கவித்துவமாக எடுத்துரைக்க, அவர்கள் வரலாற்றை காவியமாகப் படைக்க முதலமைச்சர் அருண்மொழித்தேவரையே வேண்டினான் சோழ மன்னன். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் பிறந்த வரலாறு இதுதான். சீவகசிந்தாமணிக்கும், கம்பராமாயணத்துக்கும் இணையான கவித்துவம் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் இயற்றிய அருண்மொழித் தேவருக்கு "சேக்கிழார்" என்ற திருநாமம் சூட்டினான் சோழன்.
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்கட்டுரை ஆசிரியரின் வழக்கமான (அன்னாரது பட்டறிவின் அடிப்படையில் எழுதும்) நடையிலிருந்து வேறுபட்டு, கற்றதும், கேட்டதும், உற்றதும், உயிர்த்ததும் கொண்ட பொருண்மையால்,, சற்றே வேகம் குறைந்துள்ள எழுத்துநடை என்னை வியக்க வைத்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தின் வரலாறு தொட்டு, பாளையம்கோட்டையின் வரலாற்றுச் சுவடுகள் பலவும் ஆசான் தொப-வின் நினைவுகளோடு இழையாடிச் சென்றது மனதுக்கு இன்னும் அணுக்கமாக இருந்தது. மேடைப் போலீஸ் ஸ்டேஷன் என்ற அளவில் பாளையம்கோட்டையை அறிந்த என போன்றோருக்கு பேராசிரியர் சோமசுந்தரம் அவர்களின் இத்தொடர் ஓர் சிறந்த பெட்டகம். இடைவெளி எடுத்துப் படித்தாலும், மீள்வாசிப்புக்குத் தகுதியான சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்போதே இருமுறை மீள்வாசிப்பு செய்ய வைத்த காந்த சக்தி, இக்கட்டுரையின் வரலாறு சொல்லும் மொழி நடையே. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம்.
-
உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்//"சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும்.// ஒருக்காலும் நடக்காத விடயம். "தலையில் பிறந்தவன்; ஆக உயர்ந்தவன்" என்று குழந்தைப் பருவத்திலேயே மூளை ச் கலவையான ஆரிய பார்ப்பனக் கூட்டமும், அவர்தம் அடிவருடி சற்சூத்திர உயர்சாதி சங்கிகளும் ( நம் உறவுகள்) நாய்-வால்கள். நிமிர்த்த விழைகிறீர்கள். உங்கள் முயற்சி நடந்தால் மகிழ்ச்சிதான். இவர்கள் மேன்மக்கள் இல்லை. குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட உயர்சாதி அரசியல் செய்வது இவர்கள் பிறவிக் குணம்; அது மாறாதையா மாறாது.
-
உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்"சிதைக்குத் தீ மூட்டி, நீரினில் மூழ்கி, இறந்த உறவினரின் நினைப்பு ஒழிந்தாலும், இந்த சாதி,மத இந்துத்துவ வருணாசிரமக் கருமாந்திர வெறுப்பு அரசியலின் நினைப்பு ஒழியா மன நோயாளிகளாக அலையும் கூட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்து தொங்கவிட்டுவிட்டீர்கள். இந்தக் கூட்டம் உறவாக இருக்கும் பாவப் பிறவிகளுள் நானும் ஒருவன். இத்தகைய நிகழ்வுகளை நானும் கண்ணுற்று இருக்கிறேன். நான் ரசித்த வரிகள்: //சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ?// Writing on the wall.
-
எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்இப்படியாய், வாழ்வை சுதந்திரமாய் வாழும் சூழலைத் தோற்றுவித்த திராவிடப் பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் உழுது பண்படுத்திய மண்ணில் உதித்த இரு கிறித்தவப் பாதிரிமார்கள் கிறித்துவரல்லாத மாணவர்களை எவ்வாறு கண்ணியமாக அவரவர் பாதைகளில் சுதந்திரமாக வாழ வழி நடத்தினர் என்பது தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்றால் மிகையில்லை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் மண்ணில் விளைந்த பன்முகத் தன்மைக்கோர் நற்சான்று இந்நிகழ்வுகள். "நீ சொன்னது உனக்குச் சரி. நான் சொன்னது அவனுக்குச் சரி" என்ற இரு வரிகள் எவ்வளவு பட்டவர்த்தனமான வாழ்வியல் யதார்த்தம். உளவியல் அடிப்படையில், மதவாதம் பேசும் பிஜேபி ஏன் தமிழ் மண்ணில் காலூன்ற இயலவில்லை என்பதை இக்கட்டுரையை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும்.
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்இந்த மகத்தான கதைசொல்லியின் அற்புதமான மனித வாசிப்பில் உருவான இப் படைப்பு, யாழ் வாசகர்கள் முன்பு எழுத்து வடிவில் தரப்படும் முன்னரே, செவிவழியாக நேரில் கேட்கும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்: எழுத்தாளரின் சொல்லோவியமும், எழுத்தோவியமும், கல்கியின் "பொன்னியின் செல்வன்" படைப்பாற்றலை நினைவூட்டியது.