Search the Community
Showing results for tags 'மிதயா கானவி'.
-
சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாகவும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான். காலம் அவனை மருத்துவத்துறைக்கு அனுப்பியது. .மருத்துவப் போராளியாக இருந்த போதே பல் மருத்துவத்தைக் கற்று அதில் சிறப்பு பெற்று வளர்ந்தான். போராளிகளின் பயிற்சி முகாம் தொடங்கி விசேட பாசறைகள் வரை சுதர்சனின் நடமாடும் பல் வைத்திய சேவை விரிந்தது. அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ சேவையுடாக ஊர் ஊராய் சென்று மக்களின் பல் நலன்காத்த உத்தம புத்திரன். 2002 ஆம் ஆண்டின் பின்னர் முற்று முழுதாக மக்களிற்காக மருத்துவ தேவையைப் பார்த்து கொண்டிருந்த தமிழீழ நிழலரசின் அங்கமான தமிழீழ சுகாதார சேவையில் சுதர்சனின் கால்கள் பதித்த நாட்கள் முதன்மையானவை. போராட்ட வாழ்வில் அவன் மக்களிற்கு மருத்துவ சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினான். வடக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் வரை அவன் கால்கள் பதிந்தன. தமிழீழ சுகாதார சேவையின் ஓயாத புயலானான். தியாகதீபம் தீலிபன் மருத்துவமனைகளிலும் சிறப்புப் பல் வைத்தியனாக வலம் வந்தான். பாடசாலை மணவர்களும் சுதர்சனை மறந்து விடமாட்டார்கள் .பற்சுகாதர அணியுடன் ஒவ்வொரு பாடசாலைகளாய் ஏறியிறங்கி வர, முன் காப்பதற்காய் பற்சுகாதாரம் பற்றி தெளிவூட்டல் கருத்தரங்குகளை மாணவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் புரியும்படி செயற்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. எப்பொழுதும் சோர்ந்து போகாத மனவுறுதி கொண்டவன். தன்னுடன் சேர்ந்து பணிபுரிவோர்களையும் உற்சாகமாகவே வைத்திருக்கும் நகைச்சுவை திறன் கொண்டவன். எப்போதும் மற்றவர்களின் திறமைகளை பார்த்து வாழ்த்துவதில் பின் நிற்கமாட்டான். ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் வாகனவசதி கிடைக்காவிட்டாலும் ஏதோவொரு வழியில் சென்று கடமை முடிப்பான். தூக்கம், பசி எல்லாமே அவன் கடமை கண்டு அஞ்சிப்போகும். ஒரு பொழுது அக்கராயன் மருத்துவ மனையில் வேலை முடித்து இரவு இரண்டு மணியளவில் கிளிநொச்சியில் உள்ள எமது கிளி மருத்துவ மனைக்கு வரும் வழியில் நித்திரை’, பசி களைப்பால் வந்த அசதியால் கோணாவில் அக்கரையான் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப்பெட்டியுடன் மோதி மூக்கில் காயத்துடன் இரத்தம் சிந்த வந்து சேர்ந்தான். நண்பர்கள் எல்லோரும் “நின்ற பெட்டியை உடைத்த பெருமைக்குரியவ ன்” அதை சொல்லி சொல்லி சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்து சமாளித்து விடுவான். மூக்கில் தையல்கள் போடப்பட்டன அன்று, அடுத்த நாள் நாகர்கோவில் பகுதியில் மக்களிற்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒழுங்கும் ஒன்று இருந்தது. “சுதர்சன் நீங்கள் வர வேண்டாம் தையல் போட்டிருக்கு, பற் சிகிச்சையை நிறுத்திவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று பொறுப்பு வைத்தியர் கூற இல்லை என்று அடம்பிடித்து முதல் ஆளாய் பற்சிகிற்சைப் பொருட்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டது, இன்றும் அவன் பணிபற்றியதை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றது. சில நாட்கள் முன் கிளிநொச்சி மாவட்ட வேராவில் கிராமத்தை சேர்ந்த வயதான தாயொருவருடன் கதைத்தேன் எந்தத் தடுமாற்றமும் இன்றித் தெளிவாகப் பெயர் சொல்லி “சுதர்சன் டொக்டர் இப்போ எங்கே” எனக் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்ற எனக்கு அந்தப் பிள்ளை என்ர பல்லை எப்படி நோகாமல் கொள்ளாமல் வடிவா கதைச்சு கதைச்சுப் பிடுங்கிவிட்டவர். வெற்றிலை போடக்கூடாது ,புகையிலையும் போட வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் கிளினிக்( clinic ) வரும் போது சொல்லிச் சொல்லி நிறுத்த வைத்திட்டார். தங்கமான பிள்ளை அது தான் என்ர வருத்தம் எல்லாம் குறைஞ்சு உயிருடன் இருக்கிறன். இந்த வயது வரை அதை நான் மறக்கவில்லை என்றார்” இவரைப் போல் இன்னும் எத்தனை அம்மாக்கள் உன்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள் சுதர்சன். இவன் நாட்டிற்கும் எம் மக்களிற்கும் செய்த சேவைகளை மறந்து போகமாட்டார்கள். ஊர் உறங்கிப் போனாலும் உன் நினனவுகள் .ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் எம் மண்ணிலிருந்து……………….. இவனது சேவையின் சாட்சியாய் இவரைப் போல் இன்னும் பலரும் உயிருடன் உள்ளனர். நீ மட்டும் இன்றில்லை மருத்துவ பொருட்களிற்கு தடை போட்ட நாட்களில் கிடைத்த தொழில் நுட்பத்தில் Diagnostic Radiology (X _ray) பரிசோதனைகள் செய்வதில் அன்று நீ எங்கள் போராளி நோயாளிகளின் கதாநாயகன். “சுதர்சன் அண்ணா எப்ப எக்ஸ்ரே எடுக்கிறது” என்று மருத்துவமனையில் உள்ள என்பு முறிவு நோயாளர்கள் உன்னையே சுற்றுவார்கள். அதற்கான மருத்துவப் பொருட்கள் வரும்வரை அவர்களை சமாளிக்க நீ படும்பாடு. ஏன் எம்மைக் கேட்டாலும் நாம் தப்பிவிட உன்னைத் தானே காட்டுவோம். உனக்கு உதவியாக எந்த போராளி வந்தாலும் உனக்கு தெரிந்தவற்றை அவர்களிற்கு சொல்லிக்கொடுத்து அவர்களை அத்துறையில் வளர்ப்பதில் உனக்கு நிகரில்லை. மருத்துவப் பிரிவில் மட்டுமின்றி படையணி போராளிகள், பொறுப்பாளர்கள் ,தளபதிகள் என்று நட்பு பாராட்டிய தோழன் “எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த நீ, இன்று எல்லோரையும் தேடலில் தவிக்க விட்டுச் சென்றாயே. யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலாவது ஆளாக வந்து நிற்பாயே ”! அன்றொரு நாள் உடனே இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தபோது முதலாவது ஆளாக நீதானே தந்தாய். சுதர்சன்.உன் நினைவுகள் என்றென்றும் எம்முடன் வாழும்”. இவ்வாறு அண்மையில் பெண் போராளி இவன் நினைவைப் பகிர்ந்து கொண்டாள். இவன் தன் தேசத்தை மட்டும் நேசிக்கவில்லை. நண்பர்களையும் அதிகமாக நேசித்தான். அவர்கள் எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து முடிப்பது இவனுக்குத் தனிச்சிறப்பு . சில வேளைகளில் நண்பர்களிற்காக நீயே தண்டனையையும் பெற்றிருக்கின்றாய். அவ்வளவு பரந்த மனம். மற்றவர்களின் மகிழ்வில் இவன் முகம் மலரும். , இவனுக்கு நண்பர்கள் பல செல்லப்பெயர்களை வைத்து அழைத்த போதும் நீ கடிந்து கொண்டதாய் நான் அறியவில்லை. சுதர்சன் உந்துருளியில் பயணிக்கும் போது வீதியால் எந்தத் தாய் நடந்து வந்தாலும் அவர்களை ஏற்றி உன் பயண முடிவுவரை அழைத்துப் போவாய், இன்று அமரத்துவம் அடைந்து விட்ட மாவீரனின் தாயும் நாட்டுப்பற்றாளரும், மருந்தாளருமாக இருந்த கந்தசாமி அம்மாவை நான் பார்த்த போது கட்டிப்பிடித்து கதறிவிட்டு சுதர்சன் எங்கே இருக்கிறான் என்று கேட்டா நான் நொருங்கிய இதமாய் தவித்து உன் செய்தியை ஆறுதலாகவே சொன்னேன் உன் இழப்பிலிருந்து மீளமுடியாது தவித்தா, “என்ர பிள்ளை எங்க கண்டாலும் என்ன ஏத்தி கொண்டுபோய் விடும்” தன் மனத்திற்கு எது சரியோ அதை செய்துவிடுவான்.புகைப்படம் எடுப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இப்படியான குறும்பு தனங்களிற்கு தண்டனை வாங்குவதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை அவன். நான் பிரான்ஸ் சென்ற போது உன் நண்பர் ஒருவர் புகைப்படங்களை வைத்து உன் நினைவில் உருகிப்போய் இருப்பதை பார்த்தேன், உனக்கு எப்போதும் பிடித்த இந்த பெட்டி சேட் புகைப்படங்கள் அவரிடம் பெற்றதே உன் காதுகளிற்கு கேட்காத இந்த நினைவுகளை நாம் எமக்குள் சொல்லிக் கொள்கின்றோம், உன் அன்பிற்கும் மதிப்புற்குமான மூத்த வைத்தியர்கள் உன் பற்றிய நினைவுகளை பேசும் போதெல்லாம் உடைந்து போகின்றார்கள். உன் உறவுகள் நீ இல்லாத செய்தியால் கண்ணீரில் கரைகின்றனர்…. உனக்கு கேட்காத அந்த செய்திகளை நாம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றோம்… இறுதி நாளில் நீ எங்கே போனாய் என்று இன்றுவரை அறியாதவர்களாய்த் தேடுகின்றோம் எப்படி மறப்பது நடமாடும் வைத்திய சேவையின் தமிழீழச் சிறப்பு பல் மருத்துவர் சுதர்சன் ஒன்றாக இருந்த நாட்களை இறுதியாக வட்டுவாகலில் மே 17,ம் திகதி வைத்து விசாரணைக்காக இலங்கை இராணுவ புலானாய்வு துறையினர் கூட்டி சென்று இருத்தி வைத்திருந்ததை பார்த்ததாக உன் நண்பன் வண்ணன் கூறினான். இன்று வரை எங்கே என்று தேடுகின்றோம். சுதர்ஷன் பற்றிய நினைவுகள் நெஞ்சக்கூட்டை பலமாய் அழுத்துகின்றது. நிஜமாக அவனுடன் பேசமுடியவில்லை எம் நிழலாக விட்டுச்சென்ற கனதிகளுடன் பேசுகின்றோம். மிதயா கானவி.
-
ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ – பிரசன்னா அண்ணா
நன்னிச் சோழன் posted a topic in மாவீரர் நினைவு
சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்களை பிடுங்கி இடம்மாறிவிட்டதால் அரை நாள் பொழுதில் இடம் காலியாகியது. மக்கள் வள்ளிபுனம் பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் நாங்கள் குழந்தைகளை வங்கருக்குள் இருத்தி விட்டு வாசலில் இருக்கின்றோம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க்க தொடங்க இனி இருக்க முடியாது ஆமி கிட்ட வந்திட்டான் என்று ஊகிக்க முடிந்தாலும் தொடர்ந்து விழுந்து கொண்டே யிருந்த எறிகைணகள் வெளியில் குழந்தைகளை அழைக்க அச்சமூட்டியது. ஆளையாள் தெரியாத மம்மல் இருட்டில் எங்கு பார்த்தாலும் தீ பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. அப்போது தோளில் தொங்கும் துப்பாக்கியுடன் எங்கள் முன் பிரசன்னா அண்ணா வந்து நின்றார் பிரசன்னா அண்ணா வின் குழந்தைகள் அவரின் குரலைக்கேட்டு “அப்பா என்றார்கள் குதுகலமாய். வங்கருக்க இருங்க” வரவேண்டாம் என்றார் . அவரது மனைவி எதுவும் பேசாது மெளனமாய் இருந்தார். நானும் அப்படியே அவரையே பார்த்தேன் எதையாவது களநிலை சொல்வார் என்று .. ஆனால் அவரிடம் சொல்வதற்கு அன்று நல்ல செய்தியில்லை…. “நின்ற நிலையிலையே கண்கள் கொப்பளிக்க ஏன் இன்னும் இருக்கிறிங்கள் வெளிக்கிட்டு போங்கோ என்றார். “ஆமி கிட்ட நிக்கிறான்” இன்னும் ஒன்றையும் எனக்கும் அவரது மனைவிக்கும் தெளிவாக சொன்னார். “ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ ஆமி யை கண்டாலும் ஓடுங்கோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் கடமைக்கு திரும்பிவிட்டார் நாங்களும் உடனடியாக கால்கள் போன திசையில் குழந்தைகளுடன் அவ்விடத்தைவிட்டு நடந்தோம். இது தான் நான் அவரைப்பார்த்த இறுதி நாளும் குரலும் இன்னும் அப்படியே ஈரமாய் அப்பிக் கிடக்கிறது பிரசன்னா அண்ணா ஒரு உறவினராக இருந்தாலும் போராட்ட களங்களில் தான் நான் அதிகமாக அறிந்திருக்கின்றேன் அடிக்கடி அவரை சந்தித்துக் கொள்வது நான் வேலை செய்த மருத்துவமனையிலும் மாவீர்துயிலும் இல்லத்திலும் தான் அதை விட களமுனையிலும் அவரது திறமைகளை பார்த்து வியந்திருக்கின்றேன். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும் வன்னேரியில் இயங்கிய நீலன் மருத்துவமனைக்கு அவரினது துறை சேர்ந்த காயமடைந்திருந்த போராளி ஒருவரை சந்திக்கவந்திருந்தார். அப்போது இரவு காயமடைந்து வந்த போராளிக்கு 0_ மைனஸ் குருதிவகை தேவைப்பட்டது . எங்களிடம் வாகன வசதியும் இருக்கவில்லை எங்களிடம் இருந்த இரு குருதி பைகளும் ஏற்றி முடிவதற்குள் இன்னுமொன்று வேணும் என்ன செய்வது என்று ஒவ்வொருவராகா தேடிக்கொண்டிருந்தேன் கடவுளைப்போல் பிரசன்னா அண்ணா வந்து இறங்கினார் ஓடிப்போய் நிலமை சொல்லி உதவிகேட்டேன் .பதில் கூட சொல்லாமல நின்ற இடத்திலிருந்து அண்மையில் இருந்த அவரது முகாங்களிற்கு தொடர்பு கொண்டு 0 மைனஸ் குருதியிருக்கிறார்களா என்று கேட்டு ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியபின் என்னிடம் வந்து சொன்னார் .(போராளிகளிற்கு முன்னரே குருதிவகை தெரியும்) “நான் ஒரு ஒருவரை கொண்டுவாறன்” என்று வந்த வேலையை விட்டு திரும்பி சென்று அந்த போராளியை அழைத்து வந்தார் இது அவரது பணி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு போராளின் உயிரின் பெறுமதி அறிந்தவர்.இப்படி காலம் தேவை அறிந்து பணி செய்பவன் போராளியாக தனித்துவம் அடைகின்றான். பல தடவைகள் விழுப்புண்ணடைந்து மீளக் களம் சென்ற வீரன். நெடிய உயரிய தோற்றமும் எப்போதும் குறு குறு என விழித்திருக்கும் புலணாய்வு கண்களும் தனியாக கம்பீரம் கொடுக்கும் . எப்போதும் மரணத்திற்குள் வாழ்ந்தவன் மரணம் அவனைக் கண்டு அஞ்சிய நாட்கள் பல உண்டு . எப்போதும் எதையோ சாதிக்க துடிப்பவன் பல்துறை ஆளுமையாளன் போர்கலையில் மட்டுமன்று விளையாட்டிலும் சிறந்த வீரன். இவனைப்பற்றி வெளியில் தெரியாத பக்கங்கள் பல உள்ளன. இவனின் இலட்சிய உறுதியின் சாட்சியாய் எமது தேசத்தையும் மக்களையும் காக்க முள்ளிவாய்க்காலில் காவியமானான் இன்னும் தொடரும் நினைவுகள் …. மிதயா கானவி 17.05.20 -
பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது. களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள். அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே. மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார். எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது. அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம். அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன. தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான். எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும். அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார். கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது . இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும். முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் …. “எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா. என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான் முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய் வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை. நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.” “ஓ நல்ல ஐடியா ….. நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன். தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது . ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம். இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம். அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது. எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது . ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது. நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும். ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும். அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம். செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று…. அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை. விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில். அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை” யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “ அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் . ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது. “நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி . சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம். நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது . மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான். வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது. ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை . மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது. ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான். பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம். அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது. இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை . ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது, எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம். அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள். நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது . ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது . மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது. மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான் “எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே. ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள். இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன. அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை . மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது. பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல். சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும். வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் . அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது. அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார். நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்…. பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார் இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம். அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார். கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள். எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை. அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன். முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான். ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும் “வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர். எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன். “ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான். “ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “ “.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம். இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு. ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது. “கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன். வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்) நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும். மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான். “மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் . பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன். என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான். அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன். காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது. வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்ஆண்டு தன்னை போராளியாகமாற்றிக்கொள்கின்றன். தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது புதல்வனே ஞானேஸ்வன் என்ற இயற்பெயர்கொண்ட மணி இவனது மூத்த அண்ணா 1988இல் போராளியாகி1992 ம் ஆண்டு இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு அக்காவும் தம்பி அண்ணா என்று பாசத்தில் கரைந்தள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்கபுறப்பட்டான் ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி மனித நேய கன்னிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான். உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள். அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும் 12.08.2006 அன்று கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் . எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே…. மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம். சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும். ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான். இது ஒரு கதையில்லை இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்? மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம். பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது. காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள். மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது. குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள் -நன்றி- மிதயா கானவி.
-
ஒவ்வொரு நாளும் வாழ்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நினைக்க வைத்து விடும் அப்படித்தான் இன்றும் நெல்ஷா அக்காவின் நினைவுடன்… வழமையான பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னமகள்(கவிநிலா)விற்கு இரவு தூக்கத்திற்கு போகும் போது கதைசொல்லவேண்டும் இன்று வழமைக்கு மாறாக மகளிடம் நான் கேட்டேன். “அம்மாவிற்கு தூக்கம்வரவில்ல இன்று நிங்கள் கதை சொல்லி என்னை முதலில் தூங்கவைத்த பின்தான் தூங்கவேண்டும் என்றேன் சரி இதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி முதலில் கண்களை இருவரும் மூடுவம் என்றாள் .இப்போ நான் சொல்லுவதை கற்பனை பண்ணுங்க எண்டன் ஒரு பட்டியில் நிறைய ஆட்டுக்குட்டிகள் நிக்கிறது தெரிகிறதா? என்ன நிறம் எண்டு கேட்டன் பிடிச்ச கலரைவையுங்கள் என்றாள் இப்போ ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றாய் பாய்ந்து கடவையை கடந்து வெளியே போகபோகுது நிங்கள் எண்ணுங்கள் என்றாள் … அப்போது தான் எனக்கு இன்னொரு நினைவு வந்தது ஆட்டுக்குட்டிகள் நிக்கட்டும் நான் இப்போ உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன் … மேஐர் நெல்ஷா அக்காவும் நானும் யெயசுக்குறு களமுனைக்கு இருந்த பிரதான கள மருத்துவமனை நிலையத்தின் பதுங்குழி பக்கத்தில் படுத்திருக்கின்றோம் வானத்தில் வெள்ளி பூத்து கிடக்கிறது. நெல்ஷா அக்கா களமருத்துவமனைகளிற்கு பொறுப்பாகவிருத்தவா அவாவிடம் இருந்தது ஒரு சயிக்கிள்தான் ஓமந்தையில் இருந்து மன்னார் வரையும் அதிலதான் போய் எல்லா வேலைகளையும் கவணிப்பார். இயக்கம் சொத்துகளை பாதுகாப்பதிலிருந்து. சிக்கனப்படுத்துவதுவரை சரி வர செய்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். அவளுடன் நல்லா பழகியவர்களிற்கு தெரியும் அவளது இழகியமனம். எங்களுக்கு அவா வாறது என்றால் நல்ல சந்தோஷம் சாப்பாட்டு சாமன்களும் கச்சானும் கொண்டு வருவா அவாட சகோதரன் பணம் அனுப்பி இருந்தால் அதிவிசேடமான உணவுப்பொருட்களுடன் வருவாள். அவளிற்கு வாங்கிக்கொடுக்கிற உடுப்புகளை தான் போடமாட்டா களத்தில் நிற்கும் பிள்ளைகளுக்குதான் கொடுப்பா இடையிடையே மகளின் கேள்விகளுக்கு பதிலும் சொல்லிக்கொண்டு இருவரும் ஓமந்தை கிழவன்குளத்தில் நடந்து கொண்டிருந்தோம். எவ்வளவு களைத்துப்போய் வந்தாலும் வந்தவுடன சயிக்கிள துடைச்சு போட்டுதான் வருவா இப்படிதான்ஒர் இரவு படுத்திருக்கும் போது நித்திரை வர இல்லை என்றேன் வானத்தில இருக்கிற நட்சத்திரத்தில் 108ஜ சரியா க எண்ணி முடித்தால் உனக்கு பிடித்தவங்க கனவில் வருவார்கள் என்றா .மகள் கேட்டா எண்ணி முடித்திங்களா என்று இல்லை இடையில் நித்திரை என்றேன். இப்போ அந்த அன்ரி எங்க என்று கேட்க வீரச்சாவு என்றேன்அவா பற்றி சொல்ல நிறைய இருக்கு நேரம் அதிகாலை 1.30ஆகிவிட்டது நாளைக்கு சொல்கின்றேன் என்றேன். இன்று அக்கா கானநிலாவும் சேர்ந்துகொண்டா அந்த நெல்ஷா அன்ரி பற்றி மிச்ச கதையை சொல்லுங்க என்று….. எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நாம் சொல்லாமல் யார் சொல்லப்போறார்கள். மிதயா கானவி
-
அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை. இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. ஒரே தங்கையும் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போராடவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். "உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி" "என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வாழ்ந்தான் . பாடசாலை கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்த ஈடுபாடுடையவனாக இருந்தவன். ஆரம்ப கல்வியை பொக்கனை மகா வித்தியாலத்திலும் பின்னர் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலத்திலும் கற்றுக்கொண்டிருந்தான் வலிகாம இடப்பெயர்வுகளின் போது மக்கள் பட்டவலிகளை எண்ணி கண்கலங்கி அவர்களிற்கு மாணவராக உள்ளபோதே பல உதவிகளை செய்தான். "அண்ணா ஏன் எங்களை விட்டிற்று போறாய் என்ற தங்கைக்கு வீட்ட இருந்தால் யார் உங்களுக்கு பாதுகாப்பு தாறது" என்று சொல்லி.சென்றவனின் ஒரே தங்கை குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டுவிட்டு மாத்தளனில் எறிகனை வீச்சில் பலியானாள் என்ற செய்தியை அவன் இருந்தால் இன்று தாங்கியிருக்கவே மாட்டான். 1997 ஆண்டு போராளியாக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு லெப் கேணல் தமிழ்வாணன் அண்ணா விடம் சென்று இணைந்து கொள்கிறான். பின்னர் அடிப்படைப்பயிற்சி முடிக்காமலே மருத்துவ பிரிவின் வன்னி மேற்கின் நிர்வாக முகாமின் நிர்வாக வேலைகளிலும் தொலைத் தொடர்பாளராகவும் கடமை செய்து கொண்டிருந்தவனின் திறமைகளை இனங்கண்ட மருத்துவ பொறுப்பாளர் மருத்துவ கற்கை நெறியை தொடங்க அனுப்படுகின்றான். .அதன் பின்னரான செயல்பாடுகளில் மருத்துவ போராளியாகிய பின்பே அடிப்படை இராணுவப்பயிற்சியையும் பெற்று கொண்டு படிப்படியாயக வளர்ச்சிகண்டான். மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய் எமது மருத்துவ குழுவில் இருந்தாலும் அவனிடம் சிறந்த அறிவும் ஆழுமையும் நிறைந்து கிடந்தன.. யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறாதவன் . தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும். பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. சரியான குறும்புக்காரன் ஒரு பொழுது குளவிக்கூட்டிற்கே கல் எறிந்து குளப்பிவிட்டு ஓடியவன் .இன்னொரு நாள் யாள்வேள் மருத்துவ மனையில் மதியநேரம் வெயில் உச்சத்தைதொட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் பகுதியின் வாசலில் கஜேந்திரன் குரல் "அவசரமாக திருமணமான அக்காக்கள் எல்லோரையும் டொக்டர் வரட்டாம் வேகமாக வரட்டாம் " அப்போது தான் வேலை முடித்து சாப்பிட்டு கொண்டிருந்த எல்லோரும் அரையும் குறையுமாக ஏன் என்ற வினாவுடன் அவசரமாக ஓடுகின்றார்கள். இரத்த வங்கியில் நின்ற என்னிடமும் சொல்கின்றான் "டொக்டர் வரட்டாம் அனுமதிக்கும் விடுதிக்கு உங்களை " நானும் செல்கிறேன் எதுவும் அறியாதவனைப் போல் நின்று விட்டு சரி எல்லோருக்கும் ஒரு விடயம் "நாளைக்கு வரும்போது கோல்மஸ்(colmans) பைக்கற் ஒன்று வேண்டிக்கொண்டுவாங்கோ எறிக்கும் வெயில் தாங்க முடியல்ல என்ன Brand என்று குயில் அக்கா விடம் கேளுங்கள் சரி நீங்கள் எல்லோரும் போய் வச்சீட்டுவந்த சாப்பாட்டை சாப்பிடுங்கோ நான் சொன்னதை மறக்க வேண்டாம் " என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் .இப்படி பல குறும்புகள் அவனை பேசிவிட்டு போனாலும் அடுத்த நிமிடம் வந்து நிற்பான். நோயாளர்களை அன்பால் தன் வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை தயாரித்து கொடுத்தல் .சதுரங்கம் விளையாடல் என்று அவர்களுடன் தோழமையுடன் ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன்..அவனின் பாரமரிப்பில் இருந்த எந்த போராளி நோயாளர்களும் அவனை இன்றும் மறந்து விடமாட்டார்கள் . சற்று சாய்வான துள்ளல் நடையும் கூரிய பார்வையும் விரல் நகங்களை கடிக்கும் குறும்புக்காற கஜேந்திரன் தான் இத்தனை திறமைகளின் சொந்தக்காறன். கணனி பாவணை பெரிதாக இல்லாத காலத்திலே அந்த துறைசாரந்த தேடலும் அறிவும் அவனிடம் இருந்தது "மென்பந்து,கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவான். . ஒரு முறை உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று கொண்டிருந்ததை வெளியில் சென்று பார்த்து விட்டு வந்து தானே தலைமை வைத்தியரிடமும் அதைப்பற்றி கலந்துரையாடி அதற்கு தண்டனையும் வாங்கினான் ."ஏன் பொல்லை கொடுத்து அடிவாங்கினாய் "தம்பி என்று கேட்டபோது சரி பாவம் தானே அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றான் சாதாரணமாக .. மருத்துவ பிரிவில் மாதாந்தம் நடத்தப்படும் பொது அறிவு பரீட்சை யில் அனேகமாக அவனுக்கு தான் முதல் இடம் கிடைக்கும் .எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும் . போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். முக்கியமான மருத்துகளை இல்லை என்று சொல்லி கைவிரிக்காது சேகரிப்பில் வைத்திருந்து மிக அவசர நிலைலைகளில் தன் தொழிற் திறமையைக்காட்டி பொறுப்புவைத்தியர் அஜோ விடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்மாஸ்ட்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வரவேண்டியிருந்த காலம் அது . தானே நேரடியாக சென்றுவிடுவான் . திரும்பி வரும் போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும். அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையில் இருந்த நாட்களில் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைப் பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழீழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக் கூறுகிறார் " சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும், மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டான். " இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட கஜேந்திரனின் களங்கள் மேலும் விரிந்தன. 2006 ஆண்டு சமாதான இடைவெளியின் பின் மீண்டும் போர் தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது. கடற்புலிகளின் ஆழ்கடல் வினியோக கப்பல் தொகுதிகளில் பணிபுரியும் போராளிகள் தரைக்கு வருவது சில நாளோ மாதங்களோ தடைப்படலாம் அதனால் போராளிகள் காயமடைந்தாலோ நோய் வந்தாலோ ஆழ்கடலில் தான் நின்று சிகிச்சை பெறவேண்டும் என்று கடற்புலிகளின் தளபதிகளின் முன்கூட்டியே கணிப்பின் பின் அதற்கான சிறப்பு மருத்துவ போராளி ஒருவரைக் கேட்டிருந்தார்கள் . அதற்கு தகுதியானவராக கஜேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றான். அந்த கப்பலை சென்றடைவதற்காக சரியான களம் கிழக்கு மாகாண மாக அறிவிக்கப்பட்டதால் 2006.6 .மாதம் பல தடைகளை தாண்டி நீண்ட நடைப்பயணத்தில் சென்ற அணியுடன் கஜேந்திரனும் கிழக்கு மாகாணத்தின் வெருகல் பகுதியை சென்றடைகின்றான். அங்கு நின்ற மருத்துவ போராளிகளை சந்தித்துவிட்டு அவர்களிற்கான சில பொருட்களை கொடுத்துவிட்டு தனக்கான பணிக்கு செல்ல காத்திருந்தவன் இரவோடு இரவாக வெருகல் முகத்தூவாரப்பகுயிருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக ஆழ்கடல் வினியோக தொகுதிக்கான சிறப்பு மருத்துவ போராளியாக பயணமாகிறான் பின் ஒரு நாளில் அவன் இல்லாத செய்தி எம் மருத்துவ மனை முழுவதும் நிறைந்தது அந்த வீரர்களின் ஈரவரலாறு ஈழ மண் எங்கும் விதையாகிபோனது. உலக வல்லரசுகள் இலங்கை அரசிற்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் "எம்.ரி. மன்யோசி" (M.T. Manyoshi) எண்ணெய்க் கப்பல் மற்றும் "எம்.வி. செய்ஸின்" (M.V. Seishin), "எம்.வி. கொசியா" (M.V. Koshia) ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளையில் 11.09.2007 அதிகாலை வரை தொடர்ந்து தம்மிடம் இருந்த ஆயுதங்கள் உயிர்ப்பு இழக்கும் வரை தொடர்ந்து போராடினார்கள். இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்கும் கிடைத்தது. மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் முற்பட்டபோது போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிபோயின. அதிலிருந்த போராளிகளும் எதிரியிடம் பிடிபடாமல் சயனைற் கடித்து கடலிலே காவியமானார்கள் .முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலில் தான் கஜேந்திரனும் இருந்தார் இவர்களை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த சிறிய மோட்டார்களை பயன்படுத்தி இறுதிவரை தாக்குதல் நாடாத்தினார்கள் மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்களில் லெப் கேணல் கஜேந்திரனும் (தமிழ்மாறன்).இணைந்து கொண்டான் உன்னத இலட்சியத்திற்காக ஆழ்கடலில் சங்கமித்த இந்த மாவீர்களின் வீரக்கதைகள் ஆர்பரித்து எழும் அலையாகி தினம் அடித்துக்கொண்டேயிருக்கும் .............. -மிதயா கானவி, மருத்துவப் போராளி
-
மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது. களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள். அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே. மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார் எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது. அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம். அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன. தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான். எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும். அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார். கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது . இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும். முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் …. “எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா. என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான் முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய் வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை. நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.” “ஓ நல்ல ஐடியா ….. நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன். தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது . ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம். இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம். அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது. எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது . ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது. நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும். ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும். அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம். செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று…. அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை. விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில். அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை” யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “ அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் . ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது. “நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி . சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம். நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது . மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான். வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது. ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை . மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது. ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான். பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம். அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது. இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை . ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது, எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம். அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள். நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது . ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது . மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது. மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான் “எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே. ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள். இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன. அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை . மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது. பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல். சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும். வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் . அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது. அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார். நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்…. பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார் இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம். அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார். கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள் எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை. அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன். முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான். ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும் “வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர். எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன். “ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான். “ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “ “.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம். இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு. ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது “கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன். வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0➖வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்) நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும். மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான். “மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் . பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன். என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான். அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன். காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது. வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்ஆண்டு தன்னை போராளியாகமாற்றிக்கொள்கின்றன் தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது புதல்வனே ஞானேஸ்வன் என்ற இயற்பெயர்கொண்ட மணி இவனது மூத்த அண்ணா 1988இல் போராளியாகி1992 ம் ஆண்டு இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு அக்காவும் தம்பி அண்ணா என்று பாசத்தில் கரைந்தள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்கபுறப்பட்டான் ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி மனித நேய கன்னிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான். உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள். அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும் 12.08.2006 அன்று கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் . எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே…. மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம். சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும். ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான். இது ஒரு கதையில்லை இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்? மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம். பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது. காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள். மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது. குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள் -நன்றி- மிதயா கானவி. https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/12/95446/
-
- 1
-
- மிதயா கானவி
- மாவீரர்
-
(and 2 more)
Tagged with:
-
லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் கள மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன். அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. அக்காவுடன் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போரவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். “உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி” “என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வாழ்ந்தான் . பாடசாலை கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்த ஈடுபாடுடையவனாக இருந்தவன். ஆரம்ப கல்வியை பொக்கனை மகாவித்தியாலத்திலும் பின்னர் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலத்திலும் கற்றுக்கொண்டிருந்தான். வலிகாம இடப்பெயர்வுகளின் போது மக்கள் பட்டவலிகளை எண்ணி கண்கலங்கி அவர்களிற்கு மாணவராக உள்ளபோதே பல உதவிகளை செய்தான். “தம்பி ஏன் எங்களை விட்டிற்று போறாய் என்ற அக்கா விற்கு வீட்ட இருந்தால் யார் உங்களுக்கு பாதுகாப்பு தாறது” என்று சொல்லி சென்றவனின் ஒரே அக்கா குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டுவிட்டு மாத்தளனில் எறிகனை வீச்சில் பலியானாள் என்ற செய்தியை அவன் இருந்தால் இன்று தாங்கியிருக்கவே மாட்டான். 1997 ஆண்டு போராளியாக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு லெப் கேணல் தமிழ்வாணன் அண்ணா விடம் சென்று இணைந்து கொள்கிறான். பின்னர் அடிப்படைப்பயிற்சி முடிக்காமலே மருத்துவ பிரிவின் வன்னி மேற்கின் நிர்வாக முகாமின் நிர்வாக வேலைகளிலும் தொலைத் தொடர்பாளராகவும் கடமை செய்து கொண்டிருந்தவனின் திறமைகளை இனங்கண்ட மருத்துவ பொறுப்பாளர் மருத்துவ கற்கை நெறியை தொடங்க அனுப்படுகின்றான். .அதன் பின்னரான செயல்பாடுகளில் மருத்துவ போராளியாகிய பின்பே அடிப்படை இராணுவப்பயிற்சியையும் பெற்று கொண்டு படிப்படியாயக வளர்ச்சிகண்டான். மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய் எமது மருத்துவ குழுவில் இருந்தாலும் அவனிடம் சிறந்த அறிவும் ஆழுமையும் நிறைந்து கிடந்தன. யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறாதவன் . தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும். பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. சரியான குறும்புக்காரன் ஒரு பொழுது குளவிக்கூட்டிற்கே கல் எறிந்து குளப்பிவிட்டு ஓடியவன் .இன்னொரு நாள் யாள்வேள் மருத்துவ மனையில் மதியநேரம் வெயில் உச்சத்தைதொட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் பகுதியின் வாசலில் கஜேந்திரன் குரல் “அவசரமாக திருமணமான அக்காக்கள் எல்லோரையும் டொக்டர் வரட்டாம் வேகமாக வரட்டாம்” அப்போது தான் வேலை முடித்து சாப்பிட்டு கொண்டிருந்த எல்லோரும் அரையும் குறையுமாக ஏன் என்ற வினாவுடன் அவசரமாக ஓடுகின்றார்கள். இரத்த வங்கியில் நின்ற என்னிடமும் சொல்கின்றான் “டொக்டர் வரட்டாம் அனுமதிக்கும் விடுதிக்கு உங்களை” நானும் செல்கிறேன் எதுவும் அறியாதவனைப் போல் நின்று விட்டு சரி எல்லோருக்கும் ஒரு விடயம் “நாளைக்கு வரும்போது கோல்மஸ் (colmans) பைக்கற் ஒன்று வேண்டிக்கொண்டுவாங்கோ எறிக்கும் வெயில் தாங்க முடியல்ல என்ன Brand என்று குயில் அக்கா விடம் கேளுங்கள் சரி நீங்கள் எல்லோரும் போய் வச்சீட்டுவந்த சாப்பாட்டை சாப்பிடுங்கோ நான் சொன்னதை மறக்க வேண்டாம் ” என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் .இப்படி பல குறும்புகள் அவனை பேசிவிட்டு போனாலும் அடுத்த நிமிடம் வந்து நிற்பான். நோயாளர்களை அன்பால் தன் வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை தயாரித்து கொடுத்தல் .சதுரங்கம் விளையாடல் என்று அவர்களுடன் தோழமையுடன் ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன். அவனின் பாரமரிப்பில் இருந்த எந்த போராளி நோயாளர்களும் அவனை இன்றும் மறந்து விடமாட்டார்கள். சற்று சாய்வான துள்ளல் நடையும் கூரிய பார்வையும் விரல் நகங்களை கடிக்கும் குறும்புக்காற கஜேந்திரன் தான் இத்தனை திறமைகளின் சொந்தக்காறன். கணனி பாவணை பெரிதாக இல்லாத காலத்திலே அந்த துறைசாரந்த தேடலும் அறிவும் அவனிடம் இருந்தது; மென்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவான். . ஒரு முறை உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று கொண்டிருந்ததை வெளியில் சென்று பார்த்து விட்டு வந்து தானே தலைமை வைத்தியரிடமும் அதைப்பற்றி கலந்துரையாடி அதற்கு தண்டனையும் வாங்கினான். “ஏன் பொல்லை கொடுத்து அடிவாங்கினாய்” தம்பி என்று கேட்டபோது சரி பாவம் தானே அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றான் சாதாரணமாக. மருத்துவ பிரிவில் மாதாந்தம் நடத்தப்படும் பொது அறிவு பரீட்சை யில் அனேகமாக அவனுக்கு தான் முதல் இடம் கிடைக்கும். எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும். போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். முக்கியமான மருத்துகளை இல்லை என்று சொல்லி கைவிரிக்காது சேகரிப்பில் வைத்திருந்து மிக அவசர நிலைலைகளில் தன் தொழிற் திறமையைக்காட்டி பொறுப்புவைத்தியர் அஜோவிடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்மாஸ்ட்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வரவேண்டியிருந்த காலம் அது; தானே நேரடியாக சென்றுவிடுவான்; திரும்பி வரும் போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும் அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையில் இருந்த நாட்களில் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழிழ சுகாதாரசேவைப் பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழிழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி தமிழிழ சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக்கூறுகிறார் “சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும், மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டான்” இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட கஜேந்திரனின் களங்கள் மேலும் விரிந்தன. 2006 ஆண்டு சமாதான இடைவெளியின் பின் மீண்டும் போர் தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது கடற்புலிகளின் ஆழ்கடல் வினியோக கப்பல் தொகுதிகளில் பணிபுரியும் போராளிகள் தரைக்கு வருவது சில நாளோ மாதங்களோ தடைப்படலாம் அதனால் போராளிகள் காயமடைந்தாலோ நோய் வந்தாலோ ஆழ்கடலில் தான் நின்று சிகிச்சை பெறவேண்டும் என்று கடற்புலிகளின் தளபதிகளின் முன்கூட்டியே கணிப்பின் பின் அதற்கான சிறப்பு மருத்துவ போராளி ஒருவரைக் கேட்டிருந்தார்கள். அதற்கு தகுதியானவராக கஜேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றான். அந்த கப்பலை சென்றடைவதற்காக சரியான களம் கிழக்கு மாகாண மாக அறிவிக்கப்பட்டதால் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் பல தடைகளை தாண்டி நீண்ட நடைப்பயணத்தில் சென்ற அணியுடன் கஜேந்திரனும் கிழக்கு மாகாணத்தின் வெருகல் பகுதியை சென்றடைகின்றான்; அங்கு நின்ற மருத்துவ போராளிகளை சந்தித்துவிட்டு அவர்களிற்கான சில பொருட்களை கொடுத்துவிட்டு தனக்கான பணிக்கு செல்ல காத்திருந்தவன்; இரவோடு இரவாக வெருகல் முகத்தூவாரப்பகுயிருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக ஆழ்கடல் வினியோக தொகுதிக்கான சிறப்பு மருத்துவ போராளியாக பயணமாகிறான். உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி 11.09.2007 அன்று ஏனைய மாவீரர்களுடன் வீரச்சாவடைந்த செய்தி பின் ஒரு நாளில் அவன் இல்லாத செய்தி எம் மருத்துவ மனை முழுவதும் நிறைந்தது அந்த வீரர்களின் ஈரவரலாறு ஈழ மண் எங்கும் விதையாகிபோனது. நினைவுப்பகிர்வு: மிதயா கானவி. https://thesakkatru.com/lieutenant-colonel-kajenthiran/
- 1 reply
-
- மிதயா கானவி
- லெப். கேணல் கஜேந்திரன்
-
(and 2 more)
Tagged with: