புதிய பதிவுகள்2

யாழ். மண்ணில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

1 day 19 hours ago
கோயிலில் குருக்கள் ஆவதற்குரிய பட்டப்படிப்பு போலும். நான் ஏதோ பல்கலைக்கழக பட்டப்படிப்பு என விளங்கி இதை படித்துவிட்டு வேலை எடுக்கலாமோ என வினவ நினைத்தேன்.

முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?

1 day 19 hours ago
முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? Apr 7, 2026 - 01:42 PM தற்போது நிலவும் வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட துண்டிப்பு எதனையும் அமுல்படுத்தவில்லை என்றும், அவ்வப்போது ஏற்படும் மின்சாரத் தடை தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் மின்சாரத் தடைகளே (Breakdowns) என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் சில இடங்களில் தினமும் ஒரு மணித்தியாலம் அல்லது சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அது குறித்து மக்களுக்கு முறையாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களைத் தவறாக வழிநடத்தும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும், மின்சாரத் தடைகள் அவ்வப்போது ஏற்படுவது நாட்டு மக்களுக்குப் புதிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டார். குறுகிய காலத்திற்கு இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படுவதை 'மின்வெட்டு' என்று அழைக்காமல், 'மின்சாரத் தடை' என அழைப்பதே பொருத்தமானது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnoccdtv0005356p3jdvlvr0

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 19 hours ago
அமெரிக்காவின் எஃப் 15 விமானம் தோளில் வைத்து ஏவப்பட்ட ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, எஃப் 15 விமானம் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் கிறிஸ் பார்ட்ரிட்ஜ், எம்மா பெங்கெல்லி மற்றும் அலெக்ஸ் முர்ரே பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பட ஆய்வுகள், அதிகாரப்பூர்வ கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அமெரிக்கா இந்தப் போரில் இதுவரை குறைந்தது 9 விமானங்களை இழந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் எஃப் 15 ஸ்டிரைக் ஈகிள் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, கண்டறிவதற்கு கடினமான, வெப்பத்தை இலக்காகக் கொண்டு தாக்கும் நடமாடும் தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணையே காரணமாக இருக்கலாம். திங்கள்கிழமை இரவு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தோளில் வைத்து ஏவக்கூடிய வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணை இதில் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும் இது அவர்களுக்கு ''அதிர்ஷ்டவசமாக அமைந்தது'' என்றும் அவர் விவரித்தார். விமானிகள் இரண்டு வகையான ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ஒன்று ரேடார் மூலம் வழிநடத்தப்படுபவை, மற்றொன்று அகச்சிவப்பு கதிர்கள் (வெப்பம்) மூலம் இலக்கைத் தொடர்பவை. முதலாவது வகை ஏவுகணையால் ஒரு போர் விமானம் குறிவைக்கப்பட்டால், அந்த ரேடார் கதிர்வீச்சை விமானத்தில் உள்ள மின்னணு அமைப்புகள் கண்டறிந்துவிடும். இது குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலியெழுப்பியும், திரையில் அதன் இருப்பிடத்தைக் காட்டியும் எச்சரிக்கும். இதற்கான ஆரம்பகால அமைப்பு TEWS (Tactical Electronic Warfare Suite) என்று அழைக்கப்பட்டது, இது பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணைகள் ரேடார் சிக்னல்களை வெளியிடுவதில்லை. அவை மறைமுகமாகச் செயல்படுகின்றன. இதனால் விமானிகள் தங்கள் சொந்தக் கண்களால் பார்ப்பதைத் தவிர, இந்த ஏவுகணைகளைக் கண்டறிவது மிகவும் கடினம். குறிப்பாக அகச்சிவப்பு கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணைகளின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கடந்த ஆண்டு அமெரிக்க விமானப்படை தனது எஃப் 15 விமானங்களின் பாதுகாப்பு அமைப்பை புதிய வசதிகளுடன் மேம்படுத்தும் பணியைத் தொடங்கியது. பிரிட்டனின் லேகன்ஹீத் விமானப்படை தளத்தில் உள்ள விமானங்கள் இதனை முதலில் பெற்றன. எஃப்-35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்கள், அகச்சிவப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஏவுகணை நெருக்க எச்சரிக்கை அமைப்பை கொண்டுள்ளன. எஃப் 15 சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது, இரான் வான்வெளியில் அமெரிக்காவுக்கு பெரும் பலம் இருக்கிறது என்பதால் அங்கு அச்சுறுத்தல்களே இல்லை என்று அர்த்தமல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பட மூலாதாரம்,Social media படக்குறிப்பு,ஏப்ரல் 5 அன்று சரிபார்க்கப்பட்ட காணொளி ஆதாரங்கள், இரான் நாட்டின் இஸ்ஃபஹான் நகருக்குத் தெற்கே போர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் புகைந்துகொண்டிருப்பதைக் காட்டுகின்றன. போரில் அமெரிக்கா இழந்த விமானங்கள் எவை? இரானில் விழுந்த அமெரிக்க வீரரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த எஃப் 15 விமானத்திற்கு உதவ அனுப்பப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள், இரானின் தொலைதூரத் தளம் ஒன்றிலிருந்து புறப்பட முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் நியூஸ் ஏப்ரல் 5 அன்று தெரிவித்தது. அந்த விமானங்கள் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க அழிக்கப்பட்டதாக அந்த செய்தி கூறியது. உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மத்திய இரானில் ஒரு விமானத்தின் சிதைந்த பாகங்கள் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டின. அந்த பாகங்களை ஆய்வு செய்து, அது எந்த வகை விமானம் என்பதைக் கண்டறிய பிபிசி வெரிஃபை நிபுணர்களிடம் கேட்டுள்ளது. ஏப்ரல் 3 அன்று, மத்திய இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள சிதைந்த பாகங்கள் அமெரிக்காவின் எஃப் 15 ஸ்டிரைக் ஈகிள் விமானத்தைச் சேர்ந்தவை என்று ஒரு நிபுணர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். அதே நாளில், ஏ-10 வார்த்ஹாக் விமானம் ஒன்று வளைகுடா பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதன் விமானி விமானத்திலிருந்து குதித்துத் தப்பியதாகவும் பின்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இராக் பகுதியில் அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது (கோப்புப் படம்) செளதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில், இரான் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, இ3 சென்ட்ரி என்ற கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் இரண்டாகப் பிளந்து கிடப்பதை மார்ச் 29 அன்று பிபிசி உறுதிப்படுத்திய படங்கள் காட்டின. மார்ச் 12 அன்று, மேற்கு இராக் பகுதியில் அமெரிக்காவின் கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஆறு பணியாளர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் ''எதிரிகளின் தாக்குதல் அல்லது தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதல்'' ஆகியவற்றை அமெரிக்கா நிராகரித்துள்ளது. மேலும் மார்ச் 2 அன்று, குவைத்திற்கு மேலே மூன்று அமெரிக்க எஃப் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதை "நட்பு நாட்டுத் தாக்குதல் சம்பவம்" என்று அமெரிக்க ராணுவம் விவரித்தது. அதில் இருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக அது கூறியது. குவைத் நகருக்கு மேற்கே ஒரு எஃப் 15 விமானம் தரையை நோக்கிச் சுழன்று விழுவதையும், பயன்படுத்தப்பட்ட ஒரு பாராசூட்டுக்கு அருகில் ஒரு பணியாளர் இருப்பதையும் காட்டும் வீடியோவை பிபிசி வெரிஃபை உறுதி செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy410g9kz4go

சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'

1 day 19 hours ago
யாழ் வாசகர்கள் எவரும் "ரத்தம் கக்கி" இறந்து விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, சற்ஜிபிரியில் மொழி மாற்றம் செய்திருக்கிறேன்! Iska is the West's false propaganda.. Kuska alone isn’t good; for biryani, a leg piece… ldhu jyu asku pusku (எனக்கேதும் விருது குடுங்கய்யா! 😂)

சுன்னாகத்தில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

1 day 20 hours ago
சுன்னாகத்தில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு Apr 7, 2026 - 11:55 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள் எட்டிப் பார்த்தபோது, அங்கு ஆண் ஒருவரின் சடலம் நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கவனித்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளார். மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில், கிணற்றின் அடியில் காணப்பட்டுள்ளது. எனவே, குறித்த நபரை யாராவது அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தைக் கிணற்றுக்குள் வீசியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmno8ilz80002356pom1gewux

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 20 hours ago
வசி இணைத்த வீடியோவைப் பார்க்கவில்லை, ஏனெனில் "சதித் திட்டக் கதை பின்னி" சில்லறை பார்க்கும் கிம் ஐவர்சன் என்ற யூ ரியூப் வியாபாரியிடம் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்க இயலாது. கோவிட் 19 காலத்தில், அதன் பரவல், தடுப்பு முறைகள், தயாரிக்கப் பட்ட தடுப்பூசிகள் என எல்லாவற்றையும் போலி என்ற சதிக்கதை பின்னி வயிறு வளர்த்தவர்களில் ஒருவர் இவர். அதனாலேயே The Hill என்ற நம்பகமான ஊடகத்தில் இருந்து அகற்றப் பட்டார்!

துருக்கியில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு : ஒருவர் சுட்டுக்கொலை, இருவர் கைது

1 day 20 hours ago
துருக்கியில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு : ஒருவர் சுட்டுக்கொலை, இருவர் கைது 07 Apr, 2026 | 05:17 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே பொலிஸாரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் தாவூத் குல் (Davut Gül) தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலின் போது இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “எங்கள் பொலிஸாரின் விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையால் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,” என ஆளுநர் அந்நாட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற வேளையில், இஸ்ரேலிய தூதரகம் மற்றும் அங்கார நகரில் உள்ள பிரதான தூதரகங்களிலும் இஸ்ரேலிய இராஜதந்திரிகள் எவரும் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலிய இராஜதந்திரிகள் முன்னதாகவே துருக்கியிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூதரகத்தில் அதிகாரிகள் இல்லாத சூழலில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துருக்கிய பொலிஸாரே தாக்குதலுக்கான பிரதான இலக்காக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, துருக்கியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Mustafa Çiftçi, தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். தாக்குதலாளிகள் இஸ்மித் பகுதியிலிருந்து வாடகை வாகனத்தில் இஸ்தான்புல் நகருக்கு வந்து இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து இஸ்தான்புல் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/242989

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

1 day 20 hours ago
இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு Apr 7, 2026 - 10:14 AM வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, "மரண விபத்துக்கள் ஒரு பேரழிவாக மாறியுள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒப்பிட்டுப் பார்த்தால், மரண விபத்துக்கள் 74 ஆல் அதிகரித்துள்ளன; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆல் அதிகரித்துள்ளது. வீதிகளின் தரம், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும். உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பாதசாரிகளாவர். ஏப்ரல் 5 ஆம் திகதி வரை 230 பாதசாரிகளும், 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்." என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக, வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே எனச் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmno4xc2f0009356p2t9kv56i

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

1 day 20 hours ago
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியில் இலங்கை வம்சாவளி வினாலி வீனஸ் 07 Apr, 2026 | 04:52 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியில் இலங்கை வம்சாவளி வீராங்கனை வினாலி வீனஸ் வீரப்புலி இடம்பெற்றுள்ளார். இவர் கோல்ட்ஸ் கரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் கழகம், நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கழகம் ஆகியவற்றின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் துஷார அஜன்த வீரப்பலியின் மகள் ஆவார். துஷார அஜன்த வீரப்புலி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். வினாலி வீனஸ் 2009ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வெஸ்ட் மிட்ல்செக்ஸ் வைத்தியசாலையில் பிறந்தார். இங்கிலாந்தின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் என வருணிக்கப்படும் வினாலி வீனஸ், ப்றட்பர்ட் க்றம்மர் ஸ்கூலில் கல்வி பயின்று வருகிறார். 16 வயதுக்குட்பட்ட அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான சார்லட் எட்வேர்ட்ஸ் விருதை வென்றெடுத்த சில தினங்களில் வினாலி வீனஸ், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். லன்காஷயர் மற்றும் தண்டர் அக்கடமி (பயிற்சியகம்) ஆகிய அணிகளின் சுழல்பந்துவீச்சாளரான 16 வயதுடைய வினாலி வீனஸ், பயிற்சியக மற்றும் கழக மட்டப் போட்டிகளில் கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் 124 விக்டெக்களைக் கைப்பற்றி இருந்தார். பயிற்சியக கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் 33 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தந்தை துஷார அஜன்த வீரப்புலியின் வழிகாட்டலில் MCC Foundation’s Cricket Beyond Boundaries இல் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த வினாலி வீனஸ், இங்கிலாந்து லன்காஷயர் கிரிக்கெட் ஆற்றல் கட்டமைப்பில் இணைக்கப்பட்டார். வினாலி வீனஸுக்கு கடந்த நவம்பர் 6ஆம் திகதி சார்லட் எட்வேர்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற சில தினங்களில் அவர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 'கடந்த கிரிக்கெட் பருவகாலம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த விருதை பெறுவதென்பது பெருமை தரும் விடயமாகும். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்ட இங்கிலாந்து ஆயத்த கட்ட அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது அதனை விட பெரிய விடயமாகும். அங்குள்ள பயிற்றுநர்களிடம் நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்' என அப்போது வினாலி வீனாஸ் கூறியிருந்தார். 15 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட மற்றும் சிரேஷ்ட லன்காஷயர் அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியுள்ள வினாலி வீனஸ் வீரப்புலி, தற்போது தண்டர் பயிற்சியக அணியில் இடம்பெறுகின்றார். இந் நிலையில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்த வினாலி வீனஸ், தற்போது 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுகிறார். அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் இயன் ஹீலி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மும்முனை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வினாலி வீனஸ், 8 ஓவர்கள் பந்துவிசி 35 ஓட்டங்களைக் கொடுத்தார். துடுப்பாட்டத்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/242982

காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல்

1 day 20 hours ago
ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை: உலக வரலாற்றின் மிக முக்கிய இரவு இதுவா? Apr 7, 2026 - 06:21 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில், அமெரிக்க நேரப்படி இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், அது பெரும்பாலும் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், தீவிரத்தன்மை குறைந்த மற்றும் புத்திசாலித்தனமான மனப்பாங்கு இருக்கும் பட்சத்தில், ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு அமையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Truth SocialDonald J. Trump (@realDonaldTrump)A whole civilization will die tonight, never to be brought back again. I don’t want that to happen, but it probably will. However, now that we have Complete and Total Regime Change, where different, shttps://adaderanatamil.lk/news/cmnom8yj1000l356pphvb6jxq

யாழ். மண்ணில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

1 day 22 hours ago
07 Apr, 2026 | 10:19 AM சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரடி தரிசன அருளாசி வழங்குவதற்காக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். "சிவாகம கலாநிதி "சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் (தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.) தலைமயிலான குருமார்கள், சமய சமூக பெரியார்கள் என அனைவரும் இணைந்து வரவேற்றனர். சுவாமிகளின் அனைத்து நிகழ்வுகளிலும் "சிவாகம கலாநிதி" குருக்கள் இணைந்து நல்லாதரவுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யாழ் சைவ பரிபாலன சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதன் போது இலங்கை நாட்டின் பிரதிநிதியாக சைவப்புலவர் சிவப்பிரியா ராஜ்குமார், தருமை ஆதீனப்புலவரும் இயக்குநருமான சித்தாந்த சரபம் அருணைவடிவேல் முதலியார் பாலறாவாயனால் தருமை ஆதீன நட்சத்திரக் குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். மண்ணில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம் | Virakesari.lk

கொத்மலை வேன் விபத்து; சிறுவனின் துணிச்சலால் உயிர் தப்பியது குடும்பம்

1 day 22 hours ago
07 Apr, 2026 | 12:11 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவன், ஒரு பாரிய விபத்திலிருந்து தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடந்த 02 ஆம் திகதி குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி நள்ளிரவில் வேனில் பயணித்த போது, ரம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். மற்றுமொருவர் அருகில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்துள்ளார். காயங்களுக்கு மத்தியிலும் மனத்திடம் குறையாத ஹிரந்த, மற்றுமொருவருடன் இணைந்து மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு அந்த ஆழமான பள்ளத்திலிருந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் வீதிக்கு மேலே ஏறி வந்துள்ளார். வீதியில் சென்ற வாகனங்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் பெரும் முயற்சி செய்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்ட ஒரு லொறி ஊழியர்களின் உதவியுடன் கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் லொறி மூலம் கொத்மலை வைத்தியசாலைக்கும், அங்கிருந்து நுவரெலியா பொது வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தமது உயிரைப் பொருட்படுத்தாது, நள்ளிரவு வேளையில் துரிதமாகச் செயற்பட்டு தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிய சிறுவன் ஹிரந்தவின் வீரத்தைப் பாராட்டி கொத்மலை பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது கௌரவத்தைத் தெரிவித்துள்ளனர். சிறுவன் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளான். கொத்மலை வேன் விபத்து; சிறுவனின் துணிச்சலால் உயிர் தப்பியது குடும்பம் | Virakesari.lk

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்!

1 day 22 hours ago
07 Apr, 2026 | 12:25 PM நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நுவரெலியா மாகாண சபையின் முதல்வர் உப்பாளி வனிகசேகர தெரிவித்தார். இந்நிலையில் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இக்கொண்டாட்ட நாட்களில் ஹெலிக்கொப்டர் சவாரி, படகு சவாரி, மலர் கண்காட்சி போன்ற களியாட்ட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! | Virakesari.lk

யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

1 day 22 hours ago
Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 04:52 PM யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காணொளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவத்தில் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட பிரதான சந்தேகநபரான 58 வயதுடைய பெண், நேற்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நான்காவது பங்குனித் திங்கள் உற்சவத்தின் போது கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கிளிநொச்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டதுடன், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான பெண் உட்பட மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது! | Virakesari.lk

கார்க் தீவு மீது பாரிய தாக்குதல் ; ஈரானிய ஊடகம் தெரிவிப்பு

1 day 22 hours ago
Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 05:41 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் கால அவகாசம் நிறைவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானின் மிக முக்கியமான கார்க் தீவு மீது பாரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கைக் கொண்டுள்ள கார்க் தீவின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தை இலக்கு வைத்து அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்றையதினம் காலை கார்க் தீவுப் பகுதியில் பல பாரிய வெடிப்புகள் நிகழ்ந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம், உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலினால் பிராந்தியத்திற்கான மசகு எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் புனித நகரமான கோம் நகருக்கு வெளியில் உள்ள ஒரு முக்கிய தரைவழிப் பாலம் அமெரிக்க - இஸ்ரேலிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஏனைய முக்கிய பாலங்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்க் தீவு மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர இராணுவம் (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் பொறுமை முடிந்துவிட்டதாகவும், இனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் (சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவை) உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பல ஆண்டுகளுக்கு முடக்கும் வகையில் பாரிய பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. கார்க் தீவு மீது பாரிய தாக்குதல் ; ஈரானிய ஊடகம் தெரிவிப்பு | Virakesari.lk

டிரம்ப்பின் சதி அம்பலம் - ஈரான் போராட்டத்தில் நடந்தது என்ன?

1 day 22 hours ago
வெள்ளைப் புறாவே… விசர் தம்பா… அங்கிள்மாரின் ஆதர்ச புருசா… விசர் தம்பா… ஆப்பிழுத்த குரங்கு… நீ மட்டும் இல்லை…. விசர் தம்பா…. ஆதரித்த அங்கிள்களும்தான்😂
Checked
Thu, 04/09/2026 - 10:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed