Search the Community
Showing results for tags 'பூநகரிச்சமர்'.
-
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறி பொதுமகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி, பயிற்சி நடக்கும் இடம் வந்துவிட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்கவிட்டவாறு மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்லநேர்ந்துவிட்டது. கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் பயிற்சிப்பாசறை வந்து, தனது பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறு மனஇயல்பினைக் கொண்டவன் இவன் ஆம்… இப்பயிற்சியானது சிங்களப்பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்… ஆணவத்தைச் சிதைப்பதற்காய்… தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்துவதற்காய்…. சுமூகமான ஒரு பாதைதனைத் திறப்பதற்காய்… பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்காய், ஆண் – பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாக, குழுவின் தலைவனாக ஈழமாறனும்…. மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும் – ஆழத்துடன் அழகும் கொண்ட – கடற்கரைதனை அணையாகப் பெற்ற மாதகல்தனைத் தனது தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம்மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான்: தாயக தாகத்தைத் தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகைதனை முகத்தில் படரவிட்டிருப்பான். துடிதுடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனத்தையும் கவர்ந்துவிடுவான். “வெளிநாடு வா” என மூத்த உடன்பிறப்பு அழைத்தும் கூட, இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. “அண்ணா. நீ தாய்க்காக உழைத்துவிடு@ நான் தாய்நாட்டுக்காக உழைக்கப்போகிறேன்” எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான். ஆரம்பக் கல்விதனை மாதகல் ‘சென்.ஜோசப் பாடசாலை’யில் பயின்ற பின்னர், 1984 ஆம் ஆண்டு, தெல்லிப்பழை ‘மகாஜனாக் கல்லூரி’யில் தனது கல்வியைத் தொடர்ந்தான் படிப்பில் மட்டுமல்லாது. விளையாட்டுத் துறையிலும் தி;றமையாகச் செயற்பட்டு, கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்றுத் தனது பாடசாலைக்குப் பெருமைத்தேடிக் கொடுத்தவன். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன், தனது சேவை இந்நாட்டுக்கு உடனடித் தேவையெனப் புரிந்து. 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டான்: பயிற்சிக் காலத்தின்போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றான். பயிற்சி தவிர்ந்த ஏனைய நேரங்களில், சக போராளிகளை அருகில் இருத்தி, விடுதலைப் போராட்டங்கள் பற்றி விளங்க வைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடுவான். ஆகையினால், மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள். பயிற்சி முடிந்தவேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ‘யாழ்.கோட்டைச் சண்டை’யில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட உடனேயே காரைநகர் சண்டைக்களம் அவனை அழைத்தது. அதன் பின்னர், மன்னார் பரப்புக்கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும் சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது. மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்…. எதிரியின் தாக்குதலால் காலிலும் கையிலும் காயமடைந்த இவனைத் தக்க முறையில் வைத்தியப்பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள். காயம் மாறி முகாம் வந்தவேளை, அவனுக்கு எல்.எம்.ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான் தனது வெள்ளைப் பற்களைப்போல…. இவனுடன் பழகிய நாட்களை அசைபோட்டுப் பார்க்கிறேன். அவை மறக்க முடியாதவை@ மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றுறொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை. குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ்வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் ‘செவிடுபட வைக்கும்’ அதிர்வோடு. அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும்போது, தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான். “தலை போகப்போகுது பதியடா தலையை” எனக்கூறினால், “டேய் தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து, கொட்டி எழும்பு என்ற தலையில் பிடித்துத் தூக்குவான்” என்பான். இக்கட்டான நேரங்களிலும் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான்@ இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத்தோட்டம் கண்முன்னாலே தெரியும்… இன்றைக்கு எல்லாவற்றையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்…. எமக்குப் பசியெடுக்கும் நேரம் எல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேசைக் காணவில்லை. “பரவாயில்லை@ நாம் போய்வருவோம்” எனக்கூறி எமது அணி முன்னேறியது – பழம் பிடுங்குவதற்காய். மரத்தில் ஏறியாகிவிட்டது. பழங்களைப் பறித்துக் காற்சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டிருந்த வேளை… சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகிலே எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும் நாம் மெதுவாக – சத்தம் செய்யாது மரத்திலிருந்து இறங்கிப் பதுங்கி நின்றோம்…. வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது. … இந்த வேளையில் சண்டை பிடிப்பது எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் என்பதை மனதிற்கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்து நின்று கொண்டு தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும், லெப்டினன்ட் சிந்துவும் சிரித்தபடி எமது செருப்புக்களை எடுத்துக் கொண்டு…. சிங்களம் கதைத்து எம்மை வெட்கப்படவைத்துவிட்டான். நிலைமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள, அசடு வழிந்தபடி அவனுடன் சேர்ந்து சிரித்தோம். இப்படி அவனது குறும்புத்தனங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆறுமாதப் பிணைப்பால் ஒன்றுபட்டு எமது பணி தொடர்ந்தவேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது… எமது சோகங்களைப் பகிர்ந்துகொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும் வரை கைகளை அசைத்து விடைகொடுத்தோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்துவிட முடியாது, பிரிந்துசென்ற அவன் ‘மின்னல்’ தாக்குதலில் ஏ.கே.எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குநராகச் சென்றான். மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனது முப்படைகளினதும் உதவியுடன் மிக மூர்க்கத்தனமாகத் தாக்கினான்…. ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்கமுடியாத உறுதி பக்கபலமாக இருந்தது. இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக்கொள்கின்றது… அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறைசாற்றி நிற்கும்…. அவனது குருதியை எததனை முறை இம்மண் மாதா ஏந்தியிருப்பாள்… நினைத்துப் பார்க்கிறேன்…. காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய் எனக் கூறியது…. அன்பாகவும், பண்பாகவும், அதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்க்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் காலம் கிட்டியது. பாசறைதனில் பயிற்சி வழங்கப்பட்டது…. மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்;பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்துவிட்டான் தினேஷ்@ இவனுடன் யசி என்ற போராளியும்தான்….! “நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில” – பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்றுவிடவில்லை. சிரித்த படியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழ நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச்செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான. இவ்வாறு தான் செய்யும் சிறிய தவறுகளுக்காயினும் பெற்று தண்டனைகளை மகிழ்வுடன் எற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். நாம் அனைவரும் அவனைச் செல்லமாக “சம்மாட்டி” என்று தான் அழைப்போம். அதற்கு அவன் ஒரு நாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன்சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித்துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகின்றது. கொதித்தெழுந்த அவன்….. கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. “என்ர கடைசித் தங்கைக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா@ அவள்தாண்டா என்ர உயிர்” எனத் தங்கைமீதுள்ள பாசத்தின் ஆழத்தைத் தனது சக நண்பனிடம் கூறிவைப்பான். அடுத்த மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் – மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் – எதிரியானவன் ‘பலவேகய -2’ எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் உழைத்தான் தினேஷ், இரண்டாம் நாட்சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்துதான். “என்ரா மச்சான் அடிக்கயில்லை?” எனக் கேட்ட நண்பனிடம், “இயக்கம் படுற கஷ்டத்தில கண்ட மாதிரி அடிக்கக்கூடாது… ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஸ்ரப்படுது தெரியுமா?” என, தனது சொற்பொழிவைத் தொடங்கிவிட்டான். ஆம்… எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான்;: கிலிகொண்டு அடிப்பான் ஏனென்றால் அவனுக்குத் தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில்கூட நிதானமாகச் செயற்பட்டு, எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி எவ்வளவு அவனிடமிருந்து எடுக்கமுடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டுதான் வாருவார்கள். “இலட்சியம் ஒன்று தான் எங்களின் உயிர்… அதற்காக எம் உயிர் போவதுகூட எமக்கு கவலையை தராது…..” சண்டை முடிந்தது. சோகங்களை மனதில் தாங்கியவாறு, சக தோழர்களின் சில உடல்களைத் தோளில் சுமந்தவாறு மீளுகின்றோம். பழையபடி முகாம் களைகட்டுகின்றது. “இனிப்பு செய்வோமடா” ஒரு நண்பன் கேட்க, “ஒம் நான் நல்லாச் செய்வன். தேவையானதைக் கொண்டுவாங்கோ” எனக்கூறியபடி அடுப்பு வேலைக்கு ஆயத்தமானான் தினேஷ். சீனி, தேங்காய், மா எனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்து, சட்டியில் பாணியைக் கிண்டிவிட்டுக்கொண்டிருந்தான் அவன். காதை செவிடுபடுத்தும்படியாக எங்கிருந்தோ ஒரு ஷெல் வந்து வீழ்ந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அவனைக் கேலிபண்ண ஆரம்பித்துவிட்டார்கள். “டேய் எனக்கென்ன செய்யத் தெரியாதே….? கொண்டு வா, உங்களுக்க இனிப்புத் தந்தாச் சரிதானே….?” மீண்டும் வேலைகள் ஆரம்பமாக, சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும், எதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தனது கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது. அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் – பல மாத வேவுப் பணியின் பின்னர் – தாக்குதல் தீட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கின்றது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடிபாய்கிறது. கடலில் பாயும் கோழையவன் கடற்புலிகளால் மடிகின்றான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது, கடலில் கொட்டுகின்றது. விமான எதிர்ப்பு ஒரு புறம் முழங்க, கரும் பச்சைப் பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தாறு நிலத்திலே ஓடிக் கடலிலே கலக்கிறது…. தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடலங்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது…. சடுகுடு விளையாடுவதைப் போல மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது. “அண்ணை எனக்குக் குறிப்பிட்ட இடத்தைப் – பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன்; இது சத்தியம்” – உறுதியாக தளபதியின் கையில் அடித்து விட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகின்றான். குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கின்றான். அங்கே…. அங்கே… கடைசியாகத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ்மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்…. அவனது தொலைதொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக்கொண்டிந்தது. “அண்ணை எனக்குத் தந்ததைப் பிடிக்காமல் திரும்பிவரமாட்டன்” – அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது. அன்றொரு நாள் எனது டயறியில், “ என்ர நினைவாக இதை எழுதுகிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைச்சிரு என்ன?” என்றபடி எழுத ஆரம்பிக்கிறான். “நாம் அனைவருமே பலகொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையாகச் சேர்ந்தவர்கள். பிரிவு நம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது.” இப்படிக்கு, தினேஷ். அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ‘ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது….!’ நினைவுப்பகிர்வு: த.பாரதி நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1994). https://thesakkatru.com/captain-eezhamaran/
- 2 replies
-
- பூநகரி
- பூநகரிச்சமர்
-
(and 2 more)
Tagged with:
-
லெப். கேணல் நரேஸ் தென்றலாக வீசிய புயல்: கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன். பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்டன. சாவுக்கு அஞ்சாத துணிவுக்கு முன்னால், பகைவனின் படை துவம்சமாகிப் போனது. நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்திற்குள் சிக்கி, சிங்களச் சேனை சிதைந்தழித்தது. டாங்கிகளும், கவச வண்டிகளும் நொருங்கின. ‘எக்கச்சக்கமான’ ஆயுதங்களை எதிரி பறிகொடுத்தான். வரலாறு காணாத படுதோல்வியைப் பரிசளித்து, புறப்பட்ட இடத்திற்கே பகைவனைத் திருப்பியனுப்பி வைத்தனர் புலிகள். யாழ். குடாநாட்டின் உயிருக்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த அந்தச் சண்டைக் களத்தில்தான் வன்னி நிலத்தின் போர் மறவன், எங்கள் நரேஸ் வீழ்ந்தான். புலோப்பளையில் – பெருவெற்றியை பெற்றுத்தந்த, ஒரு சண்டை முனையை வழிநடாத்திக்கொண்டிருந்த போது நரேசுக்கு முன்னால் விழுந்த எதிரியின் பீரங்கிக் குண்டொன்று அந்த வீரத்தளபதியை எங்களமிடமிருந்து பிரித்துக் கொண்டது. அவனோடு கூட இன்னும் 85 தோழர்கள், அந்த வெற்றிக்கு விறகானார்கள். அப்போது அவனுக்குப் பதினாறு வயது. புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தாய்நாட்டிற்காக அவன் துப்பாக்கியைத் தூக்கினான். எட்டு வருடங்களுக்கு முன்னர்; ஒரு மாலைப்பொழுது மங்கிக்கொண்டிருந்தது. காலையிலேயே வந்துவிட்டதால், பொறுமையை அடக்க முடியாமல் அவன் காத்துக்கொண்டிருந்தான். “எப்படியாவது போய்விட வேண்டும்” கூட்டிச்செல்பவரைக் காணவேயில்லை. புதுக்குடியிருப்பில் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த வீடுதான் புலிகள் இயக்கத்தின் தொடர்பு இடம். திடீரென படலையடியில் கேட்ட சத்தத்தில் “அவர்தானா……?” என ஆவலோடு எட்டிப்பார்த்தவன் அதிர்ந்து போனான். வந்து கொண்டிருந்தது இவனது அண்ணன். தன்னைக்கூட்டிச் செல்லத்தான் அவர் வருகின்றார் என்பதை ஊகிக்க அவனுக்கு நேரமெடுக்கவில்லை. இலேசாகப் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் மனதுக்குள் பொருமினான். “தாங்களும் போகமாட்டினம், போற ஆட்களையும் விடமாட்டினம்” அப்படியே சொல்லித் திருப்பி அனுப்பி விட வேண்டும். நினைத்துக் கொண்டான். ஆனால், விசயம் தலைகரணமாக நடந்தபோது, அவனால் நம்பமுடியவில்லை. வந்த அண்ணனும் வீட்டின் ஒரு மூலையில் போய்க் குந்திக்கொண்டார். கண்கள் சந்தித்த போது, ஆளையாள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். யாராவது ஒரு ஆள் வீட்டுக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்றது இயக்கம். “நீ சின்னப் பையன் தானே வயசு வரட்டும்.” என்று நரேசைத்தான் வீட்டுக்குப் போகச் சொன்னான் அண்ணன். தம்பி மறுத்து விட்டான்; “வீட்டுக்கு ஆள் வேணுமென்டால் நீயே போ” என்று அண்ணனுக்குச் சொன்னான். அண்ணன் மறுத்துவிட்டான். இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள். முடிவெடுக்க முடியாத சிக்கலில் முகாம் பொறுப்பாளர் மாட்டிக்கொண்டார். கடைசியில், வன்னியின் ‘ஜீவன்’ பயிற்சி முகாமின் முதலாவது அணியில், அண்ணனும் – தம்பியும் ஒன்றாகவேதான் பயிற்சி எடுத்து, முடித்து வெளியேறினார்கள். நரேசின் போராட்ட வாழ்வு இப்படித்தான் ஆரம்பித்தது. துடிதுடிப்பாகத் துள்ளித்திரிந்த அந்தப் பொடியனை ஊரில் எல்லோரும் ‘குரு’ என்று தான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். 07.11.1969 அன்று, சிங்கராஜா – மேரிகமலீன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக அவன் கண்திறந்தபோது, பெற்றவரும், பேரர்களும், சுற்றவரும் சேர்ந்து வைத்த ‘அருள்நாயகம்’ என்ற பெயர் பள்ளிக்கூட பதிவுக்கு மட்டும் செல்லுபடியானது. அந்தச் சின்னவன் குறும்புத்தனம் அதிகமானவனாக இருந்த போதும், பசுமையாகப் பழகும் பண்பும், இலகுவில் இரக்கப்பட்டுவிடும் சுபாவமும், கோபம் வந்தால்கூட எவரையும் அளவுக்கதிகமாகக் கோபித்துக் கொள்ளாத இயல்பும் அவனிடம் குடிகொண்டிருந்தன. கதைகளுக்கு அவ்வளவு இடம் கொடுக்காது, காரியங்களில் மட்டும் கண்ணான ஒரு குணாம்சமும், எதனையும் துருவித்துருவி ஆராய்ந்து விடயங்களை அறிய விழையும் ஆர்வமும் அவனிலிருந்த சிறப்பான தன்மைகள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியையும், நிறைவெய்தும் வரை நிறுத்திக்கொள்ளாத உழைப்பாளி அவன். பிஞ்சுப் பருவத்திலேயே அறிவும், ஆற்றலும் அவனுக்குள் விதைபோட்டு வளரத் துவங்கியிருந்தன. அவனுக்குள் ஊறிப்புரையோடியிருந்த இத்தகைய உயர்ந்த தன்மைகள்தான் படிப்படியாகப் பரிணமித்து பிற்காலத்தில், சண்டைக் களங்களின் அதிபதியாகச் செயற்படக்கூடிய தகமைக்கும்; நிர்வாகப் பொறுப்பாளனாகப் பணியாற்றக்கூடிய தகுதிக்கும் அவனை வளர்த்துச் சென்றன என்று சொல்லலாம். இந்திய ஆக்கிரமிப்புப் பூதம் எங்கள் நிலமகள் மேனியில் கோரத் தாண்டவமாடிய ஆரம்ப நாட்களில் ஒன்று அது. புதுக்குடியிருப்பில், சிற்றூர்ப் பொறுப்பாளனாக, நரேஸ் அப்போது அரசியல் வேலை செய்துகொண்டிருந்தான். அடிக்கடி மேலால் பறந்து இலக்கற்றுச் சுட்டுக்கொண்டு திரிந்த இந்திய வல்லூறு ஒன்று, அன்றும் வந்து சுட்டுக்கொண்டுபோனது. இலக்கு வைத்துச் சுட்டதோ, இலக்கின்றித்தான் சுட்டுவிட்டுப் போனதோ தெரியவில்லை. ஆனால், அதன் ரவைச் சன்னங்கள், நரேசின் நாரியையும் உடைத்து, இடது காலையும் துளைத்துச் சென்றுவிட்டன. அருகிலேதான் வீடு. யாரோ ஓடிச்சென்று சொல்லிவிட பெற்றெடுத்த தாய் மனது ஓலமிட்டது. ஓடோடி வந்த அன்னை, ஊறிப்போகாமல் நிலத்தில் தேங்கிநின்ற குருதியில் விழுந்து, விம்மி வெடித்துக் கதறிக் கொண்டிருக்க, வைத்தியசாலைக் கட்டிலில் தனது காயத்துக்குக் கட்டுப்போடுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மைந்தன். காயம் மாறி வந்தவன் கண்ணிவெடிக்கு இலக்குத்தேடினான். வைக்கக்கூடிய இடத்தையும் தேடினான். வசதியான இடம் அவனது சொந்த வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. வேவு பார்த்து, நேரம் குறித்து, படை வண்டித் தொடரில் இத்தனையாவதுக்கு என இலக்கு வைத்து, கண்ணிவெடி புதைத்து, வயரிழுத்து, பற்றைக்குள் பதுங்கி அவன் அமத்தக் காத்திருந்தபோது காட்டிக் கொடுப்பவன் காரியம் பார்த்துவிட்டான். அந்த “நல்ல வேலையை” செய்தவன் நரேசின் வீட்டையும், குடும்பத்தையும் சேர்த்தே காட்டிக்கொடுத்தான். இந்தியர்கள் வளைத்துப் பாய்ந்தார்கள். இந்த விடுதலைப்புலி தப்பிவிட்டான். அம்மாவும் பிள்ளைகளும்கூடத் தப்பிவிட்டார்கள். ஆனால், அப்பா சிக்கிக்கொண்டு விட்டார். அவரது கையாலேயே தீ மூட்ட வைத்து, அனல் வாய்கள் அவர்களது குடிசையைத் தின்று தீர்த்துச் சாம்பாராக்கும் அக்கிரமத்தைக் கண்களாலும் காணவேண்டிய கொடுமைக்கு அப்பாவை உள்ளாக்கிய இந்தியர்கள், அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். அன்று கொண்டு போனவர்கள்தான் அதன் பிறகு அப்பா வரவில்லை; இன்றுவரை…. வரவேயில்லை. அப்பா இனி வரவே மாட்டார் என்பது தெரிந்தபோது, அம்மா துவண்டு போனாள். அப்பாவைப் பறிகொடுத்த சோகம் பெரும் சுமையாய் அம்மாவை அழுத்திக் கொண்டது. அப்பா உயிரிழந்ததோடு, அம்மா உயிரிருந்தும் இல்லாதது போலாகிவிட்டார். கொஞ்ச காலத்திற்கு முன்னர்தான் ஆசைத்தங்கை கனிஸ்ராவை இயற்கையிடம் இழந்து போயிருந்தது அந்தக் குடும்பம். இது அடுத்த இடி. இந்த வேதனையின் தொடர் இத்தோடு முடிந்ததா? இல்லையே! அம்மாவின் ஆத்மாவைப் பிழிந்த கொடுந்துயர் நீளத்தானே செய்தது; இதன் பிறகு அவள் பாசத்தைக் கொட்டி வளர்த்த குழந்தைகள் இருவரை அம்மா அடுத்தடுத்து இழந்த துன்பம் நிகழ்ந்தது! லூர்து நாயகத்தையும், மரிஸ்ரலாவையும் கொடிய நோய்கள் பிரித்துக் கொண்டு போனபோது அம்மாவை நடைப்பிணமாக்கிய அந்தச் சோகத்தை! அம்மாவின் மனநிலைக்கு உருக்கொடுக்க வார்த்தைகள் கிடையா. இந்தியப்படையின் இடைவிடாத நெருக்கடி; அம்மாவுக்கும் தம்பி தங்கைக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றிவிட்டு நரேஸ் தலைமறைவாகி விட்டான். இந்தியாவை எதிர்த்துப் புலிகள் நிகழ்த்திய ஆச்சரியமரமான வரலாற்றுப் போரில் அதன் பிறகு அவனது பணி அடர்ந்த காடுகளுக்குள் தொடர்ந்தது. “சூரியஒளி உட்புகாத வளங்களில் புலிகளைத் தேடுகிறோம்” என இந்தியர்கள் வர்ணித்த இடங்களிலெல்லாம், அவன் இந்தியர்களைத் தேடினான். எதிரிகளுக்காகக் காத்துக் கிடந்தான். அவர்களது அசைவுகளையெல்லாம் வேவு பார்த்தான். கேட்டுக் கேள்வியின்றிப் புகுந்தவர்களுக்குப் புலிகள் புதைகுழி தோண்டிய சண்டைகளில் அவனது துப்பாக்கி இலக்குத் தவறாமல் இயங்கியது. குமுழமுனையில் ஒரு சண்டை இதே இடத்தில் வைத்து எங்கள் வீரர்கள் மீது இந்தியர்கள் பதுங்கியிருந்து தாக்கியதற்குப் பதிலடியாக அது நடாத்தப்பட்டது. அன்று, வீழ்ந்துபோன எங்கள் தோழன் ஒருவனின் தலையை இந்தியர்கள் அறுத்தெடுத்துப் போய்விட்டார்கள். ‘அவர்களுடைய பாணியில் அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்று சொல்லிச் சென்ற நரேஸ் சொன்னதைச் செய்தான். போர் புரிவதன் நவீன வழிமுறைகள் பற்றி, பிரபாகரனின் படைகளிடம் பாடம் கற்றுக்கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் பட்டாளங்கள் வெளியேறியபின் மீண்டும் போரோசை அதிர, ‘இரண்டாவது ஈழ யுத்தம்’ ஆரம்பித்தபோது, வன்னியின் சண்டைமுனைகளில் ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நரேஸ் முழங்கத்துவங்கினான். இராணுவத்தினரைத் தாக்கி முகாம்களுக்குள் முடக்கிய புலிகள், படிப்படியாக முகாம்களைத் தாக்கி அழிக்கத் துவங்கிய போது, போர் புதிய பரிமாணத்தைப் பெற்றது. கொக்காவில் படை முகாமை நிர்மூலமாக்கிய போது, ரவைகள், நரேசின் இடதுகாலில் துளையிட்டன. மாங்குளம் முகாமைத் தகர்த்தழித்த தாக்குதலின் போது, காயம் இடது கையில் பட்டது. முல்லைத்தீவு முகாம் முற்றுகைக்குள், முடக்கப்பட்டவர்களுக்கு முண்டு கொடுக்க, கடல்வழியாகத் தரையிறங்கி வந்தவர்களை எதிர்கொண்ட சண்டையில், இயந்திரத் துப்பாக்கியின் சன்னங்கள் இடுப்பை உடைத்துச் சென்றன. இப்படியிருக்கையில் 1991 இன் முடிவுப்பகுதியில் அது ஒரு துயர நாள். படையினரின் பதுங்கித் தாக்குதல் ஒன்றில் எமது முல்லைத்தீவு மாவட்டச் சிறப்பத் தளபதி மேஜர் காந்தனை நாங்கள் இழந்துபோனோம். அதன் பிறகு, அவனின் இடத்திற்கு, ஆற்றலும், ஆளுமையும் கொண்ட நரேஸ், தளபதி பால்ராஜின் பரிந்துரையின் பேரால் நியமிக்கப்பட்டான். மக்களின் குடிசைக்குள்ளேதான் அந்த விடுதலைப்புலி குடியிருந்தான். அவர்களின் மேல் அளவுகடந்த பாசத்தைப் பொழிந்து நின்று, அவர்களது இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்காளியானான். முகாமில் கூடியிருக்கும் போது, “அந்த ஊர்ச்சனங்கள் சரியாகக் கஸ்டப்படுதுகள்” என எங்களுக்குள் கதைத்துக்கொள்வது அவனது காதில் விழுந்ததனால் அடுத்த நாள் கையிலுள்ளவற்றை எல்லாம் கொண்டுபோய் வைத்துக் கொண்டு அந்தக் கிராமத்தில் நரேஸ் நிற்பான். மக்களது குறைகளை நிவர்த்தி செய்ய, தன்னால் இயலுமானவரைக்கும் வழிசெய்து கொடுத்தான். மக்களை அணிதிரட்டித் துணைப்படையை உருவாக்கி, போர் அரங்குகளில் மெச்சத்தக்க விதமாகச் சேவையாற்ற வைத்தான். எதிரி நகரக்கூடும் என அரவம் தெரிந்த இடங்களிலெல்லாம், அந்தத் தளபதி ஊன் உறக்கமின்றிக் கிடந்தான். ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ‘நிலை’ காட்டினான். அல்லும் பகலும் ஓய்வின்றி நின்று, அரண்களுக்கு அமைவிடம் சொன்னான். அந்த நாட்களில் லெப்ரினன்ற் கேணல் நவநீதனின் உற்ற துணையோடு அவன் செய்து முடித்த பணிகள் ஏராளமானவை. அன்றொருநாள், வற்றாப்பளை அம்மன் கோவிலில் கொடியேறி திருவிழா ஆரம்பித்திருந்தது. சிங்களப் படையிடம் அனுமதி வாங்கி, செஞ்சிலுவைச் சங்கத்திடம் அனுசரனை பெற்று, வன்னி நில மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிய அந்தப் பெருவிழா மீது, சிங்கள வெறியர்கள் பீரங்கிக் குண்டு பொழிந்து நாசப்படுத்திய கொடூரம் நடந்தது. செய்தியறிந்தபோது நரேஸ் கொதித்தான். அந்தத் துயரம் அவனது இதயத்தில் அம்புகளாய்த் தைத்தது. “பதிலடி கொடுத்தே தீருவேன்” அந்த மணித்துளியிலேயே சொல்லிவைத்தான். காயமடைந்தவர்களுக்கு உதவவென அவன் அவன் அனுப்பி வைத்த வாகனங்கள், கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருக்க, முல்லைத்தீவு முகாமின் கரையோரக் காவல் வியூகத்தை வேவுபார்க்க ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தான் அந்தத் தளபதி. இருள் விலகாத ஒரு அதிகாலையில் அந்தப் பதிலடித் தாக்குதல் நடந்தது. முன்னணி வீரர்களுள் ஒருவனாக நரேஸ் களத்திலிறங்கினான். பகைவனுக்கு அடி பிடரியில் விழுந்த, அதிசயமான தாக்குதல் அது. எப்படி அது சாத்தியமானது என்பதை, இன்றுவரை எதிரியால் ஊகிக்க முடியவில்லை. 25 சிங்களப் படையாட்களைக் கொன்று, ‘பிப்ரிகலிப’ரோடு ஆயுதங்களையும் எடுத்து வந்த அந்தத் தாக்குதலில் இழப்பேதுமில்லைப் புலிகளுக்கு. ‘புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிங்களப் படை அகலக்கால் வைத்தால், அது மிக ஆபத்தாகவே முடியும் என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது” என்று சொன்னது பி.பி.சி. முல்லைத்தீவு பழைய இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த மினி முகாமைத் தாக்கி, 9 படையினரின் உடல்களையும், ஆயுதங்களையும் எடுத்து வந்த சண்டை, கடற்கரையோர ரோந்து அணியொன்றினைத் தாக்கி 6 படையினரைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சண்டை. முல்லைத்தீவிலிருந்து அலம்பில் நோக்கி நகர்ந்த படையினரை எதிர்கொண்டு, ஓய்வு உறக்கமின்றி பதினொரு நாட்கள் மோதிய தொடர்ச் சண்டை என, அந்த வீரனின் சாதனை வரிசை நீளமானது. இப்போது, கிளிநொச்சிக் கோட்டச் சிறப்புத் தளபதியாகப் பணி. எவருக்குத் தெரியும் இதுதான் நாங்கள் அவனோடு வாழப்போகும் கடைசி வருடம் என்று? அந்த மக்களின் உயர்வுக்காக, அந்தப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்காக அவனது நாட்கள் உரமாகின. ஏற்கெனவே பட்ட வெடிகளினால் இயற்கை அமைப்பு மாறிப் போன இடது காலுடன், ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதி அரண்களைச் சுற்றிச் சுற்றி நடந்து தாக்குதலுக்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த பொழுதுகளிலும் – சமூக மேம்பாட்டுப் பணிகளில் நேரமொதுக்கி ஈடுபட்டான். துவங்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்குத் தடங்கல்கள் வந்தபோது, நீக்கி நிவர்த்தி செய்தான். உதவிகேட்டு வந்தவர்கள் கைநீட்டி, நின்றபோது, கைகொடுத்தான். “செய்து தருவேன்” எனக் கொடுத்த வாக்குறுதிகளை, தலைமேல் வைத்து செய்து முடித்தான். ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும், அந்தத் தளபதி, மக்களின் குறை துடைக்க நடந்தான். பாடசாலைக்குச் செல்லாத பள்ளிச் சிறுவர்களுக்கு, படிப்பின் முக்கியத்துவத்தைப் பரிவோடு எடுத்துரைத்தான். குப்பையாகத் திரிந்த பையன்களைக் கூப்பிட்டு அணைத்து, துப்புரவைப்பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நகம்வெட்டி, தலைக்கு எண்ணை தேய்த்து, சுத்தமாய் இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தான். காஞ்சிபுரம் கிராமத்தில், இராணுவத்தின் மிதிவெடியில் காலை இழந்த ஒரு ஏழைச் சிறுவன், பள்ளிக்கூடம் செல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை அறிந்த போது, நரேஸ் துடித்துப் போனான். செயற்கைக்கால் செய்து அனுப்பி வைத்துவிட்டு, பொருத்திக்கொண்டு பையன் படிக்கப்போவதை, மகிழ்வோடு பார்த்துச் சிரித்து நின்றது அந்த உள்ளம். நாயகன்! தமிழல்லாத பெயர்களை மாற்றச் சொன்ன போது, வன்னி மாநிலத்தின் அந்த நாயகனுக்கு, ஆசையோடு நாங்கள் இட்ட பெயர் அதுதான். எவ்வளவு அற்புதமாக அந்தப் பெயர் அவனுக்குப் பொருந்தியிருந்தது. தாய்பிள்ளை ஆகி இருந்து எங்களை நல்வழிப்படுத்தினானே, தவறிழைக்கும் போதெல்லாம் சின்னக் குழந்தைக்குப்போல பாசத்தைக் கொட்டியல்வலா சொல்லித் திருத்தினான்… எங்கே போய்விட்டான்? காலையிலிருந்து இருளும்வரை, உணவு உடையிலிருந்து உறங்கும் வரை எங்கள் ஒவ்வொரு அசைவுகளிலும் கண்ணுக்கு இமையாக இருந்தானே…. ஏன் இப்படித் திடீரென இல்லாமல் போனான்? தலைவனின் சிந்தனைக்கெல்லாம் செயல் வடிவம் கொடுத்து வென்று, தளபதி தீபனின் தோளுக்குத் தோள் கொடுத்து நின்று, வன்னி மண்ணுக்குப் பெயரையும் புகழையும், பெருமையையும் சேர்த்துத் தந்தானே…. இனி வரவேமாட்டானா? கறுத்த மேனி, கவர்ந்திழுக்கும் வசீகரம், வட்ட முகத்தில் பளிச்சிடும் சிரிப்பு. உருளும் விழிகளால் கதைபேசி, எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த நாயகனை, இனி நாங்கள் பார்க்கவே முடியாதா? அந்த நாள் 28.08.1993. நம்ப முடியாமலல்லவா இருந்தது!……… இடியென மோதி, எங்கள் நெஞ்சங்களைப் பிளந்து சென்ற அந்தச் செய்தி பொய்யாகிப் போகாதா என்று நாங்கள் ஏங்கினோமே. கிளாலிக்கு எதிரி படையெடுக்கப் போகிறானாம் என்றபோது, விழி சிவந்தல்லவா நின்றான்! “எங்கள் மக்கள் பாதை வழியே எதிரி வந்து தடுத்து நிற்பதா?” என்று பொங்கினானே. போருக்குப் புறப்படும்போது கூட, “வென்றுவருவேன்” என்று தானே சொல்லிவிட்டுச் சென்றான்!…….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே பொய்விட்டானே…… யாழ். குடாநாட்டின் உயிரிற்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த புலோப்பளைச் சமரில், வன்னி நிலத்தின் அந்தப் போர்த் தளபதி, எங்கள் நரேஸ் வீழ்ந்து போனான்! எதிரி ஏவிவிட்ட பீரங்கிக் குண்டொன்று எங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் கொள்ளும் அந்தக் கணப்பொழுதை ‘ஒளிவீச்சு’ எங்களுக்குக் காட்டியது. நெஞ்சு தவிக்க நாங்கள் பார்த்தோம். தென்றலாக வீசிய அந்தப் புயல் ஓய்ந்து போனது! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1994). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nares/