Search the Community
Showing results for tags 'kudarapu landing'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கம் 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் வீரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.' முன்னுரை "குடாரப்பு புல்லாவெளி கரைகளிலே சென்று குதித்த புலிகளின் கதைகேளும்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகவும், ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காத்திரமான அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஒரு தரையிறக்கமாகவும் திகழ்ந்தது தான் குடாரப்புத் தரையிறக்கம் ஆகும். இதுதான் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் தொடக்கம் ஆகும். இந்நிகழ்வானது வட தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு எ மருதங்கேணிப் பகுதியின் நாகர்கோவில் தெற்கு ஊர்நிலதாரி பிரிவிற்குட்பட்ட 'குடாரப்பு' சிற்றூரின் தெற்கிலும், செம்பியன்பற்று வடக்கு ஊர்நிலதாரிப் பிரிவிற்குட்பட்ட 'மாமுனை' சிற்றூரின் வடக்கிலுமாக இரண்டு சிற்றூர்களின் கடற்கரையிலும் 26/3/2000 ஆம் ஆண்டு இரவு 8:45 மணிக்கு முதலாவது தரையிறக்கம் நடந்தேறியது. இவையே மேற்கொண்டு நடைபெறப்போகும் தாக்குதல்களின் உவர்க்கத்தலையாக பயன்படுத்தப்பட்டன. புலிகளின் போரியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் (மண்டைதீவில், புல்லாவெளியில், கிழக்கரியாலையில்-அறுகுவெளியில்) பின்னருமாக (அல்லைப்பிட்டியில், எருக்கலம்பிட்டியில், சிறுத்தீவில், நெடுந்தீவில், அளம்பிலில், சாளையில், வட்டுவாகலில்) பல்வேறு தரையிறக்கங்களை அவர்கள் செய்திருந்தாலும் அனைத்தைக் காட்டிலும் பெரியதானதும் சிறப்புடையதானதுமாக விளங்குவது இதுவேயாகும். இத்தரையிறக்கத்தினை தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் 1200 தரைப்புலிகளை 11கிமீ காவிச் சென்று சிங்களப் பகைவனின் காவலரண்களுக்குப் பின்னால் இருந்த குடாரப்பு-மாமுனை சிற்றூரில் தரையிறக்கினர். பின்னால் வரப்போகும் போராளிகளின் வெற்றிக்கு வித்திடும் விதமாக முன்சென்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணியினர் 26 ஆம் திகதி இரவு 7 மணி சொச்சத்திற்குத் தரையிறக்கப்பட்டனர். பின்னர் மேற்கொண்டு ஏனைய போராளிகளும் இரவு 8:45 முதற்கொண்டு தரையிறக்கப்பட்டனர். இத்தரையிறக்கமானது அடுத்த நாள் காலை 10மணிவரை நீடித்தது. இப்பேர்பட்ட வரலாற்று மாட்சிமைமிக்க இத்தரையிறக்கமானது ஈழத்து வரலாற்று ஆசிரியர்களால் இரண்டாம் உலகப்போரின்போது செருமனியின் நோர்மண்டியில் நேசநாட்டுக் கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதாகும். முதற் தரையிறக்கத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 14 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். அப்புலிவீரர்களது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலேயே விதைக்கப்பட்டதோடு பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் பரம்பப்பட்டு கைப்பற்றப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் இத்தரையிறக்கம் தொடர்பான நினைவுக்கல்லொன்று இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் (நோய்ச்சாவிற்குப் பின் பிரிகேடியராக தரநிலை உயர்த்தப்பட்டார்) அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. அந்நினைவுக்கல்லானது பின்னாளில் சிங்கள வல்வளைப்புப் படைகளால் இடித்தழிக்கப்பட்டது. குடாரப்புத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சிக் கிழக்கிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதாவது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் இச்செம்பியன்பற்றுப் பகுதியில் சோழப் பேரரசின் படைகள் தரையிறங்கியதாக குறிப்புகள் உள்ளதாக கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் மீண்டும் தமிழர் சேனை மற்றுமொரு தரையிறக்கத்தினை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாவணக்கட்டில் இத்தரையிறக்கம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். அதாவது இத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தரையிறங்கியோருக்கான தரைவழி வழங்கல் பாதை திறக்கப்பட்ட 29/3/2000 வரையிலான 4 நாட்களில்(26,27,28,29) வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்தவை தொடர்பான தகவல்கள் மட்டுமே இதனுள் உள்ளது. இத்தாவில் பெட்டிச்சமர் முதல் ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழ்ந்தது வரையிலான ஆனையிறவுச் சமர் தொடர்பான ஏனைய அனைத்துத் தகவல்களும் பிறிதொரு ஆவணக் கட்டில் விரிவாக வழங்கப்படும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். மேலும், இவ்வாவணக்கட்டானது எதிர்வரப்போகும் ஒரு ஆவணக்கட்டின் ஓர் உறுப்பு என்பதையும் முன்கூட்டியே அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கும் பொருட்டு இதனுள் நான் எழுதப் போகும் தகவல்கள் யாவும் - படைத்துறையின் படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். Artillery - சேணேவி Howitzer - தெறோச்சி Mortar - கணையெக்கி Tank - தகரி Garrison - தானைவைப்பு ******
- 24 replies
-
- unceasing waves - 3 landing
- kudaarappu landing
-
(and 38 more)
Tagged with:
- unceasing waves - 3 landing
- kudaarappu landing
- புலிகள் தரையிறக்கம்
- ltte landing
- kudarapu landing
- unceasing waves three
- battle in 2000
- தமிழர் தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- ஆனையிறவு
- ஆனையிறவு தரையிறக்கம்
- ஈழத் தரையிறக்கம்
- ooyaatha alaikal - 3
- குடாரப்பு தரையிறக்கம்
- elephantpass landing
- ஓயாத அலைகள் மூன்று
- குடாரப்பு
- eelam landing
- kudaarapu landing
- tamil tigers landing
- aanaiyiravu battle
- eelam battle
- kudarappu landing
- தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- அலைகள்
- அலைகள் 3
- ஓயாத அலைகள்
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephant pass ltte
- போர்
- சமர்
- மோதல்
- ஈழப்போர்
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- தமிழீழம்
- புலிகள்
- விடுதலைப்புலிகள்