Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Status Updates posted by போக்குவரத்து

  1. அவதானத்துடன் கவனமாக நீங்கள் வாகனம் ஓடினால் அதனால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாகனத்தில் உள்ள பயணிகள், வீதியை பாவிக்கும் ஏனையோருக்கும் நன்மைகள் ஏற்படும்.

  2. கோடை காலத்திலேயே வீதி திருத்த வேலைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் மேலதிக அவதானத்துடன் வாகனத்தை ஓடுங்கள்.

  3. வெவ்வேறு வகையான வாகனங்களுக்கு வெவ்வேறு வகையான சாரதி அனுமதி பத்திரங்கள் உள்ளன. உங்கள் சாரதி அனுமதி பத்திரம் மூலம் அனுமதியுள்ள வாகனங்களை மட்டும் ஓடுங்கள்.

  4. மழைநீர் கிரீஸ், ஒயில் இவற்றுடன் கலப்பதால் வீதி மேற்பரப்பில் வாகனத்தின் ரயருடன் ஏற்படக்கூடிய உராய்வின் வீரியம் குறைகிறது, வாகனத்தை உடனடியாக நிறுத்தம் செய்ய முடியாமல் போகிறது. எனவே, மழைகாலங்களில் வாகனத்தை மெதுவாய் ஓடுங்கள்.

  5. முன்னால் செல்லும் வாகனத்தை மிக அருகாக நீங்கள் பின் தொடர்ந்து செல்வது (Tailgating) மிகவும் ஆபத்தானது. Tailgating நீங்கள் விபத்தில் சிக்கும் சாத்தியத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

  6. வாகனத்தின் பின் இருக்கைகளில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணியதேவையில்லை என நினைப்பது மிகவும் தவறானது. ஓடுகின்ற வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணியவேண்டும்.

  7. ஒருவரும் வரவில்லை என்று மனதினுள் நினைத்து கொண்டு STOP Sign இல் முழுமையான நிறுத்தத்திற்கு வாகனத்தை கொண்டுவராது அவசரப்பட்டு திருப்பத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

  8. ஒழுங்கை மாற்றம் செய்யும்போது, ஒழுங்கை மாறும் முன்னர் வேறு வாகனங்கள் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.

  9. சீரான சமநிலை, நேர்த்தி இல்லாத டயர்கள் (Improperly balanced & Misaligned tires) உள்ள வாகனத்தை ஓடும்போது ஓடும் பாதையில் இருந்து எதிர்பாராமல் விலகி சென்று விபத்து ஏற்படலாம்.

  10. STOP Sign வரும்போது வாகனத்தை முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டு வந்த பின்னரே திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

  11. உங்கள் வாகனத்தின் காற்று வடிகட்டி (Air filters) பழையதாயின் அதை மாற்றுங்கள்; இல்லாவிட்டால் எரிபொருள் வீணாகுவதோடு இயந்திரத்தின் இயங்குதிறனும் குறைவடையும்.

  12. தொலைபேசி, குறுஞ்செய்தி பாவனைகள், உணவு உண்ணுதல், அதிகமான உரையாடல்... இவை வாகனம் ஓடும்போது உங்கள் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்படுவதற்கு காரணமாகலாம்.

  13. மிக விரைவாக செய்யப்படும் பாதுகாப்பற்ற ஒழுங்கை மாற்றங்கள் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அந்நிலையில் வாகனத்தின் அளவு/வகை/தெரு நிலமை ஆகியவை விபத்தின் கோரத்தை தீர்மானிக்கின்றன.

  14. விரைவான திருப்பங்களை மேற்கொள்ளும்போதும், விரைவான U திருப்பத்தை மேற்கொள்ளும்போது ஆபத்தான Skidding ஏற்படுகிறது. Skidding ஏற்பட்டால் பதற்றம் அடையாது வாகனம் வழமைக்கு திரும்பும் வரை ஸ்ரியரிங்கை நேராக பிடியுங்கள்.

  15. வீதியில் உங்களை சீண்டும் வகையில் யாராவது செயற்பட்டால் வாகனத்தை நிறுத்தவோ, அல்லது வாகனத்தைவிட்டு வெளியே வரவோ முயற்சிக்காது / குறிப்பிட்ட நபர் மீது கவனம் செலுத்தாது பாதுகாப்பான முறையில் வாகனத்தை ஓடுவதில் கவனத்தை குவியுங்கள்.

  16. கவனம் இல்லாமல் நீங்கள் வாகனம் ஓடினால் உங்களுக்கு தண்டனையாக குற்றப்பணம் + சிறைவாசம் + சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படுதல் ஆகியவை கிடைக்கலாம்.

  17. மோசமான விபத்துக்கள் நகர வீதிகளில் சிவப்பு ஒளி சமிக்ஞையில் சந்தியை கடப்பதால் ஏற்படுகின்றன. சமிக்ஞை செம்மஞ்சள் நிறத்துக்கு மாறும்போது அவசரப்பட்டு சந்தியை கடக்க முயற்சி செய்யாதீர்கள்.

  18. சூழல் வெப்பநிலை உயர்வாக உள்ள நேரங்களில் மோட்டார் சைக்கிள் ஓடுவது உடல் நலத்திற்கு தீங்கானது. உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்க போதியளவு நீர்/குளிர்பானம் பருகுங்கள்.

  19. வாகனத்தில் பயணங்கள் செல்லும்போது அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றுவது ஆபத்தானது. ஆகக்கூடியது எவ்வளவு பாரம் உங்கள் வாகனத்தில் ஏற்றப்படமுடியும் என்பதற்கு வாகனத்தின் உரிமையாளர் கையேட்டை பாருங்கள்.

  20. கோடை காலங்களில் அளவில் மிகவும் பெரிய வாகனங்கள் அதிகளவில் தெருவில் காணப்படக்கூடும். அவற்றுடன் அருகாக செல்லும்போது எச்சரிக்கையுடன் ஓடுங்கள்.

  21. மற்றவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேலாக தேவையில்லாமல் நீண்ட தூரத்திற்கு தொடர்ந்து பின்பக்கமாக வாகனத்தை ஓட்டுவது (reversing) ஒரு குற்றச்செயல்.

  22. தரைமட்டம், வளைவு, புவியீர்ப்பு, குடிசனபரம்பல் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வீதிக்குரிய வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது. வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மிஞ்சிய வேகத்தில் செல்வதனால் பெருமளவான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

  23. இரவு மது அருந்தினால் காலை பிரச்சனையின்றி வாகனம் ஓடமுடியும் என தவறாக நினைக்காதீர்கள். காவல்துறையினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் மதுபோதை மதியம் 2.00 வரை உங்கள் குருதியில் காண்பிக்கப்படக்கூடும்.

  24. நீண்ட வார விடுமுறையில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகமாக காணப்படும். மது அருந்தினால் வாகனம் ஓடாதீர்கள்.

  25. ஆறு மாதங்களுக்கு குறைவான வாகனம் ஓட்டும் அனுபவம் கொண்ட 21 வயதுக்கு குறைந்த சாரதிகளே வேக கட்டுப்பாட்டுடன் ஓடாத காரணத்தினாலும், முன்னால் செல்லும் வாகனங்களை மிக அருகாக பின் தொடர்ந்து செல்வதாலும் அதிகளவு விபத்துக்களிற்கு காரணமாக அமைகின்றார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.