Search the Community
Showing results for tags 'funny'.
-
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்.. அடுத்த மாதம் திருமணம் நிகழ இருந்த நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் காணாமல் போயுள்ள சம்பவம் சபசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் இளம் ஜோடி ஒன்று நிச்சயத்தார்த்தம் முடிந்து, பிப்ரவரி மாதம் திருமணம் முடிக்க இருந்த நிலையில், அவர்களின் வாழ்வில் இடி ஒன்று விழுந்தாற்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி, மணமகனின் தந்தை காணாமல் போயுள்ளார். அதேவேளையில், மணமகளின் தாயாரும் காணாமல் போயுள்ளார். இருவரையும் தேடிப்பார்த்த உறவினர்கள் எங்கும் காணாததால் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, இருவரும் இளம் வயதில் காதலித்ததாகவும், அப்போது ஓடிச் சென்று திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால், வைர வியாபாரி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதால், பின்னாளில் இருவீட்டாரும் நண்பர்களாக பழகியுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் மகளுக்கும், அந்த நபரின் மகனுக்கும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், பழைய காதலில் இருந்த இருவரும் ஓடிவிட்டதாக அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழ் நியூஸ் 18
-
அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..! ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்! சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் ஒரே மாதிரி வார்த்தைகளைத்தான் கூறினர். அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர். பன்னீர்செல்வமும் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தட்ஸ்தமிழ்