புதிய பதிவுகள்2

453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!

1 day 22 hours ago
சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு Apr 4, 2026 - 07:11 PM சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் அல்லது 96 சதவீதமானோர் நியமனங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு அவர்கள் எவ்வாறு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் அவர்களின் திறமைப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடனும் அறிவியல் பூர்வமான முறைமையின் கீழும் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்கள் ஊடாக, நாடு முழுவதும் நிலவும் வைத்தியர்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சேவை நிலையங்கள் மற்றும் பணியில் இணைய வேண்டிய திகதி போன்ற விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmnkdrhog0000356pd8m4mvz5

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

1 day 22 hours ago
‘முழு நாடுமே ஒன்றாக’ திட்டம்: நேற்று 1000 இற்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுடன் கைது Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 11:40 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1002 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1005 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நால்வர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து 453 கிராம் ஹெரோயின், 828 கிராம் ஐஸ், 04 கிலோகிராம் 202 கிராம் கஞ்சா, 07 கஞ்சா செடிகள், 672 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 114 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 566 போதை மாத்திரைகள், 216 கிராம் மதனமோதகம் மற்றும் 02 கிலோகிராம் 656 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/242711

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 22 hours ago
திருமா அறிவித்த மாற்று வேட்பாளர் காங்கிரஸ் உறுப்பினராம், அவர்கள் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளாராம்😂. நல்ல கூத்து

'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?

1 day 22 hours ago
'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் "குண்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் காக்கை, குருவி போல ஓடி ஒளிந்துகொள்கிறோம்" - இரானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர் ரவி சொன்ன வார்த்தைகள் இவை. இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் மீன்பிடித் தொழிலுக்காக இரான் சென்ற தமிழக மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. ஆனால் "அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்கிறது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம். ஒரு மாதமாக சிக்கியுள்ள மீனவர்கள் "போரைக் காட்டிலும் பசியின் கொடுமை எங்களைக் கொன்றுவிடும்" என்று மீனவர்கள் வெளியிட்ட வீடியோ அவர்கள் இருக்கும் ஆபத்தான சூழலை உணர்த்தியது. ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் உள்ள இரானின் கிஷ் தீவு பகுதியில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த தாடியோஸ் பேசிய அந்தப் பதிவில் "கையிருப்பில் உள்ள உணவை வைத்து ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்ண முடிகிறது. அவை தீர்ந்துவிட்டால் பசியின் கொடுமையால் இறக்க நேரிடும்." என்றார். "போர்ச் சூழல் காரணமாக விமான சேவை தடைபட்டதால் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவேனும் எங்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக கூறுகிறார் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மீனவரான ரவி. அவர் வெளியிட்ட பதிவில், "பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் சொந்த நாடு திரும்ப பலரிடமும் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை" என்று கூறியுள்ளார். அதோடு, "நாங்கள் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் அடிக்கடி வெடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிப்போய் ஒளிந்துகொள்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். ''போர் தொடங்கிய முதல் வாரத்தில் பேசும்போது எப்படியும் மீண்டு விடுவோம் என்ற தையரித்தில் இருந்தவர்களின் குரல்களில் அடுத்தடுத்த நாட்களில் நடுக்கத்தை உணரத் தொடங்கினோம்," என்றார் இரானின் சீராஸில் உள்ள மீனவர் ரூபனின் மனைவி மதி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 அக்கா தங்கைகளோடு பிறந்த என் கணவர் 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்காக வெளிநாடு செல்லவில்லை, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைச் சமாளிக்கவே உறவுகளை விட்டு தொலைதூரத்தில் பணியாற்றி வருகிறார்" என குடும்பத்தின் நிலையை எடுத்துரைத்தார். மேலும் பேசிய அவர், "இங்கிருந்தபடியே கடன்களை அடைக்கலாம் என்றபோது, இறுதியாக ஒரு முறை சென்று வருகிறேன் என்றவர் திரும்பி வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்." என்றார். கிஷ் பகுதியில் உள்ள மற்றொரு மீனவர் ராஜேந்திரனின் மனைவி பிரவீனா பிபிசி தமிழிடம் பேசுகையில், "துறைமுகம் அருகில் இருப்பதால் குண்டு விழுவதை அடிக்கடி நேரில் பார்ப்பதாக என் கணவர் சொல்கிறார்" என்று அவர் கூறினார். "அரசுத் தரப்பில் பலரையும் சந்தித்து முறையிட்டுவிட்டோம், ஆனால் முறையான பதில்கள் ஏதும் இல்லை," என்றார். பட மூலாதாரம்,HANDOUT 'உணவு, மருந்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்' "மீனவர்களை மீட்கும்வரை அவர்களின் உணவு மற்றும் மருந்து தேவைகளை உறுதி செய்ய வேண்டும்," என்றார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் ஃபாதர் சர்ச்சில் பாஸ். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மீனவர்களை மீட்பது குறித்து மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றார். இரானில் சிக்கியுள்ள மீனவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அவர்களைப் பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். "உடனடியாக அழைத்து வர இயலாவிட்டாலும் முதல் இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும்" அவர் கூறினார். "இந்தியா இரானுடன் நல்லுறவை மேம்படுத்தி வரும் நிலையில் அதைப் பயன்படுத்தி அங்குள்ள மக்களை விரைவாக அழைத்து வர வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். உணவின்றித் தவித்து வருவதாகவும், தங்களை மீட்கப் பல வழிகளில் முயன்றும் எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவிக்கும் புகார்கள் குறித்தும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்திடம் மின்னஞ்சல் மூலம் பிபிசி தமிழ் பதில் பெற முயன்றது. ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இரானில் கிஷ், சீராஸ், அசலூயே உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், "மீனவர்களை மீட்க அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார். "இரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 3000 அழைப்புகள் வந்துள்ளன, அதில் பெரும்பாலான அழைப்புகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ளன," என்றார் அவர். குறிப்பாக "இரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்பு தொடர்பாக பல வேண்டுகோள்கள் வாட்ஸ்ஆப் வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவுவும் வந்துள்ளன," என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,HANDOUT இது குறித்து மேலும் பேசிய வள்ளலார், "போர் தொடங்கிய நாள் முதல் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது." என்று கூறினார். போர் நடைபெற்று வருவதால் இந்த நேரத்தில் அவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது இல்லை என தூதரக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் கூறிய அவர், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரையும் பத்திரமாக தாயகம் திருப்பி அனுப்புவதாக தூதரம் உறுதி அளித்தது எனக் குறிப்பிட்டார். 'உணவின்றித் தவிப்பதாக' மீனவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்ட போது, "போர் நாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்துள்ளோம், சட்ட உதவிகள் தேவைபடுவோருக்கு அரசு சார்பில் சட்ட ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்." என்று அவர் விளக்கமளித்தார். மேலும், "மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகள் செய்வதை உறுதி செய்வோம்." என்றும் தெரிவித்தார். மீனவர்கள் இரான் சென்றது எப்படி? "தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு, குறைந்த அளவு ஊதியம் கிடைப்பதால் கூடுதல் ஊதியம் வேண்டி அவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல நேரிடுகிறது," என்றார் ஃபாதர் சர்ச்சில். "ஆரம்பக்காலத்தில் வளைகுடா நாடுகளில் மற்ற வேலைகளுக்கு செல்வோர் மூலமாக அங்கு மீனவர்களின் தேவையை அறிந்து தமிழ்நாட்டில் இருந்து மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், இரானை பூர்வீகமாகக் கொண்ட படகு உரிமையாளர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyjxnd9ve3o

நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!

1 day 22 hours ago
நேற்று அரங்கம் சென்று பார்த்தோம். நாம் கடந்து போன போர் வலி நிறைந்த பல்லாயிரக்கணக்கான இரவுகள் ஒன்றின் கதை. இது எமது கதை. போர் தின்ற எம் மக்களின் சொல்லப்படாத இலட்சக்கணக்கான கதைகளில் ஒன்றை சோமி தரன் மிகச் சிறப்பான திரை மொழியில் சில சமரசங்களுடன் செதுக்கியுள்ளார். படம் முடிந்த பின்னும் நீளா இரவின் நினைவுகள் தொடர்கின்றன.. படத்தின் சில காட்சிகள் தனக்கு ஒரு வித படபடப்பை தந்தது என்றும், தான் சிறு வயதில் அனுபவித்த சில வலிமிகுந்த தருணங்களை மீட்டியது என்றும் என் நண்பர் கூறினார். இந்திய இராணுவத்தில் நல்லவர்களை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் ஆனால் இப் படத்தில் அப்படியான ஒருவரை காட்டுவது ஒரு விதமான முரண் என்றும் இன்னொரு நண்பர் கூறினார். பெரும் வணிக சினிமாக்களுக்கு விழுந்தடித்து ஆதரவு தரும் எம் சமூகம், தன் வலியை, போராட்டத்தின் நியாயத்தை பேசும் இவ்வாறான சினிமாக்களுக்கும் ஆதரவு கொடுத்தால், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் கதைகளில் சிலவற்றையாவது சொல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

1 day 23 hours ago
வீரப்புலி எனும் ஒரு தலைமுறைக்கு முன் தமிழராக இருந்த தற்போதைய சிங்களவர் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 23 hours ago
பாண்டே சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒரு தரம் நிருபித்துள்ளார். சீமான் முதலமைச்சர் ஆனால் என்ற ஜோக்குக்கு சிரிக்காமல் விட்டது கூட ஓக்கே… காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, திமுக, விசிக, தமிழ் தேசியம், இடையில் அதிமுக என அத்தனை மேடையிலும் வாயை வாடகைக்கு விட்ட… அரசியல் சொப்பன சுந்தரி அண்ணணை …. Ideologically driven என்றார் பாருங்கோ சிரிக்காமல்…அதுதான் ஹைலைட். Seeman is not ideologically driven, he is driven by the desire to drive Pajero and Innova 😂

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

2 days ago
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை. இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோணத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக களமிறங்கும் வீனஸ் வீரப்புலி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும். வீனஸின் தந்தை அஜந்த வீரப்புலி, இலங்கையின் முன்னாள் முதல் தரக் கிரிக்கெட் வீரர் ஆவார். இலங்கை வீராங்கனை அவர் கோல்ட்ஸ், NCC, லங்கன் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய அணிகளுக்காக 36 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1,243 ஓட்டங்களை குவித்துள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அஜந்த, தனது மனைவி கிறிஸ்டீனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார். பிரித்தானியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வரும் அவர், தனது மகளையும் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளார். வீனஸ் வீரப்புலி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகக்குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளார். இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை ஷார்லட் எட்வர்ட்ஸ் பெயரில் வழங்கப்படும் 16 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனை விருதை வீனஸ் வென்றுள்ளார். இதன் பின்னரே அவருக்கு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அணியின் தலைவி தந்தை அஜந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், மகள் வீனஸ் வலதுகை பந்து வீச்சாளராகும். இருவருடைய கைகளும் திசைகளும் வேறாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து சுழன்று வரும் திசை ஒன்றாகவே அமையும். இது வீனஸுக்கு தனது தந்தையிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளப் பெரும் உதவியாக உள்ளது. வீனஸ் தனது முன்மாதிரியாக கருதுவது இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து என குறிப்பிட்டுள்ளார். வீனஸின் சகோதரரும் இங்கிலாந்தில் ஒரு இளம் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகின்றார். தற்போது இங்கிலாந்து அணிக்காக இலங்கை மண்ணில் விளையாடினாலும், வீனஸ் விடுமுறைக்காக இலங்கை வரும் போதெல்லாம் கொழும்பு மைதானங்களில் பயிற்சி பெறுவதையும், இலங்கை சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-in-england-women-s-cricket-1775270415

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days ago
போருக்குரிய ஆடைகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும்போதே பேசவேண்டும் என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. எல்லோரையும், எல்லாவற்றையும் அழித்து விட்டோம், ஈரானை கற்காலத்திற்கு அனுப்புவோம் என்று சவால் விட்டவரை துவைத்து எடுக்கிறது ஈரான். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல், நட்பு நாடுகளால் கைவிடப்பட்டார், அரபு நாடுகளில் இருந்து வெளியேற்றப்படப்போகிறார், அமெரிக்க டொலர் மதிப்பிழக்கப்போகிறது, இவரின் பதவி இழப்பு, சிறைக்கு கூடச்செல்லலாம். தலைக்கனம் அழிவைத்தரும். சும்மா இருந்த ஈரானை சீண்டி தன் அழிவை தானாகவே தேடிக்கொண்டது மட்டுமல்லாமல், ஈரானின் பலமும் இந்தமுட்டாளால் உலகறியச்செய்யப்படுள்ளது. இவரது வேண்டுகோளை மறுத்த பிரான்ஸ் அதிபரை, மனைவியிடம் வாங்கிய அடியில் அவரது தாடை சுகப்படவில்லைபோல், எனக்கு உதவி தேவையில்லை சும்மா கேட்டுப்பார்த்தேன் என்று நகைச்சுவை வேறு. இவருக்கு அடி, உதை கொடுக்கக்கூடிய ஒரு பெண்டாட்டி வாய்க்காதபடியினாலேயே உந்த விசர் ஆட்டம் போடுகிறார். நாகரிகம் தெரியாத ஒருவர், நாட்டுத்தலைவனாக வருவது, அந்த நாட்டுக்கே நாசம். பாபிலோன் எரியும் போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போல், அங்கே சொந்த இராணுவ வீரர் போராடுகிறார்கள் இவருக்காக, இவர் இங்கே ஏளனம் செய்து சிரிக்கிறார். இவரை எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள், இவர் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்.

வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்

2 days ago
வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் 04 Apr, 2026 | 06:02 PM ( எம்.நியூட்டன்) வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (09) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. புகையிரத சேவைக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும் , புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242733

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 1 hour ago
உண்மையில் இவை பலவீனமாவை. அமெரிக்கா பழைய விமானம் தாங்கியை தாக்கி, சோதனை செய்து, மூழ்கடிக்க கிட்டத்தட்ட்ட 21 நாட்கள் தொடர் குண்டு / ஏவுகணை வீச்சு தாக்குதல் தேவை என்று கண்டறிந்து இருந்தாலும். இவை பலமான காலம் இருந்தது, அது கடந்து விட்டது. இவற்றில் உள்ள பிரச்னை சிறு தொழில்நுடப்ப, மற்றும் 1000 கணக்கான தொழிற்படும் முறைகளில் (procedures) சிறிய பிரச்னையும் இவற்றை ஆபத்தில் இலகுவாக சிக்கவைத்து விடும். இதனால் தான் லிங்கன் இரானில் இருந்து 1000 km அப்பால் முறையான இந்து சமுத்திரத்தில் தரித்து இருக்கிறது. ஆனால், மெடிட்டரெனியனில் தரித்து இருந்து இஸ்ரேல் க்கு இரான் அடிக்கும் ஏவுகணைகளை குறிவைத்த போர்ட் சாதாரண drone ஆல் அடிக்கப்பட்டு, தொழிற்பட முடியாமல், திருத்துவதற்கு முதலில் கிரெக்கம் கொண்டு செல்லப்பட்டது. இப்பொது எங்கு இருக்கிறதோ தெரியாது. இறுதியாக சொல்லபப்பட்டது, ஆண்டு இறுதி வரை பாவிக்கப்பட்ட முடியாது என்று. இது ஒரு சிறிய drone ஆல் வந்த விளைவு, யானையின் துதிக்கையில் எறும்பு புகுந்த கதை.

ஒரு வைத்தியரை உருவாக்க 60 இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே!

2 days 1 hour ago
ஒரு வைத்தியரை உருவாக்க 60 இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே! Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 02:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் உபாலி பன்னிலகே இந்தத் தகவல்களை வெளியிட்டார். இலங்கையின் சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் இலவச சுகாதார சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஒருவரின் பணப்பையிலுள்ள பணத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீட மாணவர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின் வைத்தியராக வெளியேறுவதற்கு அரசாங்கம் மிக அதிக தொகையைச் செலவிடுகிறது. ஒரு பொறியியலாளரை உருவாக்க 30 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் நிலையில், ஒரு வைத்தியரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது பொறியியலாளருக்கான செலவை விட இரு மடங்காகும்," என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் 35,000 முதல் 38,000 வரையான வைத்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 25,000 முதல் 28,000 வரையிலானோர் அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்ட அவர், சமூகத்தில் அவர்கள் கொண்டுள்ள விசேட பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/242721
Checked
Mon, 04/06/2026 - 13:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed