புதிய பதிவுகள்2

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி

3 days 11 hours ago
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி வெள்ளி, 03 ஏப்ரல் 2026 05:06 AM இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. 'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர் குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://jaffnazone.com/news/56017

ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

3 days 11 hours ago
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 12:28 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் மீதான போர் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கைச் செய்தி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என்பதை உணர்த்தும் வகையில் ட்ரம்ப், "அழிவு இன்னும் ஆரம்பிக்கவில்லை": ஈரானில் எஞ்சியுள்ள பகுதிகளை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என அவர் பதிவிட்டுள்ளார். வியாழக்கிழமை தெஹ்ரானையும் காரஜையும் இணைக்கும் முக்கிய B1 பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மேலும் பல பாலங்களை அழிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் இலக்கு வைக்கப் போவதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவின் இறுதியில், "புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனை அவர்கள் மிக விரைவாக செய்ய வேண்டும்!" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/242634

அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு

3 days 11 hours ago
தங்கள் தாளத்திற்கு ஆடாத அதிகாரிகளை பதவி நீக்கம், பதவியிறக்கம், இடமாற்றம் செய்வது சர்வாதிகாரிகளின் இயல்பு. சானி அபயசேகரவை பதவி இறக்கியதும், இப்போ அவரை கண்டு நடுங்குவதும் அதே காரணத்தாற்தான்.

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

3 days 11 hours ago
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் குவைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (Kuwait Petroleum Corporation) இயக்கப்படும் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி முகமை அதன் 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் "பல செயல்பாட்டுப் பிரிவுகளில்" (Operational Units) தீ விபத்து ஏற்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புப் படையினரும், தீயணைப்புப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, குவைத் மீது "பகைமை நாடுகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்" நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 'X' தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/குவைத்-எண்ணெய்-சுத்திகரிப்பு-நிலையம்-மீது-ட்ரோன்-தாக்குதல்/50-375033

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

3 days 11 hours ago
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்... இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣 நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்

3 days 11 hours ago
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றம் - நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு adminApril 3, 2026 சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் முன் முற்படுத்தியவேளை பிக்குவை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் நீதிமன்று நீடித்துள்ளது. https://globaltamilnews.net/2026/231394/

காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்

3 days 11 hours ago
காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண் adminApril 3, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது. கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2026/231397/

யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

3 days 11 hours ago
யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை adminApril 3, 2026 படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் குடும்பத்தினரின் நலன்சார்ந்து மன்றில் தோன்றி தனது சமர்ப்பனங்களை முன் வைக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் நான் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் தான் முன்னிலையானேன். அது தொடர்பில் நீதிமன்ற வழக்கேடுகளில் கூட தெளிவாக உள்ளது. ஆனால் நான் சந்தேகநபர் சார்பில் முன்னிலையானதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ஊடகங்களுக்கு நீதிமன்று பொதுவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் , சிலவற்றையும் அவர் இறுதி வரையில் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சில தடய பொருட்களை நீதிமன்றத்தின் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளோம். அத்துடன் முதலாம் சந்தேக நபருக்கு எதிராக விரிவுரையாளர் மேற்கொண்ட காவலதுறை முறைப்பாடுகள் தொடர்பிலும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பிலும் ,நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தனது சமர்ப்பனத்தில் குறிப்பிட்டார். விரிவுரையாளரின் படுகொலை வழக்கில் அவரது மகள் இரண்டாவது சந்தேகநபராகவும் , மகளின் கணவன் முதலாவது சந்தேக நபராகவும் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து , படுகொலையான விரிவுரையாளர் சார்பில் முன்னிலையான எம்.ஏ சுமந்திரனை 2ஆம் சந்தேக நபரான கொலையான விரிவுரையாளரின் மகள் சார்பில் முன்னிலையானர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231401/

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு

3 days 11 hours ago
புலிகள் 150 முஸ்லீம்களை... படு கொலை செய்து, குருக்கள்மடம் பகுதியில்.. புதைத்த மாதிரி கனவு கண்டோம். - காட்டான்குடி பாய்ஸ்.-

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

3 days 11 hours ago
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794

குட்டிக் கதைகள்.

3 days 11 hours ago
doSnpotesr6mif00l5073967lg1i75f43i05101ah7um3m iigfm1cfc6c47 · ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந் திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கி றீங்களா ? என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம் ?' விவசாயி கேட்டார். ஒண்ணு மில்லை. நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று... ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை. சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங் களை எடுத்துக் கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லா வற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு, எங்கடா பழனி.. இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி. குதிரை துளிகூட நகரவே இல்லை. டேய் முருகா... வேகமா இழு ! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை. என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடமே, கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க் காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ? அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு ! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டிய தில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப் பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணித வியலாளரும், தத்துவ வியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார். வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது. அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது,.. கடுஞ் சொற்களை ஏன் பேச வேண்டும். இதையே கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவரும்... Voir la traduction.....!

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

3 days 11 hours ago
எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு! ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது. https://athavannews.com/2026/1470852

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு

3 days 13 hours ago
மனித புதைகுழி என சந்தேகம்: அகழ்வில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை Published By: Vishnu 03 Apr, 2026 | 04:33 AM தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 150-இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட அந்தக் காணியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. மனித புதைகுழி ஒன்றைத் தேடும் நோக்கில் தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாமல் நீதிமன்ற மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமொன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றி மூடிவிட நேர்ந்த இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பில் அமைந்துள்ள குருக்கள்மடமாகும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமயத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை வேளையில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் தெரிவித்தார். “இன்றைய தினம் இரண்டு மீற்றர் ஆழத்துக்கு அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் குழி நீரினால் நிரம்பியதால், அகழ்வுப்பணியைத் தொடர்வதில் பயனில்லை என்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் தீர்மானத்துக்கு இணங்க, அகழ்வுப் பணிகள் இன்று நிறைவு செய்யப்பட்டன.” அகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 9 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார். “இப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வேறொரு பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஏப்ரல் மாதம் புத்தாண்டின் பின்னர் சந்தேகத்துக்குரிய பகுதியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மனித எச்சங்களோ அல்லது வேறு எச்சங்களோ கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டன.” இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். இதற்கு முன்னர் வடக்கிலும், கொழும்பிலும், சம்பூரிலும், மாத்தளையிலும் தற்செயலாக மனித எலும்புகள் தென்பட்ட பின்னரே இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிய புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/242605

நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா?

3 days 13 hours ago
நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு, குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட் 2 ஏப்ரல் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ளது. இந்த மோதல் பிராந்திய அளவில் இருந்து முழுமையான உலகப் போராக மாறக்கூடுமா என்று இப்போது பலர் யோசித்து வருகிறார்கள். ஒரு போர் எப்போது உலகப் போராக மாறுகிறது? "போர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்படுகின்றன என்றும், போருக்குச் செல்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசியின் 'குளோபல் ஸ்டோரி' பாட்காஸ்ட்டில் பேசிய பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார். "உண்மையில், கடந்த காலப் போர்களைப் பற்றி நீங்கள் பார்த்தால், முதல் உலகப் போர் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவற்றில் தற்செயலான சம்பவங்கள், எதிரியை தவறாக மதிப்பிட்டது போன்றவை இருந்தன. சில நேரங்களில் இதை ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் சண்டையைப் போல புரிந்துகொள்ளலாம்'' ''ஆஸ்திரிய - ஹங்கேரி பேரரசர் பிரான்ஸ் ஜோசப்பின் உறவினர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே, 1914-ல் முதல் உலகப் போரைத் தூண்டிய தொடர் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார் மேக்மில்லன். சில வாரங்களுக்குள், பல கூட்டணிகள் ஐரோப்பாவை மோதலுக்குள் இழுத்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி செர்பியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆதரித்தது, ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாகத் திரண்டது, பிரான்ஸ் ரஷ்யாவை ஆதரித்தது மற்றும் பிரிட்டன் ''மரியாதை மற்றும் உத்தி'' ஆகிய இரண்டின் பெயரால் போரில் இறங்கியது. அதன்பின் நடந்தது ஓர் உலகளாவிய பேரழிவாக மாறியது என்கிறார் மார்கரெட் மேக்மில்லன். பட மூலாதாரம்,Stringer/Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களையும், இரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களையும் குறிவைத்துள்ளன. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் ஜோ மயோலோ, உலகப் போரை அனைத்துப் பெரும் சக்திகளும் ஈடுபடும் ஒரு முழுமையான போர் என்று வரையறுக்கிறார். "முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய பேரரசு சக்திகள். இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருந்தன," என்று அவர் பிபிசியிடம் விவரித்தார். மத்திய கிழக்கின் இன்றைய பதற்றங்களை பலர் பெரும்பாலும் பிராந்திய அளவிலான ஒன்றாகவே விவரிக்கிறார்கள். ஆனால் ஒரு விரிவான மோதல் அதிகரிப்பதற்கான சூழல்கள் நிலவுகின்றனவா? பிப்ரவரி மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டதாக நம்புவதாகவும், ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு தீவிர ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே ஒரே தீர்வு என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், லெபனானில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆபத்து என்ன? அப்படியென்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான தற்போதைய ஆபத்து என்ன? "இந்த மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய நாடு அநேகமாக இரான் அல்லது ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற இரானின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என மேக்மில்லன் கூறுகிறார். கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைப்பது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது போன்ற இரானின் சாத்தியமான நடவடிக்கைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதோடு வல்லரசு நாடுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்காவின் தலையீடும் இதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது. மற்ற நாடுகள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், பொருளாதார ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மற்ற இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பது அவரது கூற்று. உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தைவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதலாம் அல்லது உலகின் கவனம் வேறு எங்கோ இருக்கும்போது ரஷ்யா யுக்ரேனில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்கிறார் அவர். "ஒரு பிராந்தியத்திற்கு வெளியே மோதல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன. ஏனெனில் தங்களைத் தடுக்கக்கூடியவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவதைப் பார்த்து, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மற்றவர்கள் இதில் தங்களுக்குரிய வாய்ப்புகளைக் காண்பார்கள்" என்கிறார் மேக்மில்லன். எந்தெந்த நாடுகள் இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளது? பேராசிரியர் மயோலோ இந்த மோதல் பிராந்திய அளவிலேயே இருக்கும் என்றும், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை இது உள்ளே இழுக்கும் என்றும் நம்புகிறார். ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இந்தப் போருக்குள் இழுக்கப்படும் என்று அவர் கருதவில்லை. "உலகில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்காகச் சீனா உடனடியாகத் தைவானை தாக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது. ஆனால் நாம் உலகப் போரைப் பற்றி, அதாவது மூன்றாம் உலகப் போரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இதில் நேரடியாக ஈடுபட எந்த விருப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பாவிற்கு அதற்கான நாட்டம் இன்னும் குறைவாகவே இருக்கும்" என்றும் பேராசிரியர் மயோலோ குறிப்பிட்டார். சீனாவிடம் வேறு திட்டங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார். "உங்கள் எதிரி ஒரு மிகப்பெரிய உத்தி தவறைச் செய்யும்போது, அவர்களைத் தடுக்காமல் அப்படியே அதைத் தொடர விடுவீர்கள்" என்கிறார் அவர். எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், சீனாவுக்கு அது சிறிய இழப்பு மட்டுமே என்று கூறிய மயோலோ, "அமெரிக்கா மத்திய கிழக்கில் மூழ்கிக் கிடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய நலன்களை வழங்கக்கூடும்'' என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா இரானுடனான தனது கூட்டாண்மை பற்றிப் பெருமையாகப் பேசினாலும், இரானுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவிற்கு இல்லை. தலைவர்களின் பங்கு பெருமை, கௌரவ உணர்வு அல்லது எதிரிகள் மீதான பயம் ஆகியவற்றால் போர்கள் தூண்டப்படுவதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது என்று மேக்மில்லன் கூறுகிறார். தலைவர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதையும் வரலாறு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸ் பிரதமர் (ஜார்ஜஸ்) க்ளெமென்சோ, போர் தொடுப்பதை விட அமைதியை ஏற்படுத்துவது கடினமானது" என்று கூறினார். மேக்மில்லனின் கூற்றுப்படி, மக்களால் பெரிய இழப்புகளோ அல்லது தியாகங்களோ செய்யப்படும்போது, தலைவர்கள் "போரை நிறுத்தாமல் தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும்" என்று முடிவு செய்கிறார்கள் என்ற வாதம் பெரும்பாலும் முன்வைக்கப்படுகிறது. தலைவர்களுக்குப் பெருமை என்பது ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறும் அவர், புதினை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். "யுக்ரேனை ஆக்கிரமிக்க முயன்றதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார். பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்யா ஒட்டுமொத்தமாக 12.5 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறைவான மதிப்பீடாகவே கருதப்படுகிறது. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது பின்வாங்க மறுக்கும் தலைவர்கள் மோதல்களை நீடிக்கச் செய்யவும் ஆழப்படுத்தவும் முயல்வார்கள் என்று மேக்மில்லன் கூறுகிறார். கடந்த காலத்தில், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வி தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் கூட, சித்தாந்தம், பெருமை அல்லது மாயையினால் தூண்டப்பட்டுத் தொடர்ந்து போரிட்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய முடிவுகள் சிறிய அளவிலான மோதல்களைப் பேரழிவை ஏற்படுத்தும் போர்களாக விரிவுபடுத்தக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் பதற்றத்தைக் குறைக்க ராஜீய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மேக்மில்லன் கூறுகிறார். "நீங்கள் எதிர்த் தரப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்... மேலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். "இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் போர் மூலமாக தாங்கள் எட்டக்கூடிய இலக்குகளை அடைந்துவிட்டதை உணர வேண்டும்.'' என்கிறார் மயோலோ மேலும் போர் தொடர்வது என்பது, யாருக்கும் அவர்கள் "விரும்பிய பலனைத் தராது" என்று அவர் விளக்குகிறார். "தடைகளை நீக்குவது, பாதுகாப்பு ஒப்பந்தம், உலக அரசியலில் இரானின் இடம் குறித்த புரிதல்கள் போன்றவற்றில் சில உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்'' மத்தியஸ்தம் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட சக்திகள் போரை நிறுத்தி பின்னர் அதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்ற முடியும் என்று மயோலோ கூறுகிறார். இந்த செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் பாட்காஸ்ட்டான 'தி குளோபல் ஸ்டோரி'-யின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. தொகுப்பு: அலெக்ஸாண்ட்ரா ஃபுஷே - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy3r9j9z1jo
Checked
Mon, 04/06/2026 - 19:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed