Everything posted by navam
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தோழர் ஜெயபாலன் நீங்கள் மீண்டு வந்ததில் மிக்க மகிழச்சி.உங்களுக்கு இருந்த ஊடக வெளிச்சம் தான் நீங்கள் மீண்டு வர காரணமாயிருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.தமிழ் சிங்கள ஒற்றுமை பற்றி பேசிய லலித் குகன் ஆகியோர் இன்னமும் காணாமல்தான் போயிருக்கிறார்கள்.அதே போல விடுதலைப்புலிகளுக்கு உதவியது அவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க மறுத்தது முதலான இன்னோரன்ன காரணங்களுக்கான நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுயை கணனியில் கார்த்திகை பூ வைத்திருந்ததற்காக வடமராட்சி கிழக்கிலே ஒரு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்றைக்கு ஆயிரக்க்கான போராளிகள் காணாமல் போயிருக்கிறார்கள்.ஒரு அரசம் அதன் சகலவிதமான படைகளும் அடக்குமுறை கருவிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் சிறீலங்காவின் பௌத்த சிங்கள பேரினவாத அரசபடைகள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் செய்த கொடூரமான படைகள் எனபதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு அடக்கு முறை அரசுக்கும் அதன் படைகளுக்கும் எதிரான போராட்டங்கள் தான் அவற்றால் பாதிக்கப்பட்ட முரண்பட்ட சக்திகளை ஒன்றுபட வைக்கும். அது வரை பல்வேறு முரண்பட்ட சமூகங்களின் ஒற்றுமை என்பது பிழைப்பு வாதிகளின் வெற்றுக் கோசமாகவே இருக்கும்
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
செயபாலனை பற்றி தெரிந்த பலர் இங்கே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.அவர் ஒரு கலகக் காரன்.தான் இருக்கும் இடத்தில் த னக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அங்கு அதற்காககத்தி ஆர்ப்பாட்டம் செய்து சண்டை பிடிப்பபார்.இதன மூலமு; அந்தகளத்தை தன் பக்கம் நோக்கி திரு ப்புவார். 2004 ல் அவர் வன்னிக்கு வந்த போதும் அங்கிருந்த பேராளிகளுடன் போட்ட சத்தங்களும் சண்டைகளும் பலருக்கு தெரிந்திருக்கும்புளட்டில் இருந்த போது தலைமையுடன் அவர் போட்ட சண்டைகள் இந்த களத்தில் உள்ள அர்ச்சுன் பொன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.இது அவரது இயல்பான குணாம்சம்;அவரோடு நெருங்கி பழகியவர்கள் இதை அவர் திட்டமிட்டு செய்கிறார். என்று கூறமாட்டார்கள்.இது அவரது பலவீனம் என்று கூடச் சொல்லலாம்.தான் நினைப்பது சரி என்ற இறதிவரை வாதாடுவார்..கத்துவார் கோபிச்சுக் கொண்டு போவார் .பிறகு திரும்பி வருவார்.இது தான் செயபாலன் என்ற மனிதனின் உண்யான பிம்பம். இதிலே ஊருக்கு அறிவித்துவிட்டு செல்வதன் மூலம் தன்னுடைய பயணத்தை ஒரு திறpல் பயணமாக்க அவர் விரும்பியிருக்கலாம். இதிலே என்னுடைய கேள்வி என்னவென்றால் சிறீலங்கா அரசுக்கு எதிரான பரப்புரைக்கு இந்த கைதை அல்லது நாடுகடத்தலை நாங்கள் பயன்படுத.தவதில் என்ன தவறு என்பது தான்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
நான் இதுவரை இந்த திரியில் எழுதவில்லை.நான் எனது வலைப்பதிவில் எழுதியதை இங்கே சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்.இவன் ஆர் எழுதுவதற்கு? சின்னவன் பெரியவன் என்ற காழ்புணர்ச்சி இல்லாமல் நேர்மையோடு நான் எழுதியை படித்தால் நான் சொல்ல வந்த விடயம் தெளிவாகப் புரியும். நான் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அங்கே என்ன நடந்தது என்ற பலவேறு தரப்பிலும் தகவல் சேகரித்து சமவ்பங்களை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் என்னுடைய வலைப்பதிவில் எனது கருத்தை எழுதினேன். ஜெயபாலன் மட்டுமல்ல இன்னொரு எக்சோ வையோ போய் தமிழ் முசுலிம் ஒன்றுமை பற்றிப் பேசினால் இதுதான் நடக்கும். ஜெயபாலன் கைது அல்லது கடத்தப்பட்டார் என்ற செய்தியின் மூலம் அவருக்கு விளம்பரம் கிடைத்தாக சொல்லிக் கொண்டாலும் ஒரு கவிஞனை கடத்தினார்கள். கருத்துச் சொன்னதற்காக கைது செய்தார்கள் அங்கே சனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் கிடையாது என்று எல்லைகளற்ற ஊடகர் அமைப்பு, கருத்துச்சுதந்;திரத்துக்கான அனைத்தலக அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன. ஜெயபாலன் நல்லவரா கெட்டவரா சுயவிளம்பரம் தேடுபவரா என்பதற்கு அப்பால் அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டது சிங்ப்பூர்மாதிரி வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு சுற்றுலா சென்று மகிந்த அரசின் பொருளதார சுமையை குறைப்பவர்களுக்கு அங்கே போனால் கைது செய்யப்படுவிர்கள்.கடத்தப்படுவிர்கள் என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்பட்டிருக்கிறதே.இதைத் தானே சிறீலங்காவை புறங்கணி புறக்கணி என்று நாங்கள் சொல்லக் கொண்டிருக்கிறோம். இதைத் தானே நான் எழுதினேன்.இது ஏன் நெடுக்காலபாவான் என்ற பெயரில் எழுதுவபருக்கு குத்தல் குடைச்சலைக் கொடுக்கிறது. எனக்கு வரும் 12ம் திகதி 59 வயது ஆகிறது அவருக்கு நான் சின்னவன். எனக்கு தெரியும் அவர் என்ன அர்த்தத்தில் என்னை சின்னவர் என்று சொன்னார் என்பது. நான் எழுதிய கருத்து தவறு என்றால் சிவா சின்னப்பொடி எழுதினது பிழை.இது தான் உண்மை.இது இ;ப்படித்தான் இருக்கவேண்டும்.என்று வெளிப்படையாக எழுதுவது தானே ஆக்கபூர்வமான விமர்சனம். தமிழ் முஸ்லீம் முரண்பாட்டின் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும். இராஜதுரையுமே. செல்வநாயகத்தக்குப் பின் தமிழரசுக்கட்சிக்கு தலைமை தாங்குவதில் அமிர்தலிங்கத்துக்கும் இராஜதுரைக்கும் பனிப் போர் நடந்தது.அஷ;ரப் அப்போது தீவிரமான தமிரசுக்கட்சி செயற்பாட்டாளர். இராஜதுரையை மட்டம் தட்ட அஷ;ரப்பை அமிர்தலிங்கம் தூக்கிப்பிடிக்க கிழக்கில் தனக்கு போட்டியாக அஷ;ரப்பை வந்துவிடக் கூடாது என்பதற்காக இராஜதுரை அவரை மட்டம் தட்ட இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு இரண்டு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக பர்ணிமித்தது.சிறீமா அரசாங்கம் அதற்கு தூபம் போட்டு வளர்த்தது. எப்படி அமிர்தலிங்கம் இயங்கங்கள் தன்னை மிஞ்சி வளரக் கூடாது என்று வடக்கில் காய் நகர்த்தினாரோ அதே வேலையைத்தான் கிழக்கில் அரசியலில் செய்தார் இறுதியாக எனது பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு ........ (ஜெயபாலன் ஓட்டுக் குழு உறுப்பினன்;…. ரோ ஏஜண்ட்… சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி… என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள்) நெடுக்காலபோவான் பதிலழித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஜெயபாலன் மீதான காழ்ப்புணர்ச்சியால் மகிந்த அன் கொம்பனியை அவர் மறைமுகமாக நியாயப்படுத்தியிருக்கிறார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அனைவருக்கும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அலைஅரசி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அன்னிலிங்கம் மற்றும் ரதிக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உடையார் சகாரா இணையவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன தமிழ்சிறீ விசுகு கறுப்பி தப்பிலி தமிழரசு தமிழ்சூரியன் ஆகியோருக்கு எனது நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நிழலி டிசம்பர் மாதம் 12 ம் திகதி எனது வாழ்க்கையில் ஏற்கனவே 56 தடவைகள் வந்து சென்றுவிட்டது.இன்று 12.12.12 57வது தடவையாக எனது வாழ்க்கையில் வருகிறது.இந்த 12.12.12 இனி 2112 ம் ஆண்டு தான் வரும். அப்போது நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. அந்த வகையில் இன்றைய இந்த நாள் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாகும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன வந்தியத்தேவன் நந்தன் நிலாமதி ஆகியோருக்கு எனது நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இசைக்கலைஞன் நன்றி புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி கறுப்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சுபேஸ்
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/uZlh5o55QN0" frameborder="0" allowfullscreen></iframe> <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/uZlh5o55QN0" frameborder="0" allowfullscreen></iframe>
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தாயக விடுதலைப் போராட்டம் ஊடகத்துறை என்று பலதுறை அனுபவமும் ஆளுமையும் பெற்ற எனது நண்பர் சிவா சின்னப்பொடி அவர்களின் 51 வது பிறந்த நாள் (12.12.2006) இன்றாகும். சலுகைகளுக்கு விலைபோகாது ஒடுக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது துணிந்து தனது கருத்தைச் சொல்லும் அவரது போர்க்குணம் என்னைப் போன்ற பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. தனது குழந்தை பருவத்திலிருந்து போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட அவருக்கு எனது எனது இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்.