Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  533
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by போக்குவரத்து

 1. நீங்கள் திருப்பங்களை மேற்கொள்ளும்போது மிக முன்னதாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ சிக்னலை போடாமல் சரியான வேளையில் சிக்கனை போடுங்கள். நீங்கள் போடும் சிக்னல் போக்குவரத்து சீராக தொடர்வதற்கும், விபத்துக்கள் தவிர்க்கப்படுவதற்கும் உதவும். அதேவேளை, தேவையில்லாமல் சிக்னல் போட்டால் விபத்து ஏற்படலாம் (உ+ம்: திரும்புவதாக போட்டுவிட்டு திரும்பாமல் நேரே போவது).

 2. தொடர்ச்சி............. கேள்வி 01 போன்றதே "எனக்கு எத்தனை வகுப்புக்கள் தேவைப்படும்?", "நான் எப்போது வீதி பரீட்சைக்கு செல்லலாம்?" ஆகிய வினாக்களும் ஆகும். ஒருவரை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடும்போது அவரது ஆற்றல்களை நாம் மதிப்பீடு செய்யாதவரை தொலைபேசி ஊடாய் இவ்வாறான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது. கேள்வி 02: உங்களிடம் சாரதி கற்கைநெறி சான்றிதழ் (Certificate) எடுக்கலாமா? / என்ன விலை? முழுமையான பயிற்சி நெறியில் இணைந்தவர்களுக்கு பயிற்சி நெறியை முழுமையாக பூர்த்தி செய்ததும் (MTO approved BDE Course - Beginner Driver Education Course) சாரதி பயிற்சி கல்லூரிகள் மூலம் முன்பு சான்றிதழ் வழங்கப்பட்
 3. ஒரு வாகனம் பாதசாரிகள் கடவையில் நிறுத்தப்பட்டு காணப்படும் போது அந்த வாகனத்தை முந்துவதற்கு/கடப்பதற்கு முனையாதீர்கள். அந்நிலையில் முந்துவது பாதுகாப்பற்றதும், சட்டவிரோதமானதும் ஆகும். குறிப்பிட்ட வாகனம் பாதசாரியை கடக்கவிடுவதற்கு நிறுத்தி நிற்ககூடும்.

 4. அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது. வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது. சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற
 5. வெளிச்சம் குறைவான, இரவு நேரங்களில் உங்கள் வாகனத்தின் அருகாக நகர்கின்ற பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் பற்றி அதிக எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிடின் அவதானமின்மை விபத்தினை ஏற்படுத்தும்.

 6. வெள்ள நீரை ஊடறுத்து வாகனம் ஓடவேண்டி வந்தால், அதன் நீரின் ஆழம் தெரியாமல் தொடர்ந்து ஓட முயற்சிக்காதீர்கள். ஆழம் குறைந்த நீரோட்டம் என்றால் சீரான, மெதுவான வேகத்தில் செல்லுங்கள்.

 7. பலமான காற்று உங்கள் வாகனத்தை தள்ளி பாதையை விலத்தி ஓட வைக்கும். பலமான காற்று வீசும் போது வாகனம் போகவேண்டிய திசையில் ஸ்ரியரிங்கை இறுக்கிப்பிடியுங்கள், மற்றைய வாகானங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி விடுங்கள், மெதுவாக ஓடுங்கள்.

 8. மோசமான காலநிலையின்போது வாகனம் ஓடி காலநிலை காரணமாக தெருவில் விபத்து ஏற்பட்டால் காப்புறுதி நிறுவனங்கள் அதை உங்கள் தவறாகவே பார்ப்பார்கள். மோசமான காலநிலை நிலவும்போது வாகனம் ஓடுவது தவிர்க்கப்படவேண்டிய ஒரு விடயம்.

 9. சடுதியாய் பிரேக் அடிப்பது, சடுதியாய் வேகத்தை கூட்டுவது எரிபொருள் பாவனையை அதிகரிக்கும். சீராக நேர்த்தியாக வாகனம் ஓடும் போது எரிபொருள் வீணாகாது.

 10. தொடர்ச்சியான கற்றல், முன்கூட்டிய திட்டமிடல், எதிர்வு கூறுதல், Common Sense ஐ பாவித்தல், விரைவாக முடிவுகளை எடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு சாரதி பாதுகாப்பான சவாரியை மேற்கொள்வதற்கு இன்றியமையாதது.

 11. உங்கள் வாகனத்தின் முன்விளக்குகள் (headlights) நேர்த்தியாக (Properly aligned) ஒளியை பாய்ச்சுவது முக்கியம் ஆகும். இல்லாவிட்டால் உங்களால் இரவில் தெளிவாக பார்க்க முடியாது, உங்கள் எதிரில் வரும் வாகன சாரதிகளுக்கும் உங்கள் வாகனத்தின் முன்விளக்குகள் இடைஞ்சலை ஏற்படுத்தும்.

 12. பாதுகாப்பானதும், அவதானமானதுமான வாகனம் ஓட்டும் முறை எரிபொருள் வீணாகுவதை தடுப்பதோடு, உங்கள் வாகனம் நல்ல நிலையில் பேணப்படுவதற்கும் உதவுகிறது.

 13. அசுத்தமான கண்ணாடி தெளிவின்மையை ஏற்படுத்துகிறது. வாகனத்தை நகர்த்தமுன்பே கண்ணாடியை சுத்தம் செய்யுங்கள்.

 14. உங்கள் வாகனத்தை பின்பக்கத்தால் வேறு வாகனங்கள் வந்து இடித்து விபத்து ஏற்பட்டால் உங்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புக்களை இயலுமானவரை குறைப்பதற்கு உங்கள் சாரதி இருக்கையை சரிப்படுத்துங்கள்.

 15. நீங்கள் வாகனத்தை அவதானத்துடனும், பாதுகாப்பாகவும் ஓடுகின்ற ஆற்றலை உங்கள் உணர்ச்சிகள் பாதிக்கின்றன. வாகனம் ஓடும்போது உணர்ச்சிவசப்படுவது விபத்துக்களை ஏற்படுத்தலாம்.

 16. வெறும் வயிற்றுடன் மதுபானம் பருகும்போது போதை விரைவாக இரத்தத்தில் கலக்கிறது. இப்படியான நிலையில் வாகனம் ஓடவேண்டிய தேவை வரும்போது இதற்குப் பரிகாரமாக கோப்பி குடித்துவிட்டு வாகனத்தை ஓடலாம் என்று நினைப்பது தவறு.

 17. ஒழுங்கை மாற்றம் செய்யமுன், வாகனத்தை நகர்த்தமுன், உடனடியாக வாகனத்தை இழுத்து கரையாக நிறுத்த முன், கண்ணாடியை (rear) பாருங்கள். உங்கள் தோள்களுக்கு மேலாக blind spotஐ கவனியுங்கள்.

 18. நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு தாமதம் ஏற்பட்டு விட்டாலும் பதற்றம் அடையாது அவதானத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள். அவசரப்பட்டு ஓடுவது விபத்துக்களில் சென்று முடியலாம். முறைகேடாக ஓடியதற்காக காவல்துறையிடம் பிடிபடவேண்டியும் வரலாம்.

 19. Thanksgiving நீண்ட வார விடுமுறையில் அவதானமாக வாகனம் ஓடுங்கள். மதுபானம் பருகினால் வாகனம் ஓடாதீர்கள். காவல்துறையின் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

 20. சூழலின் வெப்பநிலை மாற்றங்கள் வீதி நிலமையை பாதிக்கிறது. நீங்கள் பாளங்கள் (overpasses & bridges) மேலாக வாகனத்தை ஓடும் போது மிக அவதானமாக ஓடுங்கள். அதில் மெதுவாக ஓடுங்கள், இறுக்கமாக பிரேக் பிடிக்காதீர்கள்.

  1. தமிழ் சிறி

   தமிழ் சிறி

   நன்றாக காய்ந்துள்ள‌ வீதியில்... திடீரென்று மழை பெய்யும் போது, அதில் ஓடிய வாகன ரயர்களின் நுண்ணிய றப்பர் துகள்கள், மழை நீருடன் கலந்து... வழுக்கச் செய்யும். அந்நேரம் மெதுவாக ஓட வேண்டும்.

  2. போக்குவரத்து
  3. போக்குவரத்து

   போக்குவரத்து

   முன்னால் போகின்ற வாகனத்துக்கும் உங்கள் வாகனத்துக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளி விடுவதும் முக்கியம்.

 21. எவராவது வாகன சாரதி உங்கள் வாகனத்தை ஆத்திரத்துடன் தொடர்ந்தால் சன நடமாட்டம் அதிகம் உள்ள வாகன தரிப்பிடம் அல்லது காவல்துறை நிலையம் நோக்கி உங்கள் வாகனத்தை செலுத்தி வாகனத்தை அங்கு நிறுத்துங்கள்.

 22. உங்களுக்கு வயது கூடிகொண்டு போகும் போது பார்வையின் கூர்மை குறைந்து செல்கிறது. நீங்கள் வாகனம் ஓடுவதாயின் உங்கள் பார்வை புலன் சரியாக தொழிற்படுவதை உறுதி செய்யுங்கள்.

 23. வாகனம் ஓடும் போது வழுக்கி சென்றால் (skid) பதற்றப்படாது gas pedal இல் இருந்து உடனடியாக காலை எடுத்து ஸ்ரியரிங்கை நீங்கள் போகவேண்டிய பக்கமாக வாகனம் சமநிலைக்கு வரக்கூடியவகையில் பிடியுங்கள்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.