Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செவ்வியன்

  1. இது எங்கு போய் நிற்கும் என்று தெரியவில்லை இதில் எது உண்மை என்று விளங்கவில்லை ஆனால் ஒன்றும் மட்டும் நிச்சயம் இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வீழ்ச்சியே. இதை இந்தியமும் சிங்களுமும் ரசிக்கும்.
  2. நல்ல வேளை தாயின் உயிர்க்கு பாதகம் இல்லாமல் சோழ நாயனார் பிறந்துள்ளார். அந்த இருநாட்களில் பெரும் வலி வேதனையை அடைந்திருப்பார்
  3. நடந்திருக்க வாய்ப்பு குறைவு, காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டின் பெரிய கட்சி, ஆகையால் இந்திய தேசியத்தின் உணர்வே மேலோங்கியிருந்திருக்கும். அதை வைத்து இந்தியா ஆக்கிரமத்திற்கும். ஹாங்காங் சிங்கப்பூர் போல சிறிய பகுதி, தனியாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் அது மீண்டும் சீனாவின் கீழ் போய்விட்டது. பரிந்துரைக்கு நன்றி🙏 வாசிக்கிறேன்.
  4. இலங்கையில் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவருக்கு போனது, தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டது. இந்தியாவிலும் இதே நிலை தான். இலங்கையிம் இரு பெரும் இன குழுக்கள் தான், ஒப்பீட்டளவில் இங்கே இனத்தின் பிரச்சனையை குறித்து புரிய வைக்கமுடியும், ஆனால் இந்தியாவில் பல குழுக்கள், தமிழர்கள் மட்டும் தனியாக போராடி உரிமையை பெறுவது எளிதான காரியமில்லை.
  5. பல புத்தகங்கள் , கட்டுரைகள் உள்ளது கூகிளாரிடம் கேட்டால் தருவார். உங்களுக்காக ஒன்று https://www.amazon.in/ஈ-வெ-இராமசாமி-பெரியார்-வரலாறு-History-V-Ramasamy-ebook/dp/B07XJGJMC9
  6. சீமான் மலையாளியாகவோ இல்லை வேறு எவராகவோ இருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அவரும் அவரது தம்பிகளும் சாதி வெறியோடு மற்றவர்களை அடையாளபடுத்தும் போது இவ்வாறு சொல்லவேண்டியிருக்கிறது. என்னை போன்ற சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு என் பாட்டனார் வரை தான் வரலாறு தெரியும், அதற்கு முன்னர் என்னவென்றே தெரியாது. இன்று தமிழனாக உணர்கிறேனா, வாழ்கிறேன், அவ்வளவுதான்.
  7. தமிழ்நாட்டில் பலருக்கு பிரபாகரன் ஒரு ஆதர்ச நாயகன், மாவீரன், ஆனால் அவரை தூக்கி பிடிப்பதால் மட்டுமே ஓட்டு விழாது. ஈழப்போரில் உச்சக்கட்டத்தில் தேர்தல் நடந்த போது பெரும் எதிர் பரப்புரையையும் மீறி திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சீமானுக்கு பிரபாகரன் வெறும் முகமூடிதான் , அதை கழற்றி எறிந்துவிட்டு காசு கொடுக்கும் எசமான் சொல்லும் முகமூடியை மாட்டும் காலம் வெகு தூரமில்லை.
  8. தலைவர் சீமானை தெரிவு செய்தார் அடிப்படை ஆதாரமில்லாத ஒன்றை சொல்கிறீர்கள். இது புலிகளை குறைத்து மதிப்பிடும் செயல். இன்றும் என்றும் தமிழ்நாட்டினர் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான தமிழருக்கு ஈழத்தின் மீதான அக்கறையும் கரிசன பார்வையும் உண்டு.
  9. நாதகவின் முக்கிய நிதி கொடையாளி தாது மணல் கொள்ளைக்காரர் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் தான். சீமானின் திருமண செலவையே இவர் தான் செய்தார் என்ற பேச்சுண்டு. இந்த திமுக ஆட்சி அமைந்தபின் ஒரு குவாரி பிரச்சனை சம்பந்தமாக நாதகவின் சுற்றுசூழல் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார், அது குறித்து சீமான் எதிர்ப்போ, போராட்டமோ எதுவுமில்லை. இன்று அந்த நாதக போராளி பிசிறாக ஒதுக்கப்பட்டுவிட்டார். சீமான் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் இயற்கை வளத்தை காக்க அல்ல, அக்கொள்ளையர்களிடமிருந்து பணம் பெற்று தன்வளத்தை பெருக்கி கொள்ள
  10. இதற்கு 2 தீர்வு தான் இருக்கமுடியும், ஒன்று அரசியல் ரீதியானது ஆனால் மக்கள் திமுக அல்லது அதிமுக என்றே தேர்ந்தெடுக்கின்றனர், காரணம் அவர்கள் மீது நம்பிக்கை என்பதை விட மாற்றம் என்று வருபவர்கள் எல்லாம் ஏமாற்றாய் இருப்பதால் தான். மற்றொரு தீர்வு சட்டரீதியிலானது, அவ்வாறு பெரிதாக எடுக்கவுமில்லை. ஊழல் நடக்கிறது ஆனால் நடவடிக்கை இல்லை என்றால் எல்லாம் கூட்டு களவாணிகள் தான். மக்களுக்கு நல்லதொரு மாற்றம் வந்தால் மட்டுமே இவை மாறும், அது இதுவரை புலப்படவில்லை.
  11. குழப்பவாதியாக இருக்கிறீர்கள், ஒன்றிலிருந்நது மற்றொனாறாய் தாவி கொண்டே இருக்கிறீர்களா. இங்கு யாரும் பெரியார் ஈழத்துக்கு தேவை என்றும் கூறவில்லை , பிரபாகரனுக்கு மாற்று என்று கூறவில்லை.ஏன் தமிழ்நாட்டில் பெரியாருக்கென்று வாக்கு வங்கி இருப்பதாக கருதவில்லை. இருவரும் போராடிய களங்கள் வேறு, போராட்ட வடிவமும் வேறு. ஆனால் இருவரும் தம் வாழ்நாளின் இறுதி வரை போராடினர்.
  12. @Nathamuni ஒவ்வொன்றாக தாவி கொண்டிருக்கிறீர்கள், இதற்கான பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
  13. பெரியார் தமிழ் நாட்டு அரசியலையே பேசினார் , ஈழ அரசியலை பேசியதாக நான் படிக்கவீல்லை. அதனால் ஈழ அன்றாட அரசியலுக்கு யாரும் தூக்கி பிடிக்கவில்லை அதற்கான அவசியமும் இல்லை. அரசியலை தாண்டி அவரது சமூக கருத்துகள் பலரை கவர்ந்திருக்கிறது, தேடி படித்தீர்கள் என்றால் தெரியும். உதாரணத்திற்கு ஒன்று https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38148. சிலநாட்கள் முன்னர் ஒரு காணொளி பார்த்தேன், அது புலிகளின் ரீவியில் வந்த ஒரு மாவீரர் குடும்பத்தை பற்றிய செய்தி குறிப்பு. வீட்டின் முகப்பிலேயே பெரியார் படம் வைத்திருந்தார்கள். மீண்டும் பார்த்தால் இங்கே பதிவிடுகிறேன். யாரும் விமர்சனத்திற்கு அப்பார் பட்டவர்கள் அல்ல, ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும். சமீபத்தில் யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மாற்றதிற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை சில நாட்கள் கழித்து திருவள்ளுவருக்கு யாழ்பாணத்தினர் எதிர்ப்பு என்று விமர்சித்தால் எப்படி தவறானதோ அப்படிதான் இன்று வரும் பெரும்பாலான பெரியார் மீதான விமர்சனங்கள்.
  14. இதற்கு ஏற்கனவே இதே திரியில் ஜஸ்டின் பதில் அளித்திருக்கிறார். படித்து பார்க்கவும். இப்போது திராவிடர் கழகம் பதிப்புரிமையை வைத்திருக்கிறது, அரசுடைமையாக்கினால் யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் வேறுபாடு
  15. கன்னடர் அல்லாதவர் கர்நாடகவில் முதல்வராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு தான் அந்த உதாரணத்தை கொடுத்தேன். அதே போல் எனக்கு தெரிநிது கர்நாடாகவிலும், மகாராஷ்டிராவிலும் கூட தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் இலங்கை போன்றே தேர்தலில் போட்டியிட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றே ஆளுகின்ற உரிமையை பெறுகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராக நடைபெற்றால் மறுமுறை ஆட்சியை பிடிப்பது கடினம். மக்களும், சட்டமும் அனுமதிக்கும் போது வேறு யார் தடுக்கமுடியும். அமெரிக்கா, கனடாவில் ஆள்பவர்கள் என்ன பூர்வகுடி சிவப்பிந்தியர்களா?
  16. ஹாஹா அவருக்கு இது புரியும், ஆனால் அவரை எப்படியாவது கன்னடராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அப்படியான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் தான் கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார். நீங்களே கூறியது போல் இனவாத அரசியலை தாண்டி உலகில் பல இடங்களில் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் வரலாற்றில் நிலைப்பது அவர்களின் செயல்பாடுகளினால் மட்டுமே அன்றி இந்த இனத்தில் பிறந்தவருக்காக என்பதருக்காக அல்ல.
  17. நீங்கள் முழுமையாக படிக்கவில்லைப் போல், அவர் ராஜ்புத்திரர் பூர்விக கன்னடரில்லை. நாதகவினர் மொழியில் கர்நாடகத்திற்கு அவரொரு வந்தேறி.
  18. இதில் கொடுமை என்னவென்றால் அந்த முத்துக்குமாரின் வீரமரணத்திற்கு இது வரை நியாயம் கிடைக்கவில்லை. இதை அப்படியே அந்த கட்சியும் மறந்து(மறைத்து)விட்டது. கட்சியின் மூத்தவருக்கே இந்த நிலை என்றால் பிசிறுகளின் நிலை அதோகதி தான். இவர் இயக்கத்தில் நேரடியாக பலகாலம் ஈழத்திலிருந்து பணிபுரிந்திருக்கிறார் என கேள்விபட்டிருக்கிறேன். இனி யார் வந்து உண்மையை சொல்லப் போகிறார்கள் என்ற நம்பிக்கைதான் 😃
  19. காரணம் கர்நாடாகவிற்கு தேவையான பலமான தலைமை அங்கிருந்தது. அங்கு பாஜக வலுவான கட்சி, தலைமை ஏற்க ஆட்களுக்கு பஞ்சமில்லை. உங்களின் கேள்வியின் நோக்கம் புரிகிறது, கர்நாடாகவை கன்னடர் அல்லாதோர் ஆள முடியுமா என்பதே. ஆம் ஆண்டிருக்கிறார்கள். ஓர் உதாரணத்தின் இணைப்பு கீழே. https://en.m.wikipedia.org/wiki/Dharam_Singh என்னை பொறுத்தவரை அவர் யாரென்பது முக்கியமில்லை, யாருக்கான ஆட்சியை அவர் முன்னெடுக்கிறார் என்பதே முக்கியம். கிழக்கின் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் தமிழர் தானே, அவர் யாருக்கான முதலமைச்சராக இருந்தார்?
  20. நல்லதொரு பகிர்வு, நல்ல நேரம் பார்ப்பது இன்று வரை தொடர்கிறது. இந்த நம்பிக்கையினால் இதில் சில நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கு தெரிந்தவரின் மனைவி நிறை மாதமாக இருந்த போது, மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் தாயாரோ நல்ல நாளில்லை இல்லை மறுத்திருக்கிறார். பெரும் போராட்டத்துக்கு பின்னர் தான் அது நடந்தேறியுள்ளது இவ்வாறான நல்ல நேர நம்பிக்கை வேறு ஏதாவது சமூகத்தில் உள்ளதா?
  21. @goshan_che எனக்கு இது தொடர்பான ஒரு கேள்வி, நான் படித்து அறிந்தவரை திராவிடம் என்பது தமிழின் வெளிப் பெயர்(exonym), இதே போல் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இனங்களுக்கு இவ்வாறான பெயர்கள் இருக்கின்றன. என்னுடைய கேள்வி ஈழம் குறித்தானது, திராவிடம் தமிழுக்கு எதிரி என்றிருந்தால் இங்குள்ள தமிழ் கட்சிகள் சில தங்கள் பெயரை சிங்களத்தில் திராவிடம் என வைத்துக் கொண்டதேன்? 1890களிலேயே ஈழத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோடிகளில் ஒருவரான குமாரசாமியை திராவிடர் என பத்திரிக்கைகள் குறிப்பிட்டதேன்? இவ்வாறு இயக்க காலத்தில் கூட பல குறிப்புகளை பார்த்தேன். இவர்களெல்லாம் அறியாமையில் செய்தார்களா?
  22. அவர் பேசுவது தேசியமே அல்ல, குறைந்தபட்சம் அவரது கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவரும், முதல்வரும் தமிழராக இருக்க வேண்டுமென கட்சியின் Bylawல் இருக்கிறதா? அப்படி வைக்கவேண்டுமானால் தமிழர் யார் ஏன்று வரையறுக்க வேண்டும் பின்னர் தான் எப்படி தமிழன் என்று நிருபிக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் முக்கிய கூறு சாதிகளை கடந்த தமிழர் ஒற்றுமை. இதை ஈழத்தில் இயக்கம் செய்தது, ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடக்கும் சாதீய பிரச்சனைகளுக்கு எதிராக நாதக செய்தவை என்ன?
  23. இதில் மாறுபட்ட கருத்துண்டு. நீங்கள் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் இன்றுவரை இந்திய தேசியக்கட்சிகள் பலமாக உள்ளது. எனக்கு தெரிந்தவரை மொழிவழி தேசியம் பேசும் கட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதோடு தெலுங்கு மொழியை அடிப்படையாக எழுந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஓரினத்தவரான எங்களை ஒன்றாக்க வேண்டும் என போராட்டம் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
  24. ஏற்கனவே குவிந்திருக்கும் ரோகாங்கியா இஸ்லாமியருக்காக பங்களாதேசம் மியான்மருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக ரொஹிக்கியாவிற்கு எதிரான நடவடிக்கை தான் எல்லையை மூடியதன் மூலம் எடுத்துள்ளது. https://www.aa.com.tr/en/asia-pacific/bangladesh-will-no-longer-allow-rohingya-to-enter-its-territory-official/3432214 எல்லா நாடுகளும் தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.