Search the Community
Showing results for tags 'மின்னல்'.
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச் சென்றான். இவன் பிறந்த இடம் கூடலும் கடல் சார்ந்த நிலமுமான ஒரு நெய்தல் நிலமுமான ஒரு நெய்தல் கிராமமாகும். உடுத்துறைக் கடல் அலையின் நுரை சிதறிக் காய்ந்த பெரும் மணல் வெளியில், காலைக் கதிரவன் கண் விழிக்கும் வேளையில், நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனாய் 1975ம் ஆண்டு ஆவணி மாதம் 24 ம் திகதி தமிழீழ மண்ணில் வந்துதித்தான். தாய் தந்தையர் இவனுக்கிட்ட பெயர் நேசகுலேந்திரன். வீட்டில் செல்லமாக வசந்தன் என அழைக்கப்படுவான். இவனது குடும்பமோ ஒரு வறிய குடும்பமாக இருந்தது. 1981ம் ஆண்டு உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தான். இவன் படிப்பில் மிகவும் அக்கறையாகவும், விளையாட்டில் சுறுசுறுப்பாகவும் இருந்தான். சமூக வேளைகளிலும் முன்னின்று செயற்படுவான். பள்ளியில் படிக்கும் போது வீட்டு வறுமையின் காரணத்தால், தனது அண்ணனுடன் கடற்தொழிலுக்குப் போய் வருவான். ஆனாலும் இவன் தனது படிப்பை கைவிடவில்லை. வசந்தனின் அண்ணன் எமது இயக்கத்திற்குப் படகோட்டியாகச் செல்வார். ஒரு நாள் ஒட்டியாகச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. என்ன நடந்தது என்று இன்றுவரையும் தெரியவில்லை. தாய், தனது மகனைக் கடற்கரையில் வழிமேல் விழிவைத்துப் பார்த்தவாறு சிலநாட்கள் காத்திருந்தாள்; ஆனால் இன்னமும் தான் வரவில்லை. அதன் பின்னர் அவன் தனியாகவே கடற்தொழிக்குச் சென்றுவருவான். ஒருநாள் வசந்தன் கடற்தொழிலுக்குச் செல்லும்போது தாய் மறித்தார் “நீ தனியாகக் கடலுக்குப் போகவேண்டாம்” என்றார். அப்போது அவன் அம்மாவுக்குச் சொன்னார். “நேவி வந்தால் நான் நீந்தி வந்துவிடுவன் நீங்கள் கொஞ்சம் பேசாமல் இருங்கோ” இவ்வாறு கூறிவிட்டு அவன் வழமைபோல் கடலுக்குச் சென்று வருவான். அந்தவேளையில் தான் இந்திய ஆக்கரமிப்புப்படை எமது மண்ணில் காலடி வைத்தது இந்திய தமிழீழப்போர் ஆரம்பமாகியது. அவ்வேளையில் அவனது குடும்பத்தினர் எமது இயக்கத்தின் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எமது இயக்கத்தின் வெடி மருந்தகளை வீட்டு வளவினுள் பதுக்கிவைத்துப் பாதுகாத்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் இந்திய இராணுவமும், தேசத் துரோகிகளும், உடுத்தறைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அன்று வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்து, அவனது தகப்பனை “எல்.ரி.ரி.ஈ இங்கு வந்ததா?” எனக்கட்கும் போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தேசத்துரோகி, “இவங்கள் இயக்கத்திற்கு ஆதரவு; இவங்களை விடாதையுங்கோ” என்று சொன்னான். ஆத்திரமடைந்த இந்திய இராணுவத்தான் ஒருவன் வசந்தன் தகப்பனுக்க அடித்தான். உடனே வசந்தன் “அப்பாவுக்கு அடியாதையுங்கோ” என்று கத்தியபடி தகப்பனைக் கட்டிப்பிடித்தான். அதன் பின் இந்திய இராணுவம் அவனது வீட்டை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னும் அவனது குடும்பத்தினர் இயக்கத்திற்கு உதவிகள் பல செய்துவந்தனர். இப்படித்தான் ஒருநாள் வசந்தன் ஆடு மேய்க்கச் செல்லும்போது, வசந்தனின் கிராமத்து கோயிலுக்குச் அருகிலுள்ள பற்றை ஊடாக ஒரு போராளி ஓடி வந்தான். அப்போது வசந்தன் அந்தப்போராளியைப் பார்த்த, “என்ன அண்ணை ஓடி வாறியள்? என்ன நடந்தது?” எனக் கேட்டான். அதற்கு அந்த போராளி, “என்னை ஆமி கலைச்சுவாறான்” என்று கூறவே, உடனே வசந்தன் அந்தப் போராளியைத் தனது வீட்டுக்குச் கூட்டிச் சென்று, வீட்டின் மூலையில் இருக்கவிட்டு, வலையினால் மூடிவிடுகிறான். அப்போது இந்திய இராணுவம், தேசத்துரோகிகளும் காலடிகளைப் பார்த்து வசந்தனின் வீட்டிற்கு வந்தனர். வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்ததும் வீட்டைச் சோதனையிட்டார்கள். அப்போது ஒரு தேசத்துரோகி வசந்ததைப் பிடித்து, “முலையில் ஏனடா வலையைக் குவித்து வைத்திருக்கிறாய்? வலைக்கள் என்னடா இருக்காது?” என்று அதட்டிக் கேட்டான். அதற்கு வசந்தன் “வலைக்குள் ஒண்டும் இல்லை… அப்படியெண்டால் நீங்கள் எடுத்துப்பாருங்கோ” எனத் தளராது பதில் கூறினான். அதன் பின் தேசத்துரோகி வசந்தனின் தாயாரிடம், “இஞ்சை இயக்கம் வாறது என்று அறிஞ்சனாங்கள்; உங்களைக் கவனிக்கிறம்” என்று சொல்லிவிட்டு சென்றான். அதன் பின் 1990ம் ஆண்டு முற்பகுதியில், இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறியது. எமது மக்கள்பட்ட இன்னல்களைக் கண்டு வசந்தனின் உள்ளம் குமுறியது. துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தினிலே தூய விடுதலைக்காய் துப்பாக்கியினைத் தோளில் ஏந்தத் துணிந்துவிட்டான். அந்த வகையில்தான் 1990ம் ஆண்டு பங்குனி மாதம், எமது இயக்கத்தில் தன்னை முழுநேர உறுப்பினாராக இணைத்துக்கொள்கிறான். சத்தருக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டு, பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பயிற்சி பாசறையில் சிறுவனாக இருந்தாலும், எந்தப் பயிற்சியினையும் ஓர்மத்துடனும் சலிப்பிலாமலும் எடுத்து முடித்தான். பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்ததும், இவனும் இன்னும் சில போராளிகளும் ஒரு முகாமில் இருந்தார்கள். பின்னர் இவனுடைய திறமையைக் கண்ட பொறுப்பாளர், இவனைப் பலாலி காவலரணுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இவன் இருக்கும்போது, எமது கண்ணிவெடிப் பிரிவினர் கண்ணிவெடி வைக்க போகும்போது அவர்களுடன் சென்று கண்ணிவெடிகள் வைப்பான். கண்ணிவெடிகளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் மற்றைய போராளிகளிடம் கேட்டு அறிவான். 1991 ஆம் ஆண்டு 12 ம் மாதம் பலாலி இராணுவம் வளலாய்ப் பகுதியை நோக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தச் சண்டையில் திறமையடன் சண்டை செய்தான் சத்துருக்கன். அதன் பின் ஒரு காவலரனுக்கு தலைமை தாங்கி, அங்கு ஒரு சில மாதங்கள் இருந்தான். அதன் பின்னர் வடமராட்சிக் கிழக்கு பகுதி காவலரணுக்கு அழைத்த செல்லப்பட்டு, வெற்றிலைக்கேணி காவலரண் பகுதியில் இடம் தெரியாத போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தான். அவன் எல்லாப் போராளிகளிடமும் அன்பாக பேசிப் பழகுவான். போராளிகளுடன் சேர்ந்து சிரிப்பூட்டும் பகிடிகளும் விடுவான். அங்கே போராளர்களுக்கு இடங்களைக் காட்டியபின், 1992ம் ஆண்டு 7ஆம் மாதமளவில், வடமராட்சி கோட்ட பொறுப்பாளர் மேஜர் பிறேமநாத் அண்ணாவால் இவனும் இன்னும் சில செய்யப்பட்டு வேவுப் பயிற்சி அளிக்கப்பட்டு வளலாய்க் காவலரணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவன், தனக்குக் கொடுக்கப்பட்ட வேவுப்பணியில் மிகவும் திறமையடன் செயற்பட்டான். இவன் வேவுக்குச் சென்று எதிரியின் காவலரணுக்கு முன்னுள்ள கம்பிவேலிக்கு உட்பகுதியில் எதிரி புதைத்து வைத்த மிதிவெடிகளை எடுத்து வருவான். வேவுக்கு சென்று எதிரியின் நடமாட்டத்தை அவதனிக்கும் போது இராணுவம் சத்தம் போட்டுக் கதைத்தால், மற்றைய போராளிகளுக்குச் சொல்லுவான். “இப்ப கதைக்கிறார்; இன்னும் கொஞ்ச நாளிலை தெரியும் எங்கட விளையாட்டு” என்று. இவன் வேவுக்குச் செல்லும் போது பல நாட்கள் சாவின் விளிம்பில் ஏறி நடந்தான். ஊருறங்கும் நேரத்தில் எதிரியின் பாசறையில் தகவல் பெற்றிட சிறந்த வேவு வீரனாக இவன் திகழ்ந்தான். வேவுக்குச் செல்லும் போது பல தடைவைகள் மரணம் இவளோடு மல்லுக்கட்டியது; வெல்ல முடியவில்லையே என்று வேதனைப்பட்டது சத்துருக்கனின் ஆசை போல், பலாலி கிழக்கு வளலாய்ப் பகுதியில் 150 காவலரண்கள் எம்மவர்களால் தாக்கி அழிக்கப்பட்டன. அந்தச் சண்டை முடிந்தவுடன் தனது பொறுப்பாளரிடம் சென்று, “நான் கரும்புலிக்குப் போகபோறன்” என்று கேட்டு, அவன் கரும்புலிக்குச் சென்றான். கரும்புலிகளுக்கான பயிற்சியினை முடித்துவிட்டு கரும்புலி அணியின் ஒரு குழுத் தலைவானக தொண்டமனாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவர்களது இலக்கு பலாலி விமான நிலையத்தை ஊடுருவித் தாக்கி அழிப்பதே! சத்துருக்கன் என்னை இறுதியாக தொண்டமனாற்றில் வைத்துச் சந்தித்ததான். அப்போது என்னுடன் கதைக்கும் போது “இனி எங்கட மக்கள் சுதந்திரமாக வாழப்போகிறார்கள். தமிழன் தலைநிமிர்ந்து நடக்கப் போகிறான். அதற்கு நாங்கள்தான் வழிகாட்டியாக இருக்கப்போகிறோம் “ என்று சொன்னான். அன்று மாலை; கடல் அலைகள் ஓய்வ எடுத்தக்கொண்டிருந்தன. ஆனால் கரும்புலிகள் ஓய்வெடுக்கவில்லை; தமது இலக்கை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டனர். என்னவோ கடலன்னைக்கு பொறுக்கவில்லை போலும். திடிரென நீரோட்டம் அதிகமா இருந்தது. ஆனாலும் கரும்புலிகள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. விடியற் காலை 4.00 மணியிருக்கும் ஈ கூட நுழையமாட்டாது எனக் கூறிக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் குகைக்குள், சிறுத்தைக் கூட்டம் நுழைந்து கொண்டிருந்தது. இவர்கள் தாக்குதலுக்கச் சென்ற நேரம் தவறிவிட்டது. இவர்களின் தாக்குதல் திட்டமும் மாறிவிட்டது. மறுநாள் காலை 9 மணி இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் எதிரியை அவதானித்தபடி இருந்தார்கள். அப்போது ஒரு நாய் அவர்களை நோக்கி வந்தகொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு இராணுவம் சிப்பாயும் வந்துகொண்டிருந்தான். அதன் பின்னால் ஒரு இராணுவச் சிப்பாயும் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டுகொண்டான். அவன் இவர்களைக் காணாது மாதிரி பின்னுக்குச் சென்று பின்னர் பல இராணுவத்தினரை கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தான். தங்கள் கிளையோடு கிளம்பிய அவர்கள், ஆயிரம் ஆயிரம் கைகளில் ஆயுதங்களைப் பிடித்தபடி, ஆகாயத் ‘தும்பிகளின்’ துணையோடு அந்த இடத்திற்கு வந்தனர். அப்போதுதான் போர் மூண்டது. சத்துருக்கனின் அணியினர் தாக்குதலை தொடுத்தனர். அந்த இடத்திலேயே பல இராணுவத்தினர் கொல்லபப்பட்டனர். அப்போது எதிரி தாக்கிய 40 எம் எம் பிஸ்டல் குண்டு ஒன்று சத்துரக்கனின் இரு கால்களையும் பதம் பார்த்து உடனே மற்றைய போராளிகளுக்கு சத்துருக்கன் கட்டளையிட்டான். “எனது இரண்டு கால்களும் போய்விட்டன. நான் குப்பி கடிக்கப் போகிறேன். நீங்கள் மூவ் பண்ணுங்கோ.” சாவையே குப்பியில் அடைத்த – மரணத்தையே கழுத்தினில் மாலையாக சுமத்தி – சரித்திரம் படைத்துவிட்டான். சாவை முறியடிக்க சிலர் சாத்திரம் பார்க்கும் நேரம், சாவையே முதுகிலேந்தி பாலாலி மண்ணில் சரித்திரம் படைத்தவிட்டான் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். சாவு அவனைச் சந்தித்த போதும் கூட எமது தாய் நாட்டையும், தலைவனையும் தான் அவன் நினைத்திருப்பான்! நன்றி: எரிமலை இதழ் (மாசி, 1996). https://thesakkatru.com/black-tiger-lieutenant-kannan/
-
கப்டன் துளசிராம் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய… இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……? ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி…… பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்சா? ஆசையக்கூடாது அவ்வளவுதான்! பசியோடு தாகம்…… விழி நித்திரைக்கு யாசிக்கும். விழித்திரு…… விழித்திரு உனக்கு நிறைய விடயம் தேவை நிறையப் பொறுமை தேவை. அந்த இருளில் நிழலோடு நிழலாய்…… கருமையோடு கருமையாய் ஓ! எங்கள் துளசிராவும் அதில் பச்சையாய் – அந்தப் பெண் வேவுப்புலி கண்கள் சுழல…… காதுகள் தீட்டியபடி எதை எதைப் பார்க்கும்? எதிரியின் நகர்வு, ஆயுதம்…… எல்லாமே தேவை அவளுக்கு. அது முக்கியமானதும்கூட. மீண்டும் ஊர்ந்து…… அட எப்படி முடிந்தது இவளால் இவ்வளவு துரிதமாய்……? ஆச்சரியம் தரும் பெண் துளசிரா. ஆழ்ந்து சதா சிந்திக்கும் கண்கள். சற்றுக் கோபத்தைப் பூசிய விடுக்கான முகம். அன்பு இதயத்தில் இருந்தும் வார்த்தைகளில் கடுமை பூசி அனுப்பும் துளசி, எதையோ எழுதியபடி…… எதையோ தோழிகளுடன் பகிர்ந்தபடி…… எதையோ வாசித்த…… எதையோ அல்ல, வீரமும் தியாகமும் நிறைந்த கியூபாப் புரட்சி வீரன் ‘சேகுவேரா’ பற்றியோ அல்லது கரிபால்டி லெனின்…… இந்த வரிசையில் அமைந்த புத்தகங்களில் வரும் மனதைத் தொடும் சம்பவங்கள், வாக்கியங்கள்…… சகதோழியருடன் பகிர்ந்தபடி…… ஓ! அது எங்கள் துளசிராவால் முடியும். அது அவளேதான். “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியின் ஒலியில் நனைந்தபடி நீ ஆசானாய் அபிநயித்தபடி…… உன் தோழியர் ஆர்வத்துடன் பழகியபடி…… “இவளது இன்பங்கள் தொலைந்தது யாரால்?” – கவிதை முழங்கும். திரும்பிப் பார்த்தால், அட…… நம்மடை துளசிரா. “பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர்……?” கேள்விகள் தொடர்வது அதுவும் எங்கட துளசிராதான். வேவு நேரத்தில், “மூதேவி மாதிரிக் கிட்டவாரான் அசையாதை” எனக்கூறி, தனியாக தான் மட்டும் முன்னால் ஊர்ந்து ஊர்ந்து…… தோழியின் காதில் கிசுகிசுப்பாய் கூறியவள் முன்பக்கம் கிடப்பாள். ஒரு நாள் சாப்பாடு சரியாக வராததால் அவர்கள் அனைவரும் சோர்ந்தபடி…… “என்ன விசரப்பா மனுசனுக்குப் பசிக்குது” சிணுங்கிய அந்தச் சிறியவளை துளசி அழைத்து பசிக்குதா? பசியை நினைக்காதையுங்கோ…… வேவுப் புலிகள் இப்படிச் சோரக்கூடாது. மனசைத் தைரியப்படுத்துங்கோ. அண்ணாவை நினையுங்கோ. எவ்வளவு கஸ்டம் துன்பம்……” தொடரும் அவளது வார்த்தைகள் பசியை மட்டுமல்ல சோர்வையும் விரட்டும் தன்மைவாய்ந்தவை. துளசி, உன்னால் எப்படி முடிந்தது? நீ வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கண்டவள் போல்…… இனி யார்? இப்படி அவர்களுடன் கதைச்சு……? கரிபால்டியையும், கீயூபாப் புரட்சியின் ஆன்மார்த்த உணர்வைத் தட்டும் சம்பவங்களையும் கோர்வையாய்க் கண்கள் மின்ன மின்னச் சொல்லும் துளசிரா நீயா……? சோர்ந்து போகும் தருணம் விழி ஏங்கி…… முகம் வானம் பார்த்து…… ஓ துளசி! நீ நினைப்பது…… “அம்மா, என்ரை குஞ்சம்மர் என்னை மன்னி, நீ சீவியத்துக்கு என்ன செய்வாய்? எனக்குத் தெரியும் உன் கஸ்டம். ஆனால்……” …… கண்கள் பனித்து பெருமூச்செறிவாய். மீண்டும் உன் நினைவு தொடரும்…… “நிமிர்ந்திரு அம்மா, உன் பிள்ளைகள் இருவர் போராட்டத்தில்…… என்னை மன்னிப்பாயா?” மானசீக உரையாடல் அது. நட்சத்திரம் இவளை அமைதியாயப் பார்த்துக் கண் வெட்டும். ஆறுதல் அளிக்கும் – இவள் கவிஞை என்பதால்…… துளசிரா எனும் தாமரைச் செல்வியை (இயற்பெயர்) கால்கொஞ்சி அரவணைத்து மகிழ்ந்திருக்க, 1974.08.17 அன்று அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்த சின்னமணி தவமணி மலைத்து நின்ற நாளாய், அவள் பிறந்தாள். செங்கதிரவன் முகம் பார்க்கும்போது சீண்டும் கடலையும், வானத்து நீலத்தைப் பார்த்தபடி நிமிர்ந்த பனைகளும், மணல்திடல் அராபியப் பிரமைதரும் அந்த வடமராட்சியின் கிழக்குப் பிரதேசமான வல்லிபுரக்குறிச்சி கிராமம் இவளை புதுப் பிரஜையாகச் சோர்த்துக்கொண்டது. சிறிது காலத்தின் பின், பசுமை படுத்திருந்து சிரிக்கும் கிளிநொச்சியின் 3ஆம் வாய்க்காலில் உன் சிறிய குடும்பம் குடியேறியது. உன்னுடன் ஓடிப்பிடித்து விளையாடி குதூகலித்திருக்க இரு தங்கை ஒரு தம்பி…… என்ன இனிமையானவை இந்த நாட்கள்! அப்பாவின் தோள்களில் தூங்கி…… அப்பாவுடன் நொடு நொடுத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு…… அம்மாவின் குங்குமமும் அவர்கள் சந்தோசம் அத்தனையும் வழித்தெடுத்தபடி, அவள் அப்பா 1989 இல் காலமானார். அப்பாவைத் தழுவி மாலை போட்டு சந்தனம் சாத்தி…… அம்மா, அவள்தான் அவ்வளவு துன்பத்தையும் தாங்கியவள். “என்னை, தன்ரை கஸ்டத்தின் விடிவெள்ளியாய் நினைத்து கனவு நிறைச்சு ஏங்கியபடி……” என கலங்கி உரைத்து மௌனித்தழும் துளசிரா. “அப்ப துளசி ஏன் இயக்கத்துக்கு நீங்கள்……?” என வினவினால் “சீ அது எனது கடமை. எனக்கு வீட்டுக் கஸ்டத்தைவிட நாடு……” தொடரும் அவளது உறுதி. “ஆனா தங்கைச்சியும் என்னைப்போலவே…… அதனால் சந்தோசம் அவள் இறுதிவரை போராட வேணும் இது என்ரை விருப்பம்…… ஏன் கடைசி விருப்பமும்கூட” எனக் கூறும் துளசிரா…… தங்கைக்கு உணர்வும் அனுபவமும் பகிரும் கடிதங்கள்…… ஓ துளசி, நீ வித்தியாசமானவள் தான். அந்த மௌனத்தில் எத்தனை அர்த்தங்கள் அம்மா! துளசிராவையும் புதுப்போராளியாக மாற்றியது அந்தக் காடு. 13ஆவது பயிற்சி முகாம் அது. அவள் படுத்திருந்து ‘நிலை’ எடுத்த மரம், பதுங்கித் தாக்குதலுக்காய் படுத்திருந்த அந்தப் புல்வெளி…… அவள் படுத்தபடி நிமிர்ந்து பார்த்து கற்பனையில் மிதக்கும் அந்தச் சிறு குடில்…… மரங்களின் இடையில் சிரிக்கும் அந்த நட்சத்திரம்…… எல்லாம் அவளுக்கு அடிக்கடி கியூபாப் போராட்டத்தை நினைவுபடுத்துவதாய்…… முழுப் போராளியாய் திறமையும் ஊக்கமுமாகஇ துளசி எதிரியுடன் யுத்தமாட ஆரம்பித்தாள். மாங்களம் எம்மவர் கைகளில் வீழ்ந்த பின் அதைப் பாதுகாக்கும் குழுவுடன் இவளும்…… ஆ. க. வெ. தாக்குதலில் எதிரியின் அங்குல நகர்வுக்கும் பதிலடி கொடுத்த பெண்புலி அணியில், இவளும் மிகவும் மூர்க்கமாக…… ‘மின்னல்’ – எங்கள் இதயபூமியில் தாண்டவமாடிய எதிரி நடவடிக்கையில் எதிரியைக் காலொடித்து விரட்டியவர்களில் இவளும் முன்னணியில்…… எதில் நீ உன் திறமையைக் காட்டவில்லை? ‘மின்னலில்’ காலில் காயமுற்று நீ சிறுகால ஓய்வுக்குப்பின்; வேவுப்புலியாய், அப்பப்பா இவளுக்கு எத்தனை அனுபவங்கள்…… மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து…… இருளில் இருளாக…… இலையாகி சருகாகி…… கட்டையாகி…… ஏதோ ஏதோவெல்லாம் இவர்களால் எப்படி? ஓ, இவர்கள் வேவுப்புலிகள். எத்தனை சகிப்புத்தன்மை வேண்டும் இவற்றுக்கு. துளசி, உன்னிடம் அது நிறைந்திருந்தது. உன் விழிச்சிவப்பு அது கூறும். இரவு தரும் தனிமை. அந்த மௌனம் தரும் பயங்கரம். கட்டைகள் எதிரியாகி உருவகிக்கும், பயம் தரும் உருவமாக…… திக்கென்று இதயம் அடித்துக்கொள்ளும். இதயம் சுழன்றுபோல்…… அந்த சரசரச் சத்தம். ஒருவேளை அந்த இழவுவிழுவானோ? கிட்டகிட்ட அண்மிக்கும் அந்தச் சத்தம். ‘சடார்’…… இதயம் லப்டப் லப்ட… ப்… நின்றுவிடும்போல் உதறிக்கொள்ளும். அந்த ‘அரியண்ட’ உணர்வு. இது சாதாரணமாய் ஏற்படும் அனுபவம். இதை இவளும் இவள் தோழிகளும் நிதானமுடனும் மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் பிரித்தறிந்து, அலுக்காமல் இருக்கும் உறுதி. துளசி, நீ இதில் ஊறியவள். குளித்து பலநாள் கூட இருக்கலாம். எத்தனை இரவுகள் நித்திரை இழந்து சிவந்துபோன கண்கள். அலுப்பற்ற தொடர் பயணம். ஊர்ந்து…… நடந்து…… கிடந்து…… மறைந்து…… அவன் ‘அசிங்கங்களின்’ மேல் படுத்தபடி கூட எடுத்த தகவல்கள். பகலில் அவற்றின் சாயல் கூட இன்றி துறுதுறுத்தபடி துளசி…… உன்னால் எப்படி இவற்றைத் தாங்க முடிந்தது? அதுவும் அறுவையும் சிரிப்புமாக…… எம் துளசியே உன்னை இழந்துவிட்டோமா நாம்? ஏக்கம் இதயத்தில் வந்தமர்ந்தது. எத்தனை தடவை துளசியும் குழுவும் அதிர்ச்சியான சம்பவங்களை அலுக்காமல் அனுபவித்து வரும்! நீண்ட நாள் எதிரியின் எல்லையுள்…… இரவில் தம்வீட்டு முற்றத்தில் திரியும் இரவுப்பிசாசுகள் போல்…… கண்கள் சுழன்று…… காதுகள் திரும்பி ஒலி சேகரிக்கும். இரவில் எதையோ தேடும்…… அது தடயமாக…… எதிரியின் நடவடிக்கையாய்…… அவனின் ஆயு…… மொத்தத்தில் எல்லாமே உனக்குத் தேவை. உன் தகவல் சேகரிப்பும் துணிவும் உன்னை சண்டைக்கான சிறந்த வழிகாட்டியாக்கியது உண்மை. அதனால்தான் உன்னை பத்தமேனிச் சண்டையில், உன் நகர்வு…… மிகவும் நுணுக்கமான உன் போர்த் தந்திரம்…… பொறுமை, கண்ணில் காயமுற்ற போதும் நீ மற்றவர்களுக்கு உதவிய உன் பண்பு, தாங்கும் தன்மை…… நீ வேவுப்புலிதான் அதுவும் பெண்புலி. கம்பிவேலி தாண்டும் இவர்கள் பாதங்களில் ஒன்றை எதிரி கண்ணிவெடி பதம் பார்க்கும். இழுத்தபடி…… அல்லது உயிரைத் தியாகம் செய்யும் அந்தப் புனித யுவதிகளாய்…… கண்ணும் மனமும் பலநாள் பார்த்திருக்கும். எதிர்பாராமல் அது நடந்தது. ‘அட விசரன் மாதிரி ‘போக்கஸ்’ அடிக்கிறான்.’ கிட்டக் கிட்ட இவர்களுக்கு அண்மையில் அவன் அட! பத்து யார் இருக்குமா? இல்லை மூன்று நாலு யார்…… அசையாமல் இறுகியபடி…… அப்பாடி! அங்காலை? ‘அசிங்கம்’ பண்ணியவன் மீண்டபோது இதயமும் மூச்சும் இயங்கும். ஒருவேளை அவன் கண்டால் சிதறும் உடல், சிவந்த தசைத் துகள்களாக்கித் கொள்ளும் தியாகம். துளசிரா நீ எத்தனை இரவை இப்படிச் சந்தித்திருப்பாய்! இவை உன்னைப் பாதிப்பதில்லை. நீ ஓர் திறமையான வேவுப்புலி; அதிலும் பெண்களில் தன்மானம் கூடியவள் நீ. இவர்கள் மாயப்பிசாசுகள் போல் திரிவது எதிரியின் கண்ணிவெடி விதைத்த வயல்களுக்குள்தான். அதில் பாதை அமைத்து மரணத்தை இருமருங்கிலும் ஒதுக்கிச் செல்லும் துணிவு மிக்கவர்கள். இவ்வளவும், இவளை பூநகரிக்கு வேவுப் பணிக்கு அமர்த்தக் காரணமாய் அமைந்தன. கால்கள் நடந்தன் கண்கள் துருவின் கைகள் ஸ்பரிசித்தன் காதுகள் கேட்டன. இருளிலும் தேடிய மறைந்து கிடந்த எதிரியின் அத்தனை விடயமும் தகவல்களாக…… அவை சண்டையாக உருவகம் பெற்று நிமிர்ந்து நின்றது துளசிபோல். “அங்கை பார் இந்த ‘போக்கஸ் லைற்’ சண்டை முடிந்து திரும்ப நாம் வரும்போது மானமிழந்து விடும்.” எத்தனை கனவடி உன் கண்களில். ஏன் திரும்பி அதை நீ பார்க்காமலே…… உனை நாம் இழந்துவிட்டோமே துளசிரா. பூநகரியில் – அந்த ஜில்லித்துப்போன பனித்த இரவு. படையணிகள் பல அணிகளாய் நகர்வதில்…… ஒரு அணிக்கு இவள் பாதைகாட்டி நகர்ந்தாள். உறுதியான உன் நகர்வும் உன் நாவு சொன்னதுபோல் சரியான வெளி. அவ்விடத்தை அடைந்தது அணி. கம்பிக்கட்டுக்கு நீ வைத்த ‘டோபிடோ’ காலைவாரியதால் ஒன்றும் பிசகி நிற்கவில்லை; மாறாய்இ மாற்றுவழி தேடியது உன் கூர்மதி. கைகளால் அத்தனை துரிதமாய், வேகமான பெண்ணாய் இயங்கிய உன் யுத்த அறிவு, அத்தனை ‘பொயின்’றும் கிளியர் பண்ணியது உனது கிரனேற்றுக்கள், பாதையமைத்து விரைந்தாய்; சுழன்றாடினாய்; களம் உன்னைப் பார்த்துத் திகைத்தது. உன் திறமையை நெடுக நெடுக உரைத்து நிமிரும் உன் தோழியர் கண் சிவந்தது எதனால் துளசி? உனை இழந்தோமே…… அதனால். உன் கண்களுக்கு தமிழீழத்தைப் பார்க்க ஆசை. ஆனால் நீ இறந்த பின் போராளிக்கு அவற்றை அளிக்கச் சொன்ன உன் நிமிர்வு, அண்ணாவை நினைவுகூர்ந்து பளபளக்கும் அந்தக் கண்கள், வீட்டின் வறுமையில் வாடிச்சிவந்த அந்தக் கண்கள், அறிவினில் ஜொலித்திருக்கும் உன் கண்கள். துளசி, நீ நிறையதான் கனவு சுமந்து நடந்தாய் பூநகரிக்கு. நினைவு இழந்து உயிரிழந்த உன் உடல்…… அதே நிமிர்வுடன் தான் துளசி இருந்தது. ‘போக்கஸ் லைற்’ இல்லை. உன் நினைவு போல் பூநகரி வீழ்ந்தது. எத்தனை உறுதியுடன் கூறிநின்றாய் துளசி! இறுதிக் கணத்திலும் உன் இனிய இதயம் அந்தப் பாடலை ஏன் கேட்டது? காற்றே நீயும்தானே பார்த்தாய் அவள் அழுததை. ஏன்…… ஏன் அழுதாள்? சாவுக்கு நீயே தேதி குறித்தாயா? அல்லது சாவு உனக்குத் தேதி குறித்ததா? “தாயக மண்ணின் காற்றே நீயும் மூசம்மா, நான் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா” பாடிய தோழி இங்கு குலுங்கிக் குலுங்கி அழுதாள் துளசி. இந்தப் பாடல்வரியில் நீ இனி அடிக்கடி வந்துவந்து போவாய். சாகும்போது சாதனைதான் படைத்தாய். உனக்கு அன்று ஓய்வும்கூட. நீ இழந்துபோன அத்தனை நித்திரையையும் வெறியுடன் அனுபவிப்பவள் போல் எத்தனை அழகாய்த் தூங்கினாய் துளசி! இப்போதெல்லாம்…… “தித் தெய்தாம் தித் தெய்தாம்” என்ற ஜதியில் நீ தெரிவாய். வேவு நேரத்தில், அந்த மௌனித்த இருளில் காற்றோடு உன் குரல், “ஏய் கவனம் அசையாதை……” என்பதுபோல கிசுகிசுத்து நிற்கும். சிவந்துபோன உன் தோழியர் கண்களில், உனைக் காண்போம் அதை உன் கண்களாய்…… மௌனித்த தோழியில் நீயாக…… ஓ…… அந்த அன்னையின் விசும்பலில் தெறிக்கும் உன் பிரிவுத் துயர்…… அந்த போராளித் தங்கையை இறுகவைத்திருக்கும் உன் இழப்பு…… உன் சின்னத் தம்பி தங்கையின் விழிநீர்த்தரையில் உன் முகமாய்…… உன் அன்னைக்காய், உன் சகோதரர்க்காய் உன் மௌனித்தழும் உன் தோழியர்க்காய்…… நிமிர்வதற்காய்…… காற்றிலே நுழைந்து கவிஞையாய், நடிகையாய், நடன ஆசிரியையாய், சுழன்ற டும் வேவுப் புலியாய், “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியில் வந்து போகமாட்டாயா எமக்காய் ஓர் தடவை? அந்த இருளை ஸ்பரிசித்து, நீயாக நினைத்தது மனம். உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய நிறைய விடயங்கள் துளசி மீண்டும் நீ வா ஒரு தடவை எமக்காய்……! நினைவுப்பகிர்வு: சீத்தா. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1994). https://thesakkatru.com/capatin-thulasiram/