Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2867
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Posts posted by கற்பகதரு

 1. 12 hours ago, கிருபன் said:

  பாராளுமன்றத்தில் இன்றைக்கு இருக்கின்ற வட- கிழக்கு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில்  தமிழ் தேசிய மக்கள் முன்னனியாகிய  நாம் இருவரை தவிர மற்ற எல்லோரும் ஒற்றையாட்சியை ஏற்க தயாராகி விட்டார்கள்.

   

  மக்கள் தேர்ந்து விட்டவர்களில் இருவர் தவர மற்றவர்கள் எல்லோரும் மக்கள் விரும்புவதை செய்து அடு்த்த முறையும் பாரளுமன்றம் செல்ல தயாராகி விட்டார்கள். 😀

 2. 1 hour ago, வாலி said:

  அடித் தட்டு மக்கள் ராஜபக்ச்கவினருக்கு எதிராக இறங்கினால் மட்டுமே மாற்றம் உருவாகக்கூடிய வாய்ப்பு உண்டு.

  உண்மை. அதனை சாத்தியமாக்கி மக்களை ஊக்குவித்து வழிநடத்தும் தலைமை தேவை.
   

  1 hour ago, வாலி said:

  அது இலங்கை திவால் ஆனால் மட்டுமே சாத்தியமாகும்.

  மாற்றம் ஏற்பட திவாலாவது மட்டுமே ஒரே வழியல்ல. திவாலாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடியது, ஆனால் மாற்றம் உண்டாகாமால் திவாலாகி வாழும் நாடுகளாக, சோமாலியா, சியரா லியோன் ஆகிய இருக்கின்றன. இலங்கையும் அவ்வாறாக தொடரக்கூடும்.

  1 hour ago, வாலி said:

  அந்த ஒரு நிலைக்கு இலங்கையை சைனாவும் இந்தியாவும் ஒருபோதும் விடமாட்டார்கள்.  

  தமக்கு இலாபம் இல்லாத இடத்தில் இந்தியா, சீனா உட்பட எந்த நாடும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில்லை. திவாலான இலங்கை பயனற்ற நாடாக மாறும் போது, எல்லா நாடுகளும் கைவிடும் சாத்தியமே அதிகம்.

  1 hour ago, வாலி said:

  இப்ப ஒரு தேர்தல் வந்தாலும் ராஜபக்‌ஷவினரே வெல்வார்கள்.

  உண்மையல்ல. அமைச்சர்களே பகிரங்கமாக அரசை விமரிசித்து பதவி இழக்கும் அளவுக்கு இராஜபக்‌ஷ அரசு செல்வாக்கு இழந்துவிட்டது. கூட்டம் கூடி கோத்தபாயவை வரவேற்ற மக்கள் இப்போது இராணுவம் நிற்க கூடியதாக கூக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி அழைக்க கொழும்பை முடக்கும் அளவுக்கு மக்கள் கூடும் காட்சிகளை காணக்கிடைக்கிறது. நாமல் இராஜபக்‌ஷ தாம் செல்வாக்கு இழந்துவிட்டதாக பகிரங்மாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.

  • Like 2
 3. 24 minutes ago, குமாரசாமி said:

   

  எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
  அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

  12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

  உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

  இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

 4. 16 hours ago, கற்பகதரு said:

   

  ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

   

  16 hours ago, விசுகு said:

  மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

  தமது தவறுகளை அடையாளம் கண்டு திருந்த முடியாதவர்கள் இல்லாமல் போனது மக்களுக்கு நன்மையானது.

 5. 4 hours ago, nunavilan said:

  கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

   

  1 hour ago, விசுகு said:

  எல்லோரும் தான் தம்பி  நுணா

  சமாதானம்  என்று  வந்தோர்

  இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

  அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

  இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

  இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

  எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

  யாரைச்சொல்ல???

  எதனை  நோக???

  காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

  ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

 6. 14 hours ago, பெருமாள் said:

  அப்படி சோழர்கள் சிங்களவருக்கு செய்தவற்றை  சொல்லிடுங்க எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும் 

  பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

 7. 9 hours ago, nedukkalapoovan said:

  அந்நியருக்கு நாட்டையும் நாட்டின் சொத்தையும் விற்கத் தயங்காத சிங்களம்..தமிழர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை தானும் கொடுக்க தயாராக இல்லை என்றால்.. சிங்கள அரசுகளின் எண்ணத்தில் எவ்வளவு மோசமான தமிழர் எதிர்ப்பு வக்கிரம் அடங்கி இருக்கென்று பார்த்துக் கொள்ளோனும். 

  இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.

 8. 50 minutes ago, தமிழ் சிறி said:

  நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ… என்னத்தை நம்பி, இவ்வளவு சலுகைகளை அறிவித்து இருக்கின்றார். 🧐

  அவ்வளவு சலுகைகளையும் பார்க்க… தேர்தல் நேரம் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் போல்…
  சகட்டு மேனிக்கு, அடிச்சு விட்டு இருக்கிறார். 🙂

  தேர்தல் வருகிறது. ஜனாதிபதி பதவி விலக இருக்கிறார் அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. பசில் ஜனாதிபதி அல்லது பிரதமராக போட்டியிட இருக்கிறார்.

  1 hour ago, விசுகு said:

   

  ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவும் எல்லையும்  உண்டல்லவா????

  யார் சொன்னது இது? அப்படி இருந்நாலும் அந்த முடிவு அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெறக்கூடும் இல்லையா?

 9. 15 hours ago, ஏராளன் said:

  தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

  • ராம்குமார் த.ரா
  • அறிவியலாளர், அமெரிக்கா

   

  தமிழன் தனித்துவமானவனா?

   

  தமிழ்

  பட மூலாதாரம்,GETTY IMAGES

   

  படக்குறிப்பு,

  தமிழ்

  மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும்.

  https://www.bbc.com/tamil/science-59845143

  அடேங்கப்பா, இந்த கீழடி, மேலடி எல்லாம் பார்த்து கடைசியாக எங்கள் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய தமிழன்” பற்றி இப்படி கலப்பினம் எண்டுட்டாங்களே, எல்லாம்போச்சுதே? 😪

 10. 2 hours ago, Justin said:

  இதற்கு ஒரு இலக்கத்தைக் கொடுக்க முடியுமாவென்று தெரியவில்லை. கொரனா வைரஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரசுகளின் விகாரம் வேகமாகவும், எழுந்தமானமாகவும் நடப்பது. சில விகாரங்கள் வைரஸ் தப்பி வாழ உதவாது விட்டால் அவை அழியும்- மனிதர்களுக்கு அதிர்ஷ்டம். சில விகாரங்கள் வைரசை பல்கிப் பெருக அனுமதித்தால் வைரசுக்கு அதிர்ஷ்டம்.

  ஆனால், தற்போது ஒமிக்றோன்  வைரசுக்கும் மனிதர்களுக்கும் நன்மை தரும் win-win நிலைமை: வைரஸ் பல்கிப் பெருகும், ஆனால் மனிதர்களை பெருமளவில் கொல்லாத நிலை! 

  எனவே, எந்தத் திசையில் நகரும் என்று தெரியாத வைரசின் மாற்றங்களை குறைப்பது தான் நாம் செய்யக் கூடியது. தடுப்பூசிகள் , தொற்றியவர்கள் தனிமை பேணிப் பரவலைக் கட்டுப் படுத்தல் ஆகியன மூலம், வைரசுக்கு விளைநிலமில்லாமல் செய்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது! 

  தடுப்பூசிகளின் நீண்டகால பக்கவிளைவுகளும் தெரியாத நிலையில் ஓமிக்றோன் தரும் இயற்கை நோயெதிர்ப்பை அதிகரிக்க மூன்றாவது தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்லவா? 

 11. 26 minutes ago, Justin said:


  ஒமிக்றோன் தரும் நோய் கோசான் சொல்வது போல, சுவாசக் குழாயின் மேற்பகுதியோடு தொடர்பான அறிகுறிகளைத் தான் (உ+ம் - மூக்கொழுகல், தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றன) அனேகமானோரில் காட்டுகிறது என அமெரிக்க கேஸ்களைப் பார்க்கும் போதும் தெரிகிறது.

  மிகப்பெரும்பான்மையானவர்கள் ஓமிக்றோன் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த வைரஸ் பெரும் பாதிப்பை தருவதில்லை ஆனால் பெருமளவில் வைரஸை மனித உடல்களில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறான பாதிப்பு குறைந்த வைரஸில் இருந்து உருவாகும் வைரஸ்கள் பாதிப்பு கூடிய வைரஸாக உருவாகும் சாத்தியம் எத்தனை வீதம்?

 12. 1 hour ago, Kapithan said:

  போதைபொருள் பாவனை.. ? 

   இவ்வளவு கொடூரமாக கொல்லப்படுவதற்கு நிச்சயம் நகைகள் காரணமாக இருக்குமா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது.

  😔

  போதைப்பொருள் தான் இதற்கு காரணம். போதைப்பொருள் குரூரமாக கொல்லத்தூண்டியிருக்கலாம். போதைப்பொருள் வாங்க பணத்துக்கு நகை தேவைப்பட்டிருக்க வேண்டும். ஹெரோயின் போன்ற தீவிரமான போதைக்கு அடிமையான பெண்ணாக இருக்க வேண்டும்.

 13. 5 hours ago, பெருமாள் said:

  எல்லாரையும் போட்டு கும்மக்கூடாது மேல் உள்ளத்துக்கு என்ன பதில் என்று சொல்லிவிட்டு நகரவும்.

  புலிகள் என்றால் என்று எப்போது  என்று விளக்கமாக இங்கு கூறவும் சும்மா புலி புலி என்பதை நிறுத்தணும் .

  உங்களுக்கு தானே அவர்கள் செய்ததெல்லாம் தெரியும். அப்பிடியே எடுத்துவிட வேண்டியதுதானே? யாரோ Amnesty International அறிக்கைகளை வாசிக்கும்படி எழுதியதாக நினைவு…. எங்கள் நேர்மையான பெருமாள், மனித உரிமைகளை மதிக்கும் பெருமாள், எல்லாவற்றையும் எழுத இருப்பதால் இந்த Amnesty எல்லாம் எங்களுக்கு வேண்டாமே? 🤪

 14. On 10/12/2021 at 15:02, குமாரசாமி said:

  என்னதான் குத்தி முறிஞ்சாலும் சகல மதங்களின் ஒருமித்த சிந்தனை அடுத்த பிறவி ஒன்று உண்டு.நீங்கள் இங்கே செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் அங்கே கணக்கிலெடுத்து பரிசீலிக்கப்படும்.😂

  நான் ஒரு இடத்திலை சாத்திரம் கேட்ட போது அடுத்த பிறவியிலை ஜேர்மன் சீமாட்டி ஒருத்தரின் வீட்டில் நாய்குட்டியாய் இருப்பேனாம். இதை விட என்ன வேணும்?🤣

  Mit dem Hund auf dem Sofa oder gar im Bett – davon raten Ärzte und Tierärzte ab. Die Gefahr der Ansteckung mir Parasiten ist zu groß

  ஐயோ, உந்த ஆசை இன்னமும் போகேலையா? நாய் வேஷம் போட்டாவது அனுபவிக்கிறன் எண்டு நிக்கிறியள்.😍

 15. 5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

  இது குறிப்பாக எந்த இடம் கிளிநொச்சியில்? ஆயுதங்களுடன் மனித எச்சங்களும் உள்ளன என்றால்..? 🤔

   

  57 minutes ago, குமாரசாமி said:

  கனக்க யோசிக்காதையுங்கோ......வேறை ஆர் உவங்கள் புலியளின்ரை வேலையாய்த்தான் இருக்கும்.

  நன்றி அண்ணை. நான் உதை சொல்லியிருந்தால் இவன் சிங்களவன், துவேஷத்தில சொல்லிட்டான் எண்டிருப்பான்கள்.😊

 16. 3 hours ago, Justin said:

  இந்த தடை நீக்க முயற்சி தவிர வேறெந்த நேரத்திலும் நா.க.த.அ பெயர் செய்திகளில் வருவதில்லை. தற்போது சில விடயங்கள் செய்ய முடியாமல் தவிக்கிற புலிகளின் வால்கள் தவிர வேறு எவருக்கும் தடை நீக்கத்தால் ஒரு பயனுமில்லை! மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

  2 hours ago, பெருமாள் said:

  யார் அவர்கள் சுமத்திரன் ஆட்களோ ?


  இலங்கையில் உள்ள மக்களுக்குள் சுமந்திரனுக்கு வாக்களித்த  சுமந்திரனின் ஆட்களும் உள்ளனர். அவர் மக்கள் என்று கூறியது இலங்கை மக்களை.

  2 hours ago, பெருமாள் said:

  யாழில் பொய்களை  விதைப்பதே உங்கள் நோக்கமா ?

  உங்களின் நோக்கமே மற்றவர்களதும் என்று நினைப்பது இயல்பானது.😜

 17. 4 hours ago, குமாரசாமி said:

  நீங்களோ நானோ வாழும் நாடுகள் சட்டம் ஒழுங்குகள் பூரணமாக உள்ள நாடுகள்.எந்த நாட்டவராயினும் சம உரிமை  கொடுக்கும் நாடுகள். மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள். இப்படியான நாடுகளில் கேள்விகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கும். எல்லை மீறாத ஊடக கட்டுப்பாடு கூடுதலான நாடுகளில் உண்டு.

  அண்ணை என்ன பின்பக்கத்தால ஓடுறாப்போல …. எல்லாம் அந்த சுமந்திரம் சொன்னா சரியாயிடும். 😜

  On 10/12/2021 at 17:19, குமாரசாமி said:

  விடுதலைப்புலிகள் காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லையென்று கூக்கிரலிட்டவர்கள் இன்று சுமந்திரனுக்கு கேள்விகளை எழுதிக்கொடுத்து அதில் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பது பற்றி ஆராய்கின்றார்களாம்.

  10 வருடங்கள் கழிந்தும் கேவல உழைப்பு நடத்துகின்றார்கள்.

   

  • Haha 1
 18. 1 minute ago, Kapithan said:

  எங்களுக்கு கிடைத்தது என்ன?

  உதென்ன கப்பித்தான் இப்பிடி கேட்டிட்டியள்? 

  எங்களுக்கு இந்த பொன்னான அரசியல்-இராணுவ சர்வதேச ஆய்வாளர் நெடுக்காலபோவான் கிடைத்ததே உந்த அமெரிக்காவை 90களில் இருந்து அவர் ஆய்வு செய்த காரணத்தால் தானே? எத்தனை விடுதலைப்போராட்டங்களையும் இந்த வரப்பிரசாதத்துக்காக காவுகொடுக்கலாம் கண்டியளோ?

  • Haha 1
 19. 39 minutes ago, குமாரசாமி said:

  ஈழத்தமிழர்கள் தமது உரிமைக்காக சகல வழிகளாலும் போராடி விட்டார்கள்.
  இனி எப்படி?

  ஏன் நிறைவேறவில்லை?

  தந்தை செல்வா தொடக்கம் தலைவர் பிரபாகரன் ஈறாக சுமந்திரன் வரைக்கும் என்ன நடந்துகொண்டிருக்கின்றது?

  விதியா தலைவிதியா கர்மாவா விதியில்லையா விவேகமில்லையா இல்லையேல் சதியா?

  அல்லது கொடுப்பினை இல்லையா? 

  எல்லாம் மாயை. சும்மா இருப்பதே சுகம் 🤗

 20. 23 hours ago, அக்னியஷ்த்ரா said:

  இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
  சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

   

  2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  ம்கூம் 

  ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

 21. 5 hours ago, Nathamuni said:

  கர்மா!

  தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

  நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

  அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

  தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

  தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

  வரலாற்றில்.....

  அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

  அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

  அண்ணன் அரசனானான்....

  ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

  இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே?

  தமிழீழம் உருவாக்கினார் தேசிய …

  அவர் மகன் …., 

  நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!

 22. 59 minutes ago, நன்னிச் சோழன் said:

  எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

   

  44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  👍..

  IMG-20211208-201201.jpg

  சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

  https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

  நன்னி,

  என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….

   

 23. 1 hour ago, கிருபன் said:

  சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

  தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.
   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.