Search the Community
Showing results for tags 'தமிழரசுக் கட்சி'.
-
தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு, சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும், மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம் செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
-
தமிழரசு கட்சி விவகாரம் வழக்கு ஒத்திவைப்பு எஸ்.கீதபொன்கலன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கு மே 31ஆம் திகதி மீண்டும் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில்,எதிராளிகள் மற்றும் வழக்காளி ஆகியோருக்கிடையில் வழக்கை,சமரசமாக இருதரப்பு உடன்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் காணப்பட்ட போதும்,அனைத்து எதிராளிகள் மற்றும் வழக்காளியின் உடன்பாட்டிற்கான,எழுத்து பூர்வ சமர்ப்பணங்களை மன்றிற்கு முன் வைப்பதற்கு கால அவகாசம் இரு தரப்பாலும் கோரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஜூலை19 ந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/திருகோணமலை/தமிழரசு-கட்சி-விவகாரம்-வழக்கு-ஒத்திவைப்பு/75-338228