3 days 5 hours ago
முந்தைய இருப்பு 139,755.48+383.87=140,139.35 ரூபா சேமிப்பு வட்டியுடன் தற்போதைய வங்கி மீதி. 140,139.35-38.39=140,100.96 ரூபா தற்போதைய வங்கி மீதி. பிடித்து வைத்தல் வரி 38.39 ரூபா.
3 days 6 hours ago
அமெரிக்க அதிபர் ட்ரம்பினதும், ஈரான் இராணுவ அதிகாரி இப்ராஹிம்மினதும் ஒரே நிலைப்பாடு பெரும் அழிவையன்றி வேறு எதையுமே கொண்டு வரப் போவதில்லை. ஈரானும் இந்தச் சண்டையில் தோற்று சரண்டையப் போவதில்லை, அமெரிக்கா அல்லது இஸ்ரேலோ தோற்கப் போவதும் இல்லை. இங்கு எவரும் வெல்லப் போவதும் இல்லை. ஈரான் மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்ததாக வளைகுடா நாடுகள். பின்னர் சுயமாக எண்ணெய் வளமில்லாத உலக நாடுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
3 days 6 hours ago
"சர்க்கஸில் சேர்க்க முயன்றார்கள்" - தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற ஒரு மருத்துவரின் கதை... இவர் குஜராத்தைச் சேர்ந்த கணேஷ் பாரியா. இவர் 25 வயதான மருத்துவர், 3 அடி உயரம் கொண்டவர். தனது உயரத்தால் ஏற்பட்ட பல தடைகளைத் தாண்டி, MBBS படித்துள்ளார். இந்தத் தொகுப்பு அவரது தன்னம்பிக்கைப் பயணத்தை விவரிக்கிறது. #கணேஷ்பாரியா #மருத்துவர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
3 days 6 hours ago
பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பி Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 03:53 PM மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்குமேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்துவந்தது. இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை வியாழக்கிழமை மாலை (02) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில், இவ்விடயம் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின் பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியிரந்தோம் என இதன்போது போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,போரதீவுபற்று பிரதேசசபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை இன்போது பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/242651
3 days 6 hours ago
'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,F-15 போர் விமானம் (சித்தரிப்புப்படம்) 3 ஏப்ரல் 2026, 15:17 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தநிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தற்போது தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான சில படங்களை சிபிஎஸ் சரிபார்த்துள்ளது. அவற்றில், எரிபொருள் நிரப்பும் விமானமும் இரண்டு ஹெலிகாப்டர்களும் குஸெஸ்தான் மாகாணத்தின் மேல் தாழ்வாக பறப்பது காணப்படுகிறது. இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை போன்று உள்ளது. இந்நிலையில், இந்த விமானத்தை இரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிகம் படிக்கப்பட்டது மலிவு டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இரான் ஏற்படுத்தும் மறைமுக ஆபத்து என்ன? 'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை? வளைகுடா நாடுகள் பிளவுகளை மறந்து இரானுக்கு எதிராக ஒன்றிணையுமா? End of அதிகம் படிக்கப்பட்டது படக்குறிப்பு,மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் இதுவரை தெரிந்தது என்ன? இத்தகவல் முதலில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தாஸ்னிம் செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா தனது விமானி ஒருவரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராய்ட்டட்ஸ், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களும், அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி இதே தகவலை வெளியிட்டுள்ளன.ஆனால், அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்று ராய்ட்டட்ஸ் தெரிவித்துள்ளது. 'விமானியை உயிருடன் பிடிப்பதே முன்னுரிமை' - இரான் இரானின் தெற்கு கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் ஆளுநர், "வீழ்த்தப்பட்ட எந்தவொரு அமெரிக்கக் குழுவினரையும் உயிருடன் பிடிப்பதே தங்களது முன்னுரிமை" என்று கூறுகிறார். "எதிரிப் படைகளைப் பிடிப்பதில் அல்லது கொல்வதில் வெற்றி பெறுபவர்கள், ஆளுநர் அலுவலகத்தால் சிறப்பாகப் பாராட்டப்படுவார்கள்," என்று அவர் கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி முகமையின் செய்தி தெரிவிக்கிறது. இதற்கிடையில், அமெரிக்க 'ஊடுருவல்காரரைக்' கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த மாகாணத்தின் வர்த்தகர்களால் 10 பில்லியன் டோமன்கள் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql70n267reo
3 days 6 hours ago
விழுந்த விமானம் F-15 என்று இப்பொழுது சொல்லுகின்றார்கள். இரண்டு விமானிகளில் ஒரு விமானியை மீட்டு விட்டதாகவும் இங்கு அமெரிக்காவில் செய்திகளில் போய்க் கொண்டிருக்கின்றது. இரண்டாவது விமானியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதே செய்தியில் இருந்தது. அமெரிக்க மக்களை, முக்கியமாக அதிபர் ட்ரம்பின் முன்யோசனை இல்லாத, ஆபத்தான, தேவையற்ற நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் நிபந்தனை இன்றி ஆதரித்து வரும் அமெரிக்க மஹா குழுமத்தைச் சேர்ந்தவர்களை, இந்த நிகழ்வு சிறிதாவது அசைத்துப் பார்க்கும் என்று நம்புகின்றேன்.
3 days 6 hours ago
ஜேர்மனில பொலீஸ் வேலையும் ஆபத்து தான் போல.
3 days 6 hours ago
போதனா சிவாநந்தனுக்கு வாழ்த்துகள்.
3 days 6 hours ago
இரான் தொழிநுடட்பம் / தந்திரோபாயத்தை சோதனை செய்வது போன்றே தோற்றம் இருக்கிறது. இரான் செய்வது என்று சில ஆய்வாளர் சொல்லுவது, வானில் சில தானியங்கி ஏவுகணை / வெடிபொட்களால் (இவை வானில் உலாவித்ததிரியும்) உருவாக்கப்படும் கொலைச் சங்கிலியும் (kill chain), அதனால் உருவாகும் பொறியும். (து 25% அளவில் வேலை செய்தாலே போதும்.)
3 days 6 hours ago
மத்திய கிழக்கில் இருந்த ஆகப் பெரிய பாலத்தை அமெரிக்க குண்டு வீசி தகர்த்த காணொளியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட நேற்று பகிர்ந்திருந்தார். ஈரானிய அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்ற ஏக்கத்துடனும், அதே நேரத்தில் எதுவும் செய்ய முடியாத வருத்தத்துடனுமே இரவு போனது. விடியும் போது அமெரிக்காவின் ஒரு விமானம் வீழ்ந்து விட்டது என்று செய்தியில் இருந்தது. இப்பொழுதாவது அமெரிக்கா இந்த தேவையற்ற தாக்குதல்களை நிற்பாட்டிக் கொள்ளலாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை, எது வந்தாலும் வரட்டும் என்று ஒரு ஓர்மத்துடன் நிற்கும் மக்கள் முன் இந்த வல்லரசுகள் ஒன்றுமேயில்லை. அந்த மக்களை இந்த வல்லரசுகள் கற்காலத்துக்கு அனுப்பலாம், ஆனால் அப்பொழுது கூட அவர்கள் அங்கிருக்கும் கற்களின் துணயுடன் போரடியே அழிவார்கள். அந்த மக்களும், எதிர்த்து நிற்கும் அவர்களின் அரச நிர்வாகமும், அது எத்தகைய மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இங்கு வல்லவன் வகுத்தது மட்டுமே பாதை இல்லை என்னும் ஒரு நம்பிக்கையை இந்த உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே உக்ரேன் மக்களும், உக்ரேன் அரசும் கூட இதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
3 days 6 hours ago
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான் அமெரிக்காவின் F-35 போர் விமானம் | கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 03 Apr 2026, 3:05 pm 1 min read தெஹ்ரான்: அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும். தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்
3 days 7 hours ago
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் திட்டவட்டம் டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள் முழு மையானவை அல்ல. எங்களது பரந்த வியூகத் திறன்கள் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தளங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக ட்ரம்ப் தப்புக் கணக்கு போட வேண்டாம். எங்களது ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் முறைகளுக்கான கட்டமைப்புகள் என அனைத்தும் எவ்வித பாதிப்புமின்றி முழு அளவில் செயல்பாட்டில் உள்ளன. எனவே, இதுபோன்ற தவறான அனுமானங்கள், நீங்கள் ஏற்கெனவே சிக்கியுள்ள இக்கட்டான நிலையை மேலும் ஆழமாக்கும். எங்களது ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் அமைப்புகளைக் கணக்கிட முயற்சி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்; அதில் தோல்விதான் ஏற்படும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் மீது மிக வலுவான, பரந்த மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் தொடரும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா அவமானத்தையும் நிரந்தர சரணாகதியையும் அடையும் வரையில் இந்த போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்
3 days 7 hours ago
நீங்கள் வந்து வாழ்வதற்காக மேற்கு ஜேர்மனியை சோவியத்திடமிருந்து பாதுகாத்து வைத்திருந்தது கூட "கடுகாக" உங்களுக்குத் தெரியவில்லையா😇?
3 days 7 hours ago
நல்லது தானே? ஈரானிடம் இராணுவ ரீதியில் தோல்வி அடையும் போது, அந்த தோல்விக்கு தொழில்முறை அமெரிக்க இராணுவம் பொறுப்பல்ல என்ற விம்பம் உருவாகும்!
3 days 7 hours ago
CSK vs PBKS, 7th Match at Chennai, IPL, Apr 03 2026 - Live Cricket Score Innings break 7th Match (N), Chennai, April 03, 2026, Indian Premier League Chennai Super Kings (20 ov) 209/5 Punjab Kings PBKS chose to field. Current RR: 10.45 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability CSK 78.57% PBKS 21.43%
3 days 7 hours ago
பாராட்டுகள் .......! 👍
3 days 7 hours ago
நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா புளோரிடா: நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த 4 வீரர்களும் 10 நாள் பயணம் மேற்கொண்டு நிலவை சுற்றி பயணம் செய்வர். ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்கு பதில் நிலவைச் சுற்றி 6 லட்சம் மைல்கள் தூரம் பயணம் செய்து, நிலவின் மேற்பரப்பை படம் பிடிப்பர். மேலும் எதிர்கால திட்டங்களுக்கான முக்கிய தகவல்களை சேகரிப்பர். நிலவை சுற்றி வந்தபின் விண்கலம் பசிபிக் கடலில் வரும் 11-ம் தேதி பாராசூட் மூலம் விழும். அதை அமெரிக்க கடற்படையினர் மீட்பர். நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா
3 days 7 hours ago
இரான் அதன் தலைமை அழிந்தும் அரசியல் / இராணுவ ஒழுக்கம், ஒருங்கமைவு உள்ளதாக இருக்கிறது. 30 நாளில் அமெரிக்கா படை குழம்புகின்றது, அதியுச்ச மட்டத்தில். இதில் காசும் பங்கு வகித்து இருக்கலாம் - அமெரிக்காவில் இராணுவ உற்பத்தி / வழங்கலை பெரும் நிறுவனத்தின் பங்கு உயரும். ஹெக்சஹுக்கு, மற்றும் பல அரசியல் வாதிகளுக்கு இந்த நிறுனங்களில் (பங்குகளில்) பங்கு இருக்கிறது. குறிப்பிட்ட தளபதியின், விலை குறையாக தொழில்நுற்ப தேர்வும் மறைமுகமாக காரணமாக இருக்கலாம்.
3 days 7 hours ago
விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல் "யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெறும் சூழல் இன்று காணப்படுகின்றது. முறையற்ற விதத்தில் சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்காக முன்னின்று செயற்பட்டவர்கள். அவர்கள் யுத்த காலத்தில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவர்கள். எனவே, தற்போதைய ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு அவர்கள் பணியப்போவதில்லை. புலனாய்வுப் பிரிவினரைப் பழிவாங்கும் படலத்தை அரசு நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் எமது ஆட்சி அமையும் போது, பாதிக்கப்பட்ட அனைத்துப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நாம் நிச்சயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம்." என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள்
3 days 7 hours ago
அமெரிக்கா / இஸ்ரேல் ஈரானை அழிக்க முயல, அரபு / இஸ்ரேல் ஐ இரான் அழிக்கும், அதாவது அது யதார்த்தமாகும் சாத்திய கூறுகள் கூட ஏனெனில், நீரில் ஈரானை விட இவை செயற்கை நீர் வசதிகளில் தங்கி இருப்பவை. இங்கே சிலர் விடயம் அறியாமல் கதைப்பது.
Checked
Mon, 04/06/2026 - 22:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed