புதிய பதிவுகள்2

போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?

2 days 13 hours ago
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எதிரிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வீழ்த்தப்பட்ட விமானங்களின் வீரர்களை மீட்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ பிரிவுகள் சிறப்பு பயிற்சி பெறுகின்றன. கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதிப்படுத்தப்பட்டால், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்காவின் போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவே மிகவும் சமீபத்தியதாக இருக்கும். பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் (CBS) நியூஸ் தகவல்படி, விமானத்தில் இருந்த இரண்டாவது நபரைத் தேடும் பணி இரானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு (Combat Search and Rescue - CSAR) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன. அமெரிக்காவில், விமானப்படையின் எலிட் (Elite) பிரிவுகள் சிஎஸ்ஏஆர் (CSAR) நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றுள்ளன. விமானங்கள் இழக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள போர் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்படுகிறார்கள். போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்ஏஆர் பணிகள் என்பது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகள் மற்றும் தனித்துவிடப்பட்ட துருப்புகள் உள்ளிட்ட உதவி தேவைப்படும் நபர்களைக் கண்டறிவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் அவர்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகும். மனிதநேயப் பணிகளின் போதோ அல்லது பேரிடர்களுக்குப் பின்னரோ நடைபெறும் வழக்கமான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மாறாக - சிஎஸ்ஏஆர் பணிகள் ஆபத்தான அல்லது மோதல்கள் நிறைந்த சூழலில் நிகழ்கின்றன. சில சந்தர்ப்பங்களில், அதாவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு முயற்சியைப் போல - இந்த நடவடிக்கைகள் எதிரி நாட்டின் எல்லைக்குள் உள்ள தொலைதூர பகுதிகளில் கூட நிகழலாம். சிஎஸ்ஏஆர் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவாக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அந்தப் பகுதியில் தாக்குதல்களை நடத்தவும் ரோந்துப் பணியில் ஈடுபடவும் மற்ற ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கும். இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு நடவடிக்கை போன்ற ஒன்றில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் அந்தப் பகுதியில் தேடும் பணியில் குறைந்தது 24 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' (Pararescue Jumpers - வான்வழி மீட்பு வீரர்கள்) ஈடுபடுவார்கள் என்று பாராரெஸ்க்யூ ஸ்குவாட்ரனின் முன்னாள் தளபதி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார். தேவைப்பட்டால் அவர்கள் விமானங்களில் இருந்து குதிக்கத் தயாராக இருப்பார்கள் என்றும், தரையிறங்கியதும் காணாமல் போன ராணுவ வீரரைத் தொடர்பு கொள்வதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அவர்களைக் கண்டுபிடித்தவுடன், பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவார்கள், எதிரியிடமிருந்து தப்பித்து, தாங்கள் மீட்கப்படக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்வார்கள் என்று சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது. "இது மிகவும் திகிலூட்டக்கூடிய மற்றும் அபாயகரமான ஒரு பணி என்று சொல்வது கூட அதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்," என்று அந்த முன்னாள் தளபதி சிபிஎஸ் நியூஸிடம் கூறினார். "உலகம் முழுவதும் இதைச் செய்வதற்காக தான் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் விமானப்படையின் 'சுவிஸ் ஆர்மி நைஃப்ஸ்' (Swiss Army knives - பன்முகத் திறன் கொண்டவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்." என்கிறார் அவர். வெள்ளிக்கிழமை இரானில் இருந்து வெளிவந்த சரிபார்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், இரானின் குசெஸ்தான் மாகாணத்திற்கு மேலே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் இயங்குவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. (விளக்கப் படம்) சிஎஸ்ஏஆர் குழுக்கள் யாரை மீட்க முயல்கின்றனரோ, அதே அமெரிக்க வீரர்களைக் கண்டறிய எதிரிப் படைகளும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், இந்தப் பணிகள் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டவை. முன்னாள் அமெரிக்க கடற்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் நிபுணர் ஜொனாதன் ஹாக்கெட், பிபிசியின் 'வேர்ல்ட் டுநைட்' (World Tonight) நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு மீட்புக் குழுவின் முன்னுரிமை 'உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவதாக' இருக்கும் என்று கூறினார். "தேடப்படும் அந்த நபர் கடைசியாக இருந்ததாகத் தெரிந்த இடத்திலிருந்து, அவர்கள் பின்னோக்கிச் சென்று தேடுவார்கள்; ஒரு கடினமான நிலப்பரப்பில் வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் அந்த நபர் நகரக்கூடிய வேகத்தின் அடிப்படையில் அவர்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவார்கள்," என்று ஹாக்கெட் கூறினார். "இந்த வகையான மீட்புப் பணி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சிறப்பு உதவி தேவைப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்," என்று ஹாக்கெட் கூறினார். "இதில் அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் குழுக்களுடன் முன்னதாகவே தொடர்பு கொள்ளப்பட்டிருக்கலாம், இது ஏதேனும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது." படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகளின் வரலாறு வான்வழிப் போர்க்கால மீட்புப் நடவடிக்கைகளுக்கென நீண்ட வரலாறு உள்ளது. முதலாம் உலகப் போரின்போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் சக வீரர்களை மீட்பதற்காக பிரான்சில் விமானிகள் தன்னிச்சையாக விமானங்களைத் தரையிறக்கிய காலத்திலிருந்து இது தொடங்குகிறது. அமெரிக்க ராணுவத்தின் பாராரெஸ்க்யூ பிரிவுகளின் வரலாறு 1943-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அப்போது, இரண்டு போர்கால மருத்துவர்கள் காயமடைந்த வீரர்களுக்கு உதவ அப்போதைய பர்மாவுக்குள் (தற்போது மியான்மர்) பாராசூட் மூலம் குதித்தனர். உலகின் முதல் ஹெலிகாப்டர் மீட்பு ஒரு வருடம் கழித்து நடந்தது, அப்போது ஒரு அமெரிக்க லெப்டினன்ட் ஜப்பானியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து நான்கு வீரர்களை மீட்டார் என்று ஸ்மித்சோனியனின் ஏர் & ஸ்பேஸ் இதழ் கூறுகிறது. இந்தச் சம்பவம் போரில் முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதையும் குறித்தது. மோதல்கள் முடிந்த உடனேயே அமெரிக்காவில் முறையான தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுகள் முதன்முதலில் நிறுவப்பட்டன. ஆனால் நவீன சிஎஸ்ஏஆர் வியட்நாம் போரின் போதுதான் தொடங்கியது. பேட் 21 (Bat 21) என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையில், வட வியட்நாமியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் விமானியை மீட்க முயன்றபோது பல விமானங்கள் மற்றும் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அந்தப் போரின் காரணமாக, சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகள் பெருமளவில் விரிவுப்படுத்தப்பட்டன, அவை மேலும் பெரிய அளவிலும் சிக்கலானதாகவும் மாற்றப்பட்டன. அந்த அனுபவம் ராணுவத்தின் யுக்திகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவியது, அவையே பிற்காலத்தில் நவீன மீட்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மீட்புப் பணிகள், நவீன போர்க்காலத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வடிவமைக்க உதவின. (1975-இல் கம்போடியாவில் ஹெலிகாப்டரை நோக்கி ஓடும் அமெரிக்க பாராரெஸ்க்யூ குழுவினர்) அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஒவ்வொரு அமெரிக்க ராணுவப் பிரிவும் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட சிஎஸ்ஏஆர் திறன்களைக் கொண்டிருந்தாலும், ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. முக்கியமாக இந்தப் பணி ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் ஒரு பகுதியான 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படுகிறது. பாராரெஸ்க்யூவின் அதிகாரப்பூர்வ முழக்கம் 'மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் இவற்றைச் செய்கிறோம்' (These Things We Do, That Others May Live) என்பதாகும்; அவர்களின் பணி, அமெரிக்கப் படை வீரர்களுக்கு அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று வழங்கப்பட்ட பரந்துபட்ட வாக்குறுதியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவர்கள், போர் வீரர்களாகவும் மருத்துவ உதவியாளர்களாகவும் உயர்தர பயிற்சி பெற்றவர்கள், மேலும் அமெரிக்க ராணுவத்திலேயே மிகவும் கடினமானதாகக் கருதப்படும் தேர்வு மற்றும் பயிற்சிப் பாதைகளில் ஒன்றைக் இவர்கள் கடந்து வருகிறார்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் இந்தத் தேர்வு மற்றும் பயிற்சி செயல்பாட்டில், பாராசூட் மற்றும் டைவிங் பயிற்சி, அத்துடன் நீருக்கடியில் அழித்தல் (underwater demolition) தொடர்பான அடிப்படை பயிற்சி, கடினமான சூழல்களில் உயிர் பிழைத்தல், எதிர்ப்பு மற்றும் தப்பித்தல் பயிற்சி மற்றும் முழுமையான சிவில் மருத்துவ உதவியாளர் படிப்பு ஆகியவை அடங்கும். போர்க்கள மருத்துவம், சிக்கலான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த சிறப்புக் கல்வி மற்றும் பயிற்சிகளையும் அவர்கள் பெறுகிறார்கள். களத்தில், இந்த அணிகள் சிறப்புப் போர்கால மீட்பு அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன; மீட்புப் பணிகளைத் திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form சமீபத்திய அமெரிக்க மீட்பு நடவடிக்கைகள் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் முழுவதும் பாராரெஸ்க்யூ குழுக்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்த அல்லது வெளியேற்றப்பட வேண்டிய அமெரிக்க மற்றும் நட்பு நாட்டுத் துருப்புகளை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான நடவடிக்கைகளை இவை மேற்கொண்டன. 2005-ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க நேவி சீல் வீரரை மீட்பதில் விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஈடுபட்டன; தனது குழு திடீரென தாக்கப்பட்டு, குழுவின் பிற மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிய கிராமம் ஒன்றில் அந்த வீரர் தஞ்சம் புகுந்திருந்தார். அவரை மீட்ட இந்தச் சம்பவம் பின்னர் 'லோன் சர்வைவர்' (Lone Survivor) என்ற ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் விமானிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் சமீபத்திய தசாப்தங்களில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. 1999-ஆம் ஆண்டில், செர்பியாவின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-117 (F-117) ஸ்டெல்த் போர் விமானத்தின் விமானி பாராரெஸ்க்யூ வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். 1995-ஆம் ஆண்டில் போஸ்னியாவில் நடந்த ஒரு புகழ்பெற்ற சம்பவத்தில், அமெரிக்க விமானி ஸ்காட் ஓ'கிராடி, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகும் ஆறு நாட்கள் பிடிபடாமல் தப்பித்தார். பின்னர் விமானப்படை மற்றும் கடற்படைப் படையின் கூட்டு சிஎஸ்ஏஆர் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxrp13pkk6o

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 13 hours ago
பிரேமலதா ஒப்பந்தம் கைஎழுத்தான கையோடு புதுக்காருடன் போஸ் கொடுத்தது எதைக்காட்டுகிறது. 12 வீதத்துக்குமேல் நான் தயார் உங்கள் கணிப்பையும் சொல்லிவிடுங்கள்.நாதக எவ்வளவு ,தவெக எவ்வளவு?

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

2 days 14 hours ago
இதை நான் எழுத நினைத்தேன்… வெறும் வாயை மெல்லும் அங்கிள்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட கூடாது என தவிர்த்துவிட்டேன். நீங்கள் எழுதலாம்…குரு…கு…குறட்டை விட்டால் குற்றமில்லை😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 14 hours ago
பிரேமலதா திமுக கூட்டணிக்கு வாக்கு கொண்டு வருவார் எனவே அவருக்கு பெரிய பெட்டி. சீமான் திமுக எதிர்வாக்குகளை பிரிப்பார் எனவே அவருக்கு சிறிய பெட்டி. பிரேமலதா பெட்டி வாங்குவதால் சீமான் பெட்டி வாங்குவதை யாரும் கண்டுகொள்ள கூடாது என்கிறீர்களா? நீங்கள் பிரேமலதா பெட்டி வாங்கியதை பக்கதில் இருந்து பார்தீர்களா? அல்லது இது சீமானின் களவை மறைக்க மட்டும் நீங்கள் பாவிக்கும் பிரத்யேக முட்டா?😂 நாதக 15% எடுக்கும் என்கிறார்கள் பலர். வாத்தியார் அண்ணை பெட் கட்டியுள்ளார். உங்களிடம் பலமுறை கேட்டு விட்டேன். 12% என பெட் கட்டுவீர்களா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 15 hours ago
கருத்துத்திணிப்புகள் இப்பொழுதும் நாதகவை மற்றவர்களுக்குள் அடக்குகிறார்கள். அவர்களின் கருத்துத்திணிப்புகள் படி நாதக 4.5 வீதத்தை தாண்டாதாம். இன்னும் ஒரு மாதத்தில் முடிவுகள் வரும் அப்பொழுது பார்ப்போம்.விஜையின் வருகை திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்கு சாதகமான நிலை போன்று இருக்கிறது. ஆனால் கடைசி நேர வாக்காளர்கள் திமுக அகற்ற வேண்டும் என்றால் அதிமுகவையை தமது தெரிவாக எடுத்துக்கொள்வார்கள். விஜை இந்தத் தேர்தலுடன் நடிக்கப் போய்விடுவார். நாதக தனது 8 வீத வாக்கு வங்கியைத் தக்கவைத்தால் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். பக்கத்தில் நின்று பெட்டியை வாங்கிக் கொடுத்தவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்கும் ஒன்றிரண்டு பெட்டி கிடைத்திருக்காதா?பெட்டியைுயும்வாங்கி தம்பிக்கு ராஜியசபா பதவியையும் வாங்கிலாண்ட்றோவர் காரினையும் வாங்கி முன்னால் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து அம்மா மகனுக்கு சீற் கொடுத்து விட்டு தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த கட்சிகளை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

2 days 15 hours ago
இதை முன்பு அருமையாக 1-2 தரம் பாவித்ததாக தகவல் இருக்கிறது. இரானின் சொந்த தயாரிப்பா அல்லது ரசிய / சீன உதவியா? சீனா, ருசியா முதலில் இரானுக்கு இழப்பு என்றாலும் (எவ்வளவு )நின்று பிடிக்கும், அதாவது எவ்வளவு தூரம் us / மேட்ற்கு / இஸ்ரேல் ஐ இரானால் சிக்கவைக்க முடியும் என்பதை பொறுத்தும் / அறிந்தும் உதவிகள்

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

2 days 15 hours ago
ஒரு கோவில் திருவிழாவின் போது 25 குடும்பங்களு வீடு கட்டி குடுத்துள்ளார் என்று வேறு ஒரு பதிவில் பார்த்தேன்.உபயகாரர்கள் போய் சாதரண ஒரு மாம்பழம்தை 2 லட்சம் 3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கும் காலத்தில் இவரது செயல் மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் பணியும் தொடரட்டும்.நான் சும்மா வேலை தடங்கலின்றி நடக்கட்டும் என்பதற்காக ஏதாவது சொல்வேன்.கண்டு கொள்ள வேணாமே.🖐

குட்டிக் கதைகள்.

2 days 15 hours ago
Ssproedtonc989 m9v0iLg6 921r05ii7cf9cgm5f 9g3à geh:5t0laa602 · *அருமையான பதில்!* ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், "உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" என்று கேட்டார். 🥰" வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், "தாஜ் மஹால்!" என்று முழங்கியது. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் *ராமர் சேது* (Ram Setu) என்று பதிலளித்தான். ஆசிரியர் அவனை எழுந்து நிற்குமாறு கூறினார். "நீ என்ன சொல்ல வருகிறாய்...?" 👇" அந்தச் சிறுவன் எழுந்து நின்று பின்வருமாறு கூறினான்: 👉" "ராமர் சேதுவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தன் மனைவியின் சடலத்தைப் புதைப்பதற்காக அல்ல; மாறாக, தன் மனைவியை மீட்டு வருவதற்காகவே ஸ்ரீராமரால் கட்டப்பட்டது!!! 👉"ஸ்ரீராமர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, பெண்களின் கண்ணியத்தைப் போற்றிக் காத்தார்; ஆனால், ஷாஜகானுக்கோ பல மனைவியரும், துணைவியரும், அடிமைப் பெண்களும் இருந்தனர். 👉" ராமர் சேதுவானது, ஸ்ரீராமரின் படையில் இருந்த வீரர்களால் கட்டப்பட்டது; ஆனால் தாஜ் மஹாலோ, ஒரு பெரும் பஞ்ச காலத்தில் முகலாயர்களால் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களால் கட்டப்பட்டது. 👉" மேலும், அந்தச் சேதுப்பாலத்தைக் கட்டியவர்களுக்கு ஸ்ரீராமர் முழுமையான மரியாதையை அளித்தார். 👉"'இனி உலகில் இது போன்றதொரு அதிசயம் வேறெங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஸ்ரீராமர் அந்தத் தொழிலாளர்களின் கைகளைத் துண்டிக்கவில்லை." 👌" ஆசிரியரும் மற்ற மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய வரலாறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் 'மீண்டும் எழுதப்பட' வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய வரலாற்றை 👉" மீண்டும் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில், தயவுசெய்து இதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.! [[ பகிர்வு பதிவு ]] Voir la traduction......!

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

2 days 15 hours ago
தேடிய உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் காட்சி. பார்வைக்கு நம்பமாக இருக்கிறது. உறுதிப்படுத்தப்படவிவில்லை.

ஆடல் - கிரிசாந்

2 days 15 hours ago
காமத்தின் அத்தனை விருப்பங்களையும் வார்த்தைகளில் உதிர்த்து விட்டு நுரை முட்டைகளைத் தாவித் தாவி பிடித்து மகிழும் சிறுவர்கள் போல் திரும்புகிறார்கள் ..........! 🙂 சுவையான விவாதங்கள் ...... நன்றி கிருபன் .......!

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

2 days 16 hours ago
ஈரான் இன்று அடித்த ஏவுகணையும் சென்ற வாரம் இஸ்ரேலுக்கு அடித்த Khorramshahr-4 (குஹ்யபேர்) உலகில் இதுவரையில் பாவனையில் இல்லாதா தொழில்நுட்பம் சீனா ஈரானுக்கு இதை கொடுத்து இருக்க வேண்டும் புதிய passive - Radar system மும் பாவிக்க தொடக்கி இருக்கிறார்கள் இதும் ரசியா அல்லது சீனா கொடுத்து இருக்கலாம் இன்று அடித்த ஏவுகணை ரேடார்களின் உதவி இன்றி தானியங்கியாக இயங்க்கி இலக்கை அழிக்க கூடியது

'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

2 days 16 hours ago
https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cardsதிடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! By Nantha Kumar R Published: Saturday, April 4, 2026, 15:09 [IST] Subscribe to Oneindia Tamil புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதல் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜய் தனது தவெக வேட்பாளருக்கு பதில் அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சம்பவம் நடந்தது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ளது. Also Read "இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன்" இதையடுத்து விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் திறந்த வாகனத்தில் நின்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். மணவெளி வேட்பாளருக்கு ஆதரவாக.. புதுச்சேரியின் மணவெளி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ராமு போட்டியிடுகிறார். தவளக்குப்பம் பகுதியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டு நின்ற தொண்டர்கள் மத்தியில் பிரசார வாகனத்தின் மேல் நின்று விஜய் பேசினார். விஜய் அருகே மணவெளி சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் ராமு நின்றிருந்தார். பெயரை மாற்றி சொன்ன விஜய் இந்த சமயத்தில் விஜய், ''மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்க'' என்று கூறினார். இதனால் தவெக வேட்பாளர் ராமு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பெயர் செல்வம் இல்லை. ராமு என்று கூறினார். இதையடுத்து சுதாரித்த விஜய், ''ராமுவிற்கு ஆதரவு கொடுங்கள்'' என்று கூறினார். Recommended For You Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 17 hours ago
அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ஆட்சியில் வாங்கிய கடன்களை திருப்பிக் செலுத்தமாடாராம். செலுத்த வேண்டிய எல்லா கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமாம். 😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 18 hours ago
அண்ணன் திரள் நிதியில், பெட்டி வாங்கி ஊதி கொழுக்க, இவர்கள்தான் முதலீடுகள். இதில் பலர் கடன் வாங்கி தேர்தலுக்கு செலவு செய்து, கடனாளியாகி குடும்பத்தை கஸ்டத்தில் தள்ளுவார்கள். முந்தைய பல வேட்பாளருக்கு இப்படி நடந்தது என யூடியூப்பில் பலர் கதறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் 4-8% வாக்கை அண்ணன் ஏலம் விட்டு, பெட்டி வாங்கி விடுவார். அதில் கொஞ்சம் பாக்கியராச்னுக்கு போகும். இடும்பாவனம் போன்றோருக்கு சோறு போடப்படும். மிகுதி எல்லாம் அண்ணன் பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் தனியார் பள்ளி பீஸ் கட்டவும், 3 இலட்சம் மாதவாடகை கொடுக்கவும், இரெண்டு கிலோ தங்கம் வாங்கவும், 50 ஏக்கர் நிலம் வாங்கவும் பயன்படும்.

இரசித்த.... புகைப்படங்கள்.

2 days 18 hours ago
இரண்டு வீடுகளுக்கு உள்ள வேலியின் கீழ்... குனிந்து நுழைந்து அடுத்த வீட்டிற்கு செல்ல, முன்னைய யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இந்தப் பொட்டு அமைத்து இருப்பார்கள். எங்கள் வீட்டிலும் இப்படி ஒன்று இருந்தது. இப்போ... மதில்கள் எல்லாம் வந்து, அயல் வீடடையும் அந்நியமாக்கி விட்டது. ###################### ################# போர்க் காலத்தில் நாம் அவசரத்திற்கு ஓட... கை கொடுத்த பொட்டு, கடப்பு... இன்றும் சில இடங்களில் உள்ளது. வேலியின் கீழ்ப் பகுதியை வெட்டி அதற்குள்ளால் போனால் அது பொட்டு. வேலியின் மேல் அரைப் பகுதியை வெட்டி அதற்கு மேலாகக் கடந்து போனால் அது கடப்பு. Babu Babugi

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 days 18 hours ago
இல்லை. துணை கொ.ப.செ பதவியும் இன்னும் கொடுக்கப்படவில்லை. இவர் மட்டும் அல்ல திமுகவில் ரஜீவ் காந்தி, அதிமுகவில் க.சுந்தரம் என முன்னாள் தம்பிகள் எவருக்கும் சீட் இல்லை. காளியம்மாள் நாதகவில் இருந்து வெளியேறிய உடனே தவெகவில் இணைந்திருக்கலாம். காலம் தாழ்த்தி அதிமுகவில் இணைந்ததால் தேர்தலுக்கு அண்மையில் இணைந்தவருக்கு சீட் கொடுக்க இவர் அப்படி ஒன்னும் அப்பாடக்கர் இல்லை என எடப்பாடி நினைத்திருக்கிறார்.
Checked
Tue, 04/07/2026 - 01:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed