Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by மகம்

  1. தாயகக் கனவுகளுடன் ....... [5] "உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை.எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு" ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  2. தாயகக் கனவுகளுடன் ....... [4] "சுதந்திரம் இல்லாத மனிதவாழ்வில் அர்த்தமே இல்லை." "சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனிதவரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது." "உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு தேசத்தின் ஜீவாதார சக்தி." ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  3. தாயகக் கனவுகளுடன் ....... [3] "அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்மஉறுதியை உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்." ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  4. தாயகக் கனவுகளுடன் ....... [2] "நாம் துணிந்து போராடுவோம்.சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கிறது. வரலாறு எமக்கு வழிகாட்டியாக‌ நிற்கின்றது." ‍‍‍----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  5. தாயகக் கனவுகளுடன் ....... [1] " நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.எமது நிலையற்ற‌ வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது." ‍‍‍----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------------------------------------------------
  6. மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!!! தோல்வியின் கதைகளை தொடர்ந்து எழுதுதல் எப்போதும் அயர்ச்சியையே தருகிறது, பல நாட்களுக்கு பிறகு மீண்டும் வெற்றியின் கதையை எழுதுகிறேன்… சமகால மாணவர்களின் வெற்றிக் கதையை எழுதுகிறேன்… உலக பெரியண்ணன் அமெரிக்காவை அசைத்து பார்த்த… பணிய வைத்த மாணவர்களின் வெற்றிக் கதையை பதிவு செய்த ‘அறப்போர்’ ஆவணப்படம் குறித்து எழுதுகிறேன். அறப்போர் – இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களின் அறப்போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட மாணவர் வரலாற்று ஆவணப்படம். இப் படத்தில் ஒரு பகுதிக்கு ஒளிப்பதிவு செய்தவன் என்ற முறையிலும்… படத்தின் முன் தயாரிப்பில் (Pre-Production) வேலை செய்தவன் என்ற முறையிலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்… 2007 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர், தமிழகத்தில் 80களுக்குப் பிறகு பிறந்து உலகமயமாக்கலின் மடிகளில் தவழ்ந்த பல இளைஞர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலட்சங்கள் சம்பளம் கொடுத்த வேலையை உதறி, ஈழ போர் குறித்து பிரசாரம் செய்ய வீதிக்கு வந்த இளைஞர்களை நானறிவேன்…! உறவுகள் மடிந்து கொண்டிருக்கும் போது திருமணம் வேண்டாம் என காதலித்த பெண்ணை ஓராண்டு காத்திருக்க வைத்த நண்பர்களையும் நானறிவேன்… ஈழ போர் குறித்து படம் ஆவணப்படம் எடுப்பது போர் குறித்த புத்தகங்களை வெளியிடுவது என கைகாசுகளை செலவு செய்து களப்பணி செய்த காலங்கள் அவை…! இலங்கை அரசை கோபமடைய செய்யும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என்று பதறிய தமிழகத் தலைவர்களை இளைஞர்கள் முன் அம்பலபடுத்திய காலகட்டம் அது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியவர்களையும்… மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்றவர்களையும் நம்பிப்பயனில்லை என இளைஞர்கள் உணர தொடங்கினர். முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிய சில தலைவர்களுக்கு 2013ல் தமிழக மாணவர்கள் திசைவழி காட்டினர். இனி சமரசவாதிகளை நம்பி பயனில்லை என மாணவர்கள் களதிற்கு வந்தனர்… தனி மாகாணமோ, சுயாட்சியோ தீர்வல்ல. நாங்கள் கேட்பது தனி ஈழம் மட்டுமே என்று களதிற்கு வந்தனர். எப்போது defensive ஆகவே இருக்கும் தமிழினம், மாணவர்களினால் offensive ஆக செயல்பட்டது. அனைத்துத் தலைவர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு கருத்து தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பபட்டனர்… தி.மு.க மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது… இத்தனையும் செய்த மாணவர்களின் போராட்டம் பதிவு செய்ய வேண்டிய ஒன்று…. அதை எந்த சார்ப்பும் சமரசமும் இல்லாமல் ‘அறப்போரில்’ பதிவு செய்யபட்டுள்ளது வெறும் உணர்வுவையபட்டு மட்டும் அணுகாமல், தர்க்கங்களோடு அணுகி உள்ளது இப்படம். மிகுந்த பொருட்செலவில், நவீன தொழிற்நுட்பங்கள் கொண்டு இப்படம் தயாரிக்கபட்டுள்ளது… வழக்கமான ஆவணப்படம் பார்க்கும் அயர்ச்சியை நிச்சயம் ’அறப்போர்’ தராது… இந்த படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் இன்று (28, ஞாயிறு 2013)… ஸ்பென்சர் பிளாசா எதிர்புறம் உள்ள புக்பாயிண்ட் அரங்கில் நடக்கிறது. நம் சமகால மாணவர்களின் அறப்போரட்டத்தை அங்கீகரிக்க வேண்டியது நம் கடமை. உங்களின் வருகை மாணவர்களை பெருமைபடுத்தும் அது அவர்களின் அடுத்தகட்ட போராட்டத்துக்கு உந்து சக்தியாக அமையும். மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!! Face Book [ 28 July 2013 ] Students' Federation For Free Eelam - SFFE via Niyas ahmad அறப்போர் -தமிழகத்தில் 28.07.2013 அன்று வெளியீடு http://www.yarl.com/forum3/index.php?showtopic=125833&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர் http://www.yarl.com/forum3/index.php?showtopic=125613&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss "அறப்போர்" ஆவணப்படம்பற்றி "பாலை" திரைப்பட இயக்குனர் ம.செந்தமிழன் வழங்கிய நேர்காணல்
  7. ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தோழர் தியாகு அவர்கள் தொடங்கவிருக்கிறார். கோரிக்கைகள்: * காமன்வெல்த் அமைப்பில் இருந்து சிங்கள அரசை நீக்க, இந்திய அரசு முதலில் வலியுறுத்த வேண்டும். * இரண்டாவதாக, காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதிக்கக் கூடாது. மூன்றாவதாக, அப்படியே கொழும்பில் நடந்தாலும், இந்திய அரசோ மற்ற காமன்வெல்த் உறுப்பு நாடுகளோ அதில் கலந்துகொள்ளக் கூடாது. * இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருக்கோ, மற்ற துறையினருக்கோ எவ்வகைப் பயிற்சியும் அளிக்கக் கூடாது. * இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழிக் கம்பி வடம் அமைத்து மின்சாரம் கொடுப்பதற்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். * கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்துசெய்ய வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு மத்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்கவிருக்கிறார் தோழர் தியாகு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு [ முகநூலில் இருந்து ] 17 July 2013 --------------------------------------------------------------------------------- முடியாது என்று நினைத்தால் எதுவுமே முடியாது. எங்களின் இந்தப் போராட்டத்தால் மீண்டும் ஒரு மாணவ எழுச்சி, மக்கள் எழுச்சி தோற்றுவிக்கப்பட வேண்டும். போராடி வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக போராடாமலேயே இருக்கக் கூடாது. போராடாமல் வாழ்ந்த இனம் என்பதைக் காட்டிலும், போராடி அழிந்த இனம் என்று வரலாறு எங்களுக்குக் கிடைக்கட்டும்’ என்று சொன்னார் பிரபாகரன். நாங்களும் அதுபோலத்தான்!// 'வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்க இருக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. # "புரட்சி தானாக உருவாவதில்லை நாம்தான் உருவாக்க வேண்டும் : சேகுவேரா" Parani Krishnarajani [ பரணி கிருஸ்ணரஜனி ] [முகநூலில் இருந்து] 17 July 2013
  8. "ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஊர்திப் பரப்புரை 30-06-2013 நிறைவுக்கு வந்தது" ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்நாடு மாணவர் பேரவையும் உலகத் தமிழ் அமைப்பும் இணைந்து நடத்திய நாடு தழுவிய ஊர்திப் பரப்புரை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நிறைவுற்றது. யூன் 22 தேதி தொடங்கிய இப்பரப்புரை தமிழகமெங்கும் உள்ள மாவட்ட தலைநகரங்களை சென்றடைந்து சுமார் 2400 கி மீ தூரம் பயணித்து இன்று யூன் 30 சென்னையில் முடிந்தது. மாணவர் பேரணியை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி அய்யா மணியரசன் கொடி அசைத்து முடித்து வைத்தார். பல்வேறு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இப்பயணத்தின் போது மாணவர்கள் பல தரப்பட்ட மக்களை சந்தித்து ஈழப் பிரச்சனை குறித்தும் இலங்கையை புறக்கணிப்போம் என்ற செய்தியை எடுத்துச் சென்றனர். பல்லாயிரம் மக்கள் இப்பேரணி மூலம் விழிப்புணர்வு பெற்றனர். தமிழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பேரணி தான் பெருமளவில் மக்களிடம் ஈழப் பிரச்னையை கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுயநலம் இல்லாத இம் மாணவர்களுக்கு நம் வாழ்த்துகள் [முகநூல்] [ 30 - 06 - 2013 ]
  9. ஈழப் படுகொலையைக் கண்டித்து மாணவர் பேரவை வாகனப் பேரணி சென்னை: இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள். தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்..காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை துவக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள். ஈழப் படுகொலையைக் கண்டித்து மாணவர் பேரவை வாகனப் பேரணி மாணவர்கள் வீ.பிரபாகரன்,நந்தகுமார்,அருண் மொழி வர்மன், கார்த்தி,கார்த்திகேயன்,முரளி.முரளி,குமார்,விக்கிவிக்னேஸ்வரன், ஜெயச்சந்திரன்,விஜயபாலன், அனுஷ்,மது ஆகிய மாணவர்களின் வாகன பேரணி கீழ்க்கண்ட ஊர்களின் வழியாக மக்களிடம் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 23/06/13- சேலம்-ஈரோடு-கோவை, 24/06/13- பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை,25/06/13- காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம்,26/06/13- தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி 27/06/13- கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை 28/06/13- திருச்சி-தஞ்சாவூர்,29/06/13- கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி 30/06/13- புதுச்சேரி-சென்னை. http://tamil.oneindia.in/news/2013/06/23/tamilnadu-students-launch-vehicle-rally-against-eelam-genocide-177707.html
  10. உலகத் தமிழ் அமைப்பு - தமிழ்நாடு மாணவர் பேரவையின் மாணவர்கள் நாளை காலை 7 மணிக்கு (சனிக்கிழமை 22-06-13) சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து வாகனத்தில் பேரணியாக புறப்படுகிறார்கள் ! தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய இருக்கிறார்கள் ! தமிழ் உணர்வாளர்கள் உற்சாகம் ஊட்டும் வகையில் மாணவர்களுக்கு கொடியசைத்து வழியனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறோம் ! Students' Federation For Free Eelam - SFFE உலகத் தமிழ் அமைப்பின் 'தமிழ் நாடு மாணவர் பேரவை' மாணவர்கள் நாளை காலை மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து வாகனப் பேரணியை துவங்குகின்றனர் ! அதைப் பற்றிய செய்தி இன்றைய "இந்தியன் எக்ஸ்பிரஸ் " நாளிதழில் .. Students' Federation For Free Eelam - SFFE Students rally from tomorrow will touch the following places 22/06/13- Kanchepuram- Vellore - Dharmapuri 23/06/13- Salem - Erode - Coimbatore. 24/06/13- Pollachi - Udumalpet - Palani - Pudukotai 25/06/13- Karaikudi - Ramanathapuram - Rameswaram 26/06/13- Thoothukudi - Tirunelveli - Kanyakumari 27/06/13- Kanyakumari - Kovilpati - Virdunagar - Tirumangalam - Madurai 28/06/13- Trichy - Thanjavur 29/06/13- Kumbakonam - Mayawaram - Chidambaram - Puducherry 30/06/13- Puducherry - Chennai Young and Youth are welcome to join at respective towns. Host are welcome too. For further details mail your name and mobile number to eduservice123@gmail,com — [ Face book ] = 21 June 2013
  11. Loyolahungerstrike / 26 May 2013: மௌனித்துப் போயுள்ளோமே தவிர மரணித்துப் போகவில்லை மாணவர்களாகிய நாங்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்து இந்த நொடி வரை உணர்வாளர்கள் உடனிருந்து தமிழ் இன மீட்புக்கு களமாடி வருகின்றனர்.மே 18 இனப்படுகொலை செந்நெருப்பு நாளன்று பல்வேறு தடைகளையும் மிரட்டல்களையும் மீறி பேரணியானோம்.பேரணி வரவு,செலவு அறிக்கையை இன்னும் 3 நாட்களில் வெளியிடுகிறோம்.உதவிய உணர்வாளர்களை நன்றியோடு நினைக்கிறோம்.தொடர்ந்து இணைந்து களமாடுவோம் ... Loyolahungerstrike // Face Book == 31 May 2013
  12. Tamilnadu students union [22 May 2013] மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள்: போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களே... எல்லோரும் ஒன்று திரண்டு போராடுங்கள்.... யாரும் பிரிந்து நிற்க வேண்டாம்... மாணவர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்க திரைமறைவில் பயங்கரச் சதி நடக்கிறது... யாரும் அதற்கு அடி பணிந்து விடாதீர்கள்... ஒரு கையைத் தட்டுவதை விட பல கைகள் சேர்ந்து தட்டுவதனால் தான் சத்தம் பலமாக இருக்கும்.... எதிரிகளின் சூழ்ச்சி வலையில் யாரும் வீழ்ந்து விடாதீர்கள்.... ## ஓரணியில் ஒன்றாக போராடுவோம்... தமிழீழம் ஒன்றே எமது இலக்கு## முகநூல் [22 மே 2013] www.facebook.com/TamilnaduStudentsUnion?ref=stream&hc_location=timeline
  13. மதிப்புமிக்க தா.பா.வுக்கு மாணவர்களின் வேண்டுகோள்.... செம்பியன்.... நான் மேடைகளில் உணர்ச்சிபொங்க பேசியதுண்டு. ஆனால் தங்களைப் போல அச்சுபிசகாமல் அர்த்தத்தோடும் நையாண்டியோடும் பேச நினைத்து முடியாமல் போனதுண்டு. அதே போல் ஈழக்கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக .... நான் செம்பியன், லயோலா கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஈழத்தில் நம் இனம் படும் துன்பங்களைக் கண்டு, தம்பி பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளைக் கண்டு தமிழக மாணவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றெண்ணி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாணவர்கள் எண்வரில் நானும் ஒருவன். உண்ணாவிரதத்தை லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தொடங்கியிருந்தாலும் இது இனத்துக்கான போராட்டம். இதில் அனைத்து தமிழக மாணவர்களும் 'தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு' என்ற முழக்கத்தோடு எடுத்துச் செல்லும் விதமாக பொதுவான பெயரில் 'தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று உருவாக்கினோம். ஆனால் எதிர்பாராவிதமாக எந்த காரணமும் இல்லாமல் 'தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி தங்களது மாணவர் படையை வைத்து தமிழக மாணவர்களிடையே முதல் பிரிவினையை ஏற்படுத்தியது. இன்றுவரை அவர்கள் ஈழத்துக்கான மாணவ போராட்டத்தில் தனி அணியை உருவாக்கிய காரணம் என்ன என்று புரியவில்லை? நிற்க. இந்திய பார்ப்பனீயம், தங்களது மொழியில் சொல்வதானால் இந்திய ஏகாதிபத்தியம் எங்களது உண்ணாவிரதத்தை வலுக்கட்டாயமாக பல தந்திரங்களை கையாண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனாலும் மாணவத் தீ பரவிவிட்ட செய்தி அறிந்து, சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் எங்களைப்போல் உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து தீயை அணையாமல் பாதுகாத்த மற்ற கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வலுவான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு, தமிழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்காக நாங்கள் வெளிமாவட்டங்கள் சென்றிருந்தோம். அதுசமயம் இங்கு சென்னையில் பல கல்லூரி மாணவர்கள், கூட்டமைப்பின் சார்பாக ஒன்றாக இருந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செயல். இதில் பல இயக்கங்களின் மாணவரணி செயல்பட்டது. அதில் ஒருவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றத்தைச் (AISF) சேர்ந்த சி.தினேஷ். செயல்பட்ட அணைத்து மாணவர்களும் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்றே முழக்கமிட்டனர். கூட்டத்தோடு கூட்டமாக வந்த உங்கள் மாணவரணி பெருமன்றத்தின் தோழர் தினேஷும் தனித் தமிழீழமே தீர்வு என்று கூறுவது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஐ.நா. தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாஸ்குப்தா. தோழர் தினேஷ் சொல்வது போல் தனித்தமிழீழமே தீர்வு என்று நீங்கள் கூட கூறியதாக கேள்விப்பட்டதில்லை. இவ்விடத்தில் நாங்கள் தங்களிடம் கேட்பது, ஒன்று தில்லியில் உங்களது முழக்கத்தை தனித்தமிழீழம் என்று முன்வையுங்கள். அப்படி செய்தால் தமிழகத்தில் அனைவரும் மகிழ்வர். ஏறக்குறைய 90 ஆண்டு அனுபவமுள்ள அரசியல் கட்சி தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைத்தால் மகிழ்ச்சிதானே?! இல்லையென்றால் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தங்களது கட்சியின் மாணவரணி தோழர் தினேசை பயன்படுத்தாமல் இருக்க வழிவகை செய்யுங்கள். மார்க்சியத்தைப் புரிந்துகொண்டோமோ இல்லையோ ஆனால் தங்கள் கட்சியைப் போல போராட்ட செயல்பாடுகளை, முடிவுகளை தலைநகர் சென்னை என்பதால் ஓரிடத்திலிருந்து எடுக்காமல் எல்லாமாவட்டத்திலும் கலந்தாலோசித்து மண்டல ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து முடிவெடுப்பது என்று திட்டமிட்டுள்ளோம். ஆனால் தோழர் தினேசோ மொத்த தமிழ்நாட்டையும் ஒற்றையாளாக நின்று போஸ்டர்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டுள்ளார். கூட்டமைப்பு சார்பாக ஒரு போராட்டத்தை அறிவித்தால் இலட்சங்களில் செலவு செய்து போட்டியாக மாநாடு ஒன்றை அறிவிக்கிறார்! சக மாணவர்களோ, ஊடகவியலாளர்களோ எங்களிடம் வந்து மாணவர்களாகிய உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்கின்றனர். மாநாட்டிலோ கம்யூனிஸ்ட் தோழர்களின் பங்கே அதிகம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளுக்கு மாவட்டங்களில் பேரணி அறிவித்தால் போட்டியாக சுடர் பயணம் என்கிறார். மற்ற மாணவர்கள், உணர்வாளர்கள் குழப்பமடைந்து ஏன் தனித்தனியே செய்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர். எங்கள் கல்லூரிக் கல்வியை பணயம் வைத்து, பெற்றோர்களை பகைத்துக்கொண்டு மாபெரும் இந்திய அரசை எதிர்கொண்டு சாகும்வரை உண்ணாநிலை என்று போராட்டக்களத்திற்கு வந்த எங்களை 'இனத்துரோகி பாதிரியார்' ஒருவரின் பின்புலத்தில் இயங்குவதாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளன‌ர். இதை செய்வது களத்தில் இருக்கும் சக மாணவர்கள் என்னும்போது இந்த சமூகம் எங்களைப் போன்றவர்களுக்கு சூட்டும் பட்டத்தை கண்டு அகமகிழ்கிறோம். அரசியல் வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்கும் நெடுமாறன், ஐயா நல்லக்கண்ணு போன்றோர்களை முன்னுதாரணமாகக் கொண்டு சுயநலமில்லா மாணவர் போராட்டத்தை வைத்து தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கிறோம். முடியாதவகையில் அடுத்த கல்வியாண்டு மாணவர்களிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவ போராட்டத்தை மாணவ போராட்டமாகவே கொடுத்துச் செல்ல எண்ணுகிறோம். இதில் கட்சி சாயல் பூசவேண்டாமே! இன்று தெலுங்கானா போராட்டம் வெற்றிபெறும் நிலையில் இருப்பதற்கு அங்குள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வேறுவேறு கொள்கை கொண்ட பலதரப்பட்ட மாணவர்களாக அவர்கள் இருந்தாலும் தனித் தெலுங்கானா என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகள் மாணவர்களை மாணவர்களாகவே செயல்பட வைப்பதுதான். ஆனால் சபிக்கப்பட்ட தமிழினத்திலோ எதிரிகளை விட வேகமாக துண்டாடுவது உணர்வாளர்களாகவே உள்ளனர். இன்னும் ஓரீரு ஆண்டுகளில் மாணவ பருவத்திலிருந்து வெளிவந்தபிறகு தங்களைப் போன்ற கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை, கொடிகளை எங்கள் மீது திணிக்கலாமே? அதுவரை ஈழப்போராட்டம் மட்டிலுமாவது மாணவப் போராட்டத்தை கட்சி சாயல் பூசாமல் விட்டுவையுங்களேன்?! நாங்கள் உங்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு என்று உங்களது கொள்கைகளை சுமந்து செல்ல ஓர் அரசியல் கட்சி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி என பல உள்ளது. எங்களுக்கென்று இருப்பது மாணவர் கூட்டமைப்பு ஒன்றுதான். மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தினேசை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக எந்த விதமான அறிக்கையும் கொடுத்து ஊடகவியலாளர்களையும் சக மாணவர்களையும் குழப்ப வேண்டாம் என தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக செம்பியன் (லயோலா கல்லூரி, இரண்டாம் ஆண்டு) - 96000 94493, tamizhnaesan@gmail.com Loyolahungerstrike [முகநூல்]
  14. Thirumurugan Gandhi திமுகவினை எதிர்க்குமளவிற்கு அதிமுகவினை எதிர்க்கவில்லையே என்கிறார்கள். திமுகவினை விமர்சிக்கிறீர்கள், ஆனால் அதிமுகவிடம் அடக்கி வாசிக்கிறீர்கள் என்றார்கள்.. இது உண்மையல்ல.. திமுகவிற்கு கிடைத்த எதிர்ப்பு என்பது அதிமுகவிற்குமான பாடமாகவே இருந்தது. அதனால் தான் அதிமுக அரசில் , ஈழ ஆதரவு புத்தகங்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள், வீதி பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என திமுகவினால் தடுக்கப்பட்ட அனைத்திற்கும் தடைகள் தளர்த்தப்பட்டன.(உதாரணமாக சர் பிட்டி தியாகராயர் அரங்கும், நூலக கட்டிடமும் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களாகவே இருந்தன.சென்னையில் தி. நகர் பள்ளிக்கூடத்தினை தவிர்த்த ஏனைய இடங்களில் கூட்டம் நடத்த இயலாது) தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்களும், எதிர்ப்புணர்ச்சியும், தமிழீழ ஆதரவு நிலைப்பாடும் அரசினை நெருக்கடிக்குள்ளாக்கின. இதுவே அதிமுகவினை தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய ஒரு நாடக நிலைக்கு தள்ளியது. தமிழீழ எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுக்க அதிமுக சற்று அஞ்சியே இருந்தது. எந்த ஒரு போராட்டத்திற்கும் எதிர்ப்பினை தெரிவிக்கவோ, உளவுத்துறையை அனுப்பி மிரட்டவோ செய்யவில்லை. திமுக செய்த அடக்குமுறை அயோக்கியத்தனத்தினை ஒருபொழுதும் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. அதிமுகவின் காலம் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது. அதிமுக அரசு மக்களை ஒடுக்குவதற்கான காலத்திற்காக காத்திருக்கவே செய்திருக்கிறது. அதை ஆரம்பித்திருக்கிறது எனலாம். தமிழீழ விடுதலை போராட்ட ஆதரவுகளத்தில் தமக்கான வலிமையை அதிகரிக்கும் ஒவ்வொரு இயக்கமும், கட்சியும் இந்த இரண்டு கட்சிகளாலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டன/படுகின்றன. அதிமுகவினை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங்களை விமர்சகர்கள் கவனமாக தவிர்க்கவே செய்கிறார்கள். உதாரணமாக செங்கொடி ஊர்வலம் முதல் முல்லைப்பெரியாரில் நிகழ்ந்த போராட்டமும், பரமகுடி துப்பாக்கிசூடும், கூடன்குள எதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே அதிமுக எதிர்ப்பு நிகழ்வாகவே நிகழ்ந்தன. தற்போது நிகழும் தமிழீழ போராட்ட ஒடுக்குமுறையை அதிமுகஅரசும், அரசு அதிகாரிகளும், இந்திய அரசு வர்க்கமும் இணைந்து செயல்படுத்துகின்றன. மஞ்சள் பாசிசம், பச்சை பாசிசம் , காவி பாசிசமும், காங்கிரஸு பாசிசமும், சிபிஎம் பாசிசமும் இணைந்து நிற்கும் இக்காலத்தில் சேர்ந்து செயலாற்ற நமக்குள் விரிவான புரிதல் அவசியம். திருமுருகன் காந்தி [முகநூல்]
  15. Thirumurugan Gandhi தமிழீழம் தமிழ்ச் சமூகத்தின் முன்னனி அரண். தமிழீழ விடுதலையை விட்டுக்கொடுப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் தற்கொலையாகவே இருக்கும். தமிழீழத்தின் விடுதலையை வென்றெடுப்பது என்பது தமிழகத்தின் கடமை. ஒரு போதும் சமரசமில்லாத பங்கேற்பாளர்களாக தமிழீழ விடுதலைக் களத்தில் கைகோர்த்து நிற்போம். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தத்துவார்த்த பின்புலத்தினைக் கொண்டிருந்தாலும் சரி, தமிழீழத்தின் விடுதலை என்கிற ஒற்றைக்குரல் கோரிக்கையில் ஒன்றாய் நிற்பதுவே தமிழ்ச் சமூகத்தினை காப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான ஒரே வழி.. உறுதிமொழியேற்போம். ” தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்”. அதுவே முதற்பணி. Thirumurugan Gandhi (முகநூல்) 17 May 2013 வருடம்தோறும் மே மாத மூன்றாம் ஞாயிறு தமிழர் கடலின் கரையோரம் திரளாய் கூடி தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தி, தமிழீழ விடுதலையை வென்றெடுக்க குடும்பத்துடன் உறுதி கொள்வோம்.
  16. Joe Britto என்ன நடந்தாலும் .., எதை இழந்தாலும் .., சோர்ந்து போக மாட்டேன் காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவனல்ல .... 1000 தோல்விகளை பார்த்தவன் களப்பணியில் இருக்கும் மாணவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 10 நாட்களாக கோயம்பேடு செங்கொடி அரங்கத்திலிருந்து செயல்பட்டுகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று அதிகாலை முதல் சென்னை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரச்சூரம் கொடுக்க சில மாணவர்கள் இரவே வந்து தங்கியிருந்தனர். அதிகாலை விழித்து பார்த்ததில் அங்கிருந்தவர்களின் அனைத்து செல்போனும் காணாமல் போயிருந்தது. 30,000 மதிப்புள்ள 7 செல்போன், லேப்டாப்பில் மாட்டியிருந்த ஒரு யு.எஸ்.பி, மோடம், ஒரு வை.பை. ரௌட்டர் என அனைத்து தொலைதொடர்பு சாதனங்கள் திருடுபோயிருந்தது. ஆனால் அதை சுற்றியிருந்த 4 லேப்டாப், ஆணியில் மாட்டியிருந்த சட்டை பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த 1200 ரூபாய் பணம் என அனைத்தும் பத்திரமாக உள்ளது. பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தொலைதொடர்பு சாதனைகளை திருடிக்கொண்டு சென்றவரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. உண்ணாவிரதம் இருந்ததிலிருந்து செங்கொடி அரங்கத்திலிருந்து நாம் செயல்பட அரசின் கெடுபிடி அதிகமிருக்கிறது. காவல்துறையிடம் திருட்டைப்பற்றி முறையிட்டால் இதை வைத்துகொண்டு விசாரணை என்ற பெயரில் நாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட முடியாதபடி நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் புகார் கொடுக்கலாமா வேண்டாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சென்னை மாவட்ட மாணவர்களை தொடர்புகொள்ள 97908 47172, 99628 91945 என்ற எண்களை அழைக்கவும்... கல்யாண நடக்க இருக்கும் போது கலியாணத்தை நிறுத்த மாப்பிளையோட சீப்பை களவெடுத்தா கலியாணம் நின்றும் என்ற காமெடிதான் நினைவுக்கு வருது. ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா வை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மே 18ஆம் தேதி நடத்தயிருக்கும் பேரணிக்கு தலைநகர் சென்னையில் அமைந்துள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுமதி கோரி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக நேற்று 13-05-2013 வழங்கப்பட்ட கடிதத்தின் நகல்... [முகநூல் -- Joe Britto ]
  17. Joe Britto 4 மாதங்கள் கழித்து சொந்த ஊர் சென்று மூன்று நாட்களில் இப்போது மீண்டும் சென்னை வந்துள்ளேன் ... பார்த்து பேச விரும்பிய,ஏங்கிய சிலரை பார்க்கக் கூட முடியல ...!!!! ஆனால் "போராடியது போதும் ; போய் படிக்கிற வேலைய பாரு !என்று சொன்ன என் அம்மாவும் அப்பாவும் .... 'நண்பர்களோடு இணைந்து எதற்காக தொடங்கினாயோ அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல் !'' என்றார்கள் சிறு கண்ணீர் துளியோடு துணிவாக ... வாருங்கள் நண்பர்களே மே மாதம் 18ல் மீண்டும் திரளுவோம் எழுச்சியோடு பேரணியாக .... [ முகநூலிலிருந்து ]
  18. Rajkumar Palaniswamy 4 மே 2013 தனது கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்கு நீதி கேட்டு இத்தாலி மாலுமிகளை சிறைபிடித்தான். நச்சு அணு உலைகள் தனது மண்ணுக்கு வராமல் தடுத்தான். நிலத்தடி நீரை உறிஞ்சும் கொக்கோ கோலா நிறுவனத்தை மூடும்படி செய்தான். ரசாயனம் நிரம்பிய ஜான்சன் குழந்தைகள் பயன்பாட்டு பொருட்களுக்கு தடை பெற்றுத்தந்தான். அண்மையில் கே.எப்.சி நிறுவனத்தின் கோழியில் புழு இருப்பதை கண்டறிந்து அந்த கடையையே மூடிவிட்டான். இப்படி தனது மண்ணுக்கும் மக்களுக்கும் வரும் ஆபத்தை உடனுக்குடன் தடுத்து விடுகிறான் கேரளாக்காரன். நிச்சயம் இதை நாம் பாராட்டத் தான் வேண்டும். அவனிடம் கற்றுக் கொள்ளவேண்டியது இந்த ஒற்றுமையும் போராடும் குணமும் தான். நாம் சாதியாக மதமாக இன்னமும் பிரிந்திருப்பதால் நம்மை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் எதிரிகள். நாம் எதையும் முறியடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களே, இனியாவது நாம் ஒன்றுபடுவோம், போராடுவோம், வென்றெடுப்போம் நம் உரிமைகளை. [ முகநூலிலிருந்து ]
  19. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மார்க்ஸ், லெனின் சொன்னது என்ன?- திருமாவேலன் - 5 May 2013 இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு` என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 3 பிரிந்து போகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, மார்க்சீய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்தது. அவர்கள் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு உல்டாவாகச் செயல்படுகிறது. என தோழர் உ.வாசுகி சொல்கிறார். குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது, ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்து போவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிஸ தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து, எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது. மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை என்கிறார். மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல. அப்படி ஆகிவிடவும் கூடாது. ஆனால், 'மார்க்ஸ் சொன்னதையும், லெனின் வழிகாட்டியதையும் எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே சொல்ல ஆரம்பித்திருப்பது காலக் கொடுமை. எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும்? ஏகாதிபத்திய இங்கிலாந்துக்கு மார்க்ஸ் சொன்னது இலங்கை அரசுக்குப் பொருந்தாது என்றால், இலங்கை அரசு என்ன சோஷலிஸ அரசா? அதனிடம் ஏகாதிபத்தியக் குணாம்சங்கள் இல்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறையை வைத்துக்கொண்டு இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு� என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. தனக்கு விரோதமாகத் தீர்ப்பளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே அவதூறுகள் கிளப்பி வீட்டுக்கு அனுப்ப அதிகாரம் படைத்த ஆட்சி. தேர்தல் கமிஷன்கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்படும் ஆட்சி. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லும் ஆட்சி. பௌத்தம் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழவேண்டியது இல்லை என்று சொல்லும் ஆட்சி. இந்துக் கோயில் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் ஆட்சி. ஹலால் முத்திரையிடப்பட்ட கறியை வாங்கத் தடைசெய்யும் ஆட்சி. ராஜபக்சவின் குடும்பத்தினர் மட்டுமே அனைத்து அதிகார மையங்களிலும் இருக்கலாம் என்று அறிவித்த ஆட்சி. இராணுவத் தளபதியையே கைதுசெய்து சிறைவைத்த ஆட்சி. இது சிங்கள, பௌத்த, பேரினவாத ஏகாதிபத்தியம் அல்லவா? ஏகாதிபத்தியம் என்றால், பெரிதாக அமெரிக்கா போலத்தான் இருக்க வேண்டுமா? ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து குண்டு வீசுபவர்களைத்தான் ஏகாதிபத்தியம் என்பார்களா? மாற்று இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக சொந்த தேசத்து மக்கள் மீதே குண்டுபோட்ட அரச பயங்கரவாதிகள், இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தைவிட எந்த விதத்தில் குறைச்சல்? இங்கிலாந்து ஏகாதிபத்தியம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பச்சைப்படுகொலைகளைப் போல ஈழத்தில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ஜெனரல் டயர் போல கொழும்புவில் 100 பேரை அடையாளம் காட்ட முடியும். என்ன நிலைமை மாறிவிட்டது? ஏகாதிபத்திய இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டுமா கூடாதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கே குழப்பம் இருந்தது. இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது நடக்க முடியாதது என நான் கருதியது உண்டு. ஆனால், அயர்லாந்தின் பிரிவினைக்குப் பின்னர் ஒரு கூட்டரசு தோன்ற நேர்ந்தாலும், இத்தகைய பிரிவினை தவிர்க்க முடியாதது என இன்று நான் கருதுகிறேன் என்று எங்கெல்ஸுக்கு மார்க்ஸ் (1867- நவம்பர் 2) கடிதம் எழுதினார். உலகப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்துவதையே தனது வாழ்க்கை லட்சியமாகக்கொண்ட மார்க்ஸ், இன்னோர் அதிர்ச்சிக்குரிய ஆலோசனையையும் சொன்னார். இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்தால், இங்கிலாந்து பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டபோது, 'அயர்லாந்துடன் இங்கிலாந்துகொண்டிருக்கிற ஒன்றியத்தைக் கலைத்துவிட வேண்டியதுதான்� என்று தீர்ப்பளித்தார். ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்று பிரித்துப் பார்த்தார். ஒடுக்கும் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள், அயர்லாந்து நாட்டை தேசிய ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று மார்க்ஸ் முதலில் நம்பியது உண்டு, சிங்களப் பாட்டாளிகள், தமிழ்ப் பாட்டாளிகளுக்காகப் பேசுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நம்புவதைப் போல. ஆனால் அது சாத்தியமில்லை என்று மார்க்ஸின் சிந்தனை அப்போதே முடிவுக்கு வந்தது. இதை 150 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் நகமும் முகமும் கூர்மை அடைந்த பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர மறுக்கிறது. அயர்லாந்து விவகாரத்தில் மார்க்ஸ் எடுத்த நிலைப்பாட்டையே சோவியத் நாட்டில் லெனின் அமல்படுத்தினார். இதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருந்தாது என்கிறது. 'சோஷலிஸத் தேசக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பத்தில் லெனின் சொன்னதை நகலெடுக்கக் கூடாது� '' என்கிறார் வாசுகி. பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது சோஷலிஸ அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று லெனின் சொல்லவில்லை. 'சோஷலிஸத்தை அடைகிற வரையில் அந்தத் தேசிய இனச்சிக்கலை ஒதுக்கிவைக்காமல்...� என்று அறிவுறுத்தியவர் லெனின். சோஷலிஸக் கூட்டமைப்பிலேயே தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டுமானால், பேரினவாதக் கட்டமைப்பில் அதனுடைய அவசியம் இன்னும் முக்கியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி உணரத் தவறுவது ஏன்? தேசிய இனச் சிக்கல் 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எழுந்தது. அது கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது. 1886-ம் ஆண்டு இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது பேராயம் லண்டனில் நடந்தபோது, தேசிய இனங்களின் தனிநாட்டு உரிமை தொடர்பான தீர்மானம் வந்தது. ''தேசிய இனங்கள் எல்லாவற்றுக்கும் தனி நாட்டுரிமை உண்டு. மேலும், எல்லா நாட்டு தொழிலாளர்களும் சேர்ந்து உலகளவில் வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தேசிய இனப் பிரச்சினை விவாதம் ஆனது. வர்க்க முரண்பாடுகளை வென்றெடுக்க நினைக்கும் மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இனப் பிரச்னை விவாதப் பொருளானது. அப்போது துணிச்சலாக தேசிய இனப் பிரச்சினையையும், பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமையையும் பேசியவர் லெனின். ஒன்றுபட்ட சோவியத் புரட்சியை முன்னெடுத்துக்கொண்டு இருந்த லெனின், அங்கு பெரும்பான்மை இனமான மாருசிய தேசிய இனத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடாமல் தன் கருத்தைச் சொன்னார். நம்முடைய சொந்த மாருசிய தேசிய இனத்தைச் சேர்ந்த சொந்த நாட்டவர்கள் கொண்டிருக்கிற தேசிய காழ்ப்புகளை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்னும் அச்சத்தைக் கருதி இந்த (தனிநாட்டு) உரிமையை முன்வைக்க நாம் மறக்கவோ தயங்கவோ செய்வோமாயின், 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்� என்னும் அறைகூவல் அப்போது உதட்டளவிலான வெட்கங்கெட்ட பொய்யாக மட்டுமே இருக்கும்'' என்று எச்சரித்திருக்கிறார் லெனின். தேசிய இன உணர்ச்சி என்பது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி, சோஷலிஸத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்று லெனின் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் அவரே, ''ஒரு தனித் தேசிய அரசை அமைத்துக்கொள்கிற உரிமையாகிய பிரிந்துபோகிற உரிமையைவிட மிகப் பெரிய உரிமை ஏதேனும் ஒரு தேசிய இனத்துக்கு உண்டா?'' என்று கேட்கும் அளவுக்குப் போனார். ஸ்வீடனில் இருந்து நார்வே தனி நாடு ஆவதை (1905-ல்) ஆதரித்தார். பிரியலாமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மைத் தீர்ப்புப்படி நார்வே பிரிந்தது. 'நாடுகள் பிரிந்துபோவதை, நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தீர்த்துவைக்கப்பட்ட ஒரே வழியில் மட்டும் தீர்த்து வைக்க வேண்டும்� என்றும் லெனின் எழுதினார். ஸ்வீடனுக்குள் இருந்தாலும், தனக்கெனத் தனியாக நாடாளுமன்றம் வைத்துக்கொள்ளும் உரிமை நார்வேக்கு இருந்தது. 'ஸ்வீடன் மன்னர் எங்கள் மன்னர் ஆக மாட்டார்� என்று தீர்மானம் போடும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக நார்வே நாட்டவர்கள் இருந்தனர். ஆனால், ஈழத்தில் பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதியை ஒன்றிணைத்து ஒரு மாகாணம் ஆக்குவதற்கோ, அந்தப் பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. யாரெல்லாம் நிலம் வைத்திருந்தார்களோ, அவர்களிடம் இருந்து அவையெல்லாம் பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் அனைத்தும் சிங்களவருக்கு, இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை இனத்தை வஞ்சத்தோடு வறுத்தெடுக்கிறது. வாழவிடாமல் தடுக்கிறது. அயர்லாந்து மக்களுக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. அழிவதா அல்லது தனி நாடா?'' என்று கேட்டு உண்மையை உடைத்துச் சொன்னார் மார்க்ஸ். தமிழர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சரணடைவது அல்லது கடலுக்குள் விழுந்து சாவது என்று அறிவித்தார் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. மார்க்ஸ் படம் பிடித்த அதே குணாம்சம்தான் 150 ஆண்டுகள் கழித்து பொன்சேகாவிடம் வெளிப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மாறவில்லை. மார்க்சிஸ்ட்டுகள் மாறிப் போனார்கள். அத்தகைய சூழல் உருவாகிவிடக் கூடாது!
  20. தமிழினப் படுகொலையை மறவோம்! தமிழீழம் வெல்லும் வரை ஒயோம்! மே பதினேழு இயக்கம் ஞாயிறு, 05 மே 2013 2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது. இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபின்னும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 'விடுதலை' என்கிற ஒற்றைச் சொல்லிற்காக ஒரு தலைமுறையே அழிந்தாலும் எதிரிகளை விடப்போவதில்லை, பிறந்த மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தமீழீழத் தமிழர்கள் போர் புரிந்து மடிந்தார்கள். இதோ இந்த தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் இலங்கையில் நாம் மற்றும் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, பதைக்க பதைக்க, வதைத்து வதைத்து, வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் நம் உறவுகள். தமிழீழம் என்கிற தனது நாட்டினை இலங்கையின் பிடியிலிருந்து விடுவிக்காமல் ஓயமாட்டோம் என்று போராடி மடிந்த தமிழர்களுக்காக 2009இல் நாம் போராடாமல் மெளனம் காத்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நடந்து இருக்காது. நம் வரிப்பணத்தினை வைத்து இந்தியாவும், இனவெறி கொண்ட இலங்கையும் கைகோர்த்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் துணையோடு தனித்து விடப்பட்ட தமிழர்களை வேட்டையாடினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாமும் அவர்களை கைவிட்ட பாவம் வரலாறு முழுவதும் நம்மை துரத்தும். இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைக்கு வலுசேர்க்கவும், இந்த இனப்படுகொலை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருடம்தோறும் சென்னை மெரினா தமிழர் கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் விதமாக பொதுமக்கள் பங்கேற்க்கும் நினைவேந்தலை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது மே17 இயக்கம். 2011 சூன் 26ஆம் நாள் ஐ.நாவின் சித்தரவதைக்கு எதிரான தினத்தில் ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளின் கவனத்திற்கு தமிழீழ இனப் படுகொலையையும், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய மீனவர்களின் நிலையையும் கொண்டு செல்வதற்காகவும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள். அதுபோல சென்ற ஆண்டு 2012 இனப்படுகொலை வாரமான மே 20ஆம் நாள் நினைவேந்தலை கீழ்க்கண்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், தலைவர்கள் (குறிப்பாக இதில் வடநாட்டு தலைவர் திரு.ராம்விலாஸ் பசுவான் கலந்து கொண்டு தனி ஈழமே ஒரே தீர்வு என்று நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்தார். அதன் பின் அவர் ஈழம் சம்பந்தமாக யார் அழைத்தாலும் இந்த கோரிக்கையில் உறுதியாக இன்று வரை இருக்கிறார்.) பங்கேற்ப்போடு நடத்தினோம். 1. தமீழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே. 2. தமீழீழ விடுதலைக்காக ஐ.நா அவையின் மேற்ப்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பானது தமீழீழத்தில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும். 3. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் தண்டிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் அதில் ஆசிய நாடுகள் எதுவும் இருக்க கூடாது. இதுபோல இந்த 2013ஆம் ஆண்டும் இனப்படுகொலை வாரமான மே 19ஆம் தேதி தமிழனப் படுகொலைக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தலை அதே தமிழர் கடற்கரையில் நீதீ கேட்ட கண்ணகி சிலையின் பின்புறம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இப்பொழுது நமது கோரிக்கைகள் ஆனது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து அது மாணவர் போராட்டமாக மாறி அரசுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து சட்டமன்றத்தில் ஈழம் சம்பந்தமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக நிறைவேறியுள்ளது. இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என சொல்ல மறுக்கிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தானே தனி நாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இதை மறுக்கிறார்கள். ஏப்24 1915ல் நடந்த இனப்படுகொலைக்காக 98 ஆண்டுகள் கடந்த பின்னும் ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் ஒன்று கூடுகிறார்கள், யூதர்கள் 60 ஆண்டு கழித்தும் இன்றும் தங்களது வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர்கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி 'தமிழினப்ப டுகொலையை மறக்கமாட்டோம், தமிழீழ விடுதலையை அடையாமல் ஓய மாட்டோம்' என உறுதி மொழியேற்போம். இந்த கருத்துப் பதிவுகளை மக்கட் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 19 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நடத்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம். இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவுப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும். மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து, பணியை மேலும் செழுமை பெறச் செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம். 2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே தமிழர் கடற்கரையில் மே 19, 2013 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம். - மே பதினேழு இயக்கம் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23784:2013-05-05-04-44-34&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268
  21. தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா? -- 1 May 2013 ----- திருமாவேலன் இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது. ''இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்! தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது. முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது. திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை! இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்! ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு மாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது. 1983... சிங்களப் பேரினவாதத்தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன. சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்துவதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதிபத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்களும் தெளிவுப்படுத்தினர். அதனாலேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது. ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா? 'வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ - என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர். அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது. 'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்தார். 'இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது. 2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம். 2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை! - தொடரும் மிரட்டிய அமெரிக்கா... மீறிய புலிகள்... - 2 May 2013 கியூபா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா, நமீபியா, பாலஸ்தீனம் போலவே ஈழத்தில் நடந்ததும் விடுதலைப் போராட்டம். இதை உணர்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் தயக்கம் என்ன? இந்த நாடுகளின் கோரிக்கையை சில ஏகாதிபத்திய சக்திகள் ஆதரித்தன அல்லது ஆதரிக்கும் என்பதற்காக, அதன் போராட்ட நியாயங்களை சமூக - ஜனநாயக சக்திகள் புறந்தள்ளிவிட முடியுமா? கியூபாவுக்கும் சோசலிஸ நாடுகளுக்கும் அமெரிக்கா செய்ததை, யாழ்ப்பாணத்துக்கும் வன்னிப் பகுதிக்கும் சிங்களம் செய்தது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தடுத்தும், சொந்த தேசத்துக்குள் வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தும், விலைகொடுக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை உயர்த்தியும், 'பொருளாதாரத் தடை’ செய்யப்பட்ட பகுதியாக தமிழீழத்தை சிங்கள இனவெறி நடத்தியது. அப்போது, இன்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்காவோ அல்லது தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் நாடுகளோ அன்று குரல் கொடுக்கவில்லை. காரணம், ஒன்றுபட்ட இலங்கைதான் அவர்களுக்குத் தேவை. அது இருந்தால்தான் தங்களது சந்தை செழிக்கும் என்று நினைத்தனர். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ புலிகளை அமுக்கப் பார்த்தனர். அதனால், ஏகாதிபத்திய சக்திகள் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கா.வெ.பாலகுமாரன், ''கியூபா எங்களுக்குப் ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலைபெற்றாலும்கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக் கூடும்'' என்று, அமெரிக்காவை மனதில்வைத்தே சொன்னார். ராஜபக்ஷேவை வைத்துப் புலிகளை வீழ்த்துவதும் பின்னர் ராஜபக்ஷேவை வீழ்த்துவதன் மூலமாக சீனாவை மிரட்டுவதும் என்ற தந்திரம் மட்டுமே ஜெனிவா தீர்மானமே தவிர, இது தமிழருக்கு ஆதரவானதும் அல்ல; சாதகமானதும் அல்ல. சர்வதேச அரசியலையே சர்வமும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கும்’ என்று நம்புவதுதான் ஆச்சர்யமானது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் குறித்து 'தீக்கதிர்’ பத்திரிகையில் தோழர் உ.வாசுகி 'சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகம் வர வேண்டாமா?’ என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார். கொலம்பஸில் தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து, பாலஸ்தீனம் வழியாக வந்து, வியட்நாமைத் தொட்டு, ஈராக் அநியாயத்தை அடையாளப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். ஆனால், இந்த நாடுகளில் நடந்த அட்டூழியங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சமும் குறையாதது ராஜபக்ஷே சகோதரர்கள் ஈழத்தில் நடத்தியது. ஆனால், அதைப் பற்றி கரிசனமான வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறதே... அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நுண்மையான அரசியல். இவர்களுக்குத் தூரப் பார்வைதான் உண்டு போலும். கிட்டப் பார்வை கிடையாதோ? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான சித்துவிளையாட்டுகள் பகிரங்கமாக நடந்த இடம் இலங்கை. ஓஸ்லோவில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தபோது, அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அமிட்ரேச் இடையில் புகுந்து, 'ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இருந்தார். 'ஒரு சமாதானக் கூட்டத்தில் தமிழரின் சுதந்திரப் போராட்டத்துக்கு இகழ்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடன் ஒரு உயர்தர அமெரிக்க அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்குச் சினத்தை ஏற்படுத்தியது. என்று பாலசிங்கம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை 2003-ம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் செய்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நிதி அளிக்க ஒப்புக்கொண்டன. அளவுக்கு அதிகமான நிதி இலங்கைக்குள் வருவதை புலிகள் அமைப்பு கண்டித்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை. ஜப்பானில் நடக்க இருந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் ஆலோசனை மாநாட்டை வாஷிங்டனில் நடத்தப்போகிறோம் என்று திடீரென அறிவித்து, அதற்கு புலிகள் அமைப்பை அழைக்காமல்விட்டது அமெரிக்கா. 'எங்கள் நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்களை அழைக்க முடியாது’ என்று சொன்னார்கள். 'நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் நடத்தியுள்ளீர்கள்’ என்றார் பிரபாகரன். புலிகள் பங்கேற்காமலேயே அந்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. 'நாசகாரச் சுழற்சிகள் நிலவும் அரசுகளது சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்த சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்துவிடாது சுதந்திரமாகச் செயல்படவே நாம் விரும்பினோம்’ என்று பிரபாகரன் கடுமையாக அமெரிக்காவைக் கண்டித்தார். இனி பேசிப் பயனில்லை என்று புலிகள் முடிவுக்கு வந்தது அதன் பிறகுதான். இதுபற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்துக்கு, அவர் பதில் அனுப்பவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஸ்லி வில்ஸ் பதில் அனுப்பினார். 'விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதாயின், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பெரும் படை அணிகளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதால், புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அது அவர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தும்’ என்று, அமெரிக்கத் தூதர் சொன்னார். 'எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஆயுதம் வைத்துள்ளோம்’ என்று பதில் சொன்னார் பாலசிங்கம். 'இனப் பிரச்னையை இரு தரப்பும்தான் தீர்க்க வேண்டும். பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள வெளிநாட்டுச் சக்திகளை அநியாயமாகத் தலையீடு செய்யவைத்தது தவறு’ என்று ரணிலுக்கு புலிகள் கடிதம் அனுப்பினர். 'சமாதானத்தின் பெயரால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ரணில் அரசு விரித்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில், எமது இயக்கத்தின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழரின் தேசிய இனப் பிரச்னையை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் அதேவேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட லட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு தலையீடு செய்வதை நான் வன்மையாக எதிர்த்தோம்’ என்று பாலசிங்கம் அறிவித்தார். அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தங்கள் சந்தை வளத்துக்கும் மூலதனத்துக்கும் புலிகளையும் தமிழர்களையும் பண்டமாக மாறுவதற்கு அமெரிக்கா கட்டாயப்படுத்திய வரலாறுதான் இவை. கொலம்பஸ் காலம் முதல் அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அமெரிக்க நெருக்கடிகள் தெரியாதா? தெரிந்தும் பார்க்கத் தவறினார்களா?இதைப் பற்றிச் சொன்னால், தேசிய இனப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதால் பீதி அடைகிறார்களா? தேசிய இனப் பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே உள்வாங்க மறுப்பதால்தான், ஏகாதிபத்தியப் போர்வைகளைப் போட்டுமூடி, நாட்டில் நடக்கும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிராகரிக்க வேண்டியுள்ளது. அப்படியே அமெரிக்கா, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் என்ன முடிவெடுப்பது? இதற்கு லெனின் வழிகாட்டுகிறார்... ''ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இதனால் சமூக - ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். அதேபோல், அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்ஷ்வாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை'' என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார். தேசிய இனப்பிரச்னை, சுயநிர்ணய உரிமை, பிரிந்துபோதல் ஆகியவற்றை எப்போது எழுதினாலும் லெனின், குடும்ப உதாரணம் ஒன்றைக் காட்டுவார். அதுதான் விவாகரத்து. ''சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்துபோகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது'' என்கிறார் லெனின். குடும்பத்துக்குள் சித்ரவதை செய்யப்படும் பெண் ஒருத்தி, அதில் அடங்கி இருப்பதைவிட அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நிம்மதியானது என்று நித்தமும் மாதர் சங்கங்கள் கவுன்சிலிங் நடத்துகின்றன. ஆனால், 'என்ன கொடுமை செய்தாலும், அந்த நாட்டுக்குள் வாழத்தான் வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறது. மாதர் சங்கத்தின் அறிவுரை குடும்பத்துக்குக் குடும்பம் மாறாது. ஆனால் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு நாடுகளுக்கு நாடு மாறுகிறதே? - தொடரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு https://www.facebook.com/SFFETN (முகநூல்)
  22. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ////Yesterday "புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - தோழர் பகத்சிங்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.