Everything posted by செவ்வியன்
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
பாலியல் வழக்குகளில் உள்ள பெரும் சிக்கல் அவற்றை நிருப்பிப்பது, இந்திய நீதிமன்றங்களில் சில வழக்குகளில் பாதிக்கபட்டவரின் நடவடிக்கையை குறை சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சங்கிகளின் ஆதரவு பெற்ற இந்த பாலியல் சைக்கோ விடுவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இதோடு அவரது நாறவாய் அனைவருக்கும் வாடகைக்கு தேவைபடுகிறது.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமானால் அவரை சுற்றியுள்ள சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கும் எந்த பயனுமில்லை என்பது என் கருத்து. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக அவர் நேற்று பேசிய பேச்சுகள் மனித தன்மையற்றது, மிகவும் கண்டிக்கதக்கது. சிறு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை மிகவும் எளிதாக பேசி பொதுமைபடுத்துவது, பெண்ணின் கண்ணியத்தை கேவலப்படுத்தி பேசுவது போன்றவற்றை நமக்கு சம்பந்தமில்லை என கடந்து போவது இதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பது போலயே அமையும். சீமானின் கோட்டை நம்மின அழிவின் மீதே கட்டப்பட்டிருக்கிறது, அக்கோட்டையில் நடக்கும் அனைத்து அசிங்கங்களும் நாம் ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்மையும் பலவீனப்படுத்தும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இந்த விடயத்தை பற்றி நான் அறிந்தவரை தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறைகளும், முறையற்ற எல்லை தாண்டுதலும் ஈழ மீனவர்களின் பிழைப்பை பாதிக்கிறது. போராட்ட காலத்திற்கு பிறகு மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தபட்ட பிறகு நம் மீனவர்கள் இதன் பாதிப்பை நன்கு உணர்கின்றனர், அதனாலயே இப்போது இது விரைவில் தீர்க்க வேண்டிய விடயமாக இருக்கிறது. இதற்கு இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை எட்டவேண்டும், ஆனால் அப்படி எதுவம் நடக்கிறதா என்று தெரியவில்லை.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உங்கள் கருத்து எனக்கு விளங்கிட்டு,நான் உங்களை குறிப்பிடவில்லை, நான் குறிப்பிட்டது பொதுவாக இந்த கேடு கெட்ட செயலுக்கு இயக்கத்தின் பெயரை துணைக்கு அழைத்து கொள்பவர்களை பற்றி.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உலகில் உள்ள அனைத்து இராணுவங்களின் மீதான பொதுவான குற்றச்சாட்டு பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்கள் பற்றியவை, அப்படி எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆட்படாதது எனக்கு தெரிந்தவரை புலிகள் அமைப்பு மட்டுமே. ஆனால் இன்று இந்த பாலியல் குற்றவாளி சைக்கோ சைமனின் குற்றங்களை நியாயப்படுத்த, புலிசின்னத்தோடு அவரது ஐடிவிங் தலைவர் படம் வெளியிட்டுள்ளார். இனத்தை மீட்க போராடிய இயக்கத்தை இன்று பாலியல் பயங்கரவாதியை மீட்க பயன்படுத்த பார்க்கிறார்கள். அதற்கு இங்கு சில கோடாரி காம்புகள் தமிழ் தேசியம் என்ட பெயரில் ஆதரவு வேறு, பெரும் வெட்ககேடு.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இதில் என்ன கூத்து என்றால் இந்திய தேசிய ராணுவத்தின் மேன்மையை தமிழ்நாட்டு காவல்துறை கலங்கப்படுத்திவிட்டது என்று சங்கி சைமனின் காம கொடூர தம்பிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் தான் தமிழ்தேசிய காவலர்களாம்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
பாஜகவின் வாக்குகளை பெறுவது இந்திய தேசியத்தை நோக்கிய வளர்ச்சி என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் அதனால் தான் இரு கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட போதும் கட்டுத்தொகையை பெற முடியவில்லை.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
தத்தமது மன ஆறுதலுக்காக சொல்லிக்கொள்கிறார்கள், தயவு செய்து அவர்கள் மனதிடத்தை குழைக்காதீர்கள்.
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
இதென்ன கொடுமை இந்த சைமனின் சின்ன சங்கிகள் அரசியல் பித்தலாட்டங்கள் செய்துவிட்டுதான் புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் இம்மாதிரியான பெருங்கொடுமைகளை பிராபாகரன் படம் முன்னரே எடுத்துள்ளனர். இது தான் இவர்கள் இயக்கத்திற்கு கொடுக்கும் மரியாதையும் அதன் மாண்பை காப்பாற்றும் ரட்சணமும்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
முடிவு முன்பே தெரிந்த ஒரு சுவாரசியமற்ற தேர்தலில் ஒரே சுவாரசியம் சின்ன சங்கி கட்சி கட்டுத் தொகை பெறுமா பெறாதா என்பதே. கடைசி வரை திக்..திக்... நிமிடங்கள். முடிவில் எல்லாம் நலமே.
-
பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை!
தலைப்பை பார்த்ததும், இதையே கமெண்டாக போட வந்தேன், நீங்களே போட்டு விட்டீர்கள்😃 அண்ணாமாலை தன் சக சங்கி சைமனுக்கு ஆதரவாக ஆதாரமெல்லாம் வெளியிடுகிறேன் என்றார், ஆனால் வழக்கம் போல் அவரும் வாய்ச்சொல் வீரராகவே இருக்கிறார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
அங்கு பெரியாரை மட்டும் வைத்தோ அல்லது பிரபாகரனை மட்டும் வைத்தோ ஓட்டு வாங்கி வெல்லமுடியாது. இவ்வாறு சொல்வது அத்தலைவர்களை செல்லாக்காசாக காட்டி அவர்கள் பின்னுள்ள கொள்கைகளை தாழ்த்தும் முயற்சியே. பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவர் நேரடியாக ஆதரித்த கட்சிகள், வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.ஈழத்தில் பிரபாகரனை ஆதரித்தவர்களும் தோல்வி அடைந்துள்ளனர், எதிர்த்தவர்களும் வெற்றி அடைந்துள்ளனர், அதற்காக மக்கள் பிரபாகரனை தூக்கி எறிந்துவிட்டனர் என கொள்ளமுடியுமா?
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
தவறு, பாஜக தனித்தே முதன் முதலில் ஒரு சட்டமன்ற தொகுதியை வென்றது. கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுவனேயே 1998 பாராளுமன்ற தேர்தலில் அமைத்து 5 தொகுதிகளை வென்றது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நாதக பெற்ற வாக்குகளில் கணிசமான பாஜகவின் வாக்குகள் இருக்கிறது, அதே போல் திமுக பெற்ற வாக்குகளில் கணிசமான அதிமுக வாக்குகள் உள்ளன. இடைத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பொது தேர்தலில் எதிரொலிக்காது. எனக்குள்ள ஒரே சோகம், ஏமாற்றம், ஆதங்கம், கவலை, வருத்தம் எல்லாமே, 2 பேர் போட்டியிட்டப்பக்கூட அண்ணனால் கட்டுத்தொகை பெறமுடியவில்லையே. நாதியற்றா போனார் சங்கி சைமன்?
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
உங்கட கணிப்பு நிச்சயம் பொய்க்கும், 10% வந்தேறிகளின் வாக்குகளை தவிர மீதமுள்ள 90% உயர்தர சுத்தமான தமிழர்களின் வாக்குகளை பெற்று, அனைத்து தொகுதிகளையும் வென்று தமிழ்நாட்டின் அதிபராக முடிசூடுவார்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
அய்யகோ நான் என் செய்வேன், எனது வாக்கு பொய்த்து போனதே!!!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இலங்கை சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்களித்தனர், அப்படி போராடி பெற்ற சுதந்திர நாளில் இவ்வாரத்தில் தமிழர் பகுதியில் கரிநாள் என போராடியதேன்? இங்கு என்ன காரணமோ அதற்கு ஒப்பான காரணத்திற்காக தான் பெரியாரும் எதிர்த்தார். தமிழனின் குடுமி ஆங்கிலேயரிடமிருந்து வடநாட்டவருக்கு கைமாறுகிறது, குடுமி விடுபடவில்லை. அதே போல் பெரியார் தனிநாடுக்கு கடைசி வரை குரல்கொடுத்தார் ஆனால் அதற்கு ஆதரவு பெருமளவு இல்லை. தனிநாடு கோரிக்கையை கைவிட்ட திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இவர்களின் நிலைப்பாடு எப்படியென்றால் சங்கி சைமனின் அயோக்கியதனங்களுக்கு தமிழ் தேசியத்தை வெறுத்தால் எவ்வளவு முரணானதோ அப்படியிருக்கு. 2008ல் புலிகளின் தலைமை பெரியாரையும் திராவிடத்தையும் குறை கூறினாராம், இது உண்மை என்றால் 2011ல் கருணாநிதியை பாராட்டி நாடகம் எழுதியதேன்? 2023 வரைக்கும் பெரியார் எங்கள் வழிகாட்டி என்று சொல்லி திரிந்ததேன்? புலிகளுக்கும் உண்மையாக இல்லை, தமிழ் தேசியத்திற்கும் உண்மையாக இல்லை, தன் கட்சிகாரனுக்கும் உண்மையாக இல்லை. கண்ணதாசனின் வனவாசம் படித்துக்கொண்டிருக்கிறேன், அதில் எப்படி திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையோடு இருக்கிறார்கள் ஆனால் ஏமாற்றப்படுகிறார்கள் என்று எழுதியிருப்பார்,அது அப்படியே இந்ந நாதகவிற்கு பொருந்தும். அதையும் மீறி திமுக வளர்ந்ததற்கு காரணம் அண்ணாவை தாண்டி அடையாளம் காட்டக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். ஆனால் நாதகவில் யாராவது முன்னுக்கு வந்தால் பிசிறு என்று வெட்டப்படுடகிறது, இல்லை சங்கி சைமனே தேவலாம் என்கிற அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருக்கிறது. அவர்களுக்கு வரப்போகும் ஒரே நற்செய்தி ஈரோட்டில் வாங்கப் போகும் கட்டுத்தொகையே!!!- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
ஹாஹா, யாழ் களத்தில் நேற்று கடைசி கண்டி அரசரை பற்றிய செய்தி பார்த்தேன். இங்கு கலப்பு நிறைய நடந்துள்ளது, ISO அங்கீகாரம் பெற்ற தமிழரை எப்படி கண்டுபிடிப்பது😃 பிறப்பால் ஒருவர் யாரென்பதை விட, யாருக்காக வாழ்கிறார்கள் என்பதே முக்கியம்.- மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இதற்கு சங்கி சைமன் தம்பிகள் ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். அதாவது, இவை புலிகள் திராவிட சூழ்ச்சிகளின் மீதான அறியாமையில் பேசியது. 2009 இன அழிப்பின் போது திராவிடத்தின் உண்மை முகம் வெளிவந்தது, ஆகையால் இன்று திராவிடத்தையும் அதன் தலைவரான பெரியாரையுமா எதிர்த்து அழிக்க வேண்டியது அவசியமாகிறது.- இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
இதிலிருந்து நான் புரிந்துகொள்வது, நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் ஆனால் புலி கொடியை மட்டும் வைத்திருந்தால் உன் சொல்லும் செயலும் மதிக்கப்படும். இயக்கத்தின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும் இதைவிட தாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது?- ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு
வரலாறு கற்பனையை விட சுவராஸ்யமாக இருக்கு. காலம் போக போக இனக்கலப்பும் இருக்கு, மொழி கலப்பும் இருக்கு, வரலாற்றில் பொய் கலப்பும் இருக்கு.- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
உங்கள் இளைய மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!! - மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.