Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான விடுதலைப் புலிகள் மீதும் அதன் மக்கள் மீதும் குண்டுவீச சிங்கள வானோடிகளோடு தொடக்க காலத்திலிருந்து பங்குபெற்றியவர்கள் உக்ரேனிய கூலிப்படை வானோடிகள் ஆவர். இவர்களோடு நான்காம் ஈழப்போரில் பாக்கிசுத்தான் வானோடிகளும் இந்திய வானோடிகளும் பங்கு பெற்றியிருந்தனர். பங்கு பெற்றியமைக்கான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (இந்தியனும் ஓட்டினவன். இந்தியன் ஓட்டினதுக்கான வெளிநாட்டு ஆதாரங்கள் எம்மிடம் இல்லை. ஆனால் இவனது வானோடிகள் எம்மக்கள் மீது குண்டு வீசுவதற்கு குண்டுதாரிகளை ஓட்டியமை உண்மையே. வடபோர்முனை முன்னரங்க நிலைகளை உளவு பார்க்க அவ்வப்போது இவனது வண்டுகள் வந்து செல்வது வழமையான ஒன்றாகும்). நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், உலகில் உறுப்பாக்கப்பட்ட நாடாக சிறீலங்கா இருந்தும் உருப்படியான வானோடிகள் இல்லதலால் பிற நாடுகளின் வானோடிகளை பெற்றும், கூலிக்கு அமர்த்தியும் குண்டுவீசியது சிங்களம். ஆனால் எமது தமிழீழ வான்படையானது குண்டு வீசுவதற்கு தனது சொந்த வானோடிகளையே பயன்படுத்தியது கவனிக்கத் தக்கதாகும். உக்ரேனிய கூலிப்படை வானோடிகள்: பாக்கிசுத்தான் வானோடிகள்: https://www.business-standard.com/article/economy-policy/pakistan-played-major-role-in-ltte-defeat-sources-109052800127_1.html இந்திய வானோடிகள்: ஓராண்டிற்கு முன்னர் நான் சேகரப்படுத்தி எடுத்து வைத்த செய்தி இது: வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன. சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது. இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை. மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு. இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. இம்ரான் பாண்டியன் படையணியின் மயூரன் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள் 2001/2002
  3. இப்படத்தில் இருப்பவை வான்புலிகளின் வானூர்திகள் என்று சிங்கள ஆதரவு வலைத்தளத்தில் (http://www.srilankaguardian.org/2007/10/two-mi-24s-damaged-in-ltte-air-attack.html) அக்காலத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதில் இருப்பவை சியா மாசெட்டி எஸ்.எஃவ் - 260 ஆகும். எனவே, இவை புலிகளின் வானூர்திகள் 'இல்லை' என்பதாகும்.
  4. 16-09-2002 தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள ஒரு தங்ககத்தில் பேச்சுவார்த்தையின் தொடக்க விழாவின் போது பாலா தாத்தாவும் வெள்ளை அன்ரியும்
  5. 21- 6 - 2005 அன்று எமது முன்னரங்க நிலையில் இருந்து பார்க்கும்போது நாகர்கோவில் சிங்கள முன்னரங்க நிலை தெரிகிறது. அற்றை நாளில் பொதுமக்கள் நாகர்கோவில் போராளிகளிடம் உணவுகளைக் கையளிப்பதற்காக களநிலை நோக்கி உணவுகளை எடுத்துச் செல்லும் காட்சி:
  6. 29-09-2006 "ஜெனிவாவில் சிறிலங்கா அமைதிப் பேச்சுவார்த்தை" ஒத்திவைக்கப்படுவது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது மையத்தில் இருப்பவர் இயோன் இஃகேன்சன் பௌர், இலங்கையின் அமைதிக்கான நோர்வேயின் சிறப்புத் தூதர் ஆவார். வலது பக்கம் இருப்பது ஆரெண்டு தெரியும் தானே? 'அந்த மற்ற ஆள், நிமால் டி சிறிபால சில்வ, சிங்கள முதன்மைத் தூதுவர்' பெண்: சுவிஸ் தூதுவர் கெய்தி ரக்லியாவினி, பன்னாட்டு விவகாரங்களின் சமஸ்டி திணைக்கள அரசியல் விவகார நெறியகத்தின் தலைவர்
  7. 20-04-2006 இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் இயோன் இஃகேன்சன்-பௌர், தமிழீழ நகரமான கிளிநொச்சியை வந்தடைந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.