புதிய பதிவுகள்2

யாழ். நகர்ப்பகுதியில் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

1 day 13 hours ago
இவர் கடல் வளத்துறை அமைச்சரல்லவா? எப்போ இந்த துறைக்கு மாற்றப்பட்டார், மாறினார் அல்லது தானாகவே எடுத்துக்கொண்டாரோ? தேர்தல் வருகிறது, தமிழ்த் தலைமைகளுக்கு யோசனை கூறுவது, அவர்கள் கேட்க்கும் தீர்வுகளுக்கு தான் உரிமை கோருவது, கட்சி தாவுவது, அது போலவே தனது அமைச்சு பொறுப்புகளை கைவிட்டு வேறு அமைச்சுக்கு தாவுவது. எதிலாவது நிலைத்து, இதுதான் எனது கொள்கை, இவர்தான் என் தலைவன் என்று இருந்திருக்கின்றாரா? இப்பவே சஜித்துக்கு தூது விட்டு அழைப்புக்காக காத்திருப்பார், அதே நேரம் ரணில் புகழும் பாடுவார், மறுநாள் சஜித்தே சிறந்த தலைவர் என்பார். இவரின் வாழ்வே ஒரு நகைச்சுவை தான்போங்கோ. இவர் மட்டுமல்ல இவர் போன்றோர் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், தீர்வுகள் இழுத்தடிக்கப்படுகின்றன, சமுதாயம் சீர்கெடுகின்றது, சட்ட ஒழுக்கம் பாதிப்படைகின்றது, அதிரடியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது அப்பாவிகள் நசுக்கப்படுகின்றனர். பலருக்கு தாங்கள் யார் தங்கள் பொறுப்பு என்ன? எதற்காக தமக்கு சம்பளம் தரப்படுகிறது என்கிற தெளிவே இல்லாமல் கதிரையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொறுப்பு கூற வேண்டிய தருணத்தில் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் படுப்பதும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதுபோல் நமது பிரதேசத்தில் உள்ள திறமையற்ற தங்கள் பொறுப்புக்களின் தாற்பரியம், ஒழுங்கு, கொள்கை, அறிவு இல்லாதவர்கள், தெரியாதவர்கள் ஆளுக்கொரு, நாளுக்கொரு விளக்கமளித்து மக்களை குழப்புவதும் பிரச்சனைகளை உருவாக்குவதும் பதில் கூற பொறுப்பெடுக்க வேண்டிய நேரத்தில் கடமைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மறைந்து விடுகின்றனர். இதற்கு யார் காரணம்? "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 13 hours ago
2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 14 hours ago
🤣எதிர்பார்த்த படியே சொல்லியிருக்கிறீர்கள்: "34 ஆய்வுகள் யாரையோ திருப்தி செய்ய யாரோ செய்த ஆய்வுகள்". இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் (ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள். இது மூக்குச் சாத்திரம், ஆனால் அதையும் சீரியசான ஆய்வு முடிவு போல உங்களால் நீட்டி முழக்கிச் சொல்ல முடிகிறது😂. சிறு பான்மை, பெரும்பான்மையெல்லாம் ஏன்? இதற்கும் ஓர் பால் தம்பதிகளுக்கு உரிமைகள் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? "everybody is a minority somewhere, that doesn't mean they should be deprived of their basic rights" சொன்னது நான் அல்ல, ரோக்கியோ நகரில் "ஒரு பால் தம்பதிகளின் உரிமையை மட்டுப் படுத்த வேண்டும்" என்று நகர மேயர் போட்ட வழக்கை நிராகரித்து ஒரு ஜப்பானிய நீதிபதி சொன்னது. கட்டாயம் ரக்கர் கால்சன் சொல்வது இந்த ஓர் பாலின விடயங்களில் நம்பிக்கையான தகவலாகத் தான் இருக்கும். கார்ல்சனுக்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்தோடு உறவு வைத்திருப்பது கண்ணில காட்டக் கூடாது! ஆனால், கூட வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் அனுமதியில்லாமலே கையைக் காலை நீட்டுவது பூரண சம்மதமான விடயமாக இருந்திருக்கிறது😎. அதனால் தான் Fox News இல் இருந்து வேலை நீக்கப் பட்டார்!

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 14 hours ago
சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன். உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 14 hours ago
பிரித்தானிய நேரப்படி இன்று ஞாயிறு (16 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து நுணாவிலான் இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இங்கிலாந்து அணியை சுப்பர் 8 சுற்றுக்குள் போகவிடாமல் தடுக்குமா? 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து சுவி இப்போட்டியில் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் தனது பெருமையை கொஞ்சம் காத்து 22 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா?

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 15 hours ago
இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்? தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான். 1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக‌ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு. 2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்). 3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்). 4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு). 5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு. 6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான். இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "என‌க்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 15 hours ago
33வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த கனடிய அணிக்கும் இந்திய அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! ------ 34வது போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வேகமாக அடித்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெறமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி DLS முறையில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 34வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 54 2 ரசோதரன் 54 3 கோஷான் சே 54 4 ஈழப்பிரியன் 52 5 சுவி 52 6 நந்தன் 52 7 தமிழ் சிறி 48 8 ஏராளன் 48 9 கிருபன் 48 10 கந்தப்பு 48 11 வாத்தியார் 48 12 எப்போதும் தமிழன் 48 13 நீர்வேலியான் 48 14 வீரப் பையன்26 46 15 நிலாமதி 46 16 குமாரசாமி 46 17 தியா 46 18 வாதவூரான் 46 19 அஹஸ்தியன் 46 20 கல்யாணி 46 21 புலவர் 44 22 P.S.பிரபா 44 23 நுணாவிலான் 44

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 15 hours ago
வணக்கம்! இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான். அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன். இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.

யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

1 day 15 hours ago
டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது. மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும். பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை. மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 15 hours ago
இங்கே பலருக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த அடிப்படை அறிவே இல்லையென்பது அவர்கள் இங்கு எழுதும் கருத்துக்களில் அவ்வப்போது தெரிகிறது. முதலாவதாக, இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பது இலங்கையின் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எப்போதாவது ஒரு கோரிக்கையாக, அபிலாஷையாக இருந்திருக்கிறதா? இல்லை. அப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தோல்வியைத்தான் தரும் என்று ஆளாளுக்கு கட்டியம் கூறுவது ஏன்? அப்படியானால் உங்களைப்பொறுத்தவரை தமிழருக்கு இருக்கும் பிரச்சினையெல்லாம் தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதுதான் என்று நீங்கள் நம்புவது போலல்லவா இருக்கிறது? ஆகவே, முதலில் இந்த மாயையில் இருந்து வெளியே வாருங்கள். இலங்கை என்பது சிங்கள பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. ஆகவே சிறுபான்மையினமான தமிழரில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாவது மிகவும் கடிணமானது, அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒன்றும் அல்ல. இந்தத் தெளிவு இருந்தால் பொதுவேட்பாளர் குறித்த உங்களின் சர்ச்சைகளில் 50 வீதம் தெளிவாகி விடும்.

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !

1 day 15 hours ago
1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து ‍ நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !

1 day 15 hours ago
சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர். 1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர். இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதுப்பிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே? சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்? ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்? நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது. அரசியல்வாதிகள், தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன.

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

1 day 16 hours ago
🫢..... மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்... இலங்கையில் அவரவர் வேலையை செய்தால் பொன்னாடை கிடைக்கும் தருணங்களும் உண்டு.... ருத்ர சேனை, நீங்கள் எங்கேயப்பா...

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 16 hours ago
ம‌ன்னிக்க‌னும் ச‌கோத‌ரி இல‌ங்கையை அதில் எழுதி இருக்க‌ கூடாது த‌னிய‌ பாக்கிஸ்தான் தான தான் எழுதி இருக்க‌னும் நியுசிலாந்தும் இல‌ங்கையும் இந்த‌ உல‌க‌ கோப்பையில் தோத்து தான் வெளி ஏறின‌வை ஆனால் இல‌ங்கை நேபாள் விளையாட்டு ம‌ழையால் த‌டைப் ப‌ட்ட‌து நேற்று தென் ஆபிரிக்கா கூட‌ நேபாள் விளையாடின‌ விளையாட்டை பார்க்க‌ இல‌ங்கையை நேபாள் வென்று இருக்க‌ கூடும்........................................................

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 16 hours ago
அரசியலுக்கு புதியவர். தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ?? இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள். உதாரணம் நீதிபதி விக்கினேஸ்வரன். .....ஆகவே எவர் வந்தாலும் விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும் ஆனந்தி வேறு வேட்பாளர் இருந்தால் தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார் உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள் இந்த இரண்டாவது வாக்கு தேவையற்றது உதாரணமாக நான் முதலாவது வாக்கு போட்டவர். தோல்வி இரண்டாவது வாக்கு போட்டவர். வெற்றி இங்கே முதல் வாக்கு பெறுமதியை இழந்து விட்டது ....விளங்குகின்றதா. ?
Checked
Mon, 06/17/2024 - 13:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed