Search the Community
Showing results for tags 'த பாஸ் கிறிஸ் கெய்ல் ......!'.
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் அத்தனை கமராவும் காட்டும் பவர்......! உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....! பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை பஞ்சாப் பறக்க விட்டவனே சிங்குகளுக்கு நடுவில் நின்று சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....! நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....! ஆக்கம் சுவி ......! 🙏