Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  533
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by போக்குவரத்து

 1. சவாரிக்கு போதியளவு நேரம் ஒதுக்குங்கள். ஈரமான (wet) வீதியில் நிறுத்தம் செய்வதற்கு கூடுதல் நேரம், தூரம் பிடிக்கும், எனவே முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையில் கணிசமான இடைவெளி விடுங்கள், அத்துடன் வேகத்தையும் குறையுங்கள்.

 2. ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய போக்குவரத்து விதிகளின்படி 21 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவர் (அவர் எப்படியான வகை சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்தாலும்) மதுபோதையில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டால் (எவ்வளவு வீதம் என்றாலும் - Zero Tolerance) சாரதி அனுமதி பத்திரம் உடனடியாக 24 மணிநேரங்களுக்கு இரத்து செய்யப்படும்.

 3. Perfect Practice makes you Perfect. நீங்கள் வாகனம் ஓடும் போது விடுகிற ஒவ்வொரு தவறுகளையும் மீண்டும் மீண்டும் சரி செய்து முறையாக ஓடும் போது, சிறிது காலத்தின் பின் நேர்த்தியாக வாகனம் ஓடும் ஆற்றல் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

 4. நீங்கள் வாகனம் ஓடும் போது மிக நீண்ட பார்வை வீச்சை ஏற்படுத்தினால் (Look ahead as far as you can comfortably see) போக்குவரத்தில் ஏற்படும் இடைஞ்சல்கள், இடர்கள், ஆபத்துக்களை முன்கூட்டியே இலகுவாக எதிர்கொள்ளவும் அல்லது தவிர்க்கவும் முடியும்.

 5. வாகனத்தில் சிக்னல் போடுவதற்கு ஆகக்குறைந்தது பின்வரும் நேர இடைவெளிகளின் முன் நீங்கள் பின் பார்வை கண்ணாடியை (Rear Mirror) பார்க்க வேண்டும். திருப்பங்கள்: 2 செக்கன்கள், ஒழுங்கை மாற்றம்: 3 செக்கன்கள், அவசர கால நிறுத்தம்: 5 செக்கன்கள்

 6. புகார் ஊடாய் (fog) வாகனம் ஓடும்போது வாகனத்தின் முன் விளக்கை போடுங்கள் ஆனால், உயர் ஒளி கற்றையை (high beam) பாய்ச்சாதீர்கள். உயர் ஒளி கற்றையை புகாரில் செலுத்தும்போது நீங்கள் வெளியே தெளிவாக பார்ப்பது இன்னும் கடினமாகும்.

 7. சன நெருக்கம் மிகுந்த நகர் பகுதியில் திருப்பங்களை மேற்கொள்வது உங்களுக்கு சற்று கடினமாகவும், குழப்பமாகவும் விளங்கலாம். குறிப்பிட்ட ஒரு சந்தியில் சட்டரீதியாக திருப்பத்தை மேற்கொள்வது பற்றி தெளிவும், பாதுகாப்பும் இல்லை என்றால் திருப்பத்தை செய்யாதீர்கள்.

 8. இடது பக்க திருப்பத்தை மேற்கொள்வதற்கு என பிரத்தியேக ஒழுங்கை காணப்படாதபோது அந்நிலையில் நீங்கள் இடதுபக்க திருப்பத்திற்காக சந்தியில் காத்து நிற்கும்போது, உங்களிற்கு பின்னால் அவசரகால வாகனம் வந்தால் சந்தியை ஊடறுத்து நேரே சென்று ஓரமாக நிறுத்தி அவசரகால வாகனத்துக்கு வழிவிடுங்கள்.

  1. தமிழரசு

   தமிழரசு

   இங்கு ரைட்டு ஹான்ட் லெப்ட் ஹான்ட்டு என்று மாறுபட்ட சாலை விதி உள்ள நாடுகள் உள்ளது ஆகையால் இது எந்த எந்த நாட்டு சாலை விதி என்பதினை குறிப்ப்டவேண்டும் யாழில் எல்லா நாட்டு வாசகர்களும் இருக்கின்றார்கள் என்பதினை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

  2. போக்குவரத்து

   போக்குவரத்து

   நாம் வழங்கும் குறிப்புக்கள் வட அமெரிக்காவை மையப்படுத்தியவை. வேறு நாட்டு சாரதிகள் தமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். ஆனால், பொதுவான விடயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை. நன்றி

 9. விபத்துக்கள் ஏற்படும்போது உங்கள் கழுத்துப்பகுதியின் பாதிப்பை இயலுமான அளவு குறைப்பதற்கு (whiplash) உங்கள் கழுத்தை இருக்கையில் சாய்க்கும்போது அது இருக்கையின் மேற்பகுதியுடன் சரியாக பொருந்தும் வகையில் இருக்கையின் மேற்பகுதி சரிசெய்யப்படவேண்டும் (Adjust your Head Rest).

 10. வாகனத்தை தரிக்கும்போதும் (parking), தரிப்பில் இருந்து வெளியே எடுக்கும்போதும் பக்கப்புற, பின்பார்வை கண்ணாடிகளின் உதவியுடனும், தோள்பட்டை மேலாகவும் திரும்பி 360° இல் சுற்றி பார்த்தல் வேண்டும். அவதானம் இன்மையால் தரிப்பிடங்களில் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகிறது.

 11. மற்றைய சாரதிகளோ அல்லது பயணிகளோ தருகின்ற அழுத்தம் காரணமாக அவர்களின் அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நீங்கள் பாதுகாப்பற்ற வகையில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓடுவது ஆபத்தானது.

 12. உங்கள் வாகனத்தின் வேகம் அதிகரிக்கும்போது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தேவையான தூரமும் அதிகரிக்கும். உங்களால் வெளியே தெளிவாக பார்க்ககூடிய அளவு வேகத்தையும் மேவி அதற்கு மேலான வேகத்தில் வாகனத்தை நீங்கள் ஓடுவது ஆபத்தானது.

 13. போக்குவரத்து சட்டவிதியின் பிரகாரம் தெருவில் வருகின்ற அவசர கால வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவை வரும்போது அவற்றின் பாதையிலிருந்து விலத்தி உங்கள் வாகனத்தை ஓரமாய் கொண்டு செல்ல வேண்டும்.

 14. வாகனத்தின் எஞ்சினை போட்டதும், வாகனம் ஓடும்போதும் இடையிடையே யன்னல்களை சிறிது நேரம் திறவுங்கள். CO வாயுவினால் உங்கள் உடநலம் பாதிப்பு அடைவதை இது தடுக்கும். தொடர்ச்சியாக வெளி காற்றோட்டம் இல்லாத வாகனத்தினுள் பயணிப்பது உடல்நலத்துக்கு கேடு.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.