சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச உதவிகள்
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது.
https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048