Everything posted by போக்குவரத்து
-
Highway Traffic Act (HTA) என்றால் என்ன? (ONTARIO)
1-இது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து சம்மந்தமான யாப்பு அமைப்பு ஆகும். 2-இதில் ஒன்றாரியோவில் மாகாண ரீதியாக எல்லா வகையான தெருக்களிலும் ஓடப்படும் எல்லா வகையான வாகனங்களின் பாவனையும் உள்ளடக்கப்படுகின்றது: கார், trucks, motorcycle, off-road vehicles, farm equipment, construction equipment, பேருந்து, motor home vehicles, and non-motorized bikes. 3-வாகனங்களை பதிவு செய்தல்/ சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல், போக்குவரத்து குற்றச் செயல்களை வகைப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகள், வாகனங்களை வகைப்படுத்துதல், இதர போக்குவரத்து சம்மந்தமான விடயங்கள் இதில் அடங்குகின்றன. 4-முதன் முதலாக 1923ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின்னர் காலத்திற்கு காலம் மாற்றங்கள் பெற்று வருகின்றது. 5-வாகனங்கள் ஓடும்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாத பல்வேறு விடயங்களை, அறிவுறுத்தல்களை இந்த யாப்பு அமைப்பு வழங்குகின்றது. 6-காவல்துறையினர் உங்களுக்கு ரிக்கட் தரும்போது/குற்றம் சாட்டும்போது இந்த யாப்பு அமைப்பின் அறிவுறுத்தல்களிற்கு இணங்கவே/ வழிகாட்டலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள். ஒரு உதாரணம்: HTAஇல் EQUIPMENT சம்மந்தமான பகுதி 6: சரத்து 61. (1)இல் வாகனத்தின் விளக்குகள் சம்மந்தமாக இவ்வாறு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது: Lamps required on all motor vehicles except motorcycles When on a highway at any time from one-half hour before sunset to one-half hour after sunrise and at any other time when, due to insufficient light or unfavourable atmospheric conditions, persons and vehicles on the highway are not clearly discernible at a distance of 150 metres or less, every motor vehicle other than a motorcycle shall carry three lighted lamps in a conspicuous position, one on each side of the front of the vehicle which shall display a white or amber light only, and one on the rear of the vehicle which shall display a red light only. R.S.O. 1990, c. H.8, s. 62 (1). ஆக்கம்: போக்குவரத்து http://cardriving.ca
-
வாகனசாரதியின் தவறு பதினொரு பேரின் உயிரை நேற்று முன்தினம் Ontarioஇல் குடித்தது.
- வாகனசாரதியின் தவறு பதினொரு பேரின் உயிரை நேற்று முன்தினம் Ontarioஇல் குடித்தது.
1-முழுமையான நிறுத்தம் செய்யவேண்டிய இடத்தில் (Stop Sign) வாகனத்தை முழுமையாக நிறுத்தம் செய்யவில்லை. 2-மற்றைய வாகனத்திற்கு முன்னுரிமை Right-of-Way கொடுக்கவில்லை. 3-சற்று பெரிய அளவிலான வாகனம் (15பேரை காவிச்செல்லக்கூடிய van) ஓடுவதற்கு கனடாவில் முறையாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று இருக்கவில்லை. விளைவு? பதினொரு பேர் நேற்று முன்தினம் தென்மேற்கு Ontarioஇல் பரிதாபகரமாக மரணம் அடைந்தார்கள். மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். அதில் சிலர் மிக அண்மையிலேயே கனடாவுக்கு வந்தார்கள். சரியான முறையில் வாகனம் ஓட்டிய மோதுப்பட்ட மற்றைய வாகனமான பார ஊர்தியின் சாரதி தனது பதினொராவது வருட திருமண நினைவுநாள் அன்று உயிர் இழந்துள்ளார். மேலுள்ள விடயங்களுடன் மோதிய குறிப்பிட்ட வகை பயணிகள் வாகனம் இலகுவில் குடைசாயக்கூடியது என்பதால் அமெரிக்காவிலும், கனடாவின் சில மாகாணங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. விபத்தின் தாக்கம் காரணமாக (impact) மோதுப்பட்ட பயணிகள் வாகனம் நாற்பது மீற்றர் தூரத்திற்கு இழுத்து எறியப்பட்டு நொருங்கியதாக சொல்லப்படுகின்றது. முறையாக கற்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று வாகனத்தை அவதானத்துடன் ஓடுவது உங்கள் உயிரை மட்டும் அல்ல மற்றவர்களினதும் உயிரையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் வையுங்கள். ஆக்கம் : போக்குவரத்து தகவல் : கனடா செய்திகள் http://CarDriving.Ca- சிறுவரின் பாதுகாப்பு இருக்கையை சரியான முறையில் உங்கள் வாகனத்தில் இணைப்பது எப்படி? (வீடியோ)
http://youtu.be/hMekdk5TlIM http://youtu.be/iqB8_RxY2Nc http://youtu.be/1mQO51sxEek ஆக்கம்: MTO- Ontarioஇல் சாரதி அனுமதி பத்திரம் பெறுவது சம்மந்தமான வீடியோக்கள்
http://youtu.be/OFWFylUkKgI http://youtu.be/WEx_9CkVXRw http://youtu.be/fbiL973vYAg http://youtu.be/sGBOIYz_Dqg ஆக்கம்: MTO- வீதி பரீட்சை பற்றிய சில உதவி குறிப்புக்கள்
வாகனம் ஓடுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் போது வீதி பரீட்சையில் சித்தி பெறுவது பலருக்கு மிகுந்த சிரமமாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விசயமாகவும் காணப்படுகின்றது. பலர் நான்கு, ஐந்து, எட்டு தடவைகளுக்கு மேல் பரீட்சையில் தோற்றியும் சித்தி பெற முடியாது சிரமப்படுகின்றனர். இது சம்மந்தமாக சில உதவி குறிப்புக்களை இங்கு தருகின்றோம். 1-வீதி பரீட்சையில் ஒரு போதும் அதிர்ஸ்டத்தின் அடிப்படையில் அல்லது முறைகேடுகள் செய்து சித்தி பெற நினைக்காதீர்கள். வாகனம் ஓடுவது என்பது உங்கள் அனுபவம்,ஆற்றல், திறமை, கவனம் என பல விடயங்களில் தங்கி உள்ளது. முறையாக ஓடத்தெரியாமல் சாரதி அனுமதி பத்திரம் பெறுவது எதிர் காலத்தில் நீங்கள் வீதி விபத்துக்களில் சிக்கி பல ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு வழி வகுக்கலாம். ஆகவே, முறையாக பயின்று, நன்றாக பயிற்சி செய்து உங்கள் அனுபவம், திறமை, ஆற்றல், கவனம் இவற்றின் அடிப்படையில் வீதி பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்யுங்கள். 2-எவ்வளவிற்கு எவ்வளவு நீங்கள் அதிகளவு பயிற்சி செய்கின்றீர்களோ அவ்வளவிற்கு நீங்கள் உங்கள் அனுபவத்தை பெருக்கி கொள்ள முடியும். வீதி பரீட்சைக்கு செல்ல முன்னர் இயலுமான அளவு பயிற்சியை, கிரமமாக (frequently) பெறுங்கள். வேகம்: தெருவிற்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள். பாடசாலை உள்ள இடத்தில் மேலதிக கவனம் தேவை. ஹைவேயில் நுழையும் போது அளவுக்கு அதிகமாக வேகத்தை கூட்டாதீர்கள். இடைவெளி: முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதியளவு இடைவெளி விடுங்கள். உள்ளூர் வீதிகளில் இரண்டு செக்கன்கள் இடைவெளி, ஹைவேயில் மூன்று செக்கன்கள் இடைவெளி ஆகக் குறைந்தது இருக்க வேண்டும். மோசமான காலநிலை நிலவும் போது மேலதிக இடைவெளி விட வேண்டும். முழுமையான நிறுத்தம்: சந்திகளில் வாகனத்தை நிறுத்தும் போது வெள்ளை கோட்டிற்கு பின்னால் நிறுத்தம் செய்ய வேண்டும். வெள்ளை கோட்டின் மீது ஏறக்கூடாது. நிறுத்தம் முழுமையானதாக வர வேண்டும். சில்லு சிறுதளவு கூட உருள கூடாது என்பது முக்கியம். stop, stop all-way ஆகியவற்றில் அண்ணளவாக மூன்று செக்கன்கள் முழுமையான நிறுத்தம் எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான நோட்டம் விடுதல்/scanning: சந்திகளை அடையும் போது சந்தியை முழுமையாக நோட்டம் இடுவது முக்கியம். இடது பக்கம், வலது பக்கம், நேரே, மீண்டும் இடது பக்கம் நோட்டம் இடுங்கள். பாதுகாப்பாக சந்தியை கடக்க முடியும் என்று கண்டறியும் போது கடவுங்கள். சிக்னல் இல்லாத சந்திகளில் பாதசாரிகளுக்கே முன்னுரிமை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பாதசாரிகள் எவராது நீங்கள் செல்லும் பாதையின் குறுக்காக கடக்க முயற்சித்தால் அல்லது கடந்தால் நீங்கள் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்கள் தோளின் மேலாக திரும்பி பார்த்தல் (shoulder check): சந்தியில் நீங்கள் திரும்பும் போதும், ஒழுங்கை மாற்றம் செய்யும் போதும் கண்ணாடியை பார்த்தல், சிக்னல் போடுதல், உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்த்தல் ஆகிய மூன்று விடயங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் செல்லும் அதே பாதையில் வரக்கூடிய சைக்கிளில் செல்பவர்கள், பாதசாரிகள், ஏனைய வீதி பாவனை செய்பவர்களை கண்டறிய இதை செய்ய வேண்டும். வலது பக்கமாக திரும்பும் போது மேலதிக அவதானம் தேவை. சீரான திருப்பம்: திருப்பத்தை மேற்கொள்ளும் போது முழுமையாக உங்கள் ஒழுங்கையினுள் வாகனத்தை வைத்து இருங்கள். உங்கள் வாகனத்தை ஒழுங்கையில் முறையான இடத்தில் பேணுங்கள். ஆகவும் அகலமான திருப்பத்தையோ அல்லது மிகவும் ஒடுக்கமான திருப்பமாகவோ செய்யாதீர்கள். திருப்பம் செய்யும் போது வேக கட்டுப்பாடு அவசியம். மிகவும் வேகமாக திருப்பத்தை செய்ய கூடாது. திருப்பம் செய்யும் போது பாதசாரிகளை கவனிக்க வேண்டும். பயிற்சி ஒன்றின் மூலம் மட்டுமே வாகனம் ஓட்டுவதில் தேர்ச்சி பெற முடியும். அது ஓரிரு நாளில் ஒரு இரவினுள் சாத்தியப்படும் விசயம் இல்லை. வெவ்வேறு காலநிலைகள், வெவ்வேறு வீதி நிலமைகள் ஆகிய சந்தர்ப்பங்களில் பயிற்சி பெறுங்கள். வீதி பரீட்சை: இதில் மூன்று பகுதிகள் உள்ளன. 1-பயணத்தின் முன்னாக சரி பார்த்தல்: வாகனத்தின் சிக்னல்களை போட்டு காட்டுதல், வாகனத்தின் விளக்கை போட்டு காட்டுதல், நிறுத்தம் செய்யும் பிரேக்கை (parking brake) சரி பார்த்தல். உங்கள் வாகனம் பாதுகாப்பாக ஓடப்பட முடியும் என உங்களை பரீட்சிப்பவரினால் உறுதி செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பரீட்சையை செய்ய முடியும். 2-பரீட்சிப்பவர் கூறும் உத்தரவுகளுக்கு அமைய நீங்கள் வாகனத்தை ஓடிக்காட்ட வேண்டும். வெவ்வேறு விதமான வீதிகள், வெவ்வேறு விதமான சந்திகள், வெவ்வேறு விதமான சிக்னல்கள், சைகைகள் உள்ள வீதிகள், வெவ்வேறு விதமான வேக கட்டுப்பாடு உள்ள வீதிகள் இவற்றின் ஊடாக பரீட்சிப்பவர் உங்களை செல்லுமாறு கூறுவார். பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களுக்கு சட்டவிரோதமான உத்தரவுகளை தர மாட்டார். பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களை பேக்காட்டி பரீட்சையில் சித்தி பெற முடியாதவாறு செய்ய மாட்டார். அவர் ஒரு சந்தியில் வலது அல்லது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் முன்கூட்டியே உங்களுக்கு உத்தரவு தருவார். அவர் ஏதும் கூறாவிட்டால் நீங்கள் வீதியின் வழியே அது போகும் பாதையிலேயே ஓடுங்கள். 3-பின்னூட்டம் பெறுதல்: பரீட்சையின் முடிவில் பரீட்சிப்பவர் நீங்கள் வாகனம் ஓடும் போது எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். நீங்கள் பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிட்டு சொல்வார். குறிப்பு: கனடா அல்லாத வேறு நாடுகளில் உள்ளவர்கள் வலது, இடது ஆகிய பக்கங்களை உங்கள் நாட்டு வீதி அமைப்பு முறையுக்கு ஏற்ப இங்கு புரிந்து கொள்ளுங்கள். ஆக்கம்: போக்குவரத்து http://CarDriving.Ca மேலதிக உதவி குறிப்புக்கள் கீழே பின்னர் தரப்படும்.- வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
விபத்து என்பது எதிர்பாராமல் ஏற்படுகிறது. நீங்கள் சிறந்த சாரதியானாலும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராமல் விபத்து ஏற்படலாம். ஆகையினால் எதிர் காலத்தில் விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான விடயங்களை முன் கூட்டியே திட்டம் இட்டு வையுங்கள். அது எதிர் காலத்தில் தற்செயலாக விபத்து ஏற்படும் சமயத்தில் இலகுவாக பாதகமான விளைவுகளை சமாளிப்பதற்கு உதவும்.- வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
மேலும் சில குறிப்புக்கள்.. 1-வாகனத்தின் சேதம் சிறிதாக தோன்றக்கூடும். ஆனால் திருத்தம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லும் போதே உண்மையான சேதம் அதிகம் என்பதை நீங்கள் உணரக்கூடும். எனவே, உங்களில் பிழை இல்லாமல் மற்றைய சாரதியில் பிழை என கருதி இருவரும் சமரசம் செய்தால் வாகனம் திருத்தும் செய்யும் நிலையத்தின் தகவலை கவனத்தில் எடுத்து கொண்டு செயற்படுங்கள். 2-விபத்து நடைபெற்றதும் சேதத்திற்கான இழப்பீடு சம்மந்தமாக சமரசம் செய்யும் சாரதி நீங்கள் முறைப்பாட்டு நிலையத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சென்று முறைப்பாடு செய்யாவிட்டால் உங்களை வாக்குறுதி அளித்தபடி இல்லாமல் ஏமாற்றவும் கூடும். எனவே அவதானத்துடன் செயற்பட வேண்டும். 3-உங்கள் கைத்தொலைபேசி, கமரா மூலம் தேவையான விபரங்களை படங்களாகவும், வீடியோவாகவும் எடுங்கள். 4-ஒரு போதும் மற்றைய சாரதி வாய் மூலம் கூறுவதை நம்பாதீர்கள். அவரது லைசன்ஸ், காப்புறுதி விபரம், வாகன உரிமை விபரம் போன்றவற்றை நேரடியாக வாசித்து பார்த்து குறிப்பு எடுங்கள். சந்தேகம் தோன்றினால் காவல்துறையின் உதவியை நாடுவதற்கு தயங்காதீர்கள். நீங்கள் சமரசம் செய்தாலும் காப்புறுதி, லைசன்ஸ்,வாகன உரிமை பத்திரம்,தகடு இலக்கத்தை/விபரங்களை நேரடியாக பார்த்து பதிவு எடுங்கள். படமாகவும் எடுக்கலாம்.- வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
(Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு) தொடர்ச்சி.. Collision Reporting Centre சம்மந்தமான சில தகவல்கள்: 1-இழுக்கப்படும் சேதம் அடைந்த வாகனம் முதலாவதாக நேராக இங்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 2-இங்கு சேவை இலவசம். 3-பொதுவாக 1000 டாலரிற்கு மேல் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் இங்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டும். 4-விபத்து ஏற்பட்டு 24 மணி நேரங்களுக்குள் இங்கு முறைப்பாடு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் காப்புறுதி நிறுவனத்திற்கு இழப்பீட்டிற்காக செல்ல முடியாது. 5-விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மிக அண்மையாக உள்ள முறைப்பாட்டு நிலையத்துக்கு செல்லுங்கள்.- வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
(Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு) 1-Ambulance, Fire Services அழைக்கப்படும் போது அங்கு சிறிய கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த சேவைகள் இலவசம் இல்லை. 2-Tow பண்ணும் போது நீங்கள் உங்கள் வாகனத்தை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறாவிட்டால் அவர்கள் தமக்கு வருமானம் கிடைக்கும் திருத்த சாலைகளிற்கு இழுத்து செல்வார்கள். அந்த வாகன திருத்த சாலைகள் விலை/திருத்தம் செய்வதற்கான கூலி அதிகமானவையாக இருக்கலாம். 2-Tow செய்யும் போது உங்கள் வாகனம் அதிக தூரம் இழுத்து செல்லப்பட்டால் அதற்கு அதிக கட்டணம் அறவிடப்படும். எனவே, இழுக்கப்படும் முன்பே எங்கு வாகனம் திருத்தம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கலந்து பேசி தீர்மானியுங்கள். 3-உங்கள் வானகத்திற்கு1000 டாலருக்கு மேல் இழப்பு/சேதம் என அறிந்தால் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. 4-உங்களில் பிழை காணப்படா விட்டாலும் நீங்கள் காப்புறுதி நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு சென்றால் உங்கள் வானகத்திற்கான காப்புறுதி கட்டணம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காப்புறுதி நிறுவனங்கள் உங்கள் வானகத்திற்கான காப்புறுதி கட்டணத்தை நிர்ணயிக்கும் போது கடந்த காலத்தில் நீங்கள் விபத்தில் சம்மந்தப்பட்டு இருந்தால் அந்த விபத்து எவரது பிழை என்று பார்ப்பது இல்லை. மாறாக எத்தனை தடவைகள் நீங்கள் இழப்பீடு பெற்று இருக்கின்றீர்கள் என்றே பார்ப்பார்கள். எனவே உங்கள் தவறினால விபத்து ஏற்படாவிட்டாலும் நீங்கள் காப்புறுதி நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு சென்றால் எதிர்காலத்தில் உங்கள் வாகன காப்புறுதி கட்டணம் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.- வாகன விபத்து பற்றி தெரிய வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
பதற்றம் அடையாதீர்கள்: 1-காயப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். 2-விபத்தில் எவராவது காயம் அடைந்தால் அல்லது வாகனத்திற்கு அதிக சேதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு (மாநகரசபை/மாகாண) அறிவியுங்கள். 3-ஒருவருக்கும் காயம் ஏதும் ஏற்படாவிட்டால், வாகனமும் ஓடக்கூடிய நிலையில் காணப்பட்டால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்தாது வாகனத்தை அவதானத்துடன் வீதி ஓரமாக நகர்த்துங்கள். 4-விபத்திற்கான காரணம் மதுபோதை/போதைப்பொருள்/குற்றச் செயல் என சந்தேகம் கொண்டால் உடனடியாக காவல்துறைக்கு அறிவியுங்கள். விபரத்தை திரட்டுங்கள்: 1-சாட்சிகள்: பெயர்/முகவரி/தொலைபேசி இல./வாகன தகடு இல. காவல்துறை அதிகாரி பெயர்/badge இல. 2-வாகனம்: சாரதி பெயர்/வயது/முகவரி/தொலைபேசி இல./வாகன தகடு இல./வாகனம் model/வாகனம் தயாரிப்பு வருடம்/மாகாணம்/உரிமையாளர் பெயர்/உரிமையாளர் முகவரி/காப்புறுதி நிறுவனம்/காப்புறுதி இல./காப்புறுதி முகவர் 3-காயமடைந்தோர்: பெயர்/முகவரி/காயம் விபரம்/வயது/பால்/சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் இடம் 4-வாகன சேதம்: சம்பவம் நடைபெற்ற இடம்/திகதி/நேரம்/தெரு விபரம்/நீங்கள் வாகனம் ஓடிய வேகம்/மற்றைய சாரதி அல்லது சாரதிகள் வாகனம் ஓடிய வேகம்./உங்கள் வாகனத்தின் சேத விபரம்/மற்றைய வாகனத்தின் அல்லது வாகனங்களின் சேத விபரம் 5-விளக்க படம் வரையுங்கள்: சம்மந்தப்பட்ட தெருக்களின் பெயர்/சிக்னல்,sign விபரங்கள்/இடம்/Directions/சம்மந்தப்பட்ட objects (வாகனங்கள்/பாதசாரிகள்/post/wall/மரங்கள்/பிராணிகள்/விலங்குகள்) 6-விரிவான விபரம்: வீதி: நேர் பாதை/வளைவான வீதி/மட்டமான வீதி/ஏற்றம் இறக்கம் உள்ள வீதி/திருத்த வேலைகள் நடைபெறுதல் வீதியின் பரப்பு: ஈரம்/உலர்ந்தது/சகதியானது/பனி கொட்டியது/வழுக்குவது வீதி குறைபாடுகள் : வீதி ஓரமாக குறைபாடுகள்/ஓட்டைகள்/குழிகள்/மேடுகள்/மேற்பரப்பு கடினம் இல்லாமல் இருத்தல்/வீதி மீது அசையக்கூடிய பொருட்கள்(கற்கள்/தகரம்/கண்ணாடி துண்டுகள்) போக்குவரத்து கட்டுப்பாடு: stop sign/stop light/கட்டுப்பாட்டு அலுவலர்/கொடி காட்டுபவர்/எதுவித வீதி கட்டுபாடும் இல்லை வெளிச்சம்: காலை நேரம்/புழுதி/மாலை நேரம்/இருள்/வீதி விளக்குகள் உள்ளது/வீதி விளக்குகள் இல்லாதது காலநிலை: மழை/பனி/புகார்/தெளிவான காலநிலை 7-வாகனம் ஓடப்பட்ட முறை:நீங்கள்/மற்றைய சாரதி அல்லது சாரதிகள் மதுபோதை/போதை பொருட்கள்/இதர மருந்து வகைகள் பாவித்து இருந்தமை: ஆம்/இல்லை வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும் அதிக வேகத்தில் ஓடியமை: ஆம்/இல்லை வாகனத்திற்கு முன்னுரிமை/right of way கொடுக்கவில்லை: ஆம்/இல்லை பாதசாரிகளுக்கு முன்னுரிமை/right of way கொடுக்கவில்லை: ஆம்/இல்லை மற்றைய வாகனத்தின் பின்னால் மிக அருகாக தொடர்ந்து சென்றமை: ஆம்/இல்லை தவறான முறையில் ஒழுங்கை மாற்றம் செய்தமை: ஆம்/இல்லை தவறான வழியில் வந்தமை (wrong side of the road): ஆம்/இல்லை வாகனத்தில் தேவையான சிக்னலை போடாமை: ஆம்/இல்லை தவறான திருப்பம்: ஆம்/இல்லை நிறுத்துவதற்கான சிக்னலிற்கு (stop light) நிற்காமை: ஆம்/இல்லை நிறுத்துவதற்கான சைகையுக்கு (stop sign) நிற்காமை: ஆம்/இல்லை ஏனைய ஏதாவது போக்குவரத்து கட்டுபாட்டுக்கு இசையாமை: ஆம்/இல்லை நிறுத்தம் செய்யப்பட்ட வாகனத்தை தவறான வகையில் ஓட ஆரம்பித்தமை: ஆம்/இல்லை தவறான முறையில்/இடத்தில் நிறுத்தம் செய்தமை: ஆம்/இல்லை கண்ணாடி அணிந்திருக்கவில்லை: ஆம்/இல்லை சரியான முறையில் வாகனம் ஓடியமை: ஆம்/இல்லை தமிழ் ஆக்கம்: போக்குவரத்து Http://CarDriving.Ca உதவி: DaimlerChrysler Canada கையேடு- வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்
பாதசாரிகள்,வாகனங்கள் சம்மந்தமான படங்கள் சில:- வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்
பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டும் போதும் ஏன் நீங்கள் மேலதிகமாக சுற்று புறம் பார்த்து கவனம் எடுக்க வேண்டும்? ஏன் என்றால், வாகனத்தை ஓடுபவர் அனுபவம் அற்ற புதிய சாரதியாக இருக்கலாம். வாகனத்தை ஓடுபவர் மது போதையில் இருக்கலாம். வாகனத்தை ஓடுபவர் குற்ற செயலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம். வானத்தை ஓடுபவர் சுகவீனம் அடைந்து இருக்கலாம். மோசமான வீதி நிலமைகள், மோசமான weather ஆக இருக்கலாம். சிக்னலில் தவறுகள் ஏற்படலாம். தெளிவாக பார்ப்பதற்கு இருள்/போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம். இவை போன்றன. இப்படியான சூழ்நிலைக்கு தமிழிலும் ஒரு அழகான பழமொழி உண்டு : நம்ப நட, நம்பி நடவாதே!- வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்
வீதியின் குறுக்காக வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுக்க மேலே தொங்குகின்ற மஞ்சள் நிறமான பாதசாரி சிக்னலை பாவிக்கும் போது, நீங்கள் கடப்பதற்கான பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் நிறமாக விட்டு விட்டு சிக்னல் எரிவதை ( flashing ) உறுதி செய்து கொண்டு கடவுங்கள்.- வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்
வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் : 1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள். 2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள். 3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வீதியை கடப்பதை அவதானிக்கலாம், அவதானிக்காமலும் விடலாம். எனவே, நீங்கள் வீதியின் குறுக்காக நடக்கும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை கவனித்துள்ளதை உறுதி செய்யுங்கள். 4-வீதியை கடப்பதற்கு உங்களுக்கு உரிய சிக்னல் காட்டப்படும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை நோக்கி தொடர்ந்து வந்தால் அவதானமாக செயற்படுங்கள். 5-நீங்கள் வீதியை கடக்கும் போது இடது, வலது புறமாக அல்லது நேராக வரும் வாகனங்கள் ஏதாவது அவதானம் இல்லாமல் செயற்பட்டால், சட்ட விரோதமாக ஓடினால் அவற்றின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வையுங்கள். தேவை ஏற்படின் காவல் துறைக்கு அந்த இலக்கத்தை அறிவியுங்கள் (சம்பவம் நடந்த இடம், நேரம், வாகனத்தின் நிறம், model, சாரதியின் தோற்றம் இவற்றையும் குறித்து வைக்க வேண்டும், அருகில் யாராவது சாட்சி/witness கிடைத்தால் அவர்கள் விபரமும்) 6-நீங்கள் வீதியை பாதுகாப்பாக கடப்பதற்கான சிக்னல் காட்டப்படும் போது குறிப்பிட்ட ஒரு வாகனம் உங்களை நோக்கி தொடர்ந்து வரும் என சந்தேகம் தோன்றினால் அந்த வாகனத்தின் சாரதியுடன் eye contact செய்வது முக்கியம், அத்துடன் நீங்கள் வீதியை கடக்கும் வரை நகராது நிற்குமாறு கைகளை உயர்த்தி காட்டலாம். 7-ஒரு போதும் வாகனத்தின் சாரதிகளுடன் வீதியை கடக்கும் போது வாய் தகராற்றில் ஈடுபடாதீர்கள். ஏதாவது வாகனம் சட்ட விரோதமாக ஓடி உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட வாகனத்தின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வைத்து அதை காவல் துறைக்கு அறிவியுங்கள். 8-அளவில் பெரிய ஊர்திகள் ( உ+ம் Truck ) உங்கள் அருகாக நிற்கும் போது அல்லது திரும்பும் போது மிக அவதானமாக செயற்படுங்கள். 9-பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டப்படும் போது தனியாக இல்லாமல் ஏனைய பாதசாரிகளுடன் குழுவாக வீதியை கடக்க நேர்ந்தால் நெரிசல் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏதும் வராத வகையில் பார்த்து கொள்ளுங்கள். 10-வயோதிபர்கள், குழந்தைகளை உங்களுடன் அழைத்து கொண்டு வீதியை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் ஓடாதபடி பார்த்து கொள்ளுங்கள். பாதசாரிகளுக்கான சிக்னனில் போதிய கால அவகாசம் காட்டப்படும் போது மட்டுமே கடவுங்கள். 11-மிகவும் அகன்ற பல அடுக்கு ஒழுங்கைகள் ஊடாக கடக்கும் போது விரைவாக நடக்காவிட்டால் வீதியை முழுவதுமாக கடக்க நேர அவகாசம் போதாமல் வரலாம். 12-ஏற்றங்கள், இறக்கங்கள், வளைவுகள் உள்ள வீதிகளை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். சிக்னல் இல்லாத சந்தியாக காணப்பட்டால் ( ) வாகனங்களின் சாரதிகள் நீங்கள் கடப்பதை கண்டுள்ளதை ( eye contact with the driver ) உறுதிப்படுத்துவது உங்களுக்கு பாதுகாப்பானது. படங்கள் ( MTO web ) ஆக்கம் : போக்குவரத்து http://CarDriving.Ca- சந்தியில் இடது புறமாக திரும்புதல் (Making Left Turn)
இரண்டு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: இரண்டு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: ஒரு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: ஒரு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல் படங்கள், தகவல்கள் : ( MTO web )- சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
சமாந்தரமாக நிறுத்தம் செய்தல் (வலது பக்கமாக) : பிரிதொரு முறை சுருக்கமாக சுற்றிலுமாக 360 கோணத்தில் பார்க்கவும். உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்க்கவும். உங்கள் வாகனத்தின் அரை வாசி பகுதி (உங்கள் shoulder) நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் பகுதிக்கு சமாந்தரமாக நிற்கும் போது steering wheel ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும். மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும். உங்கள் வாகனத்தின் முன் வலது பகுதி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் இடது பகுதிக்கு நேராக நிற்கும் போது steering wheel ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும். தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும். முழுவதுமாக பின்னால் வந்ததும் வாகனத்தின் steering wheel ஐ நேராக்கவும். நிறுத்தம் செய்யும் கியருக்கு மாற்றவும். வாகனத்தின் கதவை திறந்து வெளியேறுவதற்கு முன்பாக வேறு வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.- சந்தியில் இடது புறமாக திரும்புதல் (Making Left Turn)
Light சிக்னல் இல்லாத சந்திகளில் எப்படி இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வது என பின்பு கூறப்படும்.- சந்தியில் இடது புறமாக திரும்புதல் (Making Left Turn)
சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்: 1-இடது பக்கதிற்கு என தனியாக Light சிக்னல் காணப்பட்டால் நீங்கள் அந்த பிரத்தியேக சிக்னலில் பச்சை நிறம் அல்லது பச்சை அம்புக்குறி தோன்றும் போது மட்டுமே இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். நேராக செல்வதற்கான Light சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் அதேசமயம் இடது புறத்திற்கான பிரத்தியேக சிக்னலில் சிவப்பு நிறம் காட்டினால், எதிர் புறமாக வாகனங்கள் வராவிட்டாலும் நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்டால் அது சட்ட விரோதமானது ஆகும். 2-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலேயே பச்சை நிறமான அம்புக்குறி மூலம் இடது பக்கமாக திரும்புவதற்கு காட்டப்பட்டால் பச்சை நிற அம்புக்குறி தோன்றும் போது இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். 3-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலேயே பச்சை நிறமாக விட்டு விட்டு எரிந்தால் (Flashing) நீங்கள் பச்சை நிறமாக சிக்னல் விட்டு விட்டு எரியும் போது இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். 4-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலும் பச்சை அம்பு குறியோ அல்லது விட்டு விட்டு பச்சையாக எரியும் சிக்னலோ இல்லாவிட்டால் சிக்னலில் வழமையான பச்சை நிறம் தோன்றும் போது, எதிர் புறமாக வாகனம் எதுவும் உடனடியாக வராவிட்டால் நீங்கள் அவதானத்துடன் திருப்பத்தை மேற்கொள்ளலாம். 5-மேலே இலக்கம்4இல் கூறப்பட்டவாறு இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது ஒரு வாகனம் மட்டுமே சந்தியில் பாதசாரிகளின் எல்லைக்கோட்டினை தாண்டி சந்தியினுள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வதற்கு காத்திருக்க முடியும். உடனடியாக அதன் பின்னால் இரண்டாவது வாகனமாக சந்தியினுள் நீங்கள் இடது புறமாக திரும்புவதற்கு நிற்பது கூடாது. உங்களுக்கு முன்னால் அந்த வாகனம் இடது புறமாக திரும்புவதற்கு நின்றால் நீங்கள் பாதசாரிகள் கடக்கும் கடவை கோட்டின் பின்னாலேயே நிற்க வேண்டும். குறிப்பிட்ட வாகனம் இடது புறமாக திரும்பி சென்ற பின்னரே தொடர்ந்தும் பச்சை நிறம் காட்டினால் நீங்கள் சந்தியினுள் பாதசாரி கடவை கோட்டை தாண்டி முன்னே இடது புறமாக திரும்புவதற்கு நகர வேண்டும். 6-மேலே இலக்கம் 4,5 இல் கூறப்பட்டவாறு இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள முயலும் போது சிக்னல் பச்சை நிறமாக உள்ளபோது திருப்பத்தை மேற்கொள்ள முடியாமல் போய் பச்சை நிறம் மாறி அது செம்மஞ்சள் நிறமாக மாறினால் எதிர்ப்புறமாக வாகனம் எதுவும் வரவில்லை என்பதை அவதானமாக உறுதி செய்த பின்னரே நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். 7-பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கும், பல உயிர், உடல், பொருள் சேதங்கள் ஏற்படுவதற்கும் மேலே இலக்கம் 6 இல் கூறப்படும் வகையான திருப்பத்தில் பலர் "இப்போது பச்சை நிறம் செம்மஞ்சள் நிறமாக மாறுகிறது எனவே இப்போது நான் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள முடியும் எதுவித பிரச்சனையும் இல்லை" என நினைத்து செயற்படுவதே காரணம் ஆகும். பச்சை நிறம், செம்மஞ்சளாக மாறி, பின்னர் சிவப்பாக மாறிய பின்னரும் உங்கள் எதிர்ப்புறமாக ஒருவர் சட்டவிரோதமாக வரக்கூடும். அவர் மது போதையில் கூட வாகனம் ஓடக்கூடும். எனவே, எப்போதும் எதிர்ப்புறமாக ஒரு வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். 8-உங்களிற்கு மற்றைய வாகனத்தின் நகர்வு பற்றி அது என்ன செய்யப்போகிறது என்று தெரியாமல் சந்தேகம் தோன்றினால் அல்லது மற்றைய வாகனம் ஓடுபவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு சத்தமாக ஹோனை அடித்து எச்சரிக்கலாம்/கவனத்தை ஈர்க்கலாம். மற்றைய வாகன சாரதிகளுடன் eye contact மேற்கொள்வது/ஹோன் அடிப்பது பாதுகாப்பாக திரும்புவதற்கு உதவும். 9-நீங்கள் இடது புறமாக திரும்புவதற்கு சந்தியினுள் பாதசாரிகள் கடவையை தாண்டி முன்னே நிற்கும் போது பாதுகாப்பாக இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், சிக்னலும் சிவப்பாக மாறிவிட்டால் பதற்றம் அடையாது சத்தமாக ஹோனை அடித்து கொண்டு, சந்தியில் உள்ள மற்றைய வாகன சாரதிகளின் கவனத்தை எடுத்துக்கொண்டு இடது பக்கமாக திருப்பத்தை மேற் கொள்ளுங்கள். அதுவும் சாத்தியப்படாமல் அந்த நேரத்தில் இடது புறமாக திரும்ப முடியாதவாறு மற்றைய வாகனங்கள் நகரத்தொடங்கி விட்டால் உங்கள் வாகனத்தில் உள்ள Emergency Signal ஐ போட்டு விட்டு அந்த இடத்திலேயே நகராமல் நில்லுங்கள், மற்றைய வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுப்பதற்கு ஹோனையும் அடிக்கலாம். மீண்டும் சிக்னல்கள் மாறிய பின் வழமை போல் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளுங்கள். 10-இடது புறமாக நீங்கள் திரும்புவதற்கு சந்தியில் நிற்கும்போது எதிர்ப்புறமாக வரும் சில வாகனங்கள் வலது பக்கமாக திரும்புவதற்கு தமது வாகனத்தில் சிக்னலை போடக்கூடும். ஆனால் வலது புறமாக சிக்னலை அவை போட்டாலும் வலது புறமாக திரும்பி செல்லாமல் நேராகவே வந்து சந்தியை கடந்து செல்லவும் கூடும். எனவே எதிர்ப்புறமாக வரும் வாகனம் வலது பக்கமாக திரும்புவதற்கு சிக்னலை போட்டாலும் அது தொடர்ந்து உங்கள் எதிர்ப்புறமாக வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளுங்கள். 11-இடது புறமாக திரும்புவதற்கு என பிரத்தியேகமான ஒழுங்கை (Left Turn Lane) காணப்பட்டால் குறிப்பிட்ட ஒழுங்கையினுள் அவதானமாக பிரவேசித்து சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருப்பத்தை மேற்கொள்ளுங்கள். 12-நீங்கள் இடதுபுறமாக திருப்பத்தை மேற்கொண்டு புதிய ஒழுங்கையினுள் பிரவேசிக்கும் போது பாதசாரிகள், துவிச்சக்கர வண்டிகள் அந்த ஒழுங்கையை ஊடறுத்து நடந்து, நகர்ந்து செல்ல கூடும். பாதசாரிகள், துவிச்சக்கர வண்டிகள் கடக்கின்றார்களா என்பதை கவனித்து அவதானத்துடன் செயற்படுவது அவசியம் ஆகும். கீழே மாணவர்கள் இடது புறமாக திருப்பத்தை செய்கிறார்கள்: இடது புறமாக திரும்புவதற்கு பிரத்தியேக ஒழுங்கையினுள் காத்திருக்கும் மாணவன்: ஆக்கம்: போக்குவரத்து http://CarDriving.Ca- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
எழுதும் கருத்துகளிற்கு அருகில் உள்ள பகுதியில் Gender:Male இப்படி தெரிகிறது. அல்லது Not telling என்று காட்டுகிறது. இதை மறைப்பது எப்படி? சிலருக்கு மட்டும் Gender என ஒரு பகுதி தெரிய இல்லை. அவர்கள் எப்படி Gender தோன்றாத விதமாக மறைத்தார்கள் என கூற முடியுமா? எமக்கும் அப்படி செய்து தர முடியுமா? நன்றி- சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
முன் சில்லுகளை நேர் செய்வது இங்கு முக்கியம். ஸ்ரியரிங்கை பாவித்து முன் சில்லுகளை நேராக்குவதற்கு தெரிந்து வையுங்கள். முன்சில்லுகள் நேராக நிற்கும் போது, ஸ்ரியரிங்கை அசையாமல் பிடிக்கும் போது உங்கள் வாகனம் முன்னிற்கு அல்லது பின்னிற்கு நகர்ந்தால் அது நேர்கோட்டில் அசையும். பலர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கும் போது பிழை விடுவதற்கு ஆரம்பத்தில் முன் சில்லுகளை நேராக்காமல் ரிவர்ஸ் செய்வதும் காரணம் ஆகும்.- சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
(MTO web)- சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக: 1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள். 2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள். 3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக சுற்ற வேண்டும்). இனி தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யுங்கள். 4-உங்கள் வாகனத்தின் முன் கதவு மற்றைய வாகனத்தின் bumper க்கு அருகாக வரும்போது steering ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் வலது பக்கமாக சுற்ற வேண்டும்). தொடர்ந்து ரிவர்ஸ் செய்யுங்கள். 5-மற்றைய வாகனத்திற்கு பின்னால் முழுவதுமாக வந்த பின்னர் முன் சில்லுகளை மீண்டும் நேராக்குங்கள். 6- தவறு நிகழ்ந்தால் மீண்டும் படி ஒன்றில் தொடங்கி தொடருங்கள். வாகனத்தை நகர்த்தும் போது பாதசாரிகள், வேறு வாகனங்கள் வருகிறார்களா என்பதை அவதானியுங்கள். வந்தால் உங்கள் வாகனத்தை நிறுத்தி, கவனம் எடுத்து செயல்படுங்கள். 7-முன்னே செல்ல வேண்டுமானால் மீண்டும் கியரை மாற்றுவதற்கு மறவாதீர்கள். கீழே வேறு ஒரு வகையில் மாணவர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கிறார்: ஆக்கம்-போக்குவரத்து http://cardriving.ca- பெயர் மாற்றங்கள்.
CarDriving எனும் பெயரை போக்குவரத்து என்று மாற்றுவீர்களா? நன்றி. - வாகனசாரதியின் தவறு பதினொரு பேரின் உயிரை நேற்று முன்தினம் Ontarioஇல் குடித்தது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.