Search the Community
Showing results for tags 'க.பொ.த உயர்தரப் பரீட்சை'.
-
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு திருகோணமலை - சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் நேற்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது” என்றார். R https://www.tamilmirror.lk/திருகோணமலை/A-L-பெறுபேறுகள்-இடைநிறுத்தியமை-இனப்-பாகுபாட்டின்-வெளிப்பாடு/75-338227