Vatha

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  200
 • Joined

 • Last visited

Everything posted by Vatha

 1. அற்புதமான படைப்பு, நன்றிகள்.
 2. நன்றி சாந்தியக்கா, அண்ணனில்லா வேதனைகள். "யாதுமானவனே... நீயில்லாக் காலைகளில் களத்திலும் புலத்திலும் நரிகள் தொல்லை தாங்கமுடியவில்லையே...."
 3. பின்னூட்டத்திற்கு அன்புகலந்த நன்றிகள்...புங்கையூரன்
 4. தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!! http://www.yarl.com/forum3/index.php?showtopic=132638&hl=
 5. நன்றி தமிழ் சிறி உங்கள் பதில்க் கருதீடுக்கு. அத்துடன் இதைக் கவிதையென குறிப்பிட்டதற்கு இன்னொரு நன்றி, எனெனில் இதைக் கவிதையாக நினைத்து எழுதவில்லை. இது உண்மையிலேயே கவிதையெனின் இதுவே என் "முதற் கவிப் பிரசவம்/பிரசுரம்", எனில் அந்நன்றி யாழுக்கும், முதலில் அங்கீகரித்த உங்களுக்குமே உரித்தாகும். (அப்ப எனக்கும் கவிதை எழுதவருமோ?) நன்றி தேவரே...
 6. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!
 7. நல்வரவு அனந்தி அக்கா. 'வீழ்த்தப்பட்டோம்' என்றிருந்த மனங்களிலெல்லாம் 'எனினும் எழுந்துவிட்டோம்' என உங்கள் செயலால் நிரூபித்துவிட்டீர்கள். இலட்சியப் பயணத்தில் உங்களுக்குத் தோள்கொடுப்போம்.
 8. அப்போ...ஆறுகோடி மட்டுமில்லை... இன்னும் இருக்கு...
 9. உனை நீ உணர்... அழகான தேடல்...நன்று. இங்கும் ஒருவர் "நான்" க்கு பதில் கண்டுள்ளார்... http://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g&gl=SG&hl=en-GB
 10. முயற்சி செய்துபார்க்கிறேன், நன்றி அண்ணா. உண்மையாத்தானே சொன்னீங்கள்??
 11. நல்லவேளை.. தூக்கமாத்திரை இல்லாமற்போனது, இல்லையென்றால் தமிழே தூங்கியிருக்கும். வாத்தியார், தமிழை நன்றாகப் படிக்க ஏதும் ஊக்க மாத்திரை கிடைக்குமோ..? பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........
 12. பிறப்பிடத்தை birth place என்று சொல்லலாமோ வாத்தியார்...?
 13. mp3 என்பது Compressed file. அது original இல்லை. கே.வி. யின் கேள்வி சரியானது. அதை CD யாகவே வாங்கவேண்டியிருக்கும்.ஏனெனில் அதன் கொள்ளளவுபெரியது (more than 5MB). இணையத்தில் இருந்து இலவசமாக பெறுவதென்பது அரிது.
 14. அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும் இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை மறந்து தடுமாறுகிறது... அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த வண்டு தடுமாறுகிறதாம்... ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின் பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி) இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"
 15. பாரதியே அன்று பாடினான்..'சுற்றும் விழிச்சுடரரே கண்ணம்மா...', இப்போ ஒருவன் பாடினான் 'சுற்றும் விழிச் சுடரே... சுற்றும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச்சுற்றுதே.. " இப்பிடியும் ஒருவன் பாடினான்... http://www.youtube.com/watch?v=QCqG3tXF4k4
 16. சோறு - வயிற்றுப்பசிக்கு, காமம் - உடற்பசிக்கு. இவை இரண்டையும் மனத்தை அடக்குவதன்மூலம் கட்டுப்படுத்தலாம், ஆனால் நிறுத்தமுடியாது. ஆதாரம் என்னிடம் இப்போது இல்லாவிடினும் படித்ததில் சேதாரமின்றி என் மனதில் பதிந்தது. காமத்தால் கடவுளை அடையமுடியுமெனில், திருமணமானபின்னும் எதற்காகக் கோவிலுக்குச் செல்கிறோம்? இருக்குமிடத்திலேயே கடவுளை அடையலாமே....?
 17. வணக்கம் கேவி... வந்தாரை வரவேற்கிறோம்...
 18. கனம் தமிழ் ஆசான் அவர்கட்கு, தமிழை மேலும் படித்து இன்னும் பல குசும்புகளைத் தமிழில் செய்யவேண்டுமென்ற ஆர்வக்கோளாறினால் தங்களின் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுளைந்து இதுவரையில் நிகழ்த்திய அனைத்துப் பாடங்களையும் மென்று சுவைத்துத் தின்றுவிட்டேன். மேலும் சுவைக்க ஆவல்லாயுள்ளேன், தயைகூர்ந்து என்னையும் தங்கள் மாணாக்கர்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளும்படி இத்தால் வேண்டிக்கொள்கிறேன். இங்ஙனம், சுயசீர்திருத்தமடைந்த மாணவன்.
 19. இப்ப ஞாபகம் வருகிறதே.... என் தமிழ் வாத்தியார் பத்தாண்டுகளுக்கு முன் செப்பினது.
 20. மெல்லினங்களைப் புரிந்துகொள்வதே எனக்கு இப்பொது மெத்தச் சிரமமாக இருக்கிறது...