Jump to content

sivarathan1

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    220
  • Joined

  • Last visited

Everything posted by sivarathan1

  1. இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு கடைகளில குளிர்பானங்கள் வாங்கி குடிக்காம இப்பிடி தயிர் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வெட்டி போட்டு மோர் குடிச்சா அப்பிடி இருக்கும், உடம்புக்கும் ரொம்ப நல்லம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ
  2. வாங்க 2023 மார்ச் மாதம் வெடுக்குநாறி மலையில இருந்த ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு அங்க இருந்த சிவலிங்கம் உடைக்கபட்டு இருந்த. இந்த காணொளி 2 வருடங்களுக்கு முதல் நாங்க போகேக்க அங்க எப்பிடி இருந்த எண்டுறத காட்டுது.
  3. வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.
  4. வாங்க நாம இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருக்க பல தீவுகளில ஒண்டான பாலைதீவுக்கு பயணம் செய்யிறதையும் அங்க என்ன என்ன இருக்கு எண்டும் பாப்பம். அதே நேரம் இந்த தீவை சுத்தி நடக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டும் பாப்பம் வாங்க. நீங்க இந்த தீவுக்கு இதுக்கு முதல் பொய் இருக்கீங்களா எண்டும் சொல்லுங்கோ.
  5. ஓம் அது தான், கயல்,மணலை, திருவண், அகழி இந்த மீன்களில் இருக்கும், Mullet என்று மீன் குடுமபத்துக்குள் வரும் அனைத்துக்கும் கிடைக்க கூடிய சாத்திய கூறுகள் கூட. கெதியில இந்த 6 மீன்களையும் சேர்த்து ஒரு காணொளி போடுற திட்டம் இருக்கு. பாப்பம்.
  6. நானும் பார்த்தேன், ஆனால் நான் பார்த்த/ விசாரித்த வரை கறுவா நிலத்தடி நீரினை எதுவும் பண்னவில்லை. எதற்கும் இன்னும் விசாரித்து பாக்கிறேன்.
  7. வாங்க இண்டைக்கு எப்பிடி மீன் வாங்கி அதில இருக்க தொப்பிளை வெட்டி எடுக்கிற எண்டும், அந்த தொப்பிள் வச்சு ஒரு பொரியல் செய்யிற எண்டும் பாப்பம், இப்போ மீன் சந்தைகளில் இது தனியாவே விக்கவும் தொடங்கீட்டாங்க, நீங்களும் வாங்கி செய்து பாருங்கோ எப்பிடி வந்தது என்றும் சொல்லுங்கோ என
  8. வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமான ஒரு காணொளி பாக்க போறம், எங்கட வீட்டு தோட்டத்தில இருக்க கறுவா மரத்தில இருந்து எப்பிடி கறுவா பட்டை எடுக்கிற எண்டும் அத நீங்களே இலகுவா எப்பிடி செய்யலாம் என்றும் பாக்க போறம் வாங்க பாப்பம் நீங்களும் இப்பிடி செய்து பாருங்கோ, உங்கட வீட்ட கொஞ்சம் இடம் இருந்தா இந்த மரம் வச்சு நீங்களும் உங்களுக்கு தேவையான அளவு கறுவாவினை எடுக்க ஏலுமா இருக்கும், பாருங்க எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.
  9. கொஞ்சம் வித்தியாசமா ஒரு காணொளி செய்து பாப்பம் எண்டு செய்தது, பாத்து சொல்லுங்கோ எப்படி வந்து இருக்கு எண்டு... அதோட போன பதிவில கலந்துரையாடின விடயங்களை பாத்தன், திரும்ப போய் பாக்கும் போது எனக்கும் அப்பிடி தான் தோணுது, என்னை அறியாமலே வருது போல, நீங்க சொன்ன மாதிரி கூட தமிழ் நாடு காணொளிகளை பாக்கிறதால ஏற்படுற மாற்றமோ தெரியல, இனி வார காணொளிகளில குறைச்சுக்க முயற்சி பண்ணுறன்.
  10. ஹீஹீஹீ அடுத்த உண்மை தான் அக்காவின் மகனுட்ட அண்டைக்கு கிளித்தட்டு விளையாட வாரியா எண்டு கேக்க அப்பிடி எண்டா என்ன எண்டு கேக்குறான். கெதியில நாங்க சின்ன வயசில விளையாடின பேணிப்பந்து, கிட்டி புல்லு எல்லாம் எப்பிடி விளையாடின எண்டு ஒரு காணொளி போடலாம் எண்டு இருக்கன்.. என்ன நினைக்கிறீங்க. என்ன என்ன விளையாட்டுக்கள் போடலாம் எண்டும் சொல்லுங்கோ.. ஹாஹாஹா சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு..
  11. வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு மிகவும் சத்தான உளுத்தம் மா களி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், சின்ன வயசுல என்க அம்மா எப்பிடி செய்தாவோ அதே மாதிரி செய்யிறம் பாருங்கோ. இது எல்லா வயசு பிள்ளைகளும் சாப்பிடலாம். அதுவும் மிக சுவையாவும் சத்தாவும் இருக்கும் . நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
  12. வாங்க இண்டைக்கு நாம ஆட்டு கொழுப்பு மட்டும் வச்சு ஒரு சுவையான வறுவல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி நீங்களும் எப்பயாச்சும் செய்து பாருங்கோ. நாளா இருக்கா எண்டும் சொல்லுங்கோ.
  13. வாங்க இண்டைக்கு நாம நாலே நாலு பொருட்களை வைச்சு ஒரு சுவையான அதே நேரம் குறைஞ்ச நேரத்துல செய்ய கூடிய ஒரு ஆட்டிறைச்சி கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, வித்தியாசமாவும் சுவையாவும் இருக்கும். செய்து பாத்து சொல்லுங்கோ என.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.