Search the Community
Showing results for tags 'starbucks mcdonald’s உணவகங்களை புறக்கணித்து... சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் அரேபிய இளைஞர்கள்'.
-
காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர். அரேபிய இளைஞர்கள் மத்தியில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், இந்த புறக்கணிப்பு முடிவு அரேபிய இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளின் இளைஞர்களே இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. @reuters மட்டுமின்றி, சமூக ஊடக தொடர்புகளால் தற்போது குவைத் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளிலும் பரவி வருகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதால், அந்த நிறுவனங்களின் பொருட்களை அரேபிய இளைஞர்கள் வெளிப்படையாகவே புறக்கணிக்க கோரி வருகின்ரனர். டசின் கணக்கான நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு, தற்போது இவைகளை புறக்கணித்து பதிலுக்கு உள்ளூர் பொருட்களை மக்கள் நாடும் நிலைக்கு வந்துள்ளனர். எகிப்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருப்பதால், தெருவில் இறங்கி போராட எவரும் முன்வராத நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்களை, உணவகங்களை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கைகளில் ரத்தக்கறை இல்லை இந்த புறக்கணிப்பு நடவடிக்கைகள் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ள 31 வயது எகிப்து நாட்டவர் ஒருவர், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் அல்லது நிறுவனங்களை புறக்கணிப்பதால், குறைந்தபட்சம் நமது கைகளில் ரத்தக்கறை இல்லை என்பதில் நிம்மதி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். @afp இதனால் தாம் அமெரிக்க உணவகங்கள் மற்றும் தயாரிப்புகளை புறக்கணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோர்டானில் தற்போது McDonald’s மற்றும் Starbucks கிளைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிகளில் மக்கள் உள்ளூர் பொருட்களை மட்டுமே தெரிவு செய்வதாகவும், மேற்கத்திய நாடுகளின் தயாரிப்புகளை தற்போது சீண்ட ஆளில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக மாலை நேரங்களில் Starbucks, McDonald’s மற்றும் KFC கிளைகளில் கூட்டம் அலை மோதும். ஆனால் செவ்வாய் மாலை குவைத் நகரத்தில் Starbucks, McDonald’s மற்றும் KFC உள்ளிட்ட உணவகங்களின் சுமார் 7 கிளைகளில் உள்ளூர் மக்கள் எவருமின்றி, வெறிச்சோடி காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Coca-Cola மற்றும் Nestle தயாரிப்புகள் இதே நிலை தான் மொராக்கோ தலைநகரிலும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட McDonald’s எகிப்து உரிமையாளர்கள் காஸா மக்களுக்காக 650,000 டொலர் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள உறுதி அளித்துள்ளனர். @reuters சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய அரேபிய இளைஞர்களின் ஒருமித்த முடிவுக்கு அந்த ஒப்பந்தங்கள் ஒரு பொருட்டாக இல்லை என்றே கூறப்படுகிரது. இந்த மாத தொடக்கத்தில் துருக்கி பாராளுமன்ற வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் இருந்து Coca-Cola மற்றும் Nestle தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://news.lankasri.com/article/boycott-campaigns-western-brands-arab-countries-1700762717?itm_source=parsely-api